This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

26 March 2014

தற்போதைய ஈழத்தமிழரின் நிலை குறித்து தமிழக மாணவர்கள்,

தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், தமிழக அரசியல் தலைவர்கள், மாணவர் பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்  உள்ளிட்ட பலருடன் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது.
உலகத்தமிழர் பேரவை தலைவர் பழ நெடுமாறன் , நாம் தமிழர் கட்சித்தலைவர் சீமான், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் சி.மகேந்திரன் , தமிழ்நாடு மாணவ பிரதிநிதிகள்,ஊடகவியலாளர்கள்  உள்ளிட்டோரை நேற்றையதினம் சந்தித்த  ரவிகரன் ஈழத்தமிழரின் தற்போதைய சூழ்நிலை குறித்து விரிவாக கலந்துரையாடியதாக தெரியவருகிறது.
நேற்றைய சந்திப்புக்கள் இருதரப்பிலும் பயனுள்ள வகையில் அமைந்த நிலையில் இன்றும், நாளையும் ரவிகரனின் சந்திப்புக்கள் மேலும் பலருடன் தொடர்வதாக  அறியமுடிகிறது.

23 March 2014

பத்தாம் வகுப்பு தேர்வு:11 லட்சம் பேர் எழுதும் நாளைக்குள்??

இந்த ஆண்டு பத்தாம் வகுப்புத் தேர்வை தமிழகம் முழுவதும் சுமார் 3,200 மையங்களில் 11 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
இந்தத் தேர்வுக்கான ஹால் டிக்கெட்டுகளை அந்தந்த பள்ளிகள் அரசுத் தேர்வுகள் இணையதளத்திலிருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் பதிவிறக்கம் செய்து கொண்டன.
இந்த ஹால் டிக்கெட்டுகள் திங்கள்கிழமைக்குள் (மார்ச் 24) மாணவ, மாணவிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டுவிடும் என தலைமையாசிரியர்கள் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வு மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வை பள்ளிகள் மூலமாக 10 லட்சத்து 35 ஆயிரம் பேரும், தனித்தேர்வர்களாக 66 ஆயிரம் பேரும் எழுதுகின்றனர்.
பொதுத்தேர்வுக்காக தேர்வு மையங்களை தயார் செய்தல், விடைத்தாள் புத்தகத்தில் கூடுதல் பக்கங்களைத் தைத்தல், தேர்வு கண்காணிப்பாளர்கள் நியமனம், வினாத்தாள்களை கட்டுக்காப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லுதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. வினாத்தாள்களின் பாதுகாப்பை உறுதி செய்ய கட்டுக்காப்பு மையங்களுக்கு காப்பாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
பிளஸ் 2 தேர்வில் வினாத்தாளை எடுத்துச் செல்லவும், தேர்வுக்குப் பிறகு விடைத்தாள்களை எடுத்து வரவும் அரசு செலவில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டன.
இந்த நடைமுறை பத்தாம் வகுப்புத் தேர்விலும் தொடரும் என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேபோல், பிளஸ் 2 தேர்வில் அறிமுகம் செய்யப்பட்ட மாணவர்களின் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள், பார்கோடு எண் உள்ளிட்ட அனைத்து புதிய அம்சங்களும் பத்தாம் வகுப்புத் தேர்விலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
வினாத்தாளை தேர்வு மையங்களுக்கு விநியோகிப்பதற்கான வழித்தடங்களுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
வழக்கமாக, ஒரு கல்வி மாவட்டத்துக்கு 3 அல்லது 4 மையங்களே இருக்கும். ஆனால், இந்த ஆண்டு 8 மையங்கள் வரை அமைக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
விடைத்தாள் பக்கங்கள் 30-ஆக அதிகரிப்பு: இந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள் புத்தக பக்கங்களின் எண்ணிக்கை 38-ஆக அதிகரிக்கப்பட்டது. அதேபோல, பத்தாம் வகுப்பு விடைத்தாள் புத்தகப் பக்கங்களின் எண்ணிக்கையும் 30-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு விடைத்தாள் புத்தகத்தில் 16 பக்கங்கள் மட்டுமே இருக்கும்.
45 நிமிஷங்கள் முன்கூட்டியே தேர்வு: பத்தாம் வகுப்புத் தேர்வு வழக்கமான காலை 10 மணிக்குப் பதிலாக காலை 9.15 மணிக்கே தொடங்க உள்ளது. தேர்வு தொடங்கும் நேரத்தை மாற்ற வேண்டும் என ஆசிரியர்கள் தரப்பில் கோரப்பட்டது.
ஏற்கெனவே அறிவித்தபடி, 45 நிமிஷங்கள் முன்னதாக காலை 9.15 மணிக்குத் தேர்வு தொடங்கும். இதில் மாற்றம் எதுவும் இல்லை என தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன
 
 

14 March 2014

சூப்பர் மார்க்கெட்டில் வெடிகுண்டு: தமிழ் இயக்கத்தைச் !

மதுரை சூப்பர் மார்க்கெட் அருகே பைப் வெடிகுண்டு எடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக தமிழ் இயக்கத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.
இது குறித்த விவரம்:மதுரை உத்தங்குடி அருகே தனியார் சூப்பர் மார்க்கெட் அருகே கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி பைப் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. இது குறித்து மதுரை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வந்தனர்.

இதேபோன்றதொரு வெடிகுண்டு, இச்சம்பவத்துக்கு சில நாள்களுக்கு முன்பு, புதுச்சேரி மத்திய அமைச்சர் நாராயணசாமி வீட்டின் அருகே கைப்பற்றப்பட்டது. இதனால் இரு இடங்களிலும் ஒரே குழுவைச் சேர்ந்த நபர்களே, பைப் வெடிகுண்டுகளை வைத்திருக்கலாம் என போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டது.
இதனால் இந்த வழக்குகள் குறித்து கியூ பிரிவு போலீஸாரும் விசாரணை செய்தனர். இந்த விசாரணையில், தமிழ்த் தீவிரவாத அமைப்பினருக்குத் தொடர்பிருக்கலாம் என போலீஸாருக்கு சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், சில நாள்களுக்கு முன்பு போலீஸார் மேலூர் சாலையில சிவகங்கை மாவட்டம் பூவாச்சிபட்டியைச் சேர்ந்த திருச்செல்வத்தைப் பிடித்தனர்.
அவர் தந்த தகவலின்படி, மேலூரில் பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் தங்கியிருந்த சாக்கோட்டை தங்கராஜ் என்ற தமிழரசன், ஆண்டக்குடியைச் சேர்ந்த கவியரசு என்ற ராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 மீட்டர் வயர் மற்றும் 2 லேப்டாப்கள், 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இவர்கள் அனைவரும் தமிழ் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக முக்கிய குற்றவாளியான சிவகங்கையைச் சேர்ந்த தமிழ் தேசமக்கள் கட்சியைச் சேர்ந்த காளைலிங்கம் என்பவரை போலீஸார் தேடி வந்தனர்.
இதற்கிடையே க்யூ பிரிவு போலீஸாருக்கு, சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஒரு விடுதியில் காளைலிங்கம் தங்கியிருப்பதாக வியாழக்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸார் அங்கு திடீர் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த காளைலிங்கத்தை போலீஸார் கைது செய்தனர்.

மேலும் அவருடன் ஒரு இளைஞரையும் போலீஸார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர். இதில் மதுரை மற்றும் மத்திய அமைச்சர் நாராயணசாமி வீடு ஆகிய இடங்களில் வெடிகுண்டு வைத்ததில் காளைலிங்கத்துக்கு முக்கியப் பங்கு இருப்பதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாக க்யூ பிரிவு போலீஸார் தெரிவித்தனர். இதில் மதுரையில் கைது செய்யப்பட்ட திருச்செல்வத்தின் சகோதரர்தான் காளைலிங்கம் எனவும் போலீஸார் கூறினர்.

12 March 2014

சேவலை பிடிக்க போய் கிணற்றில் சிக்கிய பாட்டி

 தேனி மாவட்டத்தில் சேவலை பிடிக்க சென்ற மூதாட்டி கிணற்றில் உதவிக்கு யாருமின்றி தவித்துள்ளார்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ளது அனுமந்தன் பட்டி பேரூராட்சியின் உட்கடை பகுதியான காக்கில் சிக்கையன் பட்டி ஊரை சேர்ந்தவர் சின்னச்சாமி. அவரது மனைவி பார்வதியம்மாள் ( 80) இவர் சேவல் வளர்த்து வருகிறார். ஆசையாக வளர்த்த சேவல் கடந்த 2 நாட்களாக வீட்டுக்கு வரவில்லை.

வேதனை அடைந்த பார்வதிம்மாள் சேவலை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ஊரின் அருகே உள்ள தண்ணீர் இல்லாத பாழடைந்த கிணற்றில் சேவல் இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
உடனே சேவலை பிடிக்க பேரன்களிடம் பார்வதி அம்மாள் கூறினார். அவர்கள் கிணற்றில் இறங்க மறுத்துள்ளனர்.

ஆசையாக வளர்த்த சேவலை பிடிக்க முடியவில்லையே என்று வேதனைப்பட்ட பார்வதி அம்மாள் நேற்று மதியம் கிணற்றின் படி வழியாக இறங்கியுள்ளார். சேவல் ஒவ்வொரு படியாக கீழே இறங்கியது. சேவலும் இறங்க, மூதாட்டியும் கீழே இறங்கினர். நேரம் ஆகஆக இருள் சூழ்ந்தது.

சேவலையும் பிடிக்க முடியவில்லை. மேலே ஏறவும் முடியவில்லையே என அவர் தவித்தார். இதனால் கிணற்றில் இருந்தவாறு கூச்சல் போட்டார். சத்தம் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் உத்தமபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயராம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி இறங்கி மூதாட்டியை காயம் இன்றி மீட்டனர். மேலே வந்த மூதாட்டி

சம்பவ இடத்திற்கு வந்த சப்–இன்ஸ்பெக்டர் கருப்பசாமி பாண்டியனிடம் கிணற்றில் உள்ள சேவலை பிடித்து தரவேண்டும். இல்லை என்றால் மீண்டும் கிணற்றில் இறங்குவேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

இரவு நேரம் என்பதால் சேவலை பிடிக்க முடியாது காலையில் சேவலை பிடித்து தருகிறோம் என்று உறுதி அளித்த பின்னர் மூதாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.
 

05 March 2014

விஜயகாந்த் கேப்டன் என்ற பதவிப் பெயரை பயன்படுத்தக் கூடாது

கேப்டன் என்ற பதவிப் பெயரை பயன்படுத்தும் நடிகர் விஜயகாந்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

முன்னாள் ராணுவ வீரர் கே.தண்டபானி என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: இந்திய ராணுவத்தில் 22 ஆண்டுகளுக்கு மேலாக, மருத்துவத் துறையில் சுகாதார ஆய்வாளராக நான் பணிபுரிந்தேன். கடந்த 1992-ஆம் ஆண்டு பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.
கேப்டன் என்பது இந்திய ராணுவத்தில் உள்ள ஒரு உயர்ந்த பதவி ஆகும். ஆனால், கேப்டன் பதவிப் பெயரை பயன்படுத்தும் நடிகர் விஜயகாந்த் ராணுவத்தில் பணியாற்றியதாக எனக்கு தெரியவில்லை. இது சட்டவிரோதமானது, ராணுவத்தின் மரியாதையை அவமதிப்பதாகவும் உள்ளது. அவர் ஒரு நடிகர் தான், ராணுவ அதிகாரி இல்லை. அதனால், கேப்டன் என்ற பதவிப் பெயரை அவர் பயன்படுத்த முடியாது.

கடந்த 14-ஆம் தேதி விஜயகாந்த்க்கு எதிராக சாலிகிராமம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். உயர் போலீஸ் அதிகாரிகளுக்கும் அந்தப் புகாரை அனுப்பி வைத்தேன். ஆனால், என் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கேப்டன் என்ற பதவிப் பெயரை சட்ட விரோதமாக பயன்படுத்தும் விஜயகாந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய வேண்டும். அதன் இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டது.

இந்த மனு நீதிபதி சி.டி.செல்வம் முன்பு செவ்வாய்க்கிழமை (மார்ச் 4) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் மனுதாரர் புதிதாக புகார் அளிக்க வேண்டும். அதில், குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் வழக்கு பதிவு செய்து, ஒரு வாரத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும். மனுதாரர் புகார் அளிக்கவில்லை என்றால் அது குறித்து அடுத்த விசாரணையில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இதையடுத்து மார்ச் 11-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

03 March 2014

அடித்து சொல்கிறார் சல்மான்மோடி ஆண்மையற்றவர் தான்

இனி மோடியைக் குறித்துப் பேசும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரை ஆண்மையற்றவர் என்றே குறிப்பிடப் போவதாக வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் அறிவித்துள்ளார்.
உத்திரபிரதேச மாநிலம் பரூக்காபாத் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், '2002'ம் ஆண்டு குஜராத்தில் கலவரம் நடந்தபோது நரேந்திரமோடி அங்கு போனாரா? கலவரத்தை ஏன் தடுக்கவில்லை? கலவரக்காரர்களை தடுக்க முடியாத அவர் ஆண்மை அற்றவர்.

வலிமையானவராக இருந்திருந்தால் நிச்சயம் கலவரத்தை தடுத்து இருப்பார் என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார்.
பாஜக பிரதம வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ள மோடி குறித்து இவ்வாறு சல்மான் குர்ஷித் தெரிவித்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதற்கு பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்தது. இதுகுறித்து பா.ஜனதா தலைவர்கள் கூறுகையில், காங்கிரஸ் தலைவர்கள் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு பேசுவதை சோனியாகாந்தி ஏற்றுக் கொள்கிறாரா? இந்த வெட்கக்கேடான வார்த்தையை கூறியதற்காக சல்மான்குர்ஷித் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால், தான் கூறிய கருத்துக்கு மன்னிப்புக் கோரப் போவதில்லை என சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

மேலும், நரேந்திரமோடியை 'ஆண்மை அற்றவர்' என்று நான் கூறியதில் எந்த தவறும் இல்லை. குஜராத் கலவரம் தொடர்பாக அவரை விமர்சிக்க எனக்கு வேறு பொருத்தமான வார்த்தை கிடைக்கவில்லை என விளக்கமளித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் துணைத் தலைவரான ராகுல்காந்தி, சல்மான் குர்ஷித் கருத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். சல்மான் குர்ஷித் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துவதை ஏற்றுக் கொள்ள இயலாது எனவும் அவர் கூறியிருந்தார்.
இந்நிலையில் கடும் விமர்சனங்கள் எழுந்த போதும், இனி தொடர்ந்து மோடியை தான் அவ்வாறே அழைக்கப் போவதாக சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று உத்திரபிரதேசத்தில் உள்ள தன் சொந்த தொகுதியான பருக்காயத்தில் சல்மான் குர்ஷித் கூறுகையில், நரேந்திர மோடி குஜராத்தில் ஏற்பட்ட கலவரத்தின் போது தன் கடமையை செய்ய தவறி விட்டார். முதல்வர் பதவிக்குரிய நடவடிக்கைகளை அவர் எடுக்கவில்லை. கடமை செய்யாமல் தன் பொறுப்பில் இருந்து தோல்வி அடைந்தவரை ஆண்மையற்றவர் என்றுதான் சொல்வேன். அவரை வேறு எப்படி சொல்ல முடியும்? இன்று மட்டுமல்ல அவர் பற்றி பேசும் போதெல்லாம் நான் இப்படித்தான் சொல்வேன் என கூறியுள்ளார்.
சல்மான் குர்ஷித்தின் இந்த பேச்சுக்கு பாஜக மீண்டும் கண்டனம் தெரிவித்துள்ளது.

:                         

பேஸ்புக்கில் கற்பை சூறையாடிய இரட்டை சகோதரர்கள்

 கோவையில் கல்லூரி மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்த இரட்டை சகோதரர்களை பொலிசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் உள்ள கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு மாஸ் கம்யூனிகேஷன் படித்து வரும் மாணவி ஒருவருக்கு பேஸ்புக் மூலம் இரட்டை சகோதரர்களுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த சகோதரர்கள் பி.இ. படித்து வருகிறார்கள். அவர்களது குடும்பம் உகாண்டாவில் வசித்து வருகிறது.
இந்நிலையில் அவர்கள் மாணவியை தங்கள் வீட்டுக்கு வருமாறு அழைத்துள்ளனர். மாணவியும் அவர்களின் வீட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது சகோதரர்கள் மாணவிக்கு மயக்க மருந்து கொடுத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதனையடுத்து சகோதரர்கள் மீது மாணவி கடந்த வெள்ளிக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த பொலிசார் சகோதரர்களை கைது செய்தனர்.
விசாரணையில் மாணவி மயக்கத்தில் இருந்தபோது அவரை கைப்பேசியில் வீடியோ எடுத்ததாக சகோதரர்களில் ஒருவர் ஒப்புக் கொண்டுள்ளார். பொலிசார் அந்த இருவரின் கைப்பேசிகள் மற்றும் மடிக்கணனிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

02 March 2014

பலாத்காரம்: கொலை நடந்த இடத்தில் நடித்து காட்டிய?

 சிறுசேரி பெண் பொறியியலாளர் உமா மகேஸ்வரியை பலாத்காரம் செய்த இடத்தை கைதான 3 வாலிபர்களும் இன்று அடையாளம் காட்டினர்.
கேளம்பாக்கம் அருகே சிறுசேரி சிப்காட் வளாகத்தில் சில தினங்களுக்கு முன்பு பெண் பொறியியலாளர் உமா மகேஸ்வரி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டார். அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக பொலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். உமாமகேஸ்வரியின் கைப்பேசி, கிரடிட் கார்டு ஆகியவற்றை கண்காணித்தபோது வடமாநில வாலிபர்கள் 3 பேர் சம்பந்தப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து பொலிசார் தீவிர விசாரணை நடத்தி, மேற்கு வங்க வாலிபர்கள் உஜ்ஜவ் மண்டல், உத்தவ் மண்டல், ராம் மண்டல் ஆகியோரை கைது செய்தனர். இவர்களை 7 நாள் பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க செங்கல்பட்டு நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்படி சிபிசிஐடி எஸ்பி நாகஜோதி, டிஎஸ்பி வீரமணி, தாழம்பூர் இன்ஸ்பெக்டர் ராஜேந்திர பிரசாத் ஆகியோர் அந்த 3 பேரையும் இன்று காலை 10 மணிக்கு சம்பவம் நடந்த சிறுசேரி சிப்காட் பகுதிக்கு அழைத்து சென்றனர்.

அங்கு உமா மகேஸ்வரி நடந்து வந்தது, அவரை தாக்கி புதர் பகுதிக்கு இழுத்து சென்றது, கழுத்தை அறுத்தது, வயிற்றில் கத்தியால் குத்தியது போன்றவற்றை மூவரும் நடித்து காட்டினர்.
பலாத்காரம் செய்த இடம் மற்றும் மூவரும் தங்கி இருந்த இடம் ஆகியவற்றையும் அடையாளம் காட்டினர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
 

01 March 2014

வண்டலூர் பூங்காவில் காட்டு மாடு கன்று ஈன்றது


வண்டலூர் உயிரியல் பூங்காவில் லட்சுமி என்ற காட்டுமாடு ஆண் கன்றை சனிக்கிழமை (பிப்.22) ஈன்றது.
இது குறித்து வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
வண்டலூர் பூங்காவில் காட்டு மாடு சனிக்கிழமை ஆண் கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்தப் பூங்காவில் பிறந்து வளர்ந்த ரத்தினம் என்ற 9 வயது ஆண் காட்டு மாட்டுக்கும் 5 வயதான லட்சுமி என்ற பெண் மாட்டுக்கும் இந்த கன்று பிறந்துள்ளது.

புதிதாக பிறந்துள்ள இக்கன்றுடன் சேர்த்து பூங்காவிலுள்ள காட்டு மாடுகளின் எண்ணிக்கை 8 ஆண் மற்றும் 6 பெண் என மொத்தம் 14-ஆக உயர்ந்துள்ளது.
தற்போது கன்று ஈன்றுள்ள தாய்க்கு சிறப்பு உணவுகளாக தேங்காய், புண்ணாக்கு, வாழைப்பழம், கீரை முதலியவை வழங்கப்படுகின்றன.

காட்டு மாடுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூடுதலாக புதிய பேறுகால பராமரிப்பு இருப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கன்று ஈனும் நிலையில் உள்ள காட்டு மாடு இந்த இருப்பிடத்தில் வைத்து பராமரிக்கப்படும்.

பிரசவத்துக்குப் பிறகு, கன்று நன்கு வளர்ந்த நிலையில் தாயும் சேயும் இதர காட்டு மாடுகளின் மந்தையுடன் சேர்க்கப்படும்.

இதனால் வளர்ந்த ஆண் காட்டு மாடு இனப்பெருக்க காலத்தில் கொம்பால் முட்டுதல் மற்றும் மிதிக்க முயற்சித்தல் போன்றவற்றிலிருந்து கன்றுக் குட்டி எளிதாக பாதுகாக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.