. கெடுபிடி காரணமாக நித்தியானந்தா தனது பிறந்த நாள் விழா வை, திருவண்ணாமலை ஆசிரமத்திலேயே எளிமையாகக் கொண்டாடி முடித்ததில், சீடர் களுக்குப் பலத்த ஏமாற்றம்!
உலகம் முழுவதும் ஆசிரமங்களை அமைத்தும் பிரபலம் ஆக முடியாத நித்யானந்தா, ஒரே ஒரு வீடியோவால் தலைமறைவு, தப்பி ஓட்டம், அதிரடிக் கைது என சர்ச்சைகளின் நாயகன் ஆனார். அடுத்து, மதுரை ஆதீனத்தோடு கைகோத்து தன்னை அடுத்த ஆதீனமாக அறிவிக்க வைத்தார். இதனால், மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு அடுக்கடுக்காகப் பல பிரச் னைகள் ஏற்பட, நித்தியைக் கை கழுவியதோடு அவரது சீடர்களையும் ஆசிரமத்தில் இருந்து வெளியேற்றினார். அதைத் தொடர்ந்து தன் பூர்வீக இடமான திருவண்ணாமலை ஆசிரமத்திலேயே தங்கினார் நித்தி. அந்த ஆசிரமத்தையும் இந்து அறநிலையத் துறையினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர நோட்டீஸ் கொடுத்தனர். ஆடிப்போன நித்தி, மூத்த வழக் கறிஞர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தி, கோர்ட்டுக்குச் சென்றார். கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அவர் எங்கே இருக்கிறார் என்றே யாருக்கும் தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில், கடந்த 6-ம் தேதி அவருடைய 36-வது அவதாரப் பெருநாள் விழாவை (அதாங்க, பிறந்த நாள் விழா!) பிரமாண்டமாகக் கொண்டாடத் திட்டம் போட்டிருந்தார். அதற்காக அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் எதிரே மேடை அமைக்கப்பட்டு இருந்தது. ஒயிலாட்டம், புலியாட்டம், தாரை தப்பட்டை, கேரள செண்டை மேளம் முழங்க மாட வீதிகளில் உற்சவ மூர்த்திகளுடன் வீதி உலா, ஆசிரம வளாகத்தில் சத்சங்க விழா, பின்னர் பக்தர்களுக்கு ஆசி வழங்குதல் என ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.
பிறந்த நாளான 6-ம் தேதி அதிகாலையில் நித்தியின் வருகைக்காக அண்ணாமலையார் கோயிலில் அவரது சீடர்கள் காத்திருந்தனர். நேரம் ஆனதே தவிர, அவர் வரவில்லை. பிறந்த நாள் தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டு, ஆசிரமத்தை விட்டு வெளியே வராமல் சிறை வைக்கப்பட்டவர்போல் அங்கேயே இருந்தார்.
நித்தியின் பக்தர்கள் சிலரிடம் பேசியபோது, ''சுவாமியின் பிறந்த நாள் விழாவை எப்போதும் கோலாகலமாகக் கொண்டாடுவது வழக்கம். பிறந்த நாள் அன்று அதிகாலையிலேயே அண் ணாமலையார் கோயிலுக்கு சீடர்களுடன் வந்து அபிஷேகம் செய்வார். அதன்பின், அருண கிரிநாதர் சன்னதிக்குச் சென்று அங்கேயும் பூஜைகள் செய்வார். இந்த முறை அபிஷேகத்துக்கு சுவாமியுடன் ஐந்து பேரைதான் அனுமதிக்க முடியும் என்று கோயில் சார்பில் சொல்லப்பட்டது. இதனால் பிறந்த நாள் அதுவுமாக காலையிலேயே ஏன் வீண் பிரச்னை என்று கோயிலுக்கே வராமல் இருந்து விட்டார். அதற்குப் பதில், பெங்களூரு கருமாரியம்மன் ஆசிரமத்தின் மதுக்கர் சுவாமிகளுடன் அவரது முக்கியச் சீடர்கள் கோயிலுக்கு வந்து பூஜைகள் செய்துவிட்டுச் சென்றனர். மற்ற நிகழ்ச்சிகளையாவது சிறப்பாக நடத்த இருந்தோம். ஆனால், நகரில் எங்களது விழாவுக்கும் ஊர்வலத்துக்கும் அனுமதி தர போலீஸார் மறுத்து விட்டனர். இதனால், அந்த நிகழ்ச்சிகளையும் ரத்துசெய்துவிட்டு மாலையில் ஆசிரமத்தில் கொண்டாட இருந்தோம். அதற்காக ஆசிரமத்தில் பெரிய மேடை அமைத்து அலங்காரங்கள் செய்து இருந்தோம். சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டுவிடும் என்று போலீஸார் அதற்கும் அனுமதி தர மறுத்து விட்டனர். நித்தியானந்தரின் மெழுகு சிலை பொம்மைகளும் ஓரங்கட்டப்பட்டன. கடைசியில், சத்சங்க நிகழ்ச்சியை மட்டும் ஒரு பெரிய ஹாலில் நடத்தினார். இந்த நிகழ்ச்சிக்கு டெல்லியில் இருந்து ஸ்ரீ ஸ்ரீ நாராயண் சாய் சுவாமிகள் வந்து, நித்தியானந்தரை வாழ்த்திச் சென்றார். பின்னர் பக்தர்கள் அனைவருக்கும் அங்கு இருந்தபடியே சுவாமி ஆசி வழங்கினார். இந்த நிகழ்ச்சிகள் பெரிய திரைகளில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. பல தடைகளை மீறி, சுவாமி விழாவை நடத்திக் காட்டினார்'' என்றனர்.
இந்த விழாவுக்காக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஆட் கள் அழைத்து வரப்பட்டு இருந்தனர். அவர்களுக்காக நகரில் லாட்ஜ், திருமண மண்டபங்கள் புக் செய்யப்பட்டன. சளைக் காமல் பேட்டி கொடுக்கும் நித்தி, இந்த முறை மீடியாவையைச் சந்திப்பதையே தவிர்த்தார். நித்தி விழாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது குறித்து எஸ்.பி. முத்தரசியிடம் கேட்டதற்கு, ''கோயிலைச் சுற்றி யாரும் ஊர்வலம் வரக் கூடாது என் பதால் அனுமதி மறுக்கப்பட்டதே தவிர, அவர்களின் விழாவுக்கு நாங்கள் எந்தத் தடையும் விதிக்கவில்லை'' என்றார்
0 கருத்துகள்:
Post a Comment