Search This Blog n

10 January 2013

வந்தவர்களிடம் எய்ட்ஸ் இருப்பதாக கூறி தப்பித்த பெண்


எனக்கு எய்ட்ஸ்...விட்டுருங்கடா!'என்று கூறியதால், இளம்பெண் ஒருவர் பாலியல் பலாத்காரத்திலிருந்து தப்பினார்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிராமத்தைச் சேர்ந்த ராஜா ரெட்டியும், அதே ஊரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு,பைக்கிலேயே திருப்பதி சென்று விட்டு, இரவு வேளையில், பாகராபேட்டை எனும் வனப்பகுதி வழியே வந்து கொண்டிருந்தனர்.அவர்கள் வழியில் மரத்தடியில் நின்று பேசியபோது,இரண்டு பைக்குகளில் நான்கு மர்ம ஆசாமிகள் அங்கே வந்தனர்.

காதல் ஜோடியைப் பார்த்ததும் பைக்கை நிறுத்தினார்கள்.ராஜாரெட்டியை சரமாரியாகத் தாக்கினார்கள்.பிறகு அந்தப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்கள்.
இதனையடுத்து பதறிப் போய் அலறிய அந்தப் பெண்,சட்டென்று சுதாரித்துக் கொண்டு, 'எனக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறது.என்னை விட்டுவிடுங்கள்'என்று சொல்லி அழுதாள்.

இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நான்கு பேரும்,காதல் ஜோடியைக் கட்டிப் போட்டுவிட்டு, அவர்களிடம் இருந்து செயின் உட்பட மூன்று பவுன் நகைகளையும் பத்தாயிரம் ரூபாய் பணத்தையும் பறித்துக் கொண்டு,பறந்தார்கள்.

பிறகு அந்த வழியே வந்தவர்களின் உதவியால், காதல் ஜோடி காப்பாற்றப்பட்டு, சந்திரகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். பைக்கில் வந்த நான்கு பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்

0 கருத்துகள்:

Post a Comment