30 March 2016
ஜெயலலிதா ராகவேந்திரன் கணேசன் மறைவுக்கு இரங்கல்?
பெல்ஜியம் குண்டுவெடிப்பில் உயிரிழந்த ராகவேந்திரன் கணேசன் மறைவுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா இரங்கல்
தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பிரசல்ஸ்சில் தீவிரவாத தாக்குதலில் ராகவேந்திரன் கணேசன் உயிரிழந்த செய்த ஆழ்ந்த வேதனையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக
குறிப்பிட்டுள்ளார்
. பயங்கரவாத தாக்குதலில் அப்பாவி இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டது மிகவும் துயரகரமானது என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
ராகவேந்திரன் கணேசனின் மறைவு, அவரது குடும்பத்திற்கும், இளம்மனைவி மற்றும் குழந்தைக்கும் பேரிழப்பு என்று குறிப்பிட்டுள்ள
ஜெயலலிதா
கடின உழைப்பு, சுறுசுறுப்பு மற்றும் அறிவாற்றல் மிக்க பணியாளர்களை சர்வதேச சமூகத்திற்கு தமிழகம் அளித்து வருகிறது என்பதற்கு உதாரணமாக ரவீந்திரன் கணேசன் திகழ்வார் என்றும் ஜெயலிதா புகழாரம்
சூட்டியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் ராகவேந்திர கணேஷ் மறைந்த செய்தியறிந்து வருந்துவதாக தெரிவித்துள்ளார். அவருடைய மறைவால் வருந்தும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் கருணாநிதி
கூறியுள்ளார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 27 March 2016
குடிநீர் பாக்கெட்டின் விலை 30 பைசா ! 2 ரூபாயாக உயர்வு!
30 பைசா குடிநீர் பாக்கெட்டின் விலையை ரூ.2 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கு தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில், அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடந்தது.
இதில், விளம்பரங்கள் அளித்தல், செலவைக் கண்காணிக்கும் அமைப்பு, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை விடுவிக்கும் முறை, வங்கி பணப் பரிவர்த்தனை, விழிப்புணர்வுக் குழுக்களின் செயல்பாடுகள், தேர்தல் கணக்கு விவரம் தயாரித்தல், ஒற்றை சாளர முறையில் மனுக்களைப் பரிசீலித்தல், தேர்தல் படிவங்களை இணையவழி முறையில் அளித்தல், புகார்-அறிவிக்கைகளை புதிய தகவல் தொழில்நுட்பத்தின் மென்பொருள் மூலம் பெறுதல் போன்றவை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
குடிநீர் பாக்கெட் விலை ரூ.2: அப்போது, பிரசாரத்தின் போது பயன்படுத்தும் பொருள்கள் குறித்து அளிக்கப்பட்ட விலைப்பட்டியலில் குடிநீர் பாக்கெட் ஒன்றின் விலை ரூ.2 எனவும், ஆயிரம் துண்டுப் பிரசுரங்களை அச்சடிப்பதற்கான செலவு ரூ.950 எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குடிநீர் பாக்கெட்டுகளை மூட்டையாக வாங்கினால் வெறும் 30 பைசாதான் என்றும் ரூ.2 என குறிப்பிட்டிருப்பது ஏன் என்று அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர்.
தேர்தல் ஆணையம் அளித்துள்ள விலை பட்டியல் அடிப்படையிலேயே தேர்தல் செலவு கணக்கை நிர்ணயம் செய்யப்படும் என்பதால், பட்டியலை நடைமுறைக்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 26 March 2016
காதல் ஜோடியை வனப்பகுதியில் நிர்வாணப்படுத்தி கொடுமை?
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் பாவகடா தாலுகாவை சேர்ந்தவர் ரகுராம் (23). சிக்கநாயக்கனஹள்ளியை சேர்ந்தவர் ரம்யா (20). காதலர்களான இருவரும் ஒரே நிறுவனத்தில் வேலை பார்த்து வருகின்றனர். இவர்கள் கடந்த வாரம் விடுமுறை நாளில் சித்ரபெட்டா வனப்பகுதிக்கு சென்று தனிமையில் இருந்துள்ளனர்.
இதை அந்த வழியாக வந்த வாலிபர் ஒருவர் பார்த்தார். அவர் தன்னை வனத்துறை அதிகாரி என்று கூறி அவர்களை நிர்வாணபடுத்தியுள்ளார். பின் அந்தப் பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் சினிமா பாணியில் காலால் அவரது மர்ம உறுப்பில் எட்டி
உதைத்தார்.
இதில் காயமடைந்த அவர், இருவரையும் பழிவாங்கும் நோக்கில், அவர்களது ஆடைகள் மற்றும் செல்போனை எடுத்து கொண்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இது குறித்து, பாதிக்கப்பட்ட காதல் ஜோடிகள் கொரட்டகெரே போலீசில் புகார் அளித்தனர். திருடப்பட்ட செல்போனி–்ன் சிக்னலை வைத்து அரசனகெரே பகுதியைச் சேர்ந்த பீமராஜ் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
24 March 2016
காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 3 பேர் பலி
நாகர்கோவில் அருகே காரும் அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
நாகர்கோயில் அருகே வடசேரி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் தனது நண்பர்களுடன் சித்தூர் மகராஜா கோயிலுக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பியுள்ளார்.
அப்போது கார் விசுவாசபுரம் என்ற பகுதியில் வந்த போது எதிரே வந்த அரசு பேருந்து மீது எதிர்பாராதவிதமாக மோதியது. இதில் காரில் பயணம் செய்த ஆறுமுகம், கண்ணன், கலைவாணன் ஆகியோர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 3 பேர் சிகிச்சைக்காக நாகர்கோயில் அரசு மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
நான் தலைவரை பார்க்கப் போகவில்லை என் தந்தையை பார்க்க சென்றேன்!
கருணாநிதி மு.க.அழகிரி திடீர் சந்திப்பு அரசியல் நோக்கம் ஏதுமில்லை என்ற துறை தயாநிதி தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகவே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்
மக்கள் நல கூட்டணியில் தற்போது விஜயகாந்த் இணைந்துள்ள நிலையில், அக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. பரபரப்பான சூழ்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய சரத்குமார் நேற்று ஜெயலலிதாவை சந்தித்து மீண்டும் அதிமுக கூட்டணியில் தான் இருப்பதை உறுதிபடுத்தினார். மேலும் பாஜக
அடுத்த கட்ட
ஆலோசனையில் மிக தீவரமாக இறங்கியுள்ளது. தமிழ் மாநில காங்கிரசின் முடிவு ஓரிரு நாளில் தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமாகா-வை மக்கள் நல கூட்டணியில் இழுப்பதற்கு தீவரமான முயற்சிகள் நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது போன்ற பரபரப்பான சூழ்நிலையில், தேமுதிகவின் கூட்டணியை பெரிதும் எதிர்பார்த்த திமுகவுக்கு இந்த திடீர் அரசியல் மாற்றம் சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே அரசியல் விமர்சகர்கள்
தெரிவிக்கின்றனர்.
இதனிடையே திமுகவிலிருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரி, திமுக தலைவர் கருணாநிதியை சென்னை கோபாலபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று நண்பகல் திடீர் என்று சந்தித்துள்ளார். இதில் எந்த ஒரு அரசியல் நோக்கமும் இல்லை என்று திமுகவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும்,
மு.க.அழகிரியை
கட்சியில் மீண்டும் இணைப்பது தொடர்பாக கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கூறியிருப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக
கருதப்படுகிறது.
இதனிடையே மு.க.அழகிரி கருணாநிதி சந்திப்பு தொடர்பாக கருத்து கூறியுள்ள மு.க.ஸ்டாலின், இந்த சந்திப்பு தந்தை மகன் இருவருக்கான சந்திப்பாக மட்டுமே தான் அறிவதாக கூறியுள்ளார். மு.க.அழகிரியின் மகன் தனது டிவிட்டர் பக்கத்தில் கருணாநிதியை அழகிரி சந்தித்ததில்
எந்த அரசியல்
உள்நோக்கமும் இல்லை என்று தனது தந்தை கூறியுள்ளதாக பதிவிட்டுள்ளார். இதனால் அழகிரி மீண்டும் திமுகவில் இணைக்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு அழகிரி ஆதரவாளர்கள் மத்தியில்
எழுந்துள்ளது!
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 20 March 2016
பன்ரண்டு இந்தியப் பிரஜைகள் 23 வரை விளக்கமறியல்!
சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 12 இந்தியப் பிரஜைகளையும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட 12 இந்தியப் பிரஜைகள் காத்தான்குடி பொலிஸாரினால் கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் காத்தான்குடி கடற்கரையிலுள்ள தனியார் தங்குமிட விடுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர். இவர்கள் நேற்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி முன்னிலையில்
ஆஜர்படுத்தப்பட்டனர்.
இவர்களை விசாரித்த மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் இவர்களை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் இவர்களிடம் இருந்து பொலிசாரினால் கைப்பற்றப்பட்ட இலேகியம் ,எண்ணெய்,தூள் உள்ளிட்ட பெறுமதியான சட்டவிரோத ஆயுர்வேத மருந்துகளை இரசாயன பகுப்பாய்வுப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறும்
உத்தரவிட்டார்.
சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து சட்டவிரோதமான முறையில் ஆயுர்வேத மருந்து விற்பனையில் ஈடுபட்ட குற்றச் சாட்டின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு,நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 12 பேரும் இந்தியாவின் கர்நாடகாவில் இருந்து சுற்றுலா வீசாவில்
இலங்கைக்கு
வருகைதந்தவர்கள் எனவும் இவர்களில் 40 வயதிற்கு மேற்பட்ட 5 பெண்களும்,7ஆண்களும் அடங்குகின்றனர் எனவும் கடந்த இரண்டு தினங்களாக இவர்கள் காத்தான்குடியில் தங்கி இருந்தாகவும் காத்தான்குடி பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி ஏ.பீ.என்.நிஸாந்த
தெரிவித்தார்.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 19 March 2016
இந்தியக் குடியுரிமை இலங்கை அகதிகளுக்கு ?
தமிழகத்தில் வாழும் இலங்கை அகதிகள் சுமார் ஒரு லட்சம் பேருக்கு, அவர்கள் விரும்பும் பட்சத்தில், இந்திய குடியுரிமையை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருமங்கலம், உச்சம்பட்டி அகதிகள் முகாமில் அதிகாரி ஒருவரின் நடவடிக்கையால் மனமுடைந்த இலங்கை அகதி ஒருவர் உயர் அழுத்தம் கொண்ட மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
இந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் பற்றி அறிவதற்காக சென்றிருந்த உண்மை கண்டறியும் குழுவினர், இந்த முகாம்களில் வாழும் இலங்கை அகதிகள் மிகவும் துயரமான நிலையில் வாழ்ந்து வருவதாக கூறுகின்றனர். இந்த அகதிகளின் பிள்ளைகளும் குடியுரிமை இல்லாமல் தொழில் வாய்ப்புகளை பெறுவதில் சிரமப்படுவதாகவும், அவர்களுக்காவது குடியுரிமை வழங்குவதற்கு இந்திய அரசு
முன்வர வேண்டும்.
பெரும்பாலும் 1990களிலிருந்து இந்த அகதி முகாம்களில் வாழும் இந்த மக்களுக்கு, இந்திய குடியுரிமை இல்லாத காரணத்தினால் அரசின் நலத்திட்டங்கள் கிடைப்பதில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர். இந்த மக்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கான அழுத்தம் தமிழகத்திலிருந்து வரவேண்டும் என தமிழகத்தின் அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் அறிக்கைகளில் இந்த கோரிக்கையை முன்வைக்க வேண்டும்
என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 17 March 2016
தேர்வு: கணக்கு வினாத்தாள், வாட்ஸ் அப்பில் வெளியானது குறித்து விசாரணை ?
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு தேர்வுக்கான கணக்கு வினாத்தாள், வாட்ஸ்அப்பில் வெளியான விவகாரம் குறித்து விசாரணை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.மிகவும் கடினம்
சி.பி.எஸ்.இ. 12–ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடந்து வருகிறது. நாடு முழுவதும் பல்வேறு மண்டலங்களில் இருந்து லட்சக்கணக்கான மாணவ–மாணவிகள் இத்தேர்வை எழுதி வருகின்றனர். கடந்த 15–ந்தேதி கணக்கு தேர்வு நடந்தது. இந்த வினாத்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதில் கேட்கப்பட்டிருந்த 80 சதவீத கேள்விகள் பாடத்திட்டத்தின் வெளியில் இருந்து கேட்கப்பட்டதாகவும், நன்றாக படிக்கும் மாணவ–மாணவிகளால் கூட இந்த கேள்விகளுக்கு விடையளிக்க இயலவில்லை எனவும் செய்திகள் வெளியானது. வினாத்தாளில் கேட்கப்பட்டிருந்த கேள்விகள் அனைத்தையும் குறித்த நேரத்தில் எழுதி முடிக்க இயலவில்லை என மாணவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.வாட்ஸ் அப்பில்
வெளியானது
இதற்கிடையே இந்த வினாத்தாளில் இடம் பெற்றிருந்த சில கேள்விகள் பாட்னா மண்டலத்தின் சில பகுதிகளில் கடந்த 14–ந்தேதியே வாட்ஸ்அப்பில் வெளியானதாக கூறப்படுகிறது. தேர்வுக் கூடத்தில் தங்களுக்கு வழங்கப்பட்ட கேள்வித்தாளும், ஏற்கனவே வாட்ஸ்அப்பில் வந்திருந்த கேள்வித்தாளும் ஒரே மாதிரி இருந்தது கண்டு மாணவ–மாணவிகள் அதிர்ச்சி
அடைந்தனர்.
கடினமான வினாத்தாள் மற்றும் அது வாட்ஸ் அப்பில் வெளியானது போன்ற காரணங்களால், கணக்கு பாடத்துக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மாணவ–மாணவிகளும், பெற்றோரும் கண்ணீர் மல்க கூறி வருகின்றனர். இது தொடர்பாக ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ளது.உறுப்பினர்கள்
கோரிக்கை
இந்த விவகாரம் நேற்று பாராளுமன்றத்தில் எதிரொலித்தது. பல்வேறு கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பூஜ்ஜிய நேரத்தில் இந்த பிரச்சினையை எழுப்பினர். இது குறித்து புரட்சி கர சோசலிஸ்ட் கட்சியை சேர்ந்த என்.கே.பிரேமச்சந்திரன் கூறுகையில், நடந்து முடிந்த கணக்கு தேர்வை ரத்து செய்து விட்டு மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தால் மறுதேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
காங்கிரஸ் உறுப்பினர் கே.சி.வேணுகோபால் மற்றும் பா.ஜனதா உறுப்பினர் ரமேஷ் பிதுரி ஆகியோர், இந்த விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.
விசாரணைக்கு ஏற்றது
இதற்கு பதிலளித்து பேசிய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையா நாயுடு, ‘இந்த விவகாரத்தில் 2 பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, சில கேள்விகள் கடினமானதாக இருந்தன. நன்றாக படிக்கக்கூடிய மாணவர்களால் கூட அதற்கு விடை எழுத முடியவில்லை என்பது. மற்றொன்று இந்த வினாத்தாளில் இடம் பெற்றிருந்த சில கேள்விகள் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்த விவகாரம் விசாரணைக்கு ஏற்றதுதான்’
என்று கூறினார்.
இது மாணவர்கள் மற்றும் அவர்களின் எதிர்காலம் பற்றிய விவகாரம் என்று கூறிய வெங்கையா நாயுடு, இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும், இந்த பிரச்சினையை மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரியின் கவனத்துக்கு கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்தார்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>> 13 March 2016
மீன் பிடியில் ஈடுபட்ட 28 இந்திய மீனவர்கள் கைது!
எல்லை தாண்டி வந்து சட்டவிரோதமாக மீன்பிடித்த குற்றச்சாட்டில் 28 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுக்கோட்டை, பாம்பன், தூத்துக்குடி பகுதிகளில் உள்ள கடலோரக் குப்பங்களை சேர்ந்த இந்த மீனவர்களை இன்று கைது செய்த இலங்கை கடற்படையினர் அவர்களை காங்கேசன் துறைமுகத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவர்கள் சென்ற ஒரு இயந்திரப் படகு மற்றும் இரண்டு நாட்டுப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இம்மாதம் மூன்றாம் திகதி எட்டுபேர், ஆறாம் திகதி 29 பேர், பத்தாம் திகதி நான்குபேர் என முன்னதாக 41 மீனவர்கள் இவ்வாறு
கைதாகியுள்ளனர்.
இதன்படி இன்று கைதானவர்களுடன் சேர்த்து மொத்தம் 69 தமிழக மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 11 March 2016
வரலாற்று உண்மை!எட்டப்பனா? எட்டு அப்பனா?
திருநெல்வேலி சீமையிலுள்ள பாளையங்களில் மிகப்பெரிய பாளையம், எட்டயபுரம் இதை ஆண்ட மன்னர்கள் ‘எட்டப்பன்’ என அழைக்கப் பட்டனர். இம்மன்னர்களில் ஒருவரான வீர ராமகுமார எட்டப்ப நாயக்கர், அங்கு எட்டிஸ்வரமூர்த்தி என்ற சிவன்
கோயிலை கட்டினார்.
இந்த பாளையங்களை ஆண்ட மகாராஜாக்கள், மக்களிடம் நேர்மையாகவும், அன்பானவர்களாகவும், நீதி பரிபாலனை செய்யும் பொழுது பாரபட்சமின்றியும் நடந்துகொண்டனர்.
எட்டப்ப மன்னர்களின் முன்னோர் ‘சந்திரகிரி’ என்ற ஊரில் ஆட்சி செய்தனர். அவர்களின் மிக சிறந்தவராக கருதப்படுபவர் குமாரமுத்து நாயக்கர். இவருக்கு இரண்டு மகன்கள். அவர்களின் ஒருவர் நல்லமநாயக்கர்; மற்றொருவர் வடலிங்கமநாயக்கர். மூத்தவர் நல்லமநாயக்கர், அப்போது விஜய நகரத்தை ஆண்ட சாம்பு மகாராஜாவை அக்கால முறைப்படி
தரிசிக்க சென்றார்.
மகாராஜாவின் கோட்டையின் வடக்கு வாசலை சோமன் என்ற யாராலும் தோற்கடிக்க முடியாத மல்யுத்த வீரன், தன் தம்பிகளுடன் காவல் காத்தான். நீளமான தங்க சங்கிலியின் ஒரு முனையை இடது காலிலும், மற்றொரு முனையை வடக்கு வாசல் சுவற்றின் ஒரு பகுதியிலும் கட்டிக் கொண்டு காவல் காத்தான்.
இரண்டில் ஒன்று இதில் முக்கியமானது என்னவென்றால், மகாராஜாவை தரிசிக்க யார் வந்தாலும் ஒன்று அந்த தங்க சங்கிலியின் கீழ் தலை குனிந்து தரிசிக்க செல்ல வேண்டும் அல்லது மல்யுத்த வீரனுடன் போட்டியிட்டு அவனை வென்ற பின் தரிசிக்க வேண்டும் என்ற நடைமுறையை சோமன் வைத்திருந்தான். இது அவனின் பெருமையை நிலைநிறுத்துவதாக இருந்தது. மகாராஜாவை காணவரும் மக்கள், அவரது ஆட்சியின் கீழ்
உள்ள குறுநில
மன்னர்கள் பெரும்பாலும் சோமனின் சங்கிலியின் கீழ் தலை குனிந்தே சென்று தரிசித்தனர். ஆனால், நல்லமநாயக்கன், சோமனுடன் மல்யுத்தம் செய்து வென்று தரிசிக்க முடிவு செய்து சோமனுடன்
மல்யுத்தத்திற்கு தயாரானார்.
மல்யுத்தம் :இதை கேள்விப்பட்ட வடக்கு வாயிலில் கூடியிருந்த மக்கள் அனைவருக்கும் பெரும் ஆச்சரியம். இதுவரை யாராலும் வெற்றி பெற முடியாத சோமனை இவர் எப்படி வெல்வார் என்று. இருவருக்கும் கடுமையான சண்டை நடந்தது. அங்கு கூடியிருந்த மக்கள் கண் இமைக்காமல் அச்சத்துடன் சண்டை காட்சியை பார்த்தனர். கடைசியில் சோமனின் தலையை துண்டித்து, நல்லமநாயக்கன்
வென்றான்.
ஒரு வல்லயத்தில் (ஈட்டி போன்றது) குத்தி அவன் தலையை ஒரு கையில் வைத்துக்கொண்டும், சோமனின் ரத்தத்தில் நனைந்த அவன் உடையை மறுகையில் வைத்துக்கொண்டும் மகாராஜாவின் தர்பார் மண்டபத்தில் விழுப்புண்களுடன் சென்று நின்றான். சோமனின் தம்பிகள் கண்ணீருடன் நல்லநாயக்கன் பின்னால் சென்றனர்.
மகாராஜாவிற்கும் தர்பார் மண்டபத்திலிருந்த, திவான், சிரஸ்தார் மற்ற பிரமுகர்களுக்கும் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம். யாராலும் வெல்ல முடியாத சோமனை, தன்னை காணவந்த நல்லமநாயக்கரான இவர் எப்படி வென்றார்? அதுவும் ஒரு கையில் சோமன் தலையையும் மற்றொரு கையில் ரத்தம் தோய்ந்த சோமன் உடைகளையும் ஏந்தி தன் முன் நிற்கும் நல்லமநாயக்கன், ஒரு சிறந்த வீரன் என்று தீர்மானித்தார். அக்கால வழக்கப்படி, நல்லமநாயக்கரின் வீரத்தையும், தீரத்தையும் பாராட்டி அவனுக்கு பல கிராமங்களையும், பரிசு பொருட்களையும் வழங்கி ‘யாராலும் வெல்ல முடியாத சோமனை வென்ற நீ மிகச் சிறந்த வீரன்,’ என பாராட்டினார்.
‘எட்டப்பன்’ பெயர் காரணம்
தர்பார் மண்டபத்தில் நல்லமநாயக்கன் பின்னால் வந்த சோமனின் தம்பிகள், மகாராஜாவின் காலில் விழுந்து, “மகாராஜா… என் அண்ணன் இறந்து விட்டான். நாங்கள் நிற்கதியாகிவிட்டோம்,” என கதறி அழுதனர்.இதை கண்ட ராஜா, நல்லமநாயக்கரை பார்த்து, “சோமனை தவிர அவர்களுக்கு யாரும் இல்லை. அவனது தம்பிகளுக்கு தாயாகவும், தகப்பனாகவும் இருந்து கண் போல காத்து, இந்த எட்டு பேரையும் உன் மகன்களாக பாவித்து அவர்களுக்கு அப்பனாக இருக்க வேண்டும்,” என்றார்.
இதன்படி, சோமனின் எட்டு தம்பிகளுக்கும், அப்பனாக நல்லமநாயக்கன் இருக்க சம்மதித்ததால், அதன்பின் வந்த அவரது பரம்பரைக்கு ‘எட்டப்பன்’ (எட்டு அப்பன்) என பெயர் வந்தது.
‘சோமன் தலை’ விருது :மேலும் நல்லமநாயக்கனுக்கு தங்கத்தால் ஆன, சோமன் தலை விருதும் அளித்து, ரத்தக்கறை படிந்த அவன் துணிகளை கொடியாக (காவி நிறம்) பயன்படுத்திக்கொள்ளவும் ராஜா அனுமதித்தார். இந்த சோமன் தலை விருதை தற்போதைய ராஜா பட்டம் சூட்டும் போது, தன் இடது கணுக்காலில் அணிந்து பட்டம் சூட்டினார்.(தற்போதைய மகாராஜாவிற்கு பட்டம் சூட்டும் போது, இக்கட்டுரையாளரான நான் நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது).
இவ்விருதை தான் எட்டப்ப மகாராஜாக்கள், பட்டத்திற்கு வரும்போது தமது இடது கணுக்காலில் அணிந்து கொள்ள வேண்டும். காரணம், சோமன் தலை விருதை, காலில் அணிந்தவுடன் இந்த நாக்கு இடது வலதாக அசையும். இப்படி அசைந்தால் அந்த நபரை எட்டப்ப மகாராஜாவாக சோமன் ஏற்றுக்கொண்டதாக அர்த்தம். மன்னருக்கு மரியாதை எட்டயபுரம் மக்கள் அந்த காலத்தில் மகாராஜா மீது அபரிமிதமான அன்பும் மரியாதை கலந்த பக்தியும் வைத்திருந்தனர். மன்னர் படத்தை மக்கள் வீடுகளிலும் வைத்திருந்தனர்.
தங்கள் நிலத்தில் விளையும் தானியங்களை, ராஜாவின் களஞ்சியத்திற்கு ஒரு குறிப்பிட்ட அளவு கொடுக்க வேண்டும் என்பது ஜமீனில் எழுதப்படாத சட்டம். அப்படி தானியங்களை அளந்து கொடுக்கும்போது ‘லாபம் 1.., 2, 3, 4, 5, 6, 7, மகாராஜா, 9, 10,’ என அளந்து கொடுப்பவர், ‘எட்டு’ என சொல்ல மாட்டார். ஏனென்றால் மகாராஜா பெயரை உச்சரிப்பது மரியாதைக்குரியது அல்ல என்று தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.
எட்டப்பன்- கண்ணப்பன் எட்டப்ப மன்னர்களின் வழி வந்த பெண்களுக்கும், மகாராஜாவின் துணைவியர்களுக்கும் அவர்கள் பெயருடன் ‘கண்ணப்பன்’ என்ற பெயரை சேர்ந்து மக்கள் அழைத்தனர். மன்னர் எட்டப்பன் எல்லோரையும் தன் பிள்ளைகளாக பாவித்தது போல, மன்னர் வழி வந்த பெண்களும் மக்களை, கண் போல் காத்ததால் ‘கண்ணப்பன்’ என்று பெயர் வந்தது. இந்த ஜமீன்களுக்குள் புதைந்து கிடக்கும் சுவாரஸ்யங்கள்
இன்னும் பல.
இதுபோன்ற வெளிவராத வரலாறுகளை இந்த கம்ப்யூட்டர் கால இளைஞர்களும் தெரிந்துகொள்ள வேண்டும். வரலாற்றை புரிந்து கொண்டால் வாழ்க்கை அர்த்தமாகும்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> </09 March 2016
13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விளம்பரப் பலகைகள் அகற்றல் ?
சென்னையில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள், விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,
தேர்தல் நடத்தை
விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமுறைகள் பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள் ஆகியவற்றை அழிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மார்ச் 7ம் திகதி வரை அரசு கட்டடங்கள், சுவர்கள், பொது இடங்கள் ஆகியவற்றில் வைக்கப்பட்டிருந்த 9,223 சுவரொட்டிகள், பேனர்கள், விளம்பரத் தட்டிகள், சுவர்களில் வரையப்பட்டிருந்த அரசியல் கட்சி விளம்பரங்கள், சின்னங்கள் ஆகியவை அழிக்கப்பட்டுள்ளன.
தனியாருக்குச் சொந்தமான சுவர்களில் வரையப்பட்டிருந்த 4,169 விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள் உள்ளிட்டவை நீக்கப்பட்டுள்ளன.
மேலும், தொடர்ந்து இந்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது..
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> வேக கட்டுப்பாடு கருவி: வாகனங்களில் ஏப்.,1 முதல் கட்டாயம் !!!
விருதுநகர்: சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு கருவி , ஏப்.,1 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.
சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர்.
விபத்துக்கள் அதிகம் நடக்க வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம். இதை தொடர்ந்து வாகனங்களில் வேக கட்டுப்பாடு
கருவி பொருத்த போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.இலகு ரக வாகனங்கள்:
ஏற்கனவே பள்ளி வாகனங்களில் வேககட்டுப்பாடு கருவி கட்டாயம் என்பது நடைமுறையில் உள்ளது. தற்போது கார்,லாரி, வேன் உட்பட கனரக வானங்கள், சரக்கு வாகனங்கள், இலகு ரக வாகனங்கள் என ஒன்பது இருக்கைகளுக்கு மேல் உள்ள வாகனங்கள் அனைத்திலும் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வேண்டும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
தகுதி சான்றிதழ்:
இச்சட்டம் வரும் ஏப்.,1 முதல் நடைமுறைக்கு வருகிறது. கடந்த சில வாரங்களாக வட்டார போக்குவரத்து துறை சார்பில் தகுதி சான்றிதழ்களுக்கு(எப்.சி.,) வரும் லாரி, பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் கட்டாயப்படுத்தி
வருகின்றனர். வேக கட்டுப்பாடு கருவி பொருத்திய வாகனங்களுக்கு மட்டுமே தகுதி சான்றிதழ்களும் வழங்கி வருகின்றனர். வேக கட்டுப்பாடு கருவி
பொருத்தும் வாகனங்கள் அதிகபட்சம் 80 கி.மீ., வேகத்திற்கு மேல் போக முடியாது. இதனால் விபத்துக்கள் குறையும் வாய்ப்புள்ளது. வேககட்டுப்பாடு பொருத்தாத வாகனங்கள் மீது வட்டார போக்குவரத்துறையினர் நடவடிக்கை எடுக்க உள்ளனர். இதை தொடர்ந்து தற்போது வாகனங்கவாகனங்க ளில் வேககட்டுப்பாடு கருவி பொருத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன:
02 March 2016
சிறந்த நடிகருக்கான விருது துல்கர், பார்வதிக்கு!
கேரள மாநில அரசின் சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சார்லி மற்றும் என்னு நிண்டே மொய்தீன் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன.
சிறந்த நடிகராக துல்கர் சல்மானும், சிறந்த நடிகையாக பார்வதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேமம் திரைப்படத்த்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் சார்லி படத்தில் நடித்தற்காக துல்கர் சல்மான் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். என்னு நிண்டே மொய்தீன் படத்தின் நாயகி பார்வதி சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார். சார்லி பட இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சார்லி மற்றும் என்னு நிண்டே மொய்தீன் படத்தின்
ஒளிப்பதிவாளர்
ஜோமோன் டி ஜான் சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபலமான படம் என்ற விருதையும் நிண்டே மொய்தீன் வென்றுள்ளது. சிறந்த இசை (ரமேஷ் நாராயண்), சிறந்த பாடல் வரிகள் (ரஃபீக் அகமது), சிறந்த ஒலி வடிவம் (ரங்கநாத் ரவி) ஆகிய பிரிவுகளிலும் என்னு
நிண்டே மொய்தீன்
வென்றுள்ளது. இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணனின் மகள் மதுஸ்ரீ நாராயணன் சிறந்த பாடகி விருதை பெற்றுள்ளார்.
சிறந்த நடிகர், இயக்குநர் விருதுகளைத் தாண்டி, சிறந்த திரைக்கதை (உன்னி, மார்டின்), சிறந்த கலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் சார்லி வென்றுள்ளது.
இந்த விருதுப் பட்டியலில், சென்ற வருடம் கேரள
திரை உலகில்
பல சாதனைகளை முறியடித்த பிரேமம் திரைப்படத்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து மலையாள சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சூடாக விவாதித்து வருகின்றனர்.கேரள மாநில அரசின் சினிமா
விருதுகள்
அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் சார்லி மற்றும் என்னு நிண்டே மொய்தீன் திரைப்படங்கள் அதிக விருதுகளை வென்றுள்ளன.
சிறந்த நடிகராக துல்கர் சல்மானும், சிறந்த நடிகையாக பார்வதியும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட பிரேமம் திரைப்படத்த்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
2015-ம் ஆண்டுக்கான கேரள மாநில விருதுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டன. இதில் சார்லி படத்தில் நடித்தற்காக துல்கர் சல்மான் சிறந்த நடிகர் விருதை வென்றுள்ளார். என்னு நிண்டே மொய்தீன் படத்தின் நாயகி பார்வதி சிறந்த நடிகை விருதை வென்றுள்ளார். சார்லி பட இயக்குநர் மார்டின் பிரகாத் சிறந்த இயக்குநராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
சார்லி மற்றும் என்னு நிண்டே மொய்தீன் படத்தின் ஒளிப்பதிவாளர் ஜோமோன் டி ஜான் சிறந்த ஒளிப்பதிவாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பிரபலமான படம் என்ற விருதையும் நிண்டே மொய்தீன் வென்றுள்ளது. சிறந்த இசை (ரமேஷ் நாராயண்), சிறந்த பாடல் வரிகள் (ரஃபீக் அகமது), சிறந்த ஒலி வடிவம் (ரங்கநாத் ரவி) ஆகிய பிரிவுகளிலும் என்னு நிண்டே மொய்தீன் வென்றுள்ளது. இசையமைப்பாளர் ரமேஷ் நாராயணனின் மகள் மதுஸ்ரீ நாராயணன் சிறந்த பாடகி விருதை பெற்றுள்ளார்.
சிறந்த நடிகர், இயக்குநர் விருதுகளைத் தாண்டி, சிறந்த திரைக்கதை (உன்னி, மார்டின்), சிறந்த கலை இயக்கம் ஆகிய பிரிவுகளில் சார்லி வென்றுள்ளது.
இந்த விருதுப் பட்டியலில், சென்ற வருடம் கேரள திரை
உலகில்
பல சாதனைகளை முறியடித்த பிரேமம் திரைப்படத்துக்கு ஒரு விருது கூட அறிவிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து மலையாள சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சூடாக
விவாதித்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
Subscribe to:
Posts (Atom)