Search This Blog n

25 September 2015

போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற 8 வயது சிறுமி: பாராட்டு விழா

கோவையைச் சேர்ந்த 8 வயது சிறுமி டெல்லியில் நடைபெற்ற 8-வது காமன்வெல்த் கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள மகாலிங்கபுரத்தைச் சேர்ந்தவர்கள் நாகராஜ் - தங்கமணி தம்பதி.

இவர்களுக்கு விஷ்ணுபிரியா, நிவேதிதா என இரண்டு மகள்கள் உள்ளனர்.

சிறுமிகள் இருவருமே தற்காப்புக் கலையான கராத்தே போட்டிகளில் பங்கேற்று பல்வேறு வெற்றிகளைக் குவித்து வருகின்றனர்.

4ம் வகுப்பு படிக்கும் 8 வயது சிறுமியான நிவேதிதா, கடந்த 18-ம் திகதி டெல்லியில் நடைபெற்ற 8-வது காமன்வெல்த் கராத்தே போட்டியில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 21 போட்டியாளர்களை வென்று பதக்கத்தை வென்றுள்ளார்.

இந்நிலையில், சிறுமி படித்துவரும் நாச்சிமுத்துக் கவுண்டர் ருக்மணியம்மாள் பள்ளியில் பாராட்டு விழா நடைபெற்றது.

மேலும், வெள்ளலூரில் பொதுமக்கள் சார்பில் அவருக்கு பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டது.

நிவேதிதா பேசுகையில், இந்தியா, அவுஸ்திரேலியா, வங்கதேசம், போட்ஸ்வானா என பல நாட்டு வீரர்கள் காமன்வெல்த் போட்டியில் கலந்துகொண்டனர்.

தினமும் பயிற்சி செய்ததால் பதற்றம் இல்லாமல் வெற்றி பெற முடிந்தது.
2020-ல் நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று இதேபோல பதக்கம் வெல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



0 கருத்துகள்:

Post a Comment