பஞ்சாப் மாநிலத்தில் 29 வயது பெண்ணை பேருந்தில் கடத்திச் சென்று கற்பழித்த சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் குக்லா கிராமத்தைச் சேர்ந்த 29 வயது பெண், நேற்று தனது பிறந்த ஊராக பதன்கோட் பகுதியில் உள்ள ஜெகத்பூருக்கு பேருந்தில் சென்று விட்டு மீண்டும் குருதாஸ்பூருக்கு வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
தான் இறங்க வேண்டிய பேருந்து நிறுத்தம் வந்தவுடன் பேருந்து நிற்காமல் சென்றதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் அந்த பேருந்து யாருமில்லாத தனி இடத்திற்கு சென்றது.
அங்கு ஓட்டுநர் , நடத்துனர் உட்பட தன்னுடன் பயணித்த 5 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கனுவான் பொலிஸில் பாதிக்கப்பட்ட பெண் புகார் கூறியுள்ளார்.
இது தொடர்பாக பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்
0 கருத்துகள்:
Post a Comment