ஆஸ்திரேலிய நாட்டில் ‘தி கிரேட் ஆஸ்திரேலியன் ஸ்பெல்லிங் பீ’ என்ற தலைப்பில் ஆங்கில வார்த்தை போட்டி நடைபெற்றது. நீண்ட, கடினமான வார்த்தைகளின் எழுத்துக்களை சரியாக எழுத்து கூட்டி சொல்கிற இந்த போட்டியில் தமிழகத்தை பூர்விகமாகக் கொண்ட 9 வயது சிறுவன் அனிருத் கதிர்வேல் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை
பெற்றான்.
இதற்காக அவனுக்கு 50 ஆயிரம் டாலர் கல்வி நிதி உதவியும், 10 ஆயிரம் டாலர் பரிசுப்பொருட்களும் கிடைத்துள்ளன.
இது குறித்து அனிருத் கதிர்வேல் கூறும்போது, ‘‘இது என் வாழ்வில் மிகச்சிறந்த நாளாக அமைந்துவிட்டது. இது கனவா, நனவா என
தெரியாமல் தவிக்கிறேன்’’ என மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டான்.
இவனது பெற்றோர் பிருதிவிராஜ்,
சுஜாதா 16 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் இருந்து சென்று ஆஸ்திரேலியாவில் குடியேறினர். அனிருத் கதிர்வேல், அங்குள்ள மெல்போர்ன் நகரில் பிறந்தவன் என்பது
குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
Post a Comment