This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

18 July 2014

இந்தியாவில் 1,02,241 இலங்கை அகதிகள்

. இந்தியாவில் ஒரு இலட்சத்து 2 ஆயிரத்து 241 இலங்கை அகதிகள் வசிப்பதாக மக்களவையில் இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் கொடுக்குன்னில் சுரேஷ் எழுப்பிய கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜூ எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது,
இந்தியாவில் அகதிகளாக ஆப்கானைச் சேர்ந்த 10,340 பேர், மியான்மரை சேர்ந்த 4,621பேர், இலங்கையைச் சேர்ந்த 1,02,241பேர், நாடு இல்லாதவர்களாக திபெத்தியர்கள் உட்பட 1,01,148பேர் உள்ளனர்.
அகதிகள் என கூறப்படும் வெளிநாட்டினரை கையாளுவதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றுக்கு 2011 டிசெம்பர் 29ஆம் திகதி மத்திய அரசு ஒரு வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகளை வெளியிட்டுள்ளது.
இந்த நடைமுறைகள் மூலம் பாதுகாப்பு சரிபார்ப்புக்கு பின் சம்பந்தப்பட்ட அகதிகளுக்கு நீண்ட கால விசா வழங்குவதற்கு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநில அரசு மற்றும் யூனியன் பிரதேசங்களால் பரிந்துரைக்கப்பட முடியும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தால் நீண்ட கால விசா அனுமதி பெற்ற வெளிநாட்டவர் தனியார் துறையில் வேலை செய்யவோ அல்லது கல்வி நிறுவனத்தில் கல்வி பயிலவோ அனுமதிக்கப்படுவர் என்று அதில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்


மற்றைய செய்திகள்

17 July 2014

தங்கம் மீட்பு ரூ.17 இலட்சம் பெறுமதியான !!

சென்னை மற்றும் பெங்களூர் ஆகிய நகரங்களுக்கு செல்வதற்கு வருகைதந்திருந்த நீர்கொழும்பு மற்றும் பண்டாரகமை ஆகிய பகுதிகளைச்சேர்ந்த இரண்டு பயணிகளிடமிருந்த 17 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கைப்பற்றியுள்ளதாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
அவ்விருவரிடமிருந்தும் கைப்பற்றப்பட்ட தங்கம், அரசுடைமையாக்கப்பட்டுள்ளது என்றும் அவ்விருவருக்கும் 35 இலட்சம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
நீர்கொழும்பைச்சேர்ந்த பயணி, தன்னுடை மேற்சண்டையில் மறைத்துவைத்தும் பண்டாரகமவைச்சேர்ந்த பயணி மூன்று தங்க தகடுகளை காபன் கடதாசிகளில் சுற்றி தன்னுடைய பயணப்பையில் மறைத்து வைத்து கடத்துவதற்கு முயற்சித்த போதே அவை மீட்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
மற்றைய செய்திகள்

15 July 2014

கச்சதீவு வழக்கு: கருணாநிதிக்கு நோட்டீஸ்

கச்சதீவை திரும்பப் பெறக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தி.மு.க தலைவர் கருணாநிதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சதீவை திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அம் மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இதற்கு மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கச்சதீவு என்றுமே தமிழகத்துக்கு சொந்தமான பகுதியாக இருந்ததில்லை என்றும், இந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெறுவதோ, இரத்து செய்வதோ முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.
 மேலும், தமிழக அரசின் சார்பிலும் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் எச்.எல்.தத்து, தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. கருணாநிதியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விடுதலை, தமிழக அரசின் பதில் மனு மீதான எதிர் பதில் மனுவை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கேட்டார்.
அவருடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 4 வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.

மற்றைய செய்திகள்

06 July 2014

இந்திய மீனவர்கள் 20 பேர் கைது

  
இலங்கை கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 20 பேரை தலைமன்னாரில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவேளை இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து 4 படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசலவர்ணகுல சூரிய தெரிவித்துள்ளார்.
 கைது செய்யப்பட்ட 20 மீனவர்களையும் கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்

மற்றைய செய்திகள்

04 July 2014

துவாரக சங்கராச்சாரியார் மீது சாய்பாபா பக்தர்கள் வழக்கு

மராட்டிய மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில் உள்ள சீரடியில் இறைவனின் அவதாரமாக, கண்கண்ட தெய்வமாக வீற்றிருந்து சாய்பாபா அருள்பாலித்து வருகிறார்.
அவர் யார்? அவரது பெற்றோர்கள் யார்? அவர் எங்கிருந்து சீரடிக்கு வந்தார்? என்பன போன்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை.
சீரடியில் இந்துக்கள், முஸ்லிம்களின் பணி விடைபெற்று வாழ்ந்த அவர் 1918–ம் ஆண்டு சமாதி ஆனார். அவர் சமாதி ஆலயத்தில் தினமும் லட்சக்கணக்கானவர்கள் வழிபட்டு பலன் அடைந்து வருகிறார்கள்.
இந்த நிலையில் சீரடி சாய்பாபா பற்றி துவாரக சங்கராச்சாரியார் சுவரூபனாந்த சரஸ்வதி சுவாமி கடுமையாக விமர்சனம் செய்தார். சீரடி சாய்பாபா ஒரு முஸ்லிம் அவரை பற்றி எந்த வேதத்திலும், சாஸ்திரத்திலும் குறிப்பிடப்படவில்லை. எனவே அவரை இந்து கடவுள்களுடன் சேர்த்து வழி படக்கூடாது என்றார்.
துவாரக சங்கராச்சாரியாரின் இந்த பேச்சு நாடெங்கும் உள்ள சாய் பக்தர்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நேற்று சங்கராச்சாரியாரின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
‘‘துவாரக சங்கராச்சாரியாருக்கு, சீரடி கோவிலுக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பக்தர்கள் கூட்டத்தை பார்த்து பொறாமை ஏற்பட்டு விட்டது. அதனால்தான் இப்படியெல்லாம் பேசுகிறார்’’ என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே லக்னோவில் உள்ள சீரடி சாய் பக்தர்கள் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில் அவர்கள், சீரடி சாய்பாபாவை அவதூறாக பேசிய துவாரகா சங்கராச்சாரியார் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனால் சாய் பக்தர்களுக்கும் துவாரகா சங்கராச்சாரியார் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் அதிகரித்துள்ளது.
உலக அளவில் புகழ் பெற்று வரும் சீரடி சாய் ஆலயத்தில் 2012–13ம் ஆண்டு பக்தர்கள் மூலம் 410 கோடி ரூபாய் உண்டியல் வசூல் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

02 July 2014

மீனவர்களின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்!-

ச்சதீவை இலங்கைக்கு கொடுத்தது சட்டத்திற்கு புறம்பானது, செல்லாது. எனவே, கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும். இவ்வாறு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
கச்சதீவு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு ஜெயலலிதா இன்று அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் மீன்பிடி உரிமை தொடர்பாக மீனவர்கள் பாதுகாப்பு சங்கம் தொடர்ந்த வழக்கில் மத்திய வெளியுறவுத்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் கடல் எல்லை முடிந்துவிட்ட விஷயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கச்சதீவை சுற்றி இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க உரிமை இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்தியை படித்ததும் அதிர்ச்சி அடைந்தேன்.

அநேகமாக தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரம் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தயாரித்து ஒப்புதல் அளித்து, அது தங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்படாமல் இருக்கலாம்.

கச்சதீவு இராமநாதபுரம் ராஜாவுக்கு சொந்தமாக இருந்ததற்கு ஆவண சான்று உள்ளது. கச்சதீவை சுற்றி மீன்பிடிக்க இந்திய மீனவர்களுக்கு பாரம்பரிய மீன்பிடி உரிமை உள்ளது. இதனை இலங்கைக்கு கொடுக்க ஒப்பந்தம் செய்ததன் மூலம் அந்த உரிமை பறிக்கப்பட்டுள்ளது.

எனவே, கச்சதீவை மீட்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் 1991ம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளேன்.

இந்தியாவுக்கு சொந்தமான எந்த பகுதியையும் அரசியலமைப்பு சட்டத்திருத்தம் மூலமாக மட்டுமே வேறு நாட்டிற்கு கொடுக்க முடியும்.

எனவே, கச்சதீவை அரசியலமைப்பு சட்டத்திருத்தம் இல்லாமல் இலங்கைக்கு கொடுத்தது சட்டத்திற்கு புறம்பானது, செல்லாது. எனவே, கச்சதீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமையை நிலைநாட்ட வேண்டும்.

கச்சதீவு ஒப்பந்தம் தொடர்பாக திருத்தப்பட்ட புதிய பிரமாணப் பத்திரத்தை தாமதமின்றி தாக்கல் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தாங்கள் உத்தரவிட வேண்டும். என்று குறிப்பிட்டுள்ளார்.