30 பைசா குடிநீர் பாக்கெட்டின் விலையை ரூ.2 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதற்கு தேர்தல் ஆணையம் நடத்திய கூட்டத்தில், அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர்.
அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் சனிக்கிழமை நடந்தது.
இதில், விளம்பரங்கள் அளித்தல், செலவைக் கண்காணிக்கும் அமைப்பு, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை விடுவிக்கும் முறை, வங்கி பணப் பரிவர்த்தனை, விழிப்புணர்வுக் குழுக்களின் செயல்பாடுகள், தேர்தல் கணக்கு விவரம் தயாரித்தல், ஒற்றை சாளர முறையில் மனுக்களைப் பரிசீலித்தல், தேர்தல் படிவங்களை இணையவழி முறையில் அளித்தல், புகார்-அறிவிக்கைகளை புதிய தகவல் தொழில்நுட்பத்தின் மென்பொருள் மூலம் பெறுதல் போன்றவை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.
குடிநீர் பாக்கெட் விலை ரூ.2: அப்போது, பிரசாரத்தின் போது பயன்படுத்தும் பொருள்கள் குறித்து அளிக்கப்பட்ட விலைப்பட்டியலில் குடிநீர் பாக்கெட் ஒன்றின் விலை ரூ.2 எனவும், ஆயிரம் துண்டுப் பிரசுரங்களை அச்சடிப்பதற்கான செலவு ரூ.950 எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. குடிநீர் பாக்கெட்டுகளை மூட்டையாக வாங்கினால் வெறும் 30 பைசாதான் என்றும் ரூ.2 என குறிப்பிட்டிருப்பது ஏன் என்று அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் கேள்வி எழுப்பினர்.
தேர்தல் ஆணையம் அளித்துள்ள விலை பட்டியல் அடிப்படையிலேயே தேர்தல் செலவு கணக்கை நிர்ணயம் செய்யப்படும் என்பதால், பட்டியலை நடைமுறைக்கு ஏற்ற வகையில் திருத்தி அமைக்க வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment