Search This Blog n

14 September 2012

வியட்நாமில் ஆற்றில் மூழ்கி: 8 மாணவிகள் மரணம்

By.Rajah.வியட்நாமில் தலைநகருக்கு அருகிலுள்ள ஆறொன்றில் நீந்துவதில் ஈடுபட்ட 8 பாடசாலை மாணவிகள் பரிதாபகரமாக நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.

உயர் பாடசாலையைச் சேர்ந்த 13 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட வயதுடைய மாணவிகளே மை டக் மாவட்டத்திலுள்ள துயிலேயி ஏரியில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

ஏனைய இரு மாணவிகள் உள்ளூர் வாசிகளால் காப்பாற்றப்பட்டுள்ளனர். வியட்நாமில் சிறுவர்களது மரணங்களுக்கான முக்கிய காரணியாக நீரில் மூழ்குவது விளங்குகிறது. அந்நாட்டில் ஆண்டு தோறும் சுமார் 3500 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கின்றனர்

0 கருத்துகள்:

Post a Comment