சத்தீஸ்கர் மாநிலம் ஹாங்பூர் நகரில் உள்ளூர் மக்களுக்கு கடந்த வெள்ளிக்கிழமை பலத்த சத்தம் கேட்டு உள்ளது. உடனே வீட்டுக்குள் இருந்த அனைவரும் வெளியில் வந்து பார்த்து உள்ளனர். அப்போது ஒரு விசித்திரமான பொருள் ஒன்று பறந்து வந்து வயல் வெளியில் விழுந்து உள்ளது.
சனிக்கிழமை இந்த பொருளை பத்திரிகையாளர் ராகுல் பாண்டித என்பவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்து உள்ளார். வானில் இருந்து விழுந்தது என தலைப்பிட்டு இருந்தார்.
”சத்தீஸ்கர் மாநிலம் ஹாஙபூரில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு பயங்கர சத்ததுடன் ஒரு பொருள் ஒன்று வானில் இருந்து வயல் வெளியில் விழுந்தது.” என ராகுல் அதில் தெரிவித்து இருந்தார்.
அந்த் பொருள் என்ன வென்று தெரியவில்லை
. டுவிட்டர் பாலோவர்கள் பலர் தங்கள் ஊகங்களை வைத்து பல கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர்.
சிலர் அதை ஜெட் என்ஜின் என கூறி இருந்தனர். சிலர் செயற்கைகோளின் பாகம் என கூறி இருந்தனர்
கடந்த வெள்ளிக்கிழமை சத்தீஸ்கர் மாநில ராய்பூர் விமான நிலையத்தில் டாக்கா-மஸ்க்யாட் விமானம் அவசரமாக தரையிறக்கபட்டது அதன் தொடர்புஇடைய பாகமாக இருக்ககூடும் என ராகுல் தெரிவித்து உள்ளார்..
0 கருத்துகள்:
Post a Comment