முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்த தினத்தையொட்டி, நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவச் சிலையை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை இன்று திறந்து வைக்கிறார்.
÷நீலகிரி மாவட்டத்தில் முதல்முறையாக அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலை, வெண்கலத்தால் கலைநயத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. சுமார் 500 கிலோ எடையுடைய இந்தச் சிலையை சென்னை போரூரைச் சேர்ந்த சிற்பி ரவி என்பவர் உருவாக்கியுள்ளார். இத்தகைய கலைநயமிக்க எம்.ஜி.ஆர். சிலைகள் கிருஷ்ணகிரி உள்பட வெகுசில இடங்களில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளதாக சிற்பி தெரிவித்தார்.
கோத்தகிரியில் உதகை - மேட்டுப்பாளையம் - கொடநாடு சாலை சந்திப்பு பகுதியான டானிங்டன் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை முதல்வர் திறந்து வைக்கிறார்
0 கருத்துகள்:
Post a Comment