பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் 100 வார்டுகளில் வெற்றி வாகைசூடி பா.ஜனதா மீண்டும் மாநகராட்சியை கைப்பற்றி உள்ளது.
பெங்களூரு மாநகராட்சி மொத்தம் 198 வார்டுகள் கொண்டது. இந்த மாநகராட்சிக்கு கடந்த 22-ந் தேதி தேர்தல்
நடைபெற்றது. அதாவது, கொங்கச்சந்திரா வார்டில் பா.ஜனதா வேட்பாளர் போட்டியின்றி வெற்றி பெற்றார். இதனால் மீதமுள்ள 197 வார்டுகளுக்கு ஓட்டுப்பதிவு நடந்தது.
இதில் 49.31 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்த நிலையில்
இந்த தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி பெங்களூருவில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மையம் வீதம் 27 மையங்களில் நடைபெற்றது. சரியாக காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது
. பகல் 1.30 மணிக்குள் அனைத்து வார்டுகளின் ஓட்டுகளும் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் இருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா முந்தி சென்றது.
இறுதியில் 197 வார்டுகளிலும் வாக்கு எண்ணிக்கை முடிவநிரந்தர இணைப்புடைந்து முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் பா.ஜனதா 100 இடங்களில் வெற்றி பெற்று தனி பெரும் கட்சியாக உருவெடுத்து
உள்ளது. ஆனால் அக்கட்சிக்கு தனி மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கடந்த 2010-ம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் அக்கட்சி 111 இடங்களில் வென்று தனி மெஜாரிட்டியை பெற்றது. கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது பா.ஜனதாவுக்கு தற்போது 11 இடங்கள் குறைவாகதான் கிடைத்துள்ளன. காங்கிரஸ் 76 இடங்களிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 14 இடங்களிலும், சுயேச்சைகள் 8 வார்டுகளிலும் வெற்றி பெற்று உள்ளனர்.
தேர்தலுக்கு பின் வெளிவந்த அனைத்து கருத்துக்கணிப்பிலும் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியே வெற்றி வாகை சூடும் என்று கூறப்பட்டது. இதனால் அக்கட்சியின் தலைவர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர். ஆனால் தேர்தல் முடிவுகளோ தலைகீழாக மாறிவிட்டது.
பாரதீய ஜனதா வெற்றி காங்கிரஸ் கட்சிக்கு
பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. பெங்களூரு மாநகராட்சி பதவிக்காலம் முடிந்ததும், கர்நாடக அரசு மாநகராட்சியை கலைத்துவிட்டு, உடனடியாக தேர்தலை நடத்தாமல், வெவ்வேறு காரணங்களுக்காக தேர்தலை தள்ளிப்போட்டது.
அத்துடன் மாநகராட்சியை 3 ஆக பிரிக்கவும் காங்கிரஸ் அரசு நடவடிக்கை எடுத்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பெங்களூரு மாநகராட்சி தேர்தலை தள்ளிப்போட்டதும், மாநகராட்சியை பிரிக்க நடவடிக்கை எடுத்ததும் காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு காரணம்
என்று கூறப்படுகிறது.
மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்திருப்பதால் முதல்–மந்திரி சித்தராமையா மற்றும் பெங்களூரு மந்திரிகளின் பதவிகள் தப்புமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
0 கருத்துகள்:
Post a Comment