31 August 2015
கடற்பகுதியில் இலங்கை அகதிகள் நால்வர் கைது
நாகர்கோவில் விழிஞ்ஞம் கடற்பகுதியில் பவளப்பாறையை வெட்டி கடத்திய குற்றச்சாட்டில் குமரியை சேர்ந்த நான்கு இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில்,
கேரள மாநிலம் விழிஞ்ஞம் கடற்பகுதியில் பவளப்பாறை வெட்டிக்கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அம்மாநில கியூ பிரிவு பொலிஸார் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது நான்கு பேர் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்தனர். அவர்களிடம் பொலிஸார் சோதனை நடத்திய போது சாக்குமூடைக்குள் 20 கிலோ பவளபாறை துண்டுகள் இருந்தது.
விசாரணையில் இவர்கள் குமரி மாவட்டம் களியக்காவிளை கோழிவிளை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த செல்வகுமார், ஆனந்தராஜா, பார்த்திபன், திவாகர் என்பது தெரிய வந்தது.
விழிஞ்ஞம் கடற்பகுதி நாகர்கோவில் வனகோட்டத்துக்கு உட்பட்ட பகுதி என்பதால் அவர்கள் களியல் வனச்சரக அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
இவர்கள் நான்கு பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
29 August 2015
சர்வதேச திரைப்பட விழாவில் மணிரத்தினத்துக்கு விருது
இந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக திரைப்பட இயக்குநர் மணிரத்தினத்துக்கு லண்டன் - இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் சாதனையாளர் (ஐகான்) விருது வழங்கப்பட்டது. பிரிட்டனின் தலைநகரமான லண்டனில் அண்மையில்
நடைபெற்ற இந்தப் பட விழாவில் மணிரத்தினத்தின் 'ரோஜா', 'பம்பாய்', 'தில் சே' ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. படங்களின் திரையிடலுக்குப் பிறகு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
தனித்தன்மை மிக்க திரைப்படங்களை இயக்கியதால் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விருதை பெற்ற பின்னர் இயக்குநர் மணிரத்தினம் கருத்துத் தெரிவிக்கையில் -
இந்த விருதைப் பெறுவதில் பெருமை கொள்கிறேன். லண்டனில் இந்தியத் திரைப்பட விழாவை நடத்துவது இந்த நூற்றாண்டின் புதிய அத்தியாயம். தற்போதைய சூழலில் இந்திய சினிமா புதிய பரிமாணங்களைத்
தேடிச் சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற
விருதுகள் அடுத்தடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும். இந்த விருதை இனி வரும் காலங்களில் திறமை வாய்ந்த இளம் இயக்குநர்கள் பெறுவார்கள் என நம்புகிறேன்
என்றார். நடிகை மனீஷா கொய்ராலாவுக்கு மனிதநேயமிக்க உணர்வுகளை வெளிப்படுத்திய நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. நேபாள நிலநடுக்கத்தின் போது மனிதாபிமான பணிகளை மேற்கொ
ண்டு சேவை மனப்பான்மையுடன் செயல்பட்டதால் நடிகை என்பதைவிட மேன்மையான பெண்மணி என்பதை நிரூபித்து
விட்டார் என அவருக்கு புகழாரம் சூட்டப்பட்டது. பாலிவுட் நடிகர் சூரஜ் சர்மாவுக்கு இளம் தலைமுறை நடிகர்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவர் 'உம்ரிக்கா' படத்துக்காக பெற்றார். தமிழில் வெளிவந்த '
காக்கா முட்டை', ஹிந்திப் படமான 'நாச்சோமியா கும்பஸார்' ஆகிய இரு படங்களுக்கும் பார்வையாளர்களைக் கவர்ந்த திரைப்படத்துக்கான பிரிவில் விருதுகள் வழங்கப்பட்டன. சத்யஜித் ரே பெயரில் வழங்கப்படும் குறும்பட விருதை 'கர்கோஷ்' என்ற குறும்படம் பெற்றது. -
25 August 2015
சிறுவனை கொன்று பிணத்துடன் உறவு வைத்த மாணவனின் வெறிச்செயல்???
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள விழிஞ்சம் பள்ளிக்ட்டத்தில் 11 ம் வகுப்பு படித்து வந்த 17 வயது மாணவன் ஒருவன் தனது மொபைல் போனில் ஆபாச படம் பார்த்து உள்ளான் .
அதன் பிறகு 3ம் வகுப்பு படித்து வந்த ஜித்து என்கிற 9 வயது சிறுவனை மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று ஓரின சேர்க்கை உறவில் ஈடுபட முயற்சி செய்து உள்ளார். ஆனால் அதற்கு சிறுவன் எதிர்ப்பு தெரிவித்து உள்ளான்.
இதனால் ஆத்திரம் அடைந்த 17 வயது வாலிபர் சிறுவனை காலி மதுபாட்டிலால் தலையில் தாக்கி உள்ளார்., இதில் சிறுவன் அதே இடத்தில் சுருண்டு விழுந்து இறந்துள்ளான் அதற்கு பின்னர் தான் அந்த கொடுமை நிகழ்ந்து உள்ளது 17 வயது மிருகம் சிறுவனின் பிணத்துடன் உறவு கொண்டுள்ளது.
சிறுவனைன் உடலை பிரேத பரிசோதனைச் எய்த டாகடர்கள் சிறுவன் பாலியல் வன்முறைக்கு ஆளானதாக கூறி உள்ளனர்.இது சிறுவன் இறந்த பிறகு இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.
சிறுவன் இறந்து விட்டான் என்பதை 17 வயது மாணவன்
நன்கு உணர்ந்து உள்ளார். என விழிஞ்சம் போலீசார் தெரிவித்து உள்ளனர்.
போலீசார் 17 வயது மாணவனை கைது செய்து உள்ளனர். இதற்கு முன் இது போன்ற செயலகளில் ஈடுபட்டு உள்ளாரா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாநகராட்சியை பா.ஜனதா மீண்டும் கைப்பற்றியது, காங்கிரஸ் தோல்வி..
பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் வெற்றி வாகைசூடி பா.ஜனதா மீண்டும் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.
பெங்களூரு மாநகராட்சி மொத்தம் 198 வார்டுகள் கொண்டது. இந்த மாநகராட்சிக்கு கடந்த 22-ந் தேதி தேர்தல்
நடைபெற்றது. அதாவது, கொங்கச்சந்திரா வார்டில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதனால் மீதமுள்ள 197 வார்டுகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில் 49.31 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்த நிலையில்
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி பெங்களூருவில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மையம் வீதம் 27 மையங்களில் நடைபெற்றது. சரியாக காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது
. பகல் 1.30 மணிக்குள் அனைத்து வார்டுகளின் ஓட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா முந்தி சென்றது.
இறுதியில் 197 வார்டுகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவநிரந்தர இணைப்புடைந்து முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜனதா 100 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்து
உள்ளது. ஆனால் அக்கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் அக்கட்சி 111 இடங்களில் வென்று தனி மெஜாரிட்டியை பெற்றது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது பா.ஜனதாவுக்கு தற்போது 11 இடங்கள் குறைவாகதான் கிடைத்துள்ளன. காங்கிரஸ் 76 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 14 இடங்களிலும், சுயேச்சைகள் 8 வார்டுகளிலும் வெற்றி பெற்று உள்ளனர்.
தேர்தலுக்கு பின் வெளிவந்த அனைத்து கருத்துக்கணிப்பிலும் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியே வெற்றி வாகை சூடும் என்று கூறப்பட்டது. இதனால் அக்கட்சியின் தலைவர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் தேர்தல் முடிவுகளோ தலைகீழாக மாறிவிட்டது.
பாரதீய ஜனதா வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு
பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு மாநகராட்சி பதவிக்காலம் முடிந்ததும், கர்நாடக அரசு மாநகராட்சியை கலைத்துவிட்டு, உடனடியாக தேர்தலை நடத்தாமல், வெவ்வேறு காரணங்களுக்காக தேர்தலை தள்ளிப்போட்டது.
அத்துடன் மாநகராட்சியை 3 ஆக பிரிக்கவும் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெங்களூரு மாநகராட்சி தேர்தலை தள்ளிப்போட்டதும், மாநகராட்சியை பிரிக்க நடவடிக்கை எடுத்ததும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம்
என்று கூறப்படுகிறது.
மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருப்பதால் முதல்–மந்திரி சித்தராமையா மற்றும் பெங்களூரு மந்திரிகளின் பதவிகள் தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
23 August 2015
தரை இறங்கிய விமானம் மீது விழுந்த பச்சை நிற ஒளிக்கதிர் ???
+சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு நேற்று முன்தினம் வந்த விமானம் மீது பச்சை நிற ஒளிக்கதிர் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 174 பயணிகள், 7 விமான சிப்பந்திகளுடன் மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துள்ளது.
அப்போது விமானம் ஓடுபாதையில் தரை இறங்கிய போது, அருகில் உள்ள பரங்கிமலை உச்சியில் இருந்து பச்சை நிற ஒளிக்கதிர் விமானத்தின் முன் பகுதியில் உள்ள கண்ணாடியில் விழுந்தது.
விமானத்தை தரை இறக்குவதற்காக முழு கவனத்துடன் இருந்த விமானிக்கு, திடீரென பச்சை நிற ஒளிக்கதிர் விழுந்ததால் அவரது கவனம் திசைதிரும்பியது.
ஆனாலும், அவர் திறமையாக செயல்பட்டு விமானத்தை பத்திரமாக ஓடுபாதையில் ஓட்டியுள்ளார். அந்த ஒளிக்கதிர் 30 நொடிகள் ஒளிர்ந்து மறைந்தது.
விமானி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அதுபற்றி தகவல் கொடுத்தார்.
கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், நீண்ட நேரம் ஆய்வு செய்தும், ஒளிக்கதிர் வந்தது பற்றி கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்தியா வரும் இலங்கை நாட்டினர் விசா இல்லாமலே புதிய நடைமுறை அமுல்!
இலங்கையிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் செய்யும் இலங்கையர்கள் முன்கூட்டியே விசா எடுக்காமல் இந்தியா வந்திறங்கிய பின் விசா பெற்றுக்கொள்ளும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இருந்து இந்தியா செல்பவர்கள் முன்கூட்டியே விசா அனுமதி வேண்டியதில்லை என்றும், அங்கு சென்றவுடன் அதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இப்போது இது நடைமுறைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கடந்த மாதம் 14 ஆம் தேதி இந்தியப் பிரதமர் அறிவித்ததற்கு அமைவாக ஏப்ரல் 14 ஆம் தேதி முதல் இந்தியா செல்லும் பயணிகள், இந்தியாவுக்குச் சென்றதன் பின்னர் விசா பெற்றுக்கொள்ள முடியும் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
ஆயினும், இராஜதந்திர அலுவலக மட்டத்திலான கடவுச்சீட்டைக் கொண்டிருப்பவர்களும், பாகிஸ்தானிய வம்சாவளி இலங்கை பிரஜைகளும், இந்தியாவில் தொழில் செய்பவர்கள், அங்கு வசிக்கின்ற இலங்கைப் பிரஜைகள் ஆகியோர் இந்த இந்த நடைமுறையைக் கடைப்பிடிக்க முடியாது என்றும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு தடவை மாத்திரமே பிரயாணம் செய்யக் கூடிய இந்த முறையின் மூலம் பெறுகின்ற விசா 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் இந்தியத் தூதரகம் கூறியிருப்பது குறிப்பிடத் தக்கது.
இந்த நடைமுறையின் மூலம் பெங்களுரூ, சென்னை, டெல்லி, கோவா, ஹைதராபாத், கொச்சி, கொல்கொத்தா , மும்பை, திருவனந்தபுரம் ஆகிய 9 விமான நிலையங்களின் வழியாக மாத்திரமே இந்தியா செல்ல முடியும். எனினும் இந்த நடைமுறையின் மூலம் விசா பெறுபவர்கள், இந்தியாவில் இருந்து வெளியேறும்போது கட்டுப்பாடுகளின்றி, எந்தவொரு விமானத்தளத்தின் வழியாகவும் அங்கிருந்து பிரயாணத்தை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
18 August 2015
மொத்தமாக 250 விமானங்களைஆர்டர் செய்து இண்டிகோ நிறுவன
இண்டிகோ விமான சேவை நிறுவனம் புதிதாக 250 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு மற்ற நிறுவனங்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.
இந்தியாவின் விமானச் சேவை நிறுவனமான இண்டிகோ, தனது விமானச் சேவை மற்றும் குத்தகை விமானங்களை அதிகரிக்கும்விதமாக ஏர்பஸ் நிறுவனத்திடம் சுமார் 250 ஏ320நியோ ரக விமானங்களை வாங்கத் திட்டமிட்டுள்ளது.
இந்த 25 விமானங்களின் மொத்த மதிப்பு 26.55 பில்லியன் டாலராகும். இதற்கான ஒப்பந்தத்தில் இண்டிகோ மற்றும் ஏர்பஸ் நிறுவனங்கள் சனிக்கிழமை கையெழுத்திட்டது.
இந்த ஆர்டர் உலக விமானப் போக்குவரத்து துறையிலேயே, எண்ணிக்கையில் மிகப்பெரிய ஆர்டராக கூறப்படுகிறது.
இண்டிகோ நிறுவனம் பங்குச்சந்தையில் இறங்குவதற்கான முக்கியப் பணிகளைச் செய்து வரும் இந்நிலையில் இந்த 26 பில்லியன் டாலர் ஒப்பந்தம்,
இந்நிறுவன மதிப்பை உயர்த்த உறுதுணையாக இருக்கும். மேலும் இதற்கான விண்ணப்பங்களைச் சந்தைக் கட்டுப்பாட்டு ஆணையமான செபி-யிடம் சமர்ப்பித்துள்ளது.
இதுவரை ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து இண்டிகோ நிறுவனம் சுமார் 530 விமானங்களை ஆர்டர் செய்துள்ளது
குறிப்பிடத்தக்கது.
17 August 2015
ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் பிரதமர் மோடி பேச்சு
இந்தியா - அமீரகம் இணைந்து ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் என்று பிரதமர் மோடி கூறிஉள்ளார்.
2 நாள் சுற்றுப்பயணமாக வளைகுடா நாடான அமீரகம் (ஐக்கிய அரபு குடியரசு), சென்றுஉள்ள பிரதமர் மோடி அபுதாபியில் மஸ்தார்நகர் பகுதியினை பார்வையிட்டார். பிரதமர் நரேந்திர மோடி மஸ்தார் நகரில் பயன்படுத்தப்படும் நவீன தொழில்நுட்பங்கள், குறித்து வல்லுனர்களிடம் கேட்டு அறிந்தார். காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த பேட்டரி காரில் பயணம்
செய்தார். பிரதமர் மோடி, தனது வருகையை பதிவுசெய்யும் விதமாக அங்கிருந்த மின்னணு பலகையில் கையெழுத்திட்டார். பின்னர் அங்கிருந்தவர்களிடம் பேசினார். மஸ்தாரில் பிரதமர் மோடி முதலீட்டாளர்கள் மத்தியில் பேசினார்.
பிரதமர் மோடி பேசுகையில், இந்தியா-அமீரகம் இணைந்து ஆசியாவின் எதிர்காலத்தை வடிவமைக்க முடியும் என்று கூறினார்.
இந்தியா - அமீரகம் இடையே கணக்கிட முடியாத அளவில் விமானங்கள் இயக்கப்படுகிறது, ஆனால் இந்திய பிரதமர் ஒருவர் அமீரகம் வருவதற்கு 34 ஆண்கள் ஆகிஉள்ளது.
இந்தியாவில் 7 வருடங்களில் குறைந்த செலவில் 50 மில்லியன் வீடுகளைகட்ட நாங்கள் விரும்புகிறோம்.
இந்தியாவில் ஒருட்ரிலியன் டாலர் மதிப்பில் முதலீடுகள் செய்வதற்கான உடனடி சாத்தியம் உள்ளது. இந்தியாவில் தற்போது நிலையான அரசு உள்ளது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு உள்கட்டமைப்பு போன்ற துறைகளில் அமீரகத்தில் இருந்து முதலீடுகளை நான் விரும்புகிறேன்.
உலகவங்கி, சர்வதேச நாணய நிதியகம் இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்துவரும் நாடு என்று ஒத்துக்கொண்டு உள்ளது. என்று பிரதமர் மோடி கூறினார். பிரதமர் மோடியின் பேச்சின் போது மேலும் முக்கிய அம்சங்கள் இடம்பெற்று இருந்தது.
நேற்று வரையில், இந்திய பிரதமர் ஒருவர் அமீரகம் வருவதற்கு 34 ஆண்டுகள் ஆனதை நினைத்ததாகவும், வெட்கமாக உணர்வதாகவும் பிரதமர் மோடி கூறிஉள்ளார்.
15 August 2015
இந்திய சுதந்திர தின நிகழ்வு யாழ்ப்பாணத்தில் !
இந்தியாவின் 69 ஆவது சுதந்திரதின நிகழ்வு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரக இல்லத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் ஜந்தாவது தடவையாக
கொண்டாடப்படும்
இந்த நிகழ்வில் இந்திய தேசிய கோடியை இந்திய துணை
தூதுவர் நட்ராஜ் ஏற்றிவைத்தார். இந்த நிகழ்வில்
இலங்கை வாழ் இந்திய பிரஜைகள் மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள முக்கிய பலரும் கலந்து கொண்டனர்.
12 August 2015
இலங்கையர்கள் தங்கம் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் கைது!
தங்கம் கடத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில் இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் கேரள மாநிலம் கொச்சின் விமான நிலையத்தில் இரண்டு இலங்கையர்களும் தங்கத்துடன் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய சுங்கப் பிரிவின் விமான நிலைய புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறித்த இலங்கையர்களை கைது செய்துள்ளனர்.
கொழும்பிலிருந்து இந்த இரண்டு இலங்கையர்களும் இந்தியா வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
200 கிராம் எடையுடைய நான்கு தங்க பிஸ்கட்கள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.
கால்களில் போலியாக பென்டேஜ்களை சுற்றி அதனுள் தங்கத்தை மறைத்து கடத்தியுள்ளனர்.
தங்கத்தை சென்னைக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய இவர்கள் முயற்சித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
11 August 2015
வயல் வெளியில் பயங்கர சத்ததுடன் விழிந்த வினோத பொருள்??'
சத்தீஸ்கர் மாநிலம் ஹாங்பூர் நகரில் உள்ளூர் மக்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பலத்த சத்தம் கேட்டு உள்ளது. உடனே வீட்டுக்குள் இருந்த அனைவரும் வெளியில் வந்து பார்த்து உள்ளனர். அப்போது ஒரு விசித்திரமான பொருள் ஒன்று பறந்து வந்து வயல் வெளியில் விழுந்து உள்ளது.
சனிக்கிழமை இந்த பொருளை பத்திரிகையாளர் ராகுல் பாண்டித என்பவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார். வானில் இருந்து விழுந்தது என தலைப்பிட்டு இருந்தார்.
”சத்தீஸ்கர் மாநிலம் ஹாஙபூரில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பயங்கர சத்ததுடன் ஒரு பொருள் ஒன்று வானில் இருந்து வயல் வெளியில் விழுந்தது.” என ராகுல் அதில் தெரிவித்து இருந்தார்.
அந்த் பொருள் என்ன வென்று தெரியவில்லை
. டுவிட்டர் பாலோவர்கள் பலர் தங்கள் ஊகங்களை வைத்து பல கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர்.
சிலர் அதை ஜெட் என்ஜின் என கூறி இருந்தனர். சிலர் செயற்கைகோளின் பாகம் என கூறி இருந்தனர்
கடந்த வெள்ளிக்கிழமை சத்தீஸ்கர் மாநில ராய்பூர் விமான நிலையத்தில் டாக்கா-மஸ்க்யாட் விமானம் அவசரமாக தரையிறக்கபட்டது அதன் தொடர்புஇடைய பாகமாக இருக்ககூடும் என ராகுல் தெரிவித்து உள்ளார்..
08 August 2015
சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை ரத்து செய்யவேண்டும்: ராமதாஸ்!
அதிக விலையால் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தும் சூரிய ஒளி மின்சார ஒப்பந்தங்களை ரத்துச் செய்யவேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
" தெலுங்கானாவில் சூரிய ஒளி மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்காக போட்டி ஏல முறையில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு, ஒரு யூனிட் ரூ. 5.17 என்ற விலையில் 200 மெகாவாட் மின்சாரத்தைக் கொள்முதல்
செய்ய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைவிட இது ரூ. 1.84 குறைவு ஆகும்.
தமிழக அரசு கடைபிடித்து வரும் சூரிய ஒளி மின்சாரக் கொள்முதல் முறை மிகவும் தவறானது என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால், அதைப் பொருட்படுத்தாத தமிழக அரசு தனியார் பெரு நிறுவனங்களுக்கு சலுகை காட்டும் வகையில் சூரிய ஒளி மின்சாரத்திற்கு அதிக விலை நிர்ணயித்திருக்கிறது. அதானி குழுமத்திடமிருந்து 648 மெகாவாட் மின்சாரத்தையும், மேலும் 31 தனியார் நிறுவனங்களிடமிருந்து 436 மெகாவாட் மின்சாரத்தையும் ஒரு யூனிட் ரூ.07.01 என்ற விலையில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு மின்சார வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறது.
தெலுங்கானாவில் கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் விலையுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் ஒரு மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்வதில், ஒப்பந்த காலமான 25 ஆண்டுகளில் யூனிட்டுக்கு ரூ.9 கோடி இழப்பு ஏற்படும். அதன்படி பார்த்தால் தமிழகத்தில் இதுவரை 1084 மெகாவாட் சூரிய ஒளி மின்சாரத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 2722 மெகாவாட் அளவுக்கு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்படவுள்ளன. இந்த அளவு மின்சாரம் ரூ.07.01 என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டால் தமிழகத்திற்கு சுமார் ரூ.34,254 கோடி இழப்பு ஏற்படும்.
தமிழ்நாடு மின்வாரியம் ஏற்கனவே பேரிழப்பை எதிர்கொள்ளும் நிலையில் இதையும் தாங்க முடியாது.
மத்தியப் பிரதேச மின்வாரியம் மொரிஷியஸ் நாட்டு நிறுவனத்திடம் ஒரு யூனிட் ரூ.05.05 என்ற விலையில் வாங்க ஒப்பந்தம் செய்து கொண்டது. அப்போதே தமிழ்நாடு மின்வாரியம் அதன் சூரியஒளி மின்சார கொள்முதல் முறையை மாற்றியமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன். ஆனால், தமிழக அரசு அதன் நிலையை இதுவரை மாற்றிக் கொள்ள வில்லை.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சூரிய ஒளி
மின்சாரத்தைக் கொள்முதல் செய்வதற்கு அதிக செலவு ஆனது. ஆனால், சூரிய ஒளி மின்திட்டங்கள் இப்போது அதிக அளவில் செயல்படுத்தப்பட்டு வருவதால், அதன் உற்பத்திச் செலவு பெருமளவில் குறைந்து விட்டது. அதேபோல், சூரிய ஒளி மின்சாரத்தின் விலையும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்த யூனிட் 10 ரூபாயிலிருந்து 5 ரூபாயாக குறைந்து விட்டது.
தமிழ்நாடு அரசு சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்வதில் தனியாருக்கு திட்டமிட்டே சலுகை காட்டுகிறது என்பதற்கு ஏராளமான உதாரணங்களைக் காட்ட முடியும். உதாரணமாக, ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.07.01 என்பது வரும் செப்டம்பர் மாதத்திற்குள் மின்சாரம் உற்பத்தி செய்யத் தொடங்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதற்குப் பிறகு மின்னுற்பத்தி செய்யும் சூரிய ஒளி நிறுவனங்களிடம் ரூ.5.87 என்ற விலையில் தான் கொள்முதல் செய்யப்பட வேண்டும்.
ஆனால், இந்த சலுகையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை தமிழக அரசு நீட்டித்திருக்கிறது. அதானி நிறுவனத்தின் நலன் கருதி மேலும் ஓராண்டு வரை இந்த கூடுதல் விலைச் சலுகையை நீட்டிக்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இவை அனைத்துக்கும் காரணம் சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் நிறுவனங்களிடமிருந்து ஆட்சியாளர்கள் கோடிக்கணக்கில் கையூட்டு பெறுவது தான்.
இந்தியாவிலேயே சூரிய ஒளி அதிகமுள்ள மாநிலம் தமிழகம் தான். எனவே, போட்டி ஏல முறையில் சூரிய ஒளி மின்சாரம் கொள்முதல் செய்யப்படும் என்று அறிவித்தால் 5 ரூபாய்க்கும் குறைவான விலையில் மின்சாரம் உற்பத்தி செய்து வழங்க ஏராளமான நிறுவனங்கள் தயாராக உள்ளன. எனவே, தமிழ்நாடு மின்சார வாரியத்தின் நிதி நிலையையும், தமிழக மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு, இதுவரை கையெழுத்திடப்பட்ட சூரிய ஒளி மின்சார கொள்முதல் ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு போட்டி ஏல முறையில் புதிய கொள்முதல் ஒப்பந்தங்களை செய்து கொள்ள அரசு முன்வர வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
07 August 2015
தண்ணீரில் ஓட்டக்கூடிய சைக்கிளை உருவாக்கிய பேராசிரியை
தெனிந்திய-தனியார் பொறியியல் கல்லூரி பேராசிரியை ஒருவர்
மழைகாலங்களில் மாணவர்கள் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல ஏதுவாக காலியான ஆயில் டப்பாக்களைக்கொண்டு
தண்ணீரில் ஓட்டக்கூடிய சைக்கிளை உருவாக்கிய இந்த சகோதரியின் முயற்சிக்கு
எமது பாராட்டுக்கள்
கடற்படை இந்திய மீனவர்களை கண்டுகொள்ளவில்லையாம்???
வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மீனவர்களின் கரைவலை மற்றும் இதர வலைகளை இந்திய மீனவர்களும் தென்னிலங்கை மீனவர்களும் அறுத்தெறிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் மீண்டும் போராட்டங்களை
முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே, கடந்த மூன்று நாட்களில் மாத்திரம் 8 மீனவர்களுடைய சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகள் இவ்வாறு அறுக்கப்பட்டுள்ளதாக கட்டைக்காடு மீனவர் சங்கத் தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடலட்டை பிடிப்பில் ஈடுபடும் தென்னிலங்கை மீனவர்கள்
எமது பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து, எமது வலைகளை அறுத்து எறிகின்றனர். இதேவேளை றோலர்களில் இந்திய மீனவர்கள் கரை வரையில் வந்து எமது மீனவர்களின்
வலைகளை அறுக்கின்றனர். முன்னர் கடற்படையினருக்கு அறிவித்தவுடன் அவர்கள் சென்று இந்திய மீனவர்களைக் கைது செய்து வந்தனர். ஆனால் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் காலம் என்பதால் கடற்படையினர் மீனவர்களைக் கைது செய்ய
முன்வரவில்லை.
புதன்கிழமை இரவு 6 மீனவர்களுடைய வலைகளை அறுத்தெறிந்த இந்திய மீனவர்கள், றோலர்களை கரைக்கு கொண்டு வந்து ஹோன் அடித்துவிட்டுச் சென்றனர். 100க்கும் அதிகமான றோலர்கள் எமது
கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைவதால் எமது மீனவர்கள் தொழிலுக்குச் செல்லாமல் இருக்கின்றனர்.
தென்னிலங்கை மீனவர்கள் வெள்ளிக்கிழமை (07) அதிகாலையில் இரண்டு மீனவர்களுடைய வலைளை அறுத்துள்ளனர். இவற்றைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில் நாங்கள் இருக்கின்றோம். தேர்தல் நடைபெறவுள்ளமையால் உரிய தரப்பினரிடம் சென்று முறைப்பாடு தெரிவிக்க முடியவில்லையென அவர்
மேலும் கூறினார்.
06 August 2015
பயங்கர ஆயுதங்களுடன் 9 தீவிரவாதிகள் ஊடுருவல்???
இந்திய சுதந்திர தினம் 15-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதற்காக நாடு முழுவதும் சிறப்பான தயாரிப்புகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக சுதந்திர தின கொடியேற்றம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்காக தலைநகர் டெல்லியில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் டெல்லியில் நாசவேலைகளில்
ஈடுபடுவதற்காக பாகிஸ்தான் தீவிரவாதிகள் 9 பேர் அங்கு நுழைந்திருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்து உள்ளது. ஆர்.டி.எக்ஸ். வெடிபொருட்கள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இந்த தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.
மத்திய அரசு எச்சரிக்கை
பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் கடந்த மாதம் அரங்கேற்றப்பட்ட தாக்குதலை தொடர்ந்து, டெல்லியில் இந்த தீவிரவாதிகள் நுழைந்திருப்பதாக உளவு தகவல்கள் கூறுகின்றன. டெல்லியில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களை சீர்குலைப்பதற்காக இந்த தீவிரவாதிகள் நுழைந்திருக்கலாம் என கருதப்படுகிறது.
இதைத்தொடர்ந்து சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லியில் எந்தவித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்க விழிப்புடன் இருக்குமாறு அனைத்து பாதுகாப்பு நிறுவனங்களையும் மத்திய அரசு எச்சரித்து உள்ளது.
3 மாதங்களுக்கு முன்னரே...
பஞ்சாப் தாக்குதலுக்கு பிறகு தான் டெல்லியில் தீவிரவாதிகள் நுழைந்திருந்தாலும், அவர்களுக்கான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு முன்னரே டெல்லிக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
உளவுத்துறையின் இந்த எச்சரிக்கையால் டெல்லியில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
03 August 2015
இலங்கை செல்ல முயற்சித்த இளைஞன் மண்டபத்தில் கைது???
உரிய பயண ஆவணங்கள் இன்றி இந்தியாவில் இருந்து இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் இராமேஸ்வரம் மண்டபம் பிரதேசத்திற்கு அருகில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 27 வயதான அப்துல் ஹக் என்ற இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இலங்கைக்கு செல்ல உள்ளுர் முகவர் மூலம் படகு ஒன்றுக்கு ஏற்பாடு செய்து விட்டு, மண்டபம் காத்திருந்த போது, காவற்துறையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அப்துல் ஹக் இலங்கை கடவுச்சீட்டை பயன்படுத்தி 2012 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சென்றுள்ளார்.
அவர் திருநெல்வேலி மாவட்டம் கடையநல்லூர் பிரதேசத்தில் இஸ்லாமிய மதரசா ஒன்றில் பயற்சிகளை பெற்றுள்ளதுடன் புதுக்கோட்டை மாவட்டத்தில் வசித்து வந்துள்ளார்.
தாய் மரணமடைந்த செய்தியை கேள்வியுற்ற அப்துல் ஹக் இலங்கை செல்ல முயற்சித்துள்ளார். அவரிடம் செல்லுப்படியான கடவுச்சீட்டு இல்லாத நிலையில், சட்டவிரோதமாக இலங்கை
செல்ல தீர்மானித்துள்ளார்.
இதற்காக மண்டபம் பிரதேசத்திற்கு வந்த அவர், முகவர் ஒருவருக்கு 37 ஆயிரம் ரூபாவை கொடுத்து இலங்கைக்கு செல்ல படகை ஏற்பாடு செய்திருந்தாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)