Saturday29September2012By.Rajah..யாழ்ப்பாணத்தில் சென்ற வாரத்தில் மட்டும் 56 கொள்ளைச் சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுண்டுக்குழிப் பகுதியில் கடை உடைக்கப்பட்டு 17,200 பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன,
டக்கா வீதியிலுள்ள கடை ஒன்றில் 21,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன, சுன்னாகம் குப்பிளான் கிழக்கு பகுதியில் வீட உடைக்கப்பட்டு 2,77,500 பெறுமதியான வீட்டுப் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன, சாவகச்சேரியில் முத்துக்குரார் கடை உடைக்கப்பட்டு நிறப்பூச்சு திருடப்பட்டுள்ளது.
கைதடி தொழில் பயிற்சி நிலையத்திலுள்ள கணினி உதிரிபாகங்கள் கொள்ளயிடப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகரப்பகுதியில் பட்டப்பகலில் கடை உடைக்கப்பட்டு 12,000 ரூபா பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
மானிப்பாய் ஆஸ்பத்திரி வீதியில் சென்று கொண்டு இருந்த பெண்ணின் தங்கச்சங்கிலி மோட்டார் சைக்கிளில் சென்ற இனம் தெரியாத நபர்களினால் அறுத்து எடுக்கப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 55,000 ரூபா என முறையிடப்பட்டுள்ளது.
கோப்பாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றுக்குள் நுழைந்த கொள்ளையர் குழு வீட்டைத் தீவைத்து கொழுத்திவிட்டு வீட்டில் உள்ள மோட்டார் சைக்கிள்களைத் திருடிச் சென்றுள்ளது. இச் சம்பவதுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டு யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்
0 கருத்துகள்:
Post a Comment