அவுஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாகச் செல்ல முற்பட்ட 53 பேர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் திருகோணமலை கடற்பரப்பில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருகோணமலையிலிருந்து 16 மைல் தொலைவில் படகில் பயணித்துக்கொண்டிருந்த வேளையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டோர் வவுனியா,யாழ்ப்பாணம்,திருகோணமலை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோர் எனக் குறிப்பிட்ட கடற்படைப் பேச்சாளர் அவர்களில் 8 சிறுவர்களும் 3 பெண்களும் அடங்குவதாகத் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment