Showing posts with label தகவல்கள். Show all posts
Showing posts with label தகவல்கள். Show all posts
27 February 2018
நடிகை- ஸ்ரீதேவி மரணமும் ஜெயலலிதா எம்பாமிங்கும்
நடிகை ஸ்ரீதேவியின் திடீர் மரணம், திரையுலகத்தினரை மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களையும் கண்ணீரில் ஆழ்த்தியிருக்கிறது. அவருடைய மறைவு திரையுலகுக்கு மிகப்பெரும் இழப்பு என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அதேசமயம், அவருடைய மரணத்தில் எழும் சர்ச்சைகள் விவாதப் பொருளாகியிருக்கின்றன.
துபாயில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்ற நடிகை ஸ்ரீதேவி, கடந்த 25-ம் தேதி அதிகாலை மாரடைப்பில் இறந்ததாகத் தகவல் வெளியானது. நடிகை ஸ்ரீதேவியின் பிரேதப் பரிசோதனை
சான்றிதழ் மற்றும் தடயவியல் அறிக்கை
நேற்று வெளியானது. அதில், ஓட்டல் அறையின் குளியல் தொட்டியில் உள்ள தண்ணீரில் மூழ்கியதால் ஸ்ரீதேவியின் உயிர் பிரிந்ததாகவும் அவரது மரணத்தில் குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் இல்லை' எனவும் தகவல்கள் வெளியாகின. இன்று, அவரது உடல் எம்பாமிங் செய்யப்பட்டு, மும்பைக்குக்
கொண்டு வரப்பட உள்ளது.
ஸ்ரீதேவியின் மரணம் குறித்து நம்மிடம் பேசிய சூழலியலுக்கான மருத்துவர் சங்கத்தின் புகழேந்தி, " ஸ்ரீதேவியின் மரணத்துக்கும் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கும் பிறகு எழுந்த மர்மங்களிலும் கேள்விகளிலும் சில ஒற்றுமைகள் இருக்கின்றன. ஆனால், இந்த இரு மரணங்களும் அரசு என்னும் அமைப்பால்
எப்படிக் கையாளப்பட்டன என்பதில் பெரிய வேற்றுமைகள் இருக்கின்றன. ஸ்ரீதேவி இறந்தபின்னர் அந்த இறப்பை துபாய் அரசு எப்படிக் கையாண்டது?; விசாரணை நடைமுறைகள் எவ்வளவு
கடுமையாக இருந்தன என்பதில் தமிழக ஆட்சியாளர்களுக்கான செய்தி ஒன்றும் இருக்கிறது. ஜெயலலிதா 2016-ம்
ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அறிவிக்கப்பட்டது. அவர் நன்றாக இருப்பதாகச் சொன்ன நேரம் திடீரென மாரடைப்பு வந்ததாகச் சொல்லப்பட்டது
. அதன்பிறகு அவருடைய உடல் எம்பாமிங் செய்யப்பட்டது. அதற்கு முன்னரே ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து வெளியே சந்தேகங்கள் நிலவி வந்தன. பொதுவாக, மற்ற நாடுகளில் மரணத்தில்
சின்ன சந்தேகம் இருந்தால்கூட உடலை எம்பாமிங் செய்வதில்லை. ஏனென்றால், எம்பாமிங் மூலம் உடலில் செலுத்தப்படும் ரசாயன திரவம் இறப்புக்கான காரணம் குறித்து தெரியாமல் செய்துவிடும். ஸ்ரீதேவி விஷயத்தில் எம்பாமிங் நடவடிக்கைகள் தாமதமானதற்கும்
இதுதான் காரணம்.
அடுத்ததாக, ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் உள்பட அனைவரிடமும் மீண்டும் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அறையிலிருந்த சி.சி.டி.வி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. ஜெயலலிதா விஷயத்தில் சி.சி.டி.வி காட்சிகள் மாயமாகி விட்டன.
ஜெயலலிதாவுக்கு வீனஸ் ப்ளட் சாம்பிள் என்னும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. அப்போது அவருடைய ரத்தத்தில் 6.2 என்ற அளவுக்கு பொட்டாசியம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பொதுவாக ஒருவரின் ரத்தத்தில் 6 என்ற அளவில் பொட்டாசியம் கலந்திருந்தாலே ஆபத்துதான்.
ஜெயலலிதாவுக்கு இது முன்னரே இருந்ததா? அப்படியிருந்தது எனில், அதை ஏன் கண்டுகொள்ளாமல் விட்டார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. மேலும், ஜெயலலிதாவுக்கு எதற்கு எம்பாமிங் செய்தார்கள் என்றே தெரியவில்லை.
06 December 2016
பொதுமக்களின் பார்வைக்குமுதல்வர் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டுள்ளது
ஜெயலலிதா உடல் போயஸ் தோட்ட இல்லத்தில் இருந்து ராஜாஜி ஹாலை நோக்கி கிளம்பியது -போயஸ் தோட்டத்தில் இருந்து ஜெயலலிதா உடல் புறப்பட்டது -பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ராஜாஜி அரங்கிற்கு எடுத்து செல்லப்படுகிறது -சாலைகளின் இருபுறமும் அதிமுக தொண்டர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி -ஜெயலலிதாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்த ஜனாதிபதி வருவதாக தகவல் -பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சென்னை வர உள்ளதாக தகவல் -முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு அமெரிக்க அரசு இரங்கல் -இந்தியா ஒரு தலை சிறந்த தலைவரை இழந்து விட்டது -அமெரிக்க அரசு -ஜெ. மறைவையொட்டி சென்னையில் 30 ஆயிரம் போலீசார் குவிப்பு
ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான தொண்டர்கள் சென்னை வருகை -ஜெயலலிதா உடல் வைக்கப்பட உள்ள ராஜாஜி ஹால் பகுதியில் இப்போதே தொண்டர்கள் குவிந்தனர் -ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ள மெரீனா கடற்கரையிலும் பாதுகாப்பு அதிகரிப்பு -ஜெயலலிதா உடல் பொது மக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலில் வைக்கப்படுகிறது -ராஜாஜி ஹாலுக்கு பொதுமக்கள், அதிமுக தொண்டர்கள் வந்த வண்ணம் உள்ளனர் -பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் குவிப்பு -குடும்ப முறைப்படி ஜெயலலிதா உடலுக்கு செய்த சடங்குகள் முடிவடைந்தன -போயஸ் கார்டனிலிருந்து
ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதா உடல் கொண்டு செல்லப்பட உள்ளது -ஜெயலலிதா மறைவு.. புதுச்சேரி மாநிலத்திலும் இன்று, பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை -மறைந்த ஜெயலலிதாவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் -ஜெயலலிதா அதிமுக தொண்டர்களின் உள்ளங்களில் என்றும் நிலைத்திருப்பார்: கருணாநிதி
-போயஸ் கார்டனில் ஜெயலலிதா உடல்
வைக்கப்பட்டுள்ளது -போயஸ் கார்டனில் ஜெயலலிதாவுக்கு இறுதி சடங்குகள் நடைபெறுகின்றன -இறுதிச்சடங்கு பின்னர் ராஜாஜி ஹாலில் ஜெயலலிதா உடல் வைக்கப்படுகிறது -போயஸ் கார்டனில் தொண்டர்கள் குவிந்ததால் பலத்த போலீஸ் பாதுகாப்பு -எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் டிஜிபி ஆய்வு -ஜெயலலிதாவின் உடல் போயஸ் கார்டன் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது -எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் ஜெயலலிதாவுக்கு நினைவிடம்
இங்குஅழுத்தவும் நிலாவரை.கொம் செய்திகள் >>>
20 October 2015
ஒற்றுமையாக செயல்படுவோம் ‘‘வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்’
‘நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’, என்றும் நடிகர் விஷால் கூறினார்.
கடுமையாக உழைத்தோம்
நடிகர் சங்க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் நேற்று மாலை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்
வருமாறு:–
கேள்வி:– நடிகர் சங்க தேர்தல் வெற்றியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
பதில்:– மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைத்தோம். எங்கள் அணி மீது நம்பிக்கை வைத்து,
வெற்றி பெற
செய்த அனைத்து நடிகர்–நடிகைகளுக்கும், நாடக நடிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்போது நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நான் நின்று கொண்டிருப்பது, எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. இந்த மண் தான்
எங்கள் விலாசம்.
கேள்வி:– நடிகர் சங்க கட்டிடம் கட்ட என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?
பதில்:– நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காகத்தான் போராடினோம். அதற்காகவே இந்த பொறுப்புக்கும் வந்தோம். எங்கள் பணிகளை தொடங்கிவிட்டோம். மறுபடியும், இங்கு கட்டிடம் வரும்.
வணிக வளாகங்கள் தேவையில்லை
கேள்வி:– நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு உள்ளதே?
பதில்:– நடிகர் சங்க இடத்தை குத்தகைக்கு விட்டதில், எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று வற்புறுத்தினோம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இங்கு வணிக வளாகங்கள் தேவையில்லை.
கேள்வி:– பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற உங்களின் முதல் நடவடிக்கை என்ன?
பதில்:– நலிந்த நாடக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே எங்களின் முதல் நோக்கம். அவர்களை பொருளாதார ரீதியாக உயர்வடைய செய்வோம். அதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும். நடிகர்–நடிகைகள் பற்றிய முழுமையான புள்ளி விவரங்கள் தெரியாமல்
உள்ளது. எனவே
ஒவ்வொரு நடிகர்–நடிகைகள் பற்றிய விவரங்கள் சேகரித்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்களின் உருவங்கள், வயது, வருமானம், பெற்றோர், குழந்தைகள் உள்பட அனைத்து தகவல்களும் அதில் இருக்கும். தேவையானவர்களுக்கு இதன்மூலம் உதவிகள் செய்து தரப்படும்.
ஒற்றுமையாக செயல்படுவோம்
கேள்வி:– நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவீர்களா?
பதில்:– எல்லா நடிகர்களும் ஒற்றுமையாக செயல்படுவோம். தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் அளித்தோம். அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 29 நிர்வாகிகளும் பாடுபடுவோம்.
இவ்வாறு விஷால் பதிலளித்தார்.
பெயர் மாற்றம்?
நடிகர் சங்க தலைவராக தேர்வான நடிகர் நாசர் கூறுகையில், ‘‘எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நாடக நடிகர்கள் நலனுக்காக பாடுபடுவோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றவேண்டும் என வற்புறுத்தப்படுகிறது. இப்போதுதான், பொறுப்புக்கு வந்துள்ளோம். பெயர் மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்போம்’
’, என்றார்.
பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் கார்த்தி பேசுகையில், ‘‘தேர்தலில் வெற்றிபெற்ற எங்களுக்கு எல்லாருடைய ஆசீர்வாதமும் இருக்கிறது. அனைத்து உறுப்பினர் நலனுக்காக பாடுபடுவோம்’’
, என்றார்.
31 July 2015
போராட்டம் நடத்திய காந்தியவாதி சசிபெருமாள் மரணம்
இந்தியாவில் கன்னியாகுமாரி மாவட்டத்தில் பூரண மதுவிலக்கு கோரி போராட்டத்தில் ஈடுபட்ட காந்தியவாதி சசி பெருமாள்
உயிரிழந்துள்ளார்.
காந்தியவாதியான சசிபெருமாள் தொடர்ந்து மதுவற்ற மாநிலமாக தமிழகத்தை மாற்ற தொடர்ந்து போராடி வந்தார். இதற்கென பல முறை அவர் உண்ணாவிரதப் போராட்டங்கள் நடத்தியுள்ளார்.
பொலிசார் அவரைக் கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்த போதும், அங்கேயும் தனது உண்ணாவிரதத்தை அவர் தொடர்ந்தவர்.
இந்த நிலையில், இன்று செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தியபோது மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
முக்கிய குறிப்பு மநலம் உடையவர் இதை பார்பதை தவிர்க்கவும்
காணொளி நிழல் படங்கள் இணைப்பு ....
08 March 2015
சட்டசபை சபாநாயகர் ஜி.கார்த்திகேயன் மரணம் ---
பெங்களூரு மருத்துவமனையில் புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்று வந்த கேரள சட்டசபை சபாநாயகர் ஜி.கார்த்திகேயன் நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
கேரள சட்டசபை சபாநாயகராக பணியாற்றி வந்தவர் ஜி.கார்த்திகேயன்.
பெங்களூருவில்...
கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்டு இருந்த ஜி.கார்த்திகேயன் கடந்த ஆண்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று திரும்பினார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாத தொடக்கத்தில் மீண்டும் அவர் புற்றுநோய்க்கான தொடர் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள எச்.சி.ஜி. கேன்சர் சிறப்பு மைய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு சிறப்பு நிபுணர் டாக்டர் பி.எஸ்.ஸ்ரீதர் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சில நாட்களாக அவரது உடல்நிலை கவலை அளிப்பதாக இருந்தது. உள்ளுருப்புகளின் செயல்பாடுகள் படிப்படியாக குறைந்து வந்தன.
மரணம்
இந்த நிலையில் நேற்று காலை 10-30 மணி அளவில் கேரள சபாநாயகர் ஜி.கார்த்திகேயன் மரணம் அடைந்தார். உள்ளுருப்புகள் செயல் இழந்ததால் அவர் மரணம் அடைந்ததாக மருத்துவமனையின் இயக்குனர் தினேஷ் மாதவன் தெரிவித்தார்.
ஜி.கார்த்திகேயன் மரணம் அடைந்த தகவல் அறிந்த கர்நாடக உள்கட்டமைப்பு மற்றும் செய்தித்துறை மந்திரி ரோஷன் பெய்க், போலீஸ் மந்திரி கே.ஜே.ஜார்ஜ், முன்னாள் மத்திய மந்திரி வீரப்பமொய்லி, ஹாரீஷ் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு வந்து ஜி.கார்த்திகேயன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
விமானம் மூலம்
பின்னர் ஜி.கார்த்திகேயன் உடல் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதற்காக மருத்துவமனையில் இருந்து பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்துக்கு அவரது உடல் ஆம்புலன்சு மூலம் கொண்டு செல்லப்பட்டது.
அங்கிருந்து 3-30 மணி அளவில் விமானம் மூலம் திருவனந்தபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
குடும்பம்
மறைந்த ஜி.கார்த்திகேயனுக்கு மனைவியும் 2 மகன்களும் உள்ளனர். கேரள மாணவர் காங்கிரஸ் தலைவராக ஜி.கார்த்திகேயன் தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் தொழிற்சங்க தலைவராக பணியாற்றினார். 1995, 2001-ம் ஆண்டுகளில் கேரளாவில் ஏ.கே.அந்தோணி தலைமையில் அமைந்த காங்கிரஸ் மந்திரிசபையில் முறையே மின்சாரம், உணவு மற்றும் பொதுவினியோகத்துறை மந்திரியாகவும் பணியாற்றினார். திருவனந்தபுரம் வடக்கு, ஆர்யநாடு, அருவிக்கரா தொகுதிகளில் இருந்து 6 முறை கேரள சட்டசபைக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் கேரள காங்கிரஸ் கமிட்டியின் பொதுச்செயலாளராகவும் துணைத்தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ளார்.
கடந்த 2011-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் அருவிக்கரா தொகுதியில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்ட ஜி.கார்த்திகேயன் சட்டசபை சபாநாயகராக பணியாற்றி வந்தார். 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின்போது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தீவிர அரசியலில் ஈடுபடபோவதாக அறித்தார். அதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அவரது கோரிக்கையை கட்சி மேலிடம் ஏற்கமறுத்துவிட்டதால் தொடர்ந்து சபாநாயகராக பணியாற்றி வந்தார்.
இரங்கல்
சபாநாகயர் ஜி.கார்த்திகேயன் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் “சபாநாயகர் ஜி.கார்த்திகேயன் கேரள அடித்தட்டு மக்களின் தலைவராக விளங்கினார். கேரள மக்களுக்காக அவரது வாழ்க்கையை அர்ப்பணித்து பணியாற்றினார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆத்மா அமைதியடையட்டும்” என்று கூறியுள்ளார்.
கேரள முதல்-மந்திரி உம்மன் சாண்டி “சபாநாயகரின் மறைவு மிகுந்த வேதனையை அளிக்கிறது.” என்று குறிப்பிட்டு உள்ளார். கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் வி.எம்.சுதீரன்”எனது நீண்டநாளைய நண்பரை இழந்துவிட்டேன். இந்த இழப்பை தாங்க முடியவில்லை“ என்று கூறியுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய ராணுவ மந்திரியுமான ஏ.கே.அந்தோணி தனது இரங்கல் செய்தியில் “கார்த்திகேயனின் மறைவு காங்கிரஸ் கட்சிக்கும் கேரள மாநிலத்துக்கும் மிகப்பெரிய இழப்பு” என்று குறிப்பிட்டு உள்ளார்.
09 November 2014
பிரபல நடிகர் மீசை முருகேசன் மரணம்
பிரபல குணசித்திர நடிகர் மீசை முருகேசன். இவர் தமிழில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வடபழனி குமரன்காலனி 9-வது தெருவில் உள்ள பாலாஜி அபார்ட்மென்டில் குடும்பத்துடன் வசித்தார்.
இரு வாரங்களுக்கு முன்பு வீட்டு குளியல் அறையில் மீசை முருகேசன் வழுக்கி விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த அடிபட்டது. உடனடியாக ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மூளையில் ரத்தம் உறைந்து இருந்தது. சர்க்கரை வியாதி மற்றும் சிறுநீர் பாதிப்புகளும் அவருக்கு இருந்தன.
தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தார்கள். ஆனாலும் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து கவலைக்கிடமாகவே இருந்தார்.
அவரை காப்பாற்ற முடியாது என்று டாக்டர்களும் கைவிரித்தனர். இதையடுத்து மீசை முருகேசனை குடும்பத்தினர் வீட்டுக்கு கொண்டு சென்றனர். நேற்று மாலை 4 மணிக்கு உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 85.
மரணம் அடைந்த மீசை முருகேசன் ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசைக்குழுவில் தவில் கலைஞராக பணியாற்றினார். மோர்சிங் வாசிப்பதில் வல்லவராக இருந்தார். பல்வேறு இசை ஒலிகளையும் எழுப்புவார்.
திருமால் பெருமை உள்ளிட்ட பழைய படங்களில் சிறுசிறு வேடங்களில் தலைகாட்டினார். மோகன், நதியா நடித்த உயிரே உனக்காக படத்தில் தான் முழு நடிகரானார். விஜய்யுடன் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை படங்களில் நடித்து பிரபலமானார். விஜயகாந்துடன் பெரியண்ணா படத்தில் நடித்தார். கடைசியாக சேரனுடன் பிரிவோம் சந்திப்போம் படத்தில் நடித்தார். தொடர்ந்து இசை நிகழ்ச்சிகள் நடத்தி வந்தார்.
வெளிநாடுகளுக்கும் இசை நிகழ்ச்சிகளுக்காக சென்று வந்தார். டி.வி. நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். பெரிய மீசை வைத்து இருந்ததால் இவரை மீசை முருகேசன் என்று அழைத்தனர்.
மரணம் அடைந்த மீசை முருகேசனுக்கு கண்ணம்மா என்ற மனைவியும் ஜோதி குமார், நாகராஜன் என்ற மகன்களும், சரஸ்வதி, செல்வி என்ற மகள்களும் உள்ளனர். அவரது உடல் அஞ்சலிக்காக வீட்டில் வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இன்று மாலை உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வடபழனி ஏவி.எம் ஸ்டூடியோ பின்புறம் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
04 November 2014
யாத்திரை பக்தர்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமையில் நேரடி தரிசனம் ரத்து
திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசிக்க வார விடுமுறை தினமான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் பக்தர்கள் அதிக அளவில் வருகிறார்கள்.
தர்ம தரிசனம் செய்ய பக்தர்கள் சில நாள் 30 மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
பாத யாத்திரை பக்தர்கள் நேரடியாக தரிசனத்துக்கு (திவ்யதரிசனம்) அனுமதிக்கப்படுவதால் இந்த நிலை ஏற்படுவதாக தேவஸ்தானம் கருதுகிறது.
இதனால் சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் பாத யாத்திரையாக வரும் பக்தர்களுக்கு நேரடி தரிசனத்தை ரத்து செய்ய தேவஸ்தானம் முடிவு செய்து உள்ளது. விரைவில் இது அமுல்படுத்தப்படும் என்று கோவில் கூடுதல் நிர்வாக அதிகாரி ஸ்ரீனிவாசராஜ் தெரிவித்தார்.
அவர் கூறும்போது, ‘‘பாத யாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தர்ம தரிசன பக்தர்களை மணிக்கணக்கில் காத்து நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களின் வசதிக்காக சனி, ஞாயிற்றுக்கிழமை மட்டும் திவ்ய தரிசனத்தை ரத்து செய்ய முடிவு செய்து உள்ளோம்’’ என்றார்.
திருப்பதி கோவிலில் நேற்று காலை முதல் மாலை 6 மணி வரை 41,815 பக்தர்கள் மூலவரை தரிசனம் செய்தனர். அதன் பிறகு 18 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி வழிந்தனர். இவர்களுக்கு தரிசனத்துக்கு 16 மணி நேரம் ஆனது. பாத யாத்திரை பக்தர்கள் தரிசனத்துக்கு 5 மணி நேரம் காத்து நின்றனர்.
கோவிலில் இன்று சால கட்லா கைசிக துவாதசி ஆஸ்தானம் கொண்டாடப்பட்டது. இன்றைய தினம் பெருமாளுக்கு ஆரத்தி எடுத்து வழிபடுவது விசேஷமாகும்.
14 June 2014
நடிகை சொர்ணாக்கா மாரடைப்பால் மரணம்!
'தூள்' படத்தில் அனைவரும் ரசித்த சொர்ணாக்கா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தவர் தெலுங்கு நடிகை தெலுங்கானா சகுந்தலா. நேற்று இரவு அவர் ஐதராபாத்தில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 63. தெலுங்கானா சகுந்தலா 1981 ஆம் ஆண்டு அவர் சினிமாவில் அறிமுகமானார். 70-க்கும் மேற்பட்ட படங்களில் வித்தியாசமான வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
26 October 2013
டெல்லியில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் மாபெரும் போராட்டம்!
ஈழத்தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை காமன்வெல்த் அமைப்பில் இருந்து நீக்க வேண்டும். இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெறுவதற்கு இந்தியா எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும்.அதையும் மீறி இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடைபெற்றால் அதில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது
என மத்திய அரசை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா) சார்பில் டெல்லியில் மாபெரும் கண்டன போராட்டம் நடைபெற உள்ளது
நாள்: 28 அக்டோபர் 2013
நேரம்: காலை 11 மணி அளவில்
இடம் : ஜந்தர் மந்தர் புது தில்லி
தலைமை- ஏ.ஸயீத் (தேசிய தலைவர் எஸ்.டி.பி.ஐ)
குறிப்பு
இப்போராட்டத்தில் தமிழக தலைவர்கள் தெஹ்லான் பாகவி நெல்லை முபாரக் முகவை அப்துல் ஹமீதுஇநிஜாம் முஹைதீன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
அன்பார்ந்த உறவுகளே!
ஈழத் தமிழர்களுக்காக டெல்லியிலே மத்திய அரசை வலியுறுத்தும் விதமாக போராடுகின்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் இப்போராட்டத்துக்கு ஆதரவு தாரீர்
15 October 2013
குழந்தையை கொன்ற தந்தை பெண்ணாக பிறந்ததால்
ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில். மெக்கானிக்காக வேலை செய்து வந்தார்.
சில ஆண்டுகளுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு அவரது மனைவி கருவுற்றிருந்த போது, 'எனக்கொரு மகன் பிறப்பான். அவன் என்னைப் போலவே இருப்பான்' என்று இன்ப கனவில் மிதந்த அவருக்கு முதல் குழந்தை பெண்ணாக பிறந்ததால் அதிர்ச்சி ஏற்பட்டது.
அடுத்தது ஆண் குழந்தை தான் என்று உறவினர்கள் உசுப்பேற்றி விட்டதால், சில மாதங்களில் அவரது மனைவி மீண்டும் கருவுற்றார். இரண்டாவது குழந்தையும் பெண்ணாக போனதால், ஆண் குழந்தையை பெற்றே தீர வேண்டும என்ற முனைப்பில் தனது மனைவியை மூன்றாவது குழந்தைக்கும் தாயாக்கினார்.
மூன்றாவது பிரசவத்திலும் அவரது எண்ணம் ஈடேறாததால் சோகத்தில் மூழ்கிப்போன ஷேக் இஸ்மாயிலை குடிப்பழக்கம் தொற்றிக் கொண்டது.
நேற்று காலை நிதானம் தெரியாத போதையில் வீட்டுக்கு வந்த அவர் தனது பாக்கெட்டில் இருந்த மது பாட்டிலை திறந்து 3வது மகளான 18 மாத குழந்தையின் வாயில் வற்புறத்தி ஊற்றினார்.
தொண்டை மற்றும் குடல் எரிச்சலில் வீறிட்டு அழுத குழந்தை சிறிது நேரத்திற்குள் மயங்கி விழுந்தது, நிலமை விபரீதமானதை உணர்ந்த அவர் குழந்தையை குண்டூர் அரசு வைத்தியசாலை வாசலில் போட்டுவிட்டு தப்பி தலைமறைவாகி விட்டார்.
உயிருக்கு போராடிய குழந்தையை தூக்கிச் சென்ற வைத்தியசாலை ஊழியர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் குழந்தை நேற்றிரவு இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
தலைமறைவாக உள்ள ஷேக் இஸ்மாயிலை பிடிக்க பொலிஸார் வலைவீசி தேடி வருகின்றனர்
08 October 2013
பாலியல் தொந்தரவு: தீக்குளித்த பெண் மரணம்
டெல்லியில் உள்ள அம்பேத்கர் கல்லூரி முதல்வர், தனக்கு பாலியல் தொந்தரவு தந்ததாக கூறி டெல்லி அரசு தலைமை செயலகத்தின் முன்பு தீக்குளித்த பவித்ரா பரத்வாஜ்(40) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2010ம் ஆண்டிலிருந்தே அந்த கல்லூரி முதல்வர் எனக்கு பாலியல் தொந்தரவு தந்து வந்தார். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடமும், டெல்லி பொலிஸாரிடமும் நான் புகார் அளித்ததால் பொய் குற்றச்சாட்டுகளை சுமத்தி அவர் என்னை வேலையில் இருந்தும் நீக்கி விட்டார்.
எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுப்பதற்காக அரசின் கவனத்தை ஈர்க்க நான் தற்கொலை செய்ய முயற்சித்தேன் என பொலிஸாரிடம் பவித்ரா வாக்குமூலம் அளித்திருந்தார்.
டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்
07 October 2013
ஆசிட் வீச்சில் உயிரிழந்த வினோதியினின் தாயார்
ஒருதலை காதலில் ஆசிட் வீசி கொலை செய்யப்பட்ட காரைக்கால் பெண் பொறியாளர் வினோதினியின் தாயார் மகளின் பிரிவு தாங்காமல் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காரைக்கால் எம்.எம்.ஜி. நகரை சேர்ந்தவர் ஜெயபால். இவரது மனைவி சரஸ்வதி(48). இவர்களுடைய மகள் வினோதினி(23). சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து வந்தார்.
வினோதினியின் குடும்ப நண்பர், காரைக்கால் திருவெட்டக்குடியை சேர்ந்த சுரேஷ்குமார் (33). இவருக்கு வினோதினியின் மீது ஒருதலை காதல்
ஏற்பட்டது. ஆனால் அவரது காதலை வினோதினி ஏற்க மறுத்து விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ்குமார் கடந்த ஆண்டு நவம்பர் 14ம் திகதி வினோதினி மீது ஆசிட் வீசினார். முகம், உடல் வெந்த வினோதினி சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கடந்த பிப்ரவரி 12ம் திகதி இறந்தார்.
இதனைத் தொடர்ந்து வினோதினி கொலை வழக்கில் சுரேஷ்குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து காரைக்கால் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. எனவே சுரேஷ்குமார் கடலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொலையுண்ட வினோதினியின் நினைவு அவரது பெற்றோரை வாட்டி வதைத்தது. எனவே கடந்த 2 மாதத்துக்கு முன்பு சரஸ்வதியின் சொந்த ஊரான சீர்காழி அருகே உள்ள திருக்கடையூர் சென்று வசித்து வந்தனர்.
எனினும் மகள் இறந்த துயரில் இருந்து விடுபட முடியாமல் சரஸ்வதி தவித்து வந்தார். எனவே மகளை இழந்து வாழ்வதைவிட உயிர் விடுவதே மேல் என விபரீத முடிவு எடுத்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து நேற்று இரவு சரஸ்வதி தனது வீட்டில் விஷம் குடித்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த சரஸ்வதியை உறவினர்கள் மீட்டு திருக்கடையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின்னர் மேல்சிகிச்சைக்காக காரைக்கால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே சரஸ்வதி பரிதாபமாக இறந்தார்.
அவரது உடலை கண்டு ஜெயபால் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
மேலும் திருக்கடையூர் பொலிஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
05 October 2013
தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவை
தில்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் தேதியை தலைமைத் தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதில், சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாகவும் ஏனைய மூன்று மாநிலங்கள், தில்லி யூனியன் பிரதேசத்துக்கு ஒரே கட்டமாகவும் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தேர்தல் நடைபெறவுள்ள ஐந்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், மத்திய, மாநில உள்துறைச் செயலர்கள், மாநில காவல் துறை தலைமை இயக்குநர்கள் உள்ளிட்டோருடன் கடந்த வாரம் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தியிருந்தனர். அதைத் தொடர்ந்து, தில்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் எச்.எஸ். பிரம்மா, டாக்டர் நசீம் ஜைதி ஆகியோர் வெள்ளிக்கிழமை காலையில் ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் ஐந்து மாநிலங்களுக்குத் தேர்தல் நடத்தும் அறிவிப்பை வி.எஸ். சம்பத் செய்தியாளர்களிடம் வெளியிட்டார். அதன் விவரம்:
"சத்தீஸ்கர் மாநிலத்துக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்ட தேர்தல் நவம்பர் 11, இரண்டாம் கட்ட தேர்தல் நவம்பர் 19 ஆகிய தேதிகளில் நடத்தப்படும். ஏனைய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும்.
மத்திய பிரதேசத்துக்கு நவம்பர் 25, ராஜஸ்தான் மாநிலத்துக்கு டிசம்பர் 1, தில்லி, மிசோரம் ஆகிய மாநிலங்களுக்கு டிசம்பர் 4 ஆகிய தேதிகளில் தேர்தல் நடத்தப்படும். ஐந்து மாநில தேர்தல்களின் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ஆம் தேதி நடைபெறும்.
தேர்தலை எதிர்கொள்ளும் ஐந்து மாநிலங்களில் 630 தொகுதிகள் உள்ளன. சுமார் 11 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்குரிமை பெற்றுள்ளனர். ஐந்து மாநிலங்களில் மொத்தம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ள வரிசை எண், வாக்காளர் புகைப்படம் அடங்கிய சீட்டுகளை வாக்குரிமைக்கு தகுதி பெறும் வாக்காளர்களுக்கு விநியோகிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள மாநிலங்களில் சத்தீஸ்கரில் 98.81 சதவீதமும், ராஜஸ்தானில் 99.43 சதவீதமும் மற்ற மூன்று மாநிலங்களில் 100 சதவீதமும் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை (இபிஐசி) வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஆவணத்துடன் அவர்கள் வாக்களிக்க வாக்குச்சாவடிக்குச் செல்ல வேண்டும்' என்று சம்பத் கூறினார்.
குற்ற வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை பெற்றதால் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர் தகுதியை இழந்துள்ள லாலு பிரசாத், ஜெகதீஷ் சர்மா, ரஷீத் மசூத் ஆகியோரின் இடங்களுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, "அந்த இடங்கள் காலியாகவுள்ளன என மக்களவை, மாநிலங்களவைச் செயலகங்கள் அரசாணை வெளியிட்டதும் அதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்' என்று சம்பத் பதில் அளித்தார்.
"என்ஓடிஏ' வசதி அறிமுகம்
தில்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களின்போது முதன்முறையாக "யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை' (என்ஓடிஏ) என்ற பகுதி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், வாக்குச்சீட்டு ஆகியவற்றில் இடம்பெறும்' என்று தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
"உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்படி, ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது வாக்காளர்களுக்கு "என்ஓடிஏ' வாய்ப்பு அளிக்கப்படும். பிரமாண பத்திரத்தில் வேட்பாளரின் விவரங்கள் தொடர்பான பகுதியில் முழு விவரமும் நிரப்பப்பட வேண்டும். அவ்வாறு நிரப்பாத வேட்பு மனு நிராகரிக்கப்படும். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கியுள்ள உத்தரவு குறித்து விரைவில் தேர்தல் பார்வையாளர்கள், மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு விளக்கப்படும்' என்று சம்பத் கூறினார்.
ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதியை அறிவிப்பதற்காக தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற (இடமிருந்து) தேர்தல் ஆணையர் எச்.எஸ். பிரம்மா, தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ். சம்பத், ஆணையர் சையது நஸீம் அகமது ஜைதி ஆகியோர்.
ரயில் கட்டணம் அக்டோபர் 7 முதல்2 % அதிகரிப்பு
பயணிகள் ரயில் கட்டணம் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் 2 சதவீதம் அதிகரிக்கப்படுகிறது. புறநகர் ரயில்களின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
டீசல், மின்சாரத்தின் விலை அதிகரிப்பினால் ரயில்வே துறைக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை ஈடுகட்ட இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக ரயில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. சரக்கு கட்டணங்களிலும் 2 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அக்டோபர் 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
குளிர்சாதன வசதி வகுப்பு மற்றும் படுக்கை வசதிக்கான ரயில் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
அக்டோபர் 7ஆம் தேதிக்கு பிறகு பயணம் செய்ய முன்பதிவு செய்தவர்களிடம் இருந்து கட்டண உயர்வு விகிதம் வசூலிக்கப்படும்.
கட்டண உயர்வின்படி ரூ. 1000 டிக்கெட்டைப் பெற ரூ. 20 கூடுதலாக செலுத்த வேண்டியிருக்கும். இந்தக் கட்டண உயர்வின் மூலம் ரயில்வே நிர்வாகத்துக்கு சுமார் ரூ. 1,250 கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டீசல் விலை 7.3 சதவீதமும், மின்சாரக் கட்டணம் 15 சதவீதமும் உயர்ந்துள்ளன.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை ரயில் கட்டணங்களையும், சரக்கு கட்டணங்களையும் முறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கத
28 September 2013
ரவுடி கழுத்து அறுத்து படுகொலை திருப்பத்தூர் அருகே
இவர் மீது வழிப்பறி, கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் என 30-க்கும் மேற்பட்ட வழக்குகளில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் உள்ளன.
அந்த பகுதியில் பிரபல ரவுடியான இவனுக்கு முத்துமாரி (23), பிரவீனா (21) என 2 மனைவிகள் உள்ளனர். இதில் முத்துமாரிக்கு 2 குழந்தைகளும், பிரவீனாவுக்கு ஒரு குழந்தையும் உள்ளனர். பல வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள பாரிமன்னன் அடிக்கடி ஜெயிலுக்கு சென்று விடுவதால் அவனது 2 மனைவிகளும் வெறுப்படைந்தனர்.
இதனால் முத்துமாரி அதே பகுதியில் உள்ள தாய் வீட்டிற்கும், பிரவீனா, அரியலூர் தென்மாபட்டு பகுதியில் உள்ள தாய் வீட்டுக்கும் சென்று விட்டனர். நேற்று இரவு தென்மாபட்டுக்கு சென்ற பாரிமன்னன் மனைவி பிரவீனாவுடன் தகராறு செய்துள்ளார். குடிக்க பணம் கேட்டு வாக்குவாதத்திலும் ஈடுபட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீனா, வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து பாரிமன்னன் கண்களில் வீசினார். இதில் நிலைகுலைந்த அவனை, பிரவீனா கீழே தள்ளினார். பின்னர் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து கணவர் என்றும் பாராமல் கழுத்தை அறுத்தார்.
இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பாரிமன்னன் பரிதாபமாக இறந்தார். இதனை தொடர்ந்து பிரவீனா கையில் அரிவாளுடன் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் சென்று சரண் அடைந்தார். அவரை சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மனைவியே கணவனின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் திருப்பத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
24 September 2013
விடுதலை35 தமிழிக மீனவர்கள் !
இந்திய மீனவர்கள் 35 பேர் திங்கட்கிழமை புத்தளம் நீதவானினால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சிறீலங்கா கடற் பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இதன்போது இவர்கள் அனைவரையும் விதலை
செய்யுமாறு புத்தளம் நீதவான் உத்தரவிட்டார்.
எனினும் இவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட படகுகள் மீதான விசாரணையை அடுத்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்தார்
22 September 2013
லண்டன் விமான நிலையத்தில் பாபா ராம்தேவிடம்
போலீசார் 8 மணி நேர தீவிர விசாரணை! ..லண்டனுக்குச் சென்று இருந்த யோகா குரு பாபா ராம்தேவிடம், லண்டன் விமான நிலையத்தில் வைத்து பிரிட்டன் போலீசார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.
பாபா ராம்தேவ், லண்டனில் நடக்க உள்ள விவேகானந்தர் பிறந்த நாள் விழாவில் பங்கேற்று சொற்பொழிவாற்றவே அங்கு புறப்பட்டுச் சென்றார். அவர் கையில் சிறு கைப்பை மட்டுமே வைத்திருந்தார்.
இந்நிலையில், அவரை லண்டன் போலீசார் சுமார் 8 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர். பின்னர் விடுவித்துள்ளனர் என்றாலும் லண்டன் பத்திரிகைகளில் பாபா ராம்தேவ் கைப்பையில் ஏதோ மாத்திரைகள் வைத்து இருந்தார், எனவேதான் போலீசார் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர் என்று தகவல்கள் வெளியிட்டுள்ளன.
கைப்பையில் அப்படி ஒன்றும் இல்லை என்று ராம்தேவின் செய்தித் தொடர்பாளர் கூறினாலும், அவர்கள் அதை நம்புவதாக இல்லை. எனவே, இவ்விடயத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தலையிட்டு, சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் அவர்,
விசா குறித்து மட்டுமே போலீசார் விசாரணை நடத்தினர் என்றும் அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
20 September 2013
சுவர் இடிந்து விழுந்து திருச்சியில் இருவர் பலி
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கட்டடம் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் போது, அப்பகுதிக்கு அருகே இருந்த ஒரு விடுதியின் சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு பெண் தொழிலாளர்கள் பலியாயினர்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே கல்லூரி இருக்கும் சாலையில் கட்டடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. இன்று காலை கட்டடத்துக்கு அடிக்கல் வைக்க பள்ளம் தோண்டும் பணியில் 11 தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, அவ்விடத்துக்கு அருகே இருந்த சுற்றுச் சுவர் எதிர்பாராத விதமாக இடிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் 2 பெண்கள் உயிரிழந்தனர். 5 தொழிலாளர்கள் காயமடைந்தனர்.
07 September 2013
பாடசாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 5 மாணவிகள்
திருவள்ளூர் அருகே பள்ளி மாணவிகள் 5 பேர் பெற்றோர்களுக்கு சொல்லாமல் மெரினா கடற்கரையைச் சுற்றிப் பார்க்கச் சென்றதால், அவர்களைக் காணவில்லை என பெற்றோர்களும், ஆசிரியர்களும் பரிதவிக்கும் நிலை ஏற்பட்டது.
திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கத்தை சேர்ந்த தமிழரசி (15), கார்த்திகா (15), மப்பேடு சமத்துவபுரத்தைச் சேர்ந்த பிரீத்தா (15), இருளஞ்சேரியைச் சேர்ந்த சர்மிளா (16), நரசிங்கபுரத்தைச் சேர்ந்த காயத்ரி (15) ஆகியோர் கீழச்சேரியில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.
வியாழக்கிழமை ஆசிரியர் தினம் என்பதால் பள்ளியில் விழா நடைபெற்றது. விழா முடிந்த பின்னர் 5 மாணவிகளும் வீட்டுக்குச் செல்லவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் மாணவிகளை பல இடங்களில் தேடினர்.
இது குறித்து மப்பேடு பொலிஸ் நிலையதில் புகார் கொடுத்தனர்.
பொலிஸ் விசாரணையில், அம்மாணவிகள், சென்னை மெரினா கடற்கரையைச் சுற்றிப் பார்த்துவிட்டு இரவு 10.30 மணியளவில் சென்ட்ரல் வந்து அரக்கோணம் ரயில் ஏறி ஊருக்கு வந்தனர்.
அந்த மாணவிகளை திருவள்ளூர் ரயில் நிலையத்தில் இருந்த போலீஸார் பத்திரமாக மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்
23 July 2013
கட்டிலில் இருந்து விழுந்து படுகாயமடைந்த நடிகை மஞ்சுளா!!!
சென்னை: நடிகர் விஜயகுமாரின் மனைவியும், நடிகையுமான மஞ்சுளா (59) கட்டிலில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
நடிகர் விஜயக்குமாரின் 2வது மனைவி நடிகை மஞ்சுளா. இவர், விஜயகுமாருடன் சென்னையை அடுத்து உள்ள ஆலப்பாக்கத்தில் வசித்து வந்தார். இவர் சம்பவத்தன்று படுக்கை அறையில் இருந்த கட்டிலில் படுத்திருந்தார். அப்போது திடீரென கீழே விழுந்து விட்டார்.
இதில் அவருடைய வயிற்றில் கட்டிலின் கால் பலமாக குத்தி விட்டது. இதில் படுகாயமடைந்து துடித்தார் மஞ்சுளா. உடனடியாக அவரை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்குக் கொண்டு போய் சேர்த்தனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று மஞ்சுளா சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அவரது மரணம் குறித்து தகவல் அறிந்த திரையுலகினர் சோகமும், கவலையும் வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து நடிகைகள் குஷ்புவும், ராதிகா சரத்குமாரும் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கையில்,
குஷ்பு: மஞ்சுளா ஆன்ட்டியின் ஆத்மா சாந்தி அடையட்டும். என்னைப் பொருத்த வரை நீங்கள் தான் அழகான பெண். லவ் யூ சோ மச்.
ராதிகா: மஞ்சுளா விஜயகுமார் அக்காவின் ஆத்மா சாந்தி அடையட்டும். இன்று உங்களைப் பார்த்த பிறகு நாம் ஒன்றாக இருந்த நேரங்கள் மற்றும் உங்களின் அன்பு நினைவுக்கு வருகிறது என்று உருக்கமாக கூறியுள்ளார்.
நவற்கிரி இணையங்கள்,, மறைந்த விஜயகுமார் மஞ்சுளாவின் ஆத்மா சாந்தி அடையவேண்டுகின்றோம்
Subscribe to:
Comments (Atom)












































