தமிழகத்தில் தந்தை இறந்த தகவலை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்தி முடித்த அண்ணனின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திருச்சியை சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ராஜகுமார். செம்பரை கிராமத்தை சேர்ந்த நடராஜனின் மகள் கனிமொழி.ராஜகுருவுக்கும், கனிமொழிக்கும்
சில மாதங்களுக்கு முன்னர் திருமண நிச்சயதார்த்தம் நடந்த நிலையில் நேற்று திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டு திருமண மண்டபம் முன்பதிவு செய்யப்பட்டிருந்தது.மணமகள் கனிமொழியின் தந்தை நடராஜனுக்கு தலையில் கட்டி ஏற்பட்டு பாதிக்கப்பட்டதால், அவர் மருத்துவமனையில் ஒரு மாதமாக தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடராஜன் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இந்த விடயம் மணமகளின் அண்ணன் உள்ளிட்ட சிலருக்கு மட்டுமே தெரியும். தந்தை இறந்த தகவலை தெரிவித்தால் தனது சகோதரி கனிமொழி திருமணம் நின்று விடும் என்று கருதிய அவர் அண்ணன், அந்த தகவலை மறைத்து, சகோதரியின் திருமணத்துக்கு செல்லாமல் மருத்துவமனையில் இருந்து விட்டார்.நேற்றுக் காலை ராஜகுரு- கனிமொழி
திருமணம் நல்ல படியாக நடந்து முடிந்தது. பின்னர் மணமகளின் உறவினர் ஒருவர் நடராஜன் இறந்த தகவலை அங்கிருந்த சிலரிடம் தெரிவிக்கவே, அந்த தகவல் திருமண மண்டபம் முழுவதும் பரவியது.இதைக்கேட்ட கனிமொழி,அவரது தாய் உள்ளிட்ட உறவினர்கள்
அனைவரும் கதறி அழுதனர்.
மணமகன் குடும்பத்தினர் அனைவரும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.இதையடுத்து அனைவரும் மருத்துவமனை சென்று உடலை ஊருக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை நடராஜன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதில் மணக்கோலத்துடன்
மணமகள் கலந்து கொண்டார்.காலையில் மகள் திருமணம் நடந்த நிலையில், மாலையில் தந்தையின் இறுதிச் சடங்கு நடைபெற்றது அனைவரையும்
சோகத்தில் ஆழ்த்தியது.
0 கருத்துகள்:
Post a Comment