This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

30 September 2015

வருமான வரித்துறையினர் நடிகர் விஜய், நயன்தாரா, சமந்தா வீடுகளில் திடீர் சோதனை

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வருமான வரித்துறையினர் இன்று சென்னை, மதுரை, கொச்சி, ஹைதராபாத்தில் என மொத்தம் 25 இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

நடிகர் விஜய்யின் வீடு, அவரது அலுவலகம், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, இயக்குனர் சிம்புதேவன் அலுவலகம், தயாரிப்பாளர்கள் எஸ்.தாணு, மதுரை அன்பு, செல்வகுமார் மற்றும் புலி படக் குழுவினர் இல்லங்கள், அலுவலகங்கள் என இந்த சோதனை நடந்து வருகிறது.

வருமான வரி கட்டாததன் காரணமாகவும், அதில் பல்வேறு முரண்பாடுகள் இருப்பதன் காரணமாகவே வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நாளை விஜய் நடித்து வெளியாகவுள்ள புலி படமானது பெருமளவு பொருட் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.

மேலும், கணக்கில் காட்டப்படாத பணத்திலேயே இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக வந்த செய்தியை அடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


29 September 2015

தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிட முடியாது காவிரி கண்காணிப்பு குழு அறிவிப்பு

பருவமழை பொய்த்து விட்டதால் தமிழ்நாட்டுக்கு மேலும் தண்ணீர் திறந்துவிட முடியாது என்று காவிரி கண்காணிப்பு குழு கூட்டத்தில் கர்நாடகம் தெரிவித்தது.
கண்காணிப்பு குழு கூட்டம்
காவிரி கண்காணிப்பு குழுவின் 5–வது கூட்டம் அதன் தலைவரும், மத்திய நீர்வளத்துறை செயலாளருமான சசிசேகர் தலைமையில் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், பொதுப்பணித்துறை செயலாளர் பழனியப்பன், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவரும், மேலாண்மை இயக்குனருமான டாக்டர் சாய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கர்நாடக அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் கவுசிக் முகர்ஜி, நீர்வளத்துறை செயலாளர் பி.வி.ராமமூர்த்தி, கேரள அரசின் சார்பில் நீர்வளத்துறை பொறியாளர் பி.ஜே.குரியன் மற்றும் புதுச்சேரி அரசின் சார்பில் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா ஆகியோர் கலந்து கொண்டனர்.

தமிழக அரசு கோரிக்கை
இந்த கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் வருமாறு:–

காவிரியில் கர்நாடகம் போதிய அளவு தண்ணீர் திறந்து விடாததால் சம்பா பருவ பயிர் பாதிக்கப்பட்டு உள்ளது. செப்டம்பர் மாதம் 24–ந் தேதி நிலவரப்படி கர்நாடகம் 47.549 டி.எம்.சி. தண்ணீர் பாக்கி வைத்து உள்ளது. அந்த பாக்கியை கர்நாடகம் பூர்த்தி செய்ய வேண்டும்.

காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பில் கூறியபடி அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் தமிழகத்துக்கு பிலிகுண்டுலு பகுதிக்கு வந்து சேரவேண்டிய 48 டி.எம்.சி. தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடக அரசை வலியுறுத்த வேண்டும்.

கூடுதலாக பயன்படுத்திய கர்நாடகம்
2014–2015–ம் ஆண்டில் கர்நாடகம் 103 டி.எம்.சி. நீரைத்தான் பயன்படுத்த வேண்டும். ஆனால் கூடுதலாக 37 டி.எம்.சி. தண்ணீரை பயன்படுத்தி இருக்கிறது.

கர்நாடக அணைகளுக்கு எவ்வளவு தண்ணீர் வருகிறது? அதில் எவ்வளவு தண்ணீரை கர்நாடகம் பயன்படுத்துகிறது? அதன் மூலம் எவ்வளவு நிலப்பரப்பில் பாசனம் செய்கிறது? என்ற விவரங்களை கண்காணிக்க ஓர் அமைப்பை ஏற்படுத்த வேண்டும். கோடைகால பாசனத்துக்கு கர்நாடகம் தண்ணீர் எடுக்காமல் இருப்பதை கண்காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும். மீதம் இருக்கும் தண்ணீரை அடுத்த பாசனத்துக்கு பகிர்ந்து கொள்ளுமாறு 
கர்நாடகத்தை வற்புறுத்தவேண்டும்.
கடந்த 2013–ம் ஆண்டு மே 10–ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் அளித்த உத்தரவாதத்தின்படி, காவிரி மேலாண்மை வாரியத்தையும், காவிரி ஒழுங்குமுறை குழுவையும் மத்திய அரசு தாமதம் இன்றி அமைக்க வேண்டும்.
மேற்கண்ட கருத்துகள் தமிழக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டன.

தண்ணீர் திறந்துவிட முடியாது
ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட கர்நாடக அதிகாரிகள் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறந்து விட இயலாது என்று கூறினார்கள்.
கூட்டத்தில் அவர்கள் பேசுகையில் கூறியதாவது:–

பருவமழை பொய்த்ததால் கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து குறைந்து உள்ளது. இந்த ஆண்டில் 67 சதவீதம் தான் மழை பெய்துள்ளது. 33 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் காவிரி பாசன பகுதிகளில் கடுமையான வறட்சி
 நிலவுகிறது. இதனால் விவசாயிகள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். எங்களால் இயன்றவரை தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விட்டு இருக்கிறோம். ஏற்கனவே செப்டம்பர் 26–ந் தேதி வரை தமிழகத்துக்கு 82.3 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு கோரும் தண்ணீர் அளவை திறந்து விட முடியாது.

பருவமழை பொய்த்ததன் காரணமாக வழக்கமான நடைமுறையின்படி தண்ணீர் திறந்து விட முடியாத நிலை இருப்பதால், நெருக்கடி கால சூழ்நிலையின்படி தண்ணீரை பகிர்ந்து கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மத்திய அரசு யோசனை
மத்திய அரசின் சார்பில் கலந்து கொண்ட அதிகாரிகள் பேசுகையில், பற்றாக்குறை சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதால் கர்நாடகம்–தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களும் தண்ணீரை பகிர்ந்துகொள்வதில் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



28 September 2015

சுழற்பந்து வீச்சை சமாளிப்போம்” தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் டொமிங்கோ பேட்டி

இந்தியாவின் சுழற்பந்து வீச்சு அச்சுறுத்தலை சமாளிப்போம் என்று தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர் டொமிங்கா கூறியுள்ளார்.

வந்தது தென்ஆப்பிரிக்கா

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி, 5 ஒரு நாள் போட்டி மற்றும் 4 டெஸ்ட் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டி இமாலச்சலபிரதேச மாநிலத்தில் உள்ள மலை வாசஸ்தலமான தர்மசாலாவில் வருகிற 2-ந்தேதி நடக்கிறது. 

இதையொட்டி ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து புறப்பட்ட பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான 15 பேர் கொண்ட தென்ஆப்பிரிக்க 20 ஓவர் அணியினர் நேற்று பிற்பகல் டெல்லிக்கு வந்தடைந்தனர். 

தென்ஆப்பிரிக்க அணியினர் இந்திய மண்ணில் மொத்தம் 12 நகரங்களுக்கு சென்று விளையாட இருக்கிறார்கள். இதில் மூன்று வடிவிலான போட்டிக்கான அணியிலும் அம்லா, டிவில்லியர்ஸ், பிளிஸ்சிஸ், டுமினி, இம்ரான் தார், ரபடா ஆகியோர் இடம் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பயிற்சியாளர் பேட்டி

இந்தியாவுக்கு கிளம்புவதற்கு முன்பாக தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் ரஸ்செல் டொமிங்கோ நிருபர்களிடம் கூறியதாவது:-

இது தான் எனது முதல் இந்திய சுற்றுப்பயணம். தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறேன். இது எனக்கு புதிய சவாலாகும். தொடர் மிகவும் கடினமாக இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஒரு சுற்றுப்பயணம் என்றால் வழக்கமாக நாங்கள் 42 அல்லது 43 நாட்கள் விளையாடுவோம். ஆனால் இது 72 நாட்கள் சுற்றுப்பயணம். இதற்கு முன்பு இத்தகைய நீண்ட தொடரில் நாங்கள் விளையாடியது கிடையாது.

அடுத்தடுத்த வாரங்களில் இந்தியாவின் நிறைய சுழல் தாக்குதலை எதிர்கொள்ள வேண்டி வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடக்கத்தில் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே, அதன் பிறகு அவர்களின் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்று கருதுகிறேன். எனவே அவர்களின் வேகப்பந்து வீச்சு தாக்குதலை துவம்சம் செய்து விட்டோம் என்றால், அதன் பிறகு சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு ஆட முடியும். அதே நேரத்தில் எங்களது மிடில்வரிசை பேட்ஸ்மேன்கள், சுழற்பந்து வீச்சில் தடுமாறினால் நெருக்கடி ஏற்பட்டு விடும் என்பதையும் உணர்ந்துள்ளோம்.

வேகத்திலும்...

சுழற்பந்து வீச்சு மட்டுமின்றி தற்போது இந்திய அணியில் உமேஷ் யாதவ், மொகித் ஷர்மா போன்ற சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களும் இருக்கிறார்கள். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அவர்கள் எங்களை விட அதிகமான ஷாட்பிட்ச் பந்துகளை வீசியதை பார்க்க முடிந்தது. ஆக்ரோஷமாகவும் செயல்பட்டனர்.
இந்த சுற்றுப்பயணத்தில் தொடக்கம் மிகவும் முக்கியம். ஏனெனில் தொடக்கம் சரியாக மையாவிட்டால், எப்போது தொடர் முடியும் என்ற நினைப்பு வந்து விடும்.
இவ்வாறு டொமிங்கோ கூறினார்.
தென்ஆப்பிரிக்க அணி நாளை (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் லெவன் அணிக்கு எதிராக 20 ஓவர் பயிற்சி ஆட்டத்தில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது. 
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


27 September 2015

பிறந்து சில நாட்களே ஆன, ஆண் குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில்விட்டுச்சென்ற பெண்?

பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை தாம்பரம் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண் ஒருவர் விட்டுச்சென்று விட்டார். இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.

ஆதரவற்றோர் இல்லம்
சென்னையை அடுத்த தாம்பரம் லோகநாதன் தெருவில் ‘குட்லைப் சென்டர்’ என்ற பெயரில் ஆதரவற்றோர் இல்லம் உள்ளது. இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். பாஸ்கர் என்பவர் இந்த ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தி வருகிறார்.

நேற்று காலை 7.30 மணியளவில் 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையுடன் அங்கு வந்தார். அவரிடம் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த பெண் ஊழியர்கள் விசாரித்தனர்.

காதலித்து கர்ப்பம்
அப்போது அந்த பெண், ‘‘எனது மகள் பிளஸ்–2 படித்து வருகிறாள். ஒரு வாலிபரை அவள் காதலித்து வந்தாள். இதில் அவள் கர்ப்பம் அடைந்தாள். நாங்கள் வெளியே தெரியாமல் அவளை ரகசியமாக வைத்து இருந்தோம். இந்த குழந்தை அவளுக்கு பிறந்ததுதான். அந்த குழந்தையை நாங்கள் வளர்க்க விரும்பவில்லை. எனவே உங்கள் ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டுச்செல்ல வந்தேன்’’ என்றார்.

அதற்கு பெண் ஊழியர்கள், அந்த குழந்தையை வாங்க மறுத்தனர். அந்த குழந்தைக்கு முறைப்படி மருத்துவ பரிசோதனை பெற்று சான்றிதழ் கொடுக்க வேண்டும். உங்களை பற்றிய விவரத்தையும் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

குழந்தையை விட்டுச்சென்றார்
இதையடுத்து அந்த பெண், அந்த பச்சிளம் குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் விட்டு விட்டு, சிறிது நேரத்தில் மருத்துவ சான்றிதழுடன் வருவதாக கூறிச்சென்றார். ஆனால் அதன்பிறகு அவர் திரும்பி வரவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி பாஸ்கர், இதுபற்றி தாம்பரம் போலீசில் புகார் செய்தார். இதுபற்றி குழந்தைகள் நல மையத்துக்கும் தகவல் தெரிவிக்ப்பட்டது.

இதுபற்றி ஆதரவற்றோர் இல்ல நிர்வாகி பாஸ்கர் கூறும்போது, ‘‘அந்த பெண் விட்டுச்சென்ற பச்சிளம் ஆண் குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்தோம். குழந்தை நல்ல ஆரோக்யமாக உள்ளது. 2½ கிலோ எடை உள்ளது. அந்த குழந்தையை விட்டுச்சென்ற பெண் யார்?, அந்த 
குழந்தை யாருக்கு பிறந்தது? என்பது தெரியவில்லை. அது தனது மகளுக்கு பிறந்ததாக அவர் கூறியது உண்மையா? என்பதும் தெரியவில்லை. அந்த குழந்தையை செங்கல்பட்டில் உள்ள அரசு குழந்தைகள் நல குழுமத்தில் ஒப்படைப்போம்’’ என்றார்
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


புதிய கல்வி வரைவுக்கொள்கை ஆண்டு இறுதியில் மத்திய மந்திரி அறிவிப்பு ?

உத்தர பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோவில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி கலந்து கொண்டு கூட்டத்தினருடன் கலந்துரையாடினார்.

அப்போது அவர், ‘‘நாட்டின் புதிய கல்வி வரைவுக்கொள்கை இந்த ஆண்டின் இறுதியில் அறிமுகம் செய்யப்படும். கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கும், மாணவர்கள் சிறப்பான உயர் கல்வியைப் பெறவும் தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன’’ என கூறினார்.

மேலும், கல்வித்திட்டத்தை காவிமயமாக்க முயற்சி நடப்பதாக எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.

இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், ‘‘கல்வியில் அரசியலுக்கு இடமில்லை’’ என கூறினார்.

‘‘நாட்டில் திறமைக்கு பஞ்சம் இல்லை. ஆராய்ச்சிப்பணிக்காக மாணவர்கள் வெளிநாடுகளுக்கு செல்வதை கட்டுப்படுத்த இங்குள்ள கல்வி நிறுவனங்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கின்றன’’ எனவும் அவர் குறிப்பிட்டார்.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> >

25 September 2015

போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 8 வயது சிறுமி: பாராட்டு விழா

கோவையைச் சேர்ந்த 8 வயது சிறுமி டெல்லியில் நடைபெற்ற 8-வது காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் - தங்கமணி தம்பதி.

இவர்களுக்கு விஷ்ணுபிரியா, நிவேதிதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சிறுமிகள் இருவருமே தற்காப்புக் கலையான கராத்தே போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியான நிவேதிதா, கடந்த 18-ம் திகதி டெல்லியில் நடைபெற்ற 8-வது காமன்வெல்த் கராத்தே போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 போட்டியாளர்களை வென்று பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில், சிறுமி படித்துவரும் நாச்சிமுத்துக் கவுண்டர் ருக்மணியம்மாள் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

மேலும், வெள்ளலூரில் பொதுமக்கள் சார்பில் அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

நிவேதிதா பேசுகையில், இந்தியா, அவுஸ்திரேலியா, வங்கதேசம், போட்ஸ்வானா என பல நாட்டு வீரர்கள் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டனர்.

தினமும் பயிற்சி செய்ததால் பதற்றம் இல்லாமல் வெற்றி பெற முடிந்தது.
2020-ல் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று இதேபோல பதக்கம் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



21 September 2015

நீதிமன்ற வாசலில் ரவுடி வெட்டிக் கொலை.?

 திண்டுக்கல் நீதிமன்ற வாசலில் பிரபல ரவுடி ஜேசுராஜ் பொதுமக்கள் முன்னிலையில் ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பூட்டுக்கும் புகையிலைக்கும்

பிரியாணிக்கும் புகழ்பெற்ற திண்டுக்கல், ரவுடிகளுக்கும் பெயர் பெற்ற நகரமாகிவிட்டது. கடந்த 2013ஆம் ஆண்டு திண்டுக்கல் நீதிமன்ற வளாகம் அருகே கவுன்சிலர் மீது வெடிகுண்டு வீசப்பட்டது. இதில் பத்திரிகையாளர்கள் உட்பட பலரும் படுகாயமடைந்தனர்.

கடந்த ஆண்டு 53 வழக்குகளில் தொடர்புடைய திண்டுக்கல் பிரபல ரவுடி மோகன்ராம் திருப்பூரில் பதுங்கியிருந்த போது பிடிபட்டான். இவன் சென்னையை நடுங்க வைத்து பின்னர் என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளப்பட்ட திண்டுக்கல் பாண்டி என்ற ரவுடியின் வலது கரம். திண்டுக்கல்லைச் சேர்ந்த பல ரவுடிகள் தமிழகத்தின் இதர பகுதிகளில் வெறியாட்டம் போட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று திண்டுக்கல் ஒருங்கிணைந்த நீதிமன்ற வாசலில்

பாறைப்பட்டியைச் சேர்ந்த சேர்ந்த பிரபல ரவுடி ஜேசுராஜை ஒரு கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்தது. திண்டுக்கல் முருகபவனத்தை சேர்ந்த கருப்பையா மகன் ராம்கி என்ற ராம்குமார், கடந்த ஆண்டு ஜனவரி

 மாதம் 26-ந் தேதியன்று திண்டுக்கல் மெயின்ரோட்டில் மொச்சை கொட்டை விநாயகர் கோவில் அருகே பட்டப்பகலில் 3 பேர் கொண்ட கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் பீட்டர், ஜேசுராஜ் உட்பட 3 பேர்

 போலீசாரால் தேடப்பட்டு வந்தனர். ராம்குமார் கொலை செய்யப்பட்ட மறுநாளே பீட்டர் கை நரம்பு அறுக்கப்பட்ட நிலையில் திண்டுக்கல்-பழனி சாலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். ராம்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மற்றும் ஒருவர் முருகபவனம் அருகே கடந்த சில மாதங்களுக்கு

முன்பு காட்டுப்பகுதியில் பிணமாக கிடந்தார். இந்த நிலையில் ராம்குமார் கொலை வழக்கில் திண்டுக்கல் நீதிமன்றத்தில் ஜேசுராஜ் மட்டும் ஆஜராகி வந்தார். இன்று ஜேசுராஜையும் ஓட ஓட விரட்டி பொதுமக்கள் முன்னிலையில் 5 பேர் கொண்ட கும்பல் வெட்டி சாய்த்துள்ளது. ராம்குமார் வெட்டி படுகொலை

 செய்யப்பட்டபோது அவர் இறக்கும்வரை 3 பேரும் ரசித்து பார்த்துவிட்டு அதன்பிறகே அந்த இடத்தை விட்டு நகர்ந்தனர். அதேபோல் இன்று ஜேசுராஜ் வெட்டப்பட்ட போதும் கொலையாளிகள் அவர் இறக்கும் வரை பார்த்துவிட்டு

இறந்தது உறுதி செய்யப்பட்ட பிறகே அந்த இடத்தை விட்டு சென்றனர். கொலையாளிகள் கொண்டு வந்திருந்த அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களையும் அங்கேயே வீசிவிட்டு சென்றதால் இது பழிக்குப்பழியாக நடந்தது உறுதி செய்யப்பட்டது. அத்துடன் ராம்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய 3 பேருமே இறந்துள்ளனர்.

திண்டுக்கல் சுற்றுவட்டார மக்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பேருந்து நிலையம் பின்புறம்தான் இந்த நீதிமன்ற வளாகம் இருக்கிறது. நீதிமன்றத்துக்கு எதிரேதான் நகரின் பிரபலமான பெண்கள் பள்ளியும் அமைந்துள்ளது; அத்துடன் கொலைச் சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கூப்பிடுதூரத்தில்தான் காவல் நிலையமும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இப்பகுதியில் பட்டப்பகலில் நடந்துள்ள இக்கொலைச் சம்பவம் திண்டுக்கல் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> 


 

19 September 2015

இந்திய வம்சாவளி தமிழ் பெண்ணுக்கு அமெரிக்க அரசு விருது:

அமெரிக்காவில் வசிக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுவேதா பிரபாகரன் என்ற தமிழ் பெண்ணுக்கு சிறந்த சேவைக்கான இளம் பெண் விருதை வெள்ளை மாளிகை வழங்கி கவுரவப்படுத்தி உள்ளது. அமெரிக்க அரசு, அந்நாட்டின் சமூக மேம்பாட்டிற்காக சேவை
 செய்யும் 
இளம் பெண்களை கண்டறிந்து, அவர்களை வெள்ளை மாளிகைக்கு வரவழைத்து 'சாம்பியன் ஆஃப் சேன்ஞ்' என்ற விருதை வழங்கி வருகிறது.இந்த வகையில் வழக்கறிஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், தொழில் முனைவோர் என 
பலதரப்பட்டவர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். இதில் இந்தியாவைச் சேர்ந்த சுவேதா பிரபாகரன் என்ற தமிழ் பெண் 'சாம்பியன் ஆஃப் சேன்ஞ்' என்ற விருதை பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


டெல்லியில் காற்றில் படியும் மாசால் உயிரிழப்பு அதிகரிக்கும் !

காற்றில் படியும் மாசால் உயிரிழப்பு அதிகரிக்கும் முதல் நகரம் டெல்லி என்று லண்டன் நறுவனம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் காற்றில் அதிக மாசு படியும் நகரங்களில் டெல்லி 
முதலிடத்தில் இருப்பதாகவும் அடுத்ததடுத்த இடங்களில் கொல்கத்தா, 
மும்பை இடம் பிடித்துள்ளதாகவும் அந்த ஆய்வறிக்கைத் தெரிவிக்கிறது. வரும் 2025ம் ஆண்டில் இந்த மாசு காரணமாக
 உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்றும் இதில் டெல்லியில் மட்டும் 32 ஆயிரம் பேர் என்று இருக்கக் கூடும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

14 September 2015

இந்தியா விஜயம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க?

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று இந்தியாவிற்கு செல்லவுள்ளார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று பிரதமர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது இந்தியப் பிரதமர், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் முக்கயஸ்தர்களை பிரதமர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்

புதிய பிரதமராக பதவியேற்றதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டு விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரை சந்தித்து நாளை பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாக பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலின் போது தொழிநுட்பதுறை தொடர்பில் பல ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் பதில் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இலங்கையின் தேயிலை ஏற்றுமதி மற்றும் இலங்கை விவசாயிகளுக்கான இந்திய சந்தைவாய்ப்பு என்பன குறித்தும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் இந்திய விஜயத்தின் போது அவதானம் செலுத்தப்படும் எனவும் பதில் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா கூறியுள்ளார்.

பிரதமரின் இந்திய விஜயம் தொடர்பான தகவல்களை வழங்குவதற்கு நியூஸ் பெஸ்ட் குழுவினர் தயாராகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

13 September 2015

நண்பராக பேஸ்புக்கில் பழகி 200 பெண்களின் நிர்வாண படங்களை சேகரித்து பணம் பறித்த மாணவன்

ஐதராபாத் பஞ்சார ஹில்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் மஜீத் (21). மலக்பேட்டை என்ஜினீயரிங் கல்லூரியில் பி.டெக் கம்ப்யூட்டர் சயின்ஸ் 3–ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 1½ வருடங்களாக ‘பேஸ் புக்’கில் பெண்கள் பெயரில் போலி பக்கங்களை தொடங்கினார். பின்னர் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பணக்கார மாணவிகளை குறிவைத்து பழகினார். பலர் இவர் ஆண் என்பது தெரியாமல் பழகினார்கள்.

அப்துல் மஜீத் பெண்களை கவரும் வகையில் பேசி அவர்களின் புகைப்படத்தை கேட்டு பெறுவார். நன்கு பழகிய பெண்களிடம் காதல் மற்றும் காம உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி அவர்களது நிர்வாண படங்களை அனுப்பும்படி கேட்பார்.

பல பெண்கள் அவர் கேட்டபடி தங்களது நிர்வாண படங்களை செல்போனில் படம் எடுத்து அனுப்பி உள்ளனர்.

நிர்வாண படங்களை அனுப்பிய மாணவிகளிடம் அந்த படங்களை காட்டி, இணைய தளத்தில் வெளியிடுவதாக கூறியும், பெற்றோருக்கு அனுப்பி விடுவதாக கூறியும் அப்துல் மஜீத் பணம் பறித்து உள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் அவருக்கு பணம் கொடுத்து உள்ளனர். இந்த நிலையில் அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட ஜனனி என்ற மாணவி தனது தாயிடம் கூறினார். தைரியமான அவரின் தாய் ஸ்வேதா பிரபு, தனது மகள் மூலமாகவே அப்துல் மஜீத் பற்றிய விவரங்களை சாட்டிங் மூலம் சேகரித்தார்.

மேலும் அவரது மிரட்டல்களை பதிவு செய்தார். தான் சேகரித்த அனைத்து ஆதாரங்களுடன், தனது மகள் ஜனனியுடன் சைதராபாத் போலீஸ் நிலையத்துக்கு சென்று நேரில் புகார் மனு அளித்தார். போலீசார் தீவிர விசாரணை நடத்தி அப்துல் மஜீத்தை நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் அப்துல் மஜீத் பல்வேறு பெண்கள் பெயரில் 6 போலி பேஸ்புக் தொடங்கி 200 பெண்களை மிரட்டி பணம் பறித்து உள்ளது தெரிய வந்தது. ஒரு பெண்ணிடம் இருந்து ரூ.1 லட்சமும், இன்னொரு பெண்ணிடம் இருந்து ரூ.86 ஆயிரமும் பறித்து உள்ளார்.

அவரது செல்போனில் இருந்து பல்வேறு மாணவிகளின் 80 நிர்வாண படங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். மேலும் 100–க்கும் மேற்பட்ட நிர்வாண படங்கள் பேஸ்புக்கில் பதிவு செய்து உள்ளார்.

அந்த படங்களை அப்துல் மஜீத் இணையதளத்தில் வெளியிடப் போவதாக மிரட்டி இருந்தாலும் அவை வெளியாகவில்லை என்று போலீஸ் கமிஷனர் ஆனந்த் கூறினார்.

அப்துல் மஜீத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் போலீசில் தயங்காமல் புகார் செய்யலாம் என்று கூறிய போலீசார் அதற்கான செல்போன் எண்களை வெளியிட்டு உள்ளனர். இதுவரை 80 புகார்கள் வந்துள்ளது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


09 September 2015

ஆஸ்திரேலியாவில் ஆங்கில வார்த்தை போட்டியில் சிறுவன்,சாதனை?

ஆஸ்திரேலிய நாட்டில் ‘தி கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ’ என்ற தலைப்பில் ஆங்கில வார்த்தை போட்டி நடைபெற்றது. நீண்ட, கடினமான வார்த்தைகளின் எழுத்துக்களை சரியாக எழுத்து கூட்டி சொல்கிற இந்த போட்டியில் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட 9 வயது சிறுவன் அனிருத் கதிர்வேல் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை 
பெற்றான்.
இதற்காக அவனுக்கு 50 ஆயிரம் டாலர் கல்வி நிதி உதவியும், 10 ஆயிரம் டாலர் பரிசுப்பொருட்களும் கிடைத்துள்ளன.
இது குறித்து அனிருத் கதிர்வேல் கூறும்போது, ‘‘இது என் வாழ்வில் மிகச்சிறந்த நாளாக அமைந்துவிட்டது. இது கனவா, நனவா என 
தெரியாமல் தவிக்கிறேன்’’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டான்.
இவனது பெற்றோர் பிருதிவிராஜ்,
 சுஜாதா 16 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஆஸ்திரேலியாவில் குடியேறினர். அனிருத் கதிர்வேல், அங்குள்ள மெல்போர்ன் நகரில் பிறந்தவன் என்பது 
குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அதிநவீன கருவிகளுடன் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு ?

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அதிநவீன கருவிகளுடன் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிவைத்தார்.
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு 
வசதிகளை மேம்படுத்தும் வகையில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு, சிறுநீரகவியல் பிரிவு, நரம்பியல் பிரிவு கட்டிடம் கட்டப்பட்டது.
இந்த கட்டிடத்தை நேற்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதையடுத்து, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் டாக்டர் ஆர்.நாராயணபாபு மருத்துவமனை டாக்டர்கள், 
செவிலியர்கள், நோயாளிகளை பார்க்க வந்த உறவினர்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
தீவிர சிகிச்சைப்பிரிவு
குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சைப்பிரிவு முற்றிலும் அதிநவீன கருவிகள் மற்றும் உயர்தரத்துடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், சிறுநீரகவியல் பிரிவு, நரம்பியல் பிரிவும் 
தொடங்கப்பட்டுள்ளது.
தீவிர சிகிச்சைப்பிரிவில் 10 படுக்கை வசதிகளுடன், இருதய பரிசோதனை, வயிறு பரிசோதனை, எக்ஸ்ரே, கண்காணிக்கும் கருவி, ரத்த பரிசோதனை என அனைத்தும் ஒரே இடத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், குழந்தைகளுக்கான சிறுநீரகவியல் பிரிவு, நரம்பியல் பிரிவில் தலா 25 படுக்கைவசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மருத்துவமனை பிரிவுகளில் ஒரு மாதம் முதல் 13 வயது குழந்தைகளுக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்கப்படும்.

முடநீக்கியல் துறை
4 தலைமை டாக்டர்கள், 7 டாக்டர்கள் மற்றும் மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்கள் என பலர் பணியில் ஈடுபட உள்ளனர். சிங்கப்பூர், லண்டன் போன்ற இடங்களில் உள்ள குழந்தைகள் மருத்துவமனை மாதிரி தான் இங்கு கட்டமைப்புகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த மருத்துவமனை 9–ந் தேதி (புதன்கிழமை) முதல் செயல்பாட்டுக்கு வரும். அதுமட்டும்மில்லாமல், முடநீக்கியல் துறைக்கு என கட்டிடம் இல்லாமல் இருந்தது. தற்போது 20 படுக்கை வசதிகளுடன் புதிய கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள >>>

07 September 2015

அகதிகள் முகாமில் ஈழத்தமிழர் தீக்குளித்து தற்கொலை

தமிழகத்தின் திருச்சியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில்,  மூன்று வயது குழந்தையின் தாய் ஒருவர்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருச்சி, கொட்டப்பட்டு  இலங்கை தமிழர் முகாமை சேர்ந்தவர் ராமஜெயம். இவரது மனைவி ரூசாமிலி  இலங்கை தமிழர்களான இவர்களுக்கு, கடந்த, நான்காண்டுக்கு முன் திருமணம் நடந்தது.
இந்தநிலையில், ராமஜெயம் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்ததால், கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் மனமுடைந்த ரூசாமிலி, வீட்டில் தனியாக இருந்தபோது, உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக்கொண்டார்.
கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்ததால் காப்பாற்றும் முயற்சிகளும் பயனளிக்கவில்லை. இதனால், ரூசாமிலி, தீயில் கருகி பரிதாபமாக இறந்தார்,
இது குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருவதாக
 தெரிவிக்கப்படுகின்றது
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

04 September 2015

சந்திரிகா வெளிவிவகார அமைச்சருடன் பேச்சு ! ! !


முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க நேற்று இந்திய வெளியுறவு அமைச்சர் சுஸ்மா சுவராஜை சந்தித்துள்ளார். இதன்போது பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடல்கள்
 இடம்பெற்றுள்ளன. இந்தநிலையில் புதுடில்லியில் நடைபெறும் மாநாடு ஒன்றில் பங்கேற்றுள்ள அவர், இந்திய பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்தமை
 குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

03 September 2015

ஈழத் தமிழர் தூக்கிட்டுத் தற்கொலை

இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் சென்னை – பல்லாவரம், பொழிச்சலூரை பகுதியில் ஈழத் தமிழர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து 
கொண்டுள்ளார்.
சென்னையை அடுத்த பல்லாவரம் அருகேயுள்ள பொழிச்சலூரை சேர்ந்தவர் ஸ்ரீகரன் (55) ஈழத் தமிழரான இவர், கடந்த 1990-ம் ஆண்டு முதல் இங்கு வசித்து வருகிறார்.
இவரது 2 மகன்கள் நெதர்லாந்தில் வேலை பார்த்து வருகின்றனர். நீண்ட காலமாக கடுமையான தலைவலியால் ஸ்ரீகரன் அவதிப்பட்டு வந்தார்.
இதற்காக ஸ்ரீகரன் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றும், அந்நோய் குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த ஸ்ரீகரன், நேற்று தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக பொலிஸார் வழக்கு பதிவு செய்து, ஸ்ரீகரனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி
 வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்கு போட்டு மாணவன் தற்கொலை

பணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் இந்த உலகில் வாழ பிடிக்கவில்லை என்று தனது செல்போனில் உள்ள வாட்ஸ அப்பில் எழுதி வைத்துவிட்டு 13-வயது மாணவன் மனமுடைந்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

சானு (வயது 14) காசியாபாத்தில் உள்ள பள்ளியில் 9 வகுப்பு படித்து வருகிறான். இவன் உத்தபிரதேசத்தில் உள்ள காசியாபத்தில் அவர்களுடைய தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறான். இவரது தந்தை டெல்லியில் உள்ள பிரபல நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவரது தாய் மகனை கவனிக்காமல் துபாயில் வேலை செய்து வருகிறார். இவன் மூத்த சகோதரனுடன் காசியபாத்தில் வசித்து வருகிறான். சம்பவத்தன்று கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ந்தேதி டெல்லியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்த அவன் கடந்த செவ்வாய் கிழமை இரவு 12.30 மணி அளவில் மின்விசிறியில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டான்.

மாறுநாள் காலை கண்விழித்த அவனது சகோதரன் தம்பி தூக்கில் தொங்கியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தான் உடனடியாக அவனது அத்தைக்கு தகவல் கொடுத்தான் விரைந்து வந்த அவர்கள் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். பரிசோதனை நடத்திய டாக்டர்கள் மாணவன் இறந்தது உறுதி செய்யபடப்பட்டது. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. விரைந்து வந்த போலீசார் மாணவன் தற்கொலை செய்து குறித்து விசாரணை நடத்தினர். 

அவன் பயன்படுத்திய செல்போனை கைபற்றினர். அதில் அவன் தற்கொலைக்கு முன் வாட்ஸ் அப்பில் ஒரு கடித்தை எழுதி வைத்துள்ளான் அதில் பணத்திற்கு முக்கியதுவம் கொடுக்கும் இந்த உலகில் எனக்கு வாழ பிடிக்கவில்லை என்று எழுதபட்டிருந்தது. இதனை கைபற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>