28 February 2015
இந்தியா இலங்கை அரசை எச்சரிக்க வேண்டும் மருத்துவர்!??
தமிழக மீனவர்கள் 66 பேரை இலங்கை கடற்படையினர் சட்டவிரோதமாக கைது செய்துள்ளனர்.இச் செயல் கண்டிக்கத்தக்கது என்று பா.ம.க நிறுவுனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
கோடியக்கரையில் தமிழக மற்றும் புதுவை மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த சிங்களப்படையினர் தமிழக மீனவர்கள் 43 பேரை தாக்கி கைது செய்துள்ளனர். அதேபகுதியின் இன்னொரு இடத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மேலும் 23 தமிழக மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய அறிவுறுத்துவதுடன், இனியும் இத்தகைய போக்கு தொடர்ந்தால் இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என்று இலங்கை அரசை இந்தியா எச்சரிக்க வேண்டும்.
அடுத்த மாதம் இலங்கை செல்லும்
பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் சிறிசேனாவை சந்திக்கும் போது, மீனவர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்; தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் விபரீத விளைவுகள் ஏற்படும் என எச்சரிக்க வேண்டும் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
27 February 2015
பிரதமர் மோடி பாராட்டு ‘‘முற்போக்கு பார்வை கொண்டதுரெயில்வே ???
பட்ஜெட் முற்போக்கு பார்வை கொண்டது என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார்.
முதல் ரெயில்வே பட்ஜெட்
மத்தியில் கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்துள்ள பாரதீய ஜனதா கூட்டணி அரசு, தனது முதலாவது முழுமையான ரெயில்வே பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் நேற்று தாக்கல் செய்தது.
இது ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவுக்கும் முதல் பட்ஜெட் ஆகும். இந்த பட்ஜெட் குறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
மோடி பாராட்டு
இந்த நிலையில், ரெயில்வே பட்ஜெட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:–
2015 ரெயில்வே பட்ஜெட் முற்போக்கு பார்வை கொண்டது. எதிர்காலத்தையும், பயணிகளையும் மையமாகக் கொண்டது.
சாதிப்பதற்கான தெளிவான கண்ணோட்டத்தையும், உறுதியான திட்டத்தையும் கொண்டது.
இந்திய ரெயில்வேயில் தொழில் நுட்ப மேம்பாடு, நவீனமயம் ஆகியவற்றுக்கு முதல் முறையாக தெளிவான கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியுள்ள பட்ஜெட் இது என்பது எனக்கு மகிழ்ச்சியை தருகிறது.
எல்லாமே உள்ளது
பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள ரெயில்வே பட்ஜெட், இந்திய பொருளாதாரத்தின் முக்கிய அங்கமாக ரெயில்வேயை ஆக்குவதற்கான தெளிவான வரைவுத் திட்டங்களை கொண்டிருக்கிறது. இது நாட்டின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய பங்காற்றும்.
ரெயில்வே பட்ஜெட்டில் சாமானிய மக்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வேகம், அளவுகோல், சேவை, பாதுகாப்பு என எல்லாமும் உள்ளது.இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்
பயணிகளுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் தகவல்
ரெயில் வருகை, புறப்பாடு பற்றி,, பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு, ரெயில் வருகை மற்றும் புறப்பாடு பற்றிய தகவல் பயணிகளுக்கு செல்போனில் எஸ்.எம்.எஸ். மூலம் 15 முதல் 30 நிமிடங்களுக்கு
முன்னதாக தெரிவிக்கப்படும் என்றார்.
அடுத்த 2 ஆண்டுகளில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான ரெயில் நிலையங்களில் உள்ள அறிவிப்பு பலகைகளில் ரெயில்களின் வருகை, புறப்பாடு, முன்பதிவு, பொது மற்றும் அவசர தகவல்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
ஒபன் பாக்ஸ் சென்னை மட்டும்
மக்கள் ஆலோசனை கேட்டு பட்ஜெட் தயாரிக்கப்படும் ???
டெல்லி சட்டசபையில் முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:–
மக்களின் தேவைக்கு ஏற்றாற் போல பட்ஜெட் தயாரிக்கப்பட வேண்டும். இதன்படி டெல்லி பட்ஜெட் தயாரிக்கும்
பணிகள் தொடங்கி உள்ளது. முதல்முறையாக சோதனை முன்னோட்டமாக, 5 அல்லது 10 தொகுதிகளாக பிரித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். எந்தெந்த துறைகளுக்கு எவ்வளவு நிதி
ஒதுக்கீடு செய்ய வேண்டும்,
எவ்வாறு செலவு செய்யப்பட வேண்டும் என்று மக்களிடம் கருத்து கேட்கப்படும். பின்னர் அதுகுறித்து சட்டசபையில் உறுப்பினர்கள் விவாதித்து, அதன் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும். இதன் மூலம் அரசு நிர்வாகத்தில் மக்கள் பங்கெடுக்க வைக்கப்படுகிறார்கள்
25 February 2015
அபுசலீமுக்கு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
மும்பை தொடர் குண்டு வெடிப்பு தீவிரவாதி தாவூத் இப்ராகிமின் நெருங்கிய கூட்டாளிகளில் அபுசலீம் என்பவனும் ஒருவன்.வெடிகுண்டுகளையும், ஆயுதங்களையும் கடத்தி செல்ல உதவிய இவன் தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்ற பிறகு,
மும்பை நிழல் உலக தாதாவாக மாறினான்.அபுசலீம் மீது 52 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பையில் உள்ள இந்தி படத் தயாரிப்பாளர்களை மிரட்டி இவன் தனி ராஜ்ஜியம் நடத்தி வந்தான். ந்த நிலையில்
மும்பை குண்டு வெடிப்பு தொடர்பாக சி.பி.ஐ. தேடியதால் இவன் நடிகை மோனிகா பேடியுடன் வெளிநாட்டுக்கு சென்று விட்டான். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் சுற்றித் திரிந்த இவனை துபாய் போலீசார் பிடித்தனர். இதைத்தொடர்ந்து 2005-ம் ஆண்டு அபுசலீமை துபாய் அரசு
இந்தியாவிடம் ஒப்படைத்தது.
மும்பை கொண்டு வரப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்ட அபுசலீம் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வழக்குகள் மீது வசாரணை நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக
அவன் ஜெயிலில் இருந்தபடி இந்த வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறான்.இந்த நிலையில் 1995-ம் ஆண்டு மும்பையில் பிரபல கட்டிட காண்டிராக்டர் பிரதீப் ஜெயின் படுகொலை செய்யப்பட்ட வழக்கு
விசாரணை முடிவுக்கு வந்தது. இந்த வழக்கில் இன்று மும்பை தடா கோர்ட்டு தீர்ப் பளித்தது.
அபுசலீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இதன் மூலம் மும்பை ஜெயிலில் அபுசீலம் வாழ்நாள் முழுக்க இருக்கப் போவது உறுதியாகி உள்ளது.
ரெயில் நிலையங்களை சூரிய மின்சக்தியில் இயக்க திட்டம்
நாளை தாக்கல் ஆகும் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகிறது
முக்கிய ரெயில் நிலையங்களை சூரிய மின்சக்தியில் இயக்குவதற்குரிய திட்டம் குறித்து நாளை தாக்கல் செய்யப்படும் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெயில்வே பட்ஜெட்
பாராளுமன்றத்தில் நாளை(வியாழக்கிழமை) தனது முதல் ரெயில்வே பட்ஜெட்டை மந்திரி சுரேஷ்பிரபு தாக்கல் செய்கிறார். அப்போது அவர் ரெயில்வே இலாகாவை மேம்படுத்தும் விதமாக பல்வேறு திட்டங்களை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக ரெயில்களை இயக்குவதற்கு தேவையான மாற்று எரிபொருள் சக்தி குறித்த சிந்தனை ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபுவிடம் காணப்படுகிறது.
எனவே அது குறித்த அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
சூரிய மின்சக்தி நிலையங்கள்
ரெயில் பெட்டிகள், ரெயில் நிலைய கட்டிடங்கள், நடைமேடைகள் ஆகியவற்றில் மின்சாரத் தேவைக்காக சூரியஒளி மின்சக்தி உற்பத்தி நிலையங்களை நிறுவிடவும் ரெயில்வே இலாகா திட்டமிட்டு இருக்கிறது.
இதேபோல் ரெயில் பெட்டி உற்பத்தி பிரிவுகள், ரெயில் பணிமனைகளிலும் சூரியஒளி மின்சக்தி உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
நாடு முழுவதிலும் ரெயில் பயணிகளால் அதிக அளவில் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள் குவிகின்றன. இந்த கழிவுகளைக் கொண்டு மின் உற்பத்தியை பெறுவது குறித்த அறிவிப்பும் ரெயில்வே பட்ஜெட்டில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீர் சேமிப்பு
நீர் சேமிப்பு, நீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கும் இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்றும் ரெயில்வே அமைச்சக அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாடு முழுவதிலும் உள்ள பெரும்பாலான முக்கிய ரெயில் நிலையங்களில் கோடைகாலத்தின்போது கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது.
இந்த தட்டுப்பாட்டை போக்கும் விதமாக
நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி முறையில் நீரை தயாரிக்கும் நிலையங்களை ரெயில் பெட்டிகள் நிறுத்தும் கூடங்கள், ரெயில்வே பணிமனைகள், ரெயில்பெட்டி தயாரிப்பு தொழிற்சாலைகள் ஆகியவற்றில் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதேபோல் நீர் நிர்வாக மேலாண்மையை கையாளுவதற்கும் ரெயில்வே இலாகா திட்டமிடப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் தேவைப்படும் நீரை அதிக அளவில் சேமிக்க முடியும் என்றும் ரெயில்வே இலாகா கருதுகிறது.
தரத்துக்கு சான்று
அனைத்து முக்கிய ரெயில் பணிமனைகள் மற்றும் ரெயில் பெட்டி தயாரிப்பு பிரிவுகள் ஆகிய இடங்களில் ரெயில் பெட்டிகளின் தரம், சுகாதார மேம்பாடு, பயணிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் தொடர்பான சான்றிதழ் அளிப்பதற்காக ஒருங்கிணைந்த மேலாண்மை திட்டம் ஒன்றையும் மந்திரி சுரேஷ் பிரபு வெளியிடுவார் என்ற
எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
இதேபோல், ரெயில் என்ஜின்களில் இருந்து வெளிப்படும் ஒலியின் அளவை குறைக்க அவற்றின் வடிவமைப்பை அமெரிக்க தரத்துக்கு இணையாக மாற்றுவது குறித்து திட்டமும் ரெயில்வே பட்ஜெட்டில் இடம்பெறும் எதிர்பார்க்கப்படுகிறது.
24 February 2015
நெருங்கிவிட்டது: தமிழர்கள் ஒன்றுபடும் காலம் ஆதீன முதல்வர்
நாம் ஒன்றுபட வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டே இருக்கின்றது. தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று கூடி கேள்விகளைக் கேட்க வேண்டிய காலமாக இது இருக்கின்றது என நல்லை ஆதீன முதல்வர் வணக்கத்துக்குரிய ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் தெரிவித்துள்ளார்.
ஒன்றுபடுதலையே நாங்களும் விரும்பகிறோம். ஒன்றுபடுதலில் ஊடாக எங்களின் அனைத்து விடயங்களையும்
வேண்டிக் கொள்ள முடியும் என்பதை கூறிக் கொள்கிறேன் என கிளிநொச்சியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் புத்தக வெளியீட்டின்போது இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காணொளி- சிறப்புற நடைபெற்ற ஜெனீவா தீர்மானமும் மெய்ந்நிலை அரசியலும்!
அவசர சட்டத்தை விவாதிப்பதற்காக மேல்–சபையில்
நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை விவாதிப்பதற்காக மேல்–சபையில் கேள்வி நேரத்தை ரத்து செய்ய காங்கிரஸ் நோட்டீசு பட்ஜெட் தொடரில் முதல் முட்டுக்கட்டை
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் முதல் முட்டுக்கட்டையாக, மேல்–சபையில் கேள்வி நேரத்தை ரத்து செய்யுமாறு காங்கிரஸ் கட்சி நோட்டீசு வழங்கி உள்ளது.
அவசர சட்டம்
நிலம் கையகப்படுத்தும் அவசரச்சட்டம் உள்பட 6 அவசர சட்டங்களை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் பிறப்பித்தது. மேலும் இந்த அவசரச் சட்டங்களை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்து, சட்டமாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆனால் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை கடுமையாக எதிர்த்து வரும் காங்கிரஸ் கட்சி, பாராளுமன்றத்தில் பிற எதிர்க்கட்சிகளுடன் இணைந்து மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுக்க முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக இடதுசாரி கட்சிகள், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட பிற எதிர்க்கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி வருகின்றன.
விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில், முதல் பிரச்சினையாக இந்த அவசரச் சட்டத்தை விவாதிக்க காங்கிரஸ் கட்சி தீர்மானித்து உள்ளது. அதன்படி மேல்–சபையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கேள்வி நேரத்தை ரத்து செய்து விட்டு இந்த அவசர சட்டம் குறித்து விவாதிக்க வேண்டும் என நோட்டீசு வழங்கி உள்ளது.
சபை விதி 267–ன் கீழ் இந்த நோட்டீசை வழங்கிய மேல்–சபை காங்கிரஸ் துணைத்தலைவர் ஆனந்த் சர்மா, இந்த விவகாரத்தில் கட்சி இனியும் மவுனமாக இருக்காது என கூறினார். இந்த அவசரச்சட்டம் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானது என்று கூறிய அவர், தேவையற்ற கையகப்படுத்துதலுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளை இச்சட்டம் நீக்கிவிடும் என்று தெரிவித்தார்.
அபிஷேக் சிங்வி
மத்திய அரசின் நிலம் கையகப்படுத்தும் அவசர சட்டத்தை காங்கிரஸ் கட்சி கடுமையாக எதிர்க்கும் என்று கூறியுள்ள கட்சியின் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி, எனினும் இன்சூரன்ஸ் அவசர சட்டத்துக்கு எதிராக இத்தகைய எதிர்ப்பை காட்டமாட்டோம் என்று கூறினார்.
நிலம் கையகப்படுத்தும் மசோதாவை காங்கிரஸ் கட்சி எதிர்ப்பதால், வரும் நாட்களில் பாராளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
23 February 2015
முதல்வரா.. வெட்கங்கெட்ட மக்கள்: குஷ்பு விளாசல்
ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்பவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை என குஷ்பூ கூறியுள்ளார்.
மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அரும்பாக்கத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அப்போது குஷ்பு பேசியதாவது, வருகிற 2016 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் நிச்சயம் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும்.
ஜெயலலிதாவை மக்களின் முதல்வர் என்கிறார்கள். அவர்களுக்கு கொஞ்சம் கூட வெட்கம் இல்லை. மக்களின் முதல்வராக இருந்தவர் காமராஜர் ஒருவர் தான்.
மேலும் பாஜகவினர் மிஸ்டு கால் மூலம் தினமும் ஒரு லட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதாக கூறுகிறார்கள்.
ஆனால் ஸ்ரீரங்கத்தில் வெறும் ஐந்தாயிரம் ஓட்டுகள் தான் வாங்கினார்கள் என பேசியுளார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>ரூ.4½ கோடிக்கு மோடி உடை ஏலம்: விசாரணை நடத்த காங்கிரஸ் ???
அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் இந்தியா வந்த போது, பிரதமர் மோடி அணிந்திருந்த, அவரது பெயர் பொறிக்கப்பட்ட ‘பந்த்கலா’ சூட் சூரத் நகரில் ரூ.4 கோடியே 31 லட்சத்துக்கு ஏலத்தில் விற்கப்பட்டது. இதுபற்றி நேற்று ஆமதாபாத் நகரில் கருத்து தெரிவித்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் அரசியல் செயலாளர் அகமது பட்டேல், அந்த ஏலம் பற்றியும், மோடியின் உடையை ஏலத்தில் எடுத்தவர் பற்றியும் விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
கடந்த ஆண்டில், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்–மந்திரியுமான மம்தா பானர்ஜியின் ஓவியங்கள் ரூ.1 கோடியே 80 லட்சத்துக்கு ஏலம் போனது பற்றி மோடி கேள்வி எழுப்பி அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்று கோரியதாகவும், அது மோடி உடை ஏலத்தில் விற்கப்பட்டதற்கும் பொருந்தும் என்றும் அப்போது அவர் கூறினார்.
21 February 2015
பன்றிகாய்ச்சல் கொசு கடிப்பதாலே பரவுகிறது மம்தா பானர்ஜி
பன்றிகாய்ச்சல் நாட்டையே அச்சுறித்தி வருகிறது இந்த பன்றி காய்சல் கொசு கடிப்பதாலே பன்றிகாய்ச்சல் வருகிறது என்று மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மருத்துவ நிபுணர்களின் விழிப்புணர்வு இல்லாததாலும் மத்திய அரசின் மெத்தன போக்காலும் பன்றி காய்ச்சல் வேகமாக பரவுகிறது என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
பன்றிகாய்ச்சல் குறித்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பன்றிகாய்ச்சல் பெரும்பாலும் கொசுகடிப்பதால் தான் பரவுகிறது. பன்றி காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் தனிமைபடுத்தி அவர்களுக்கு படுக்கை வசதிகள் செய்து தரவேண்டும்.
இந்த நோயை விரட்ட முடியாது என்பது கிடையாது சரியான சிகிச்சை அளித்தால் இந்த நோயை முற்றிலும் விரட்டி விடலாம். என்று தெரிவித்தார்.
இந்தியாவில் குறைந்தது 670 பேர் பன்றிகாய்ச்சால் பலியாகி உள்ளனர்.மேலும் 10000 க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
பன்றிகாய்ச்சல் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பன்றிகாய்சல் முதலில் பன்றிகளில் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. மனிதன் இடத்தில் இருந்து மனிதனுக்கு இது வேகமாக பரவுகிறது என்பதையும் தெரிவித்துள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> பன்றிகாய்ச்சல் குறித்து மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பன்றிகாய்ச்சல் பெரும்பாலும் கொசுகடிப்பதால் தான் பரவுகிறது. பன்றி காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் தனிமைபடுத்தி அவர்களுக்கு படுக்கை வசதிகள் செய்து தரவேண்டும்.
இந்த நோயை விரட்ட முடியாது என்பது கிடையாது சரியான சிகிச்சை அளித்தால் இந்த நோயை முற்றிலும் விரட்டி விடலாம். என்று தெரிவித்தார்.
இந்தியாவில் குறைந்தது 670 பேர் பன்றிகாய்ச்சால் பலியாகி உள்ளனர்.மேலும் 10000 க்கும் மேற்பட்ட மக்கள் இதனால் பாதிப்பு அடைந்துள்ளனர்.
இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.
பன்றிகாய்ச்சல் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், பன்றிகாய்சல் முதலில் பன்றிகளில் இருந்து மனிதனுக்கு பரவுகிறது. மனிதன் இடத்தில் இருந்து மனிதனுக்கு இது வேகமாக பரவுகிறது என்பதையும் தெரிவித்துள்ளனர்.
ராணுவம் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை..
ஜம்மு காஷ்மீரில் ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா மாவட்டம் சோபூர் பகுதியில் தீவிரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் தெரிவிக்கப்பட்டது. தாக்-கண்ட் கிராமத்தில்
தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததையடுத்து ஜம்மு காஷ்மீர் போலீஸ் மற்றும் ராணுவம் கிராமத்தை சுற்றி வளைத்தது. அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டது.
ராணுவ வீரர்கள் தீவிரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டபோது, தீவிரவாதிகள அவர்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்தினர். பதிலுக்கு ராணுவமும், தீவிரவாதிகள் பதுங்கியிருக்கும் இடத்தை குறிவைத்து துப்பாக்கியால் சுட்டனர்.
தொடர்ந்து ராணுவம் மற்றும் தீவிரவாதிகள் இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்று வருகிறது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மறைந்திருக்கும் தீவிரவாதிகள் ராணுவ வீரர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே துப்பாக்கி சூடு சம்பவத்தில் நிகழ்ந்த சேதம் குறித்தான தகவல்கள் வெளியாகவில்லை.
நகுலுக்கு திருமணம் பட்டதாரியை மணக்கிறார்..
தேவயானியின் தம்பியும், நடிகருமான நகுல் காதல் திருமணம் செய்கிறார். சமையல் படிப்பில் ‘எம்.பி.ஏ
படித்த பட்டதாரி பெண்ணையே அவர் திருமணம் செய்யவுள்ளார் . ஆனால் அவரைப் பற்றிய விவரங்களை வெளியிட மறுத்துவிட்டார் நகுல்.
நடிகை தேவயானிக்கு மயூர், நகுல் ஆகிய 2 தம்பிகள் இருக்கிறார்கள். மயூர் ஏற்கெனவே காதலித்து திருமணம் செய்தார். இளைய தம்பி நகுல், ‘காதலில் விழுந்தேன் படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். ‘மாசிலாமணி,’ ‘கந்த கோட்டை, ‘வல்லினம் போன்ற படங்களில் நடித்த அவர், மேலும் சில படங்களில் நடித்து வருகிறார்.
அவர் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படம் நாளை வெளியாகவிருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த நகுல், “நான், கடந்த 4 வருடங்களாக ஒரு பெண்ணை காதலித்து வருகிறேன். அவருடைய பெயரை இப்போது வெளியிட விரும்பவில்லை. அந்த பெண் சென்னையை சேர்ந்தவர்தான். ‘எம்.பி.ஏ. படித்து இருக்கிறார்.
எனது நண்பர் ஒருவரின் பக்கத்து வீட்டில் என் காதலி வசித்து வருகிறார். நண்பர் மூலம் அவர் அறிமுகமானார். நட்பு காதலாகி, திருமணத்தில் முடிய இருக்கிறது. எங்கள் காதலை அக்கா தேவயானி உள்பட என் பெற்றோர்களும், காதலியின் பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டுவிட்டார்கள்
அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு சபாநாயகர் அழைப்பு
.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 23–ந்தேதி தொடங்கி மே மாதம் 8–ந்தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க நாளான 23–ந்தேதி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார்
அதைத்தொடர்ந்து 26–ந்தேதி ரெயில்வே பட்ஜெட்டும், 28–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது. மேலும் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த 6 அவசர சட்டங்களை, சட்டங்களாக நிறைவேற்ற தீர்மானித்து உள்ளது. அந்தவகையில் இந்த கூட்டத்தொடரை அமைதியாக நடத்த மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.
எனவே பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் டெல்லியில் 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
19 February 2015
பூட்டை உடைத்து திருப்பதியில் மூலவர் தரிசனம்
சிறிசேனாவுக்கு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலையில் நடைபெற்ற சுப்ரபாதம் சிறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இலங்கை அதிபர் சிறிசேனா தனது மனைவியுடன் சென்றார்.
அப்போது ஏழுமலையான் கோவிலின் மூலவர் அறையில்
உள்ள தங்க கதவை கோவில் ஊழியர்கள் சாவி மூலம் திறக்க முயன்றனர். ஆனால் எதிர்பாராதவிதமாக சாவி உடைந்து பூட்டுக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் மூலவரின் அறையை திறக்க முடியாத
நிலை ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து கோவில் பொறியாளர்கள் வரவழைக்கப்பட்டு மூலவரின் தங்க கதவின் பூட்டை உடைத்து, கதவு திறக்கப்பட்டது.
அதன் பின்னர் கோவிலில் நடந்த சுப்ரபாதம் நிகழ்ச்சியில் இலங்கை அதிபர் சிறிசேனா கலந்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து தேவஸ்தான துணை செயல் அலுவலர் சின்னங்காரு ரமணா நிருபர்களிடம் கூறுகையில், ‘ஏழுமலையான் கோவிலில் நேற்று வழக்கம்போல் ஏகாந்தசேவை முடிந்து அதிகாலை கதவு அடைக்கப்பட்டது. பின்னர்
அதிகாலை 2.15 மணி அளவில் அர்ச்சகர்கள் சுப்ரபாத சேவைக்காக கதவை திறக்க முயன்றபோது அதன் சாவி உடைந்தது. இருப்பினும் ஊழியர்கள விரைந்து வந்து பூட்டை அறுத்து திறந்தனர்.
அதன்பிறகு வழக்கம்போல சுப்ரபாத சேவை நடந்தது. சன்னதியின் சாவி உடைந்ததால் எந்த வித அசம்பாவிதமும் நடைபெறாது. எனவே, பக்தர்கள் அச்சமடைய வேண்டாம்’ என்றார். தரிசனத்துக்கு பின்னர் இலங்கை அதிபர் சிறிசேனா திருப்பதியில் இருந்து இலங்கை புறப்பட்டு சென்றார்.
18 February 2015
2 பேரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர் கைது????
அசாம் மாநிலம் சோனிட்பூர் மாவட்டம் பாடியா சுபுரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு கார்மெல்சிங் கபூர் என்ற ராணுவ வீரர் குடிபோதையில் கவுதம் போரா என்பவர் வீட்டுக்கு சென்றார். கவுதம் போரா வீட்டிலேயே மது விற்பவர் என்று தெரிகிறது. அதற்கு அவருக்கு அனுமதி இருக்கிறதா? என்பது தெரியவில்லை. ஏற்கனவே போதையில் இருந்த கார்மெல்சிங், கவுதமிடம் மது கேட்டார்.
அவர் மது இல்லை என்று மறுத்ததால் கார்மெல்சிங் துப்பாக்கியை எடுத்து கண்மூடித்தனமாக சுட்டார். இதில் கவுதம்
போரா மற்றும் பாபு போரா ஆகியோர் துப்பாக்கி குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே இறந்தனர். கவுதம் மனைவி ஜினு என்பவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை போலீசார் ராணுவ வீரர் கார்மெல்சிங் கபூரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கிரண் பேடி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நலம் விசாரித்தார்
டெல்லி சட்டசபை தேர்தரண் பேடி அரவிந்த் கெஜ்ரிவாலிடம் நலம் விசாரித்தார்லில் அரவிந்த் கெஜ்ரிவாலும், கிரண் பேடியும் எதிர் எதிராக போட்டியிட்டனர். இருப்பினும், நேற்று
டெல்லி போலீஸ் கமிஷனர் பீம் சைன் பஸ்சி அளித்த விருந்து நிகழ்ச்சியில், முதல்–மந்திரி கெஜ்ரிவாலும், கிரண் பேடியும் அருகருகே அமர்ந்திருந்தனர்.
கிரண் பேடிக்கு கெஜ்ரிவால் வணக்கம் தெரிவித்தார். அதையடுத்து, இருவரும் சற்று நேரம் உரையாடினர்.
கெஜ்ரிவாலிடம் அவரது உடல்நிலை குறித்து விசாரித்த கிரண் பேடி, உடல்நிலையை கவனித்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஆகியோரும்
கலந்து கொண்டனர். மோடி, ராஜ்நாத்சிங் ஆகியோரும் கெஜ்ரிவாலுடன் உரையாடினர். விருந்துக்கு வந்திருந்த பலரும், அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்
17 February 2015
காவலாளியை காரால் அடித்து கொன்ற தொழிலதிபர்
பல அதிவேகக் கார்களை வாங்கிக் குவிக்கும் இந்திய தொழிலதிபர் ஒருவர் தாமதமாக கேட்டைத் திறந்த வாயில் காவலாளியை தனது குடியிருப்பு வளாகத்திற்குள் காரால் துரத்திச் சென்று தாக்கி கடுமையான காயப்படுத்தியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட காவலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் நிசாம் முகமது. இவரது வீட்டிற்கு சந்திர போஸ் என்ற 50 வயது முதியவர் வாயில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று, நிசாம் காரில் வருவதைப் பார்த்த போஸ், வாயில் கதவை திறந்தார். அவர் திறப்பதற்குள் நிசாம் சத்தமாக ஹோர்ன் அடித்தார். இதனால் உண்டான பதட்டத்தில் போஸ் கதவை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
கதவைத் திறந்ததும் தனது அதிவேக ஹம்மர் காரினால் போஸை துரத்திச் சென்று சுவற்றோடு சுவராக மோதிய நிசாம் அப்போதும் வெறி அடங்காமல் இரும்பு கம்பியினால் அந்த முதியவரைத் தாக்கினார்.
திரிச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போஸூக்கு கடந்த 2 வாரங்களில் பல அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. இருப்பினும் மாரடைப்பால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிசாம் மீது கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தரும் நம்பிக்கை???
இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தரும் தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை
சிறிசேனாவின் வருகை இலங்கை தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் டெல்லியில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:–
மீட்டுத்தரும்
இலங்கை அதிபர் சிறிசேனாவின் இந்திய வருகை அங்கு உள்ள தமிழர்களின் வாழ்வுரிமையை மீட்டுத்தரும் என்று நாங்கள் நம்புகிறோம்.
தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ள இந்த குறுகிய
காலத்துக்கு உள்ளாகவே இந்தியாவுக்கு வந்து இரு நாடுகளும் சந்திப்பதே, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரத்தோடு வாழும் வாழ்வுரிமையை பெற்றுத்தரும் என்று
உறுதியாக நாங்கள் நம்புகிறோம்.
சமீப காலத்தில் மீனவர்களின் பிரச்சினைகளில் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்கான நம்பிக்கையும் நமக்கு ஏற்பட்டிருக்கிறது. படகுகள் எல்லாம் மீட்கப்பட்டு உள்ளன. அதற்கு தொடர்ந்து மத்திய அரசு எடுத்த முயற்சிகள்தான் காரணம்.
நல்ல தேர்தலை சந்தித்தோம்
தமிழகத்தில் மாறுபட்ட அரசியல் சூழல் நிலவுகிறது. ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலை ஊழலுக்கு எதிரான தேர்தல் என்ற நிலையில் பா.ஜனதா சந்தித்தது.
மாநிலத்தில் எந்த இடைத்தேர்தல் நடந்தாலும் மாநில தேர்தல் அதிகாரிகள் ஆளும் கட்சிக்கு இணக்கமாக பணிபுரிந்து விடுகிறார்கள் என்பதும் மிக வேதனையான விஷயம். எது எப்படி இருந்தாலும் தேர்தலில் நின்று அந்தக் களத்தைப் பற்றி தெரிந்துகொண்டு எதிரிகள் எத்தனை பலம் வாய்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை எதிர்ப்பதில் மட்டுமல்லாமல் ஒரு நல்ல தேர்தலை சந்தித்தோம் என்பதில் பா.ஜனதா மகிழ்ச்சி அடைகிறது.
போர்க்களத்தில் எதிர்த்து நிற்கிறோம் என்ற செய்தியை மக்களுக்கு எடுத்துச் சென்றதில் நாங்கள் வெற்றி பெற்றிருக்கிறோம் என்று நினைக்கிறேன்.
ஒற்றுமையாக செயல்பட்டிருக்கவேண்டும்
முதலில் தே.மு.தி.க.தான் ஸ்ரீரங்கத்தில் போட்டியிடுவதாக இருந்தது. அவர்கள் போட்டியிடவில்லை என்றதும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பா.ஜனதா போட்டியிடும் என்று முடிவெடுக்கப்பட்டது.
கூட்டணிக் கட்சிகள் அனைவரும் இன்னும் ஒற்றுமையாக செயல்பட்டு இருக்கவேண்டும். ஒரே குரலில் எதிர்ப்பை பதிவு செய்திருக்கவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை.
ஆன்ம பரிசோதனை
ஆனால் பல்வேறு காரணங்களால் அவர்களால் வர இயலவில்லை. இறுதி நாள் பிரசாரத்தின்போது பிரேமலதா விஜயகாந்த் வருவதாக இருந்தது. அந்தக் கூட்டத்துக்கு அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது போன்ற சில காரணங்களால் அவரால் பிரசாரத்தில் கலந்துகொள்ள முடியவில்லை.
ஊழலுக்கு எதிராக ஒரே குரலாக செயல்படத் தவறிவிட்டோம் என்பதுதான் இங்கே யதார்த்தம்.
எனவே வருங்காலத்தில் எதிர்க்கட்சிகள் பிரிந்து இருந்தால் ஆளும் கட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் எந்த வகையிலும் பலம் பெறாமல் போய்விடுமோ? என்ற அச்சம் எல்லா
எதிர்க்கட்சிகளுக்கும் இருக்கவேண்டும்.
இதனைத்தான் இந்தத் தேர்தலும் உணர்த்துகிறது. ஊழலுக்கு எதிராக நாம் எப்படி செயல்படப்போகிறோம் என்ற ஆன்ம பரிசோதனையில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படவேண்டும்.
2013–ல் நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழல்
மத்திய பிரதேச மாநிலத்தில் 2013–ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழலில் முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகானுக்கு தொடர்பு உள்ளது என்றும், இதுதொடர்பான ஆவணத்தில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.
மருத்துவ ஊழல்
மத்திய பிரதேச மாநில தொழில் தேர்வு வாரியம் 2013–ம் ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் மருத்துவ ஊழியர்கள் தேர்வுக்கான நுழைவுத் தேர்வை நடத்தியது. இதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதையடுத்து, மாநில ஐகோர்ட்டு உத்தரவின்பேரில் சிறப்பு அதிரடிப்படை விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையை கண்காணித்து அறிக்கை கொடுக்க நீதிபதி சந்திரேஷ் பூஷண் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவையும் ஐகோர்ட்டு அமைத்தது.
நேற்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் சிறப்பு விசாரணை குழு தலைவர் நீதிபதி சந்திரேஷ் பூஷணை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய்சிங், கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
சவுகான் பெயர் நீக்கம்
2013–ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடந்த இந்த மிகப்பெரிய ஊழலில் முதல்–மந்திரி சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு தொடர்பு உள்ளது. இந்த ஊழல் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையினர் ‘ஹார்டு டிஸ்க்’ (தகவல்களை சேகரித்து வைக்கும் மின்னணு கருவி) ஒன்றை கைப்பற்றினர். அந்த ஆவணத்தில் இருந்த சவுகான் பெயரை விசாரணை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். அவரது பெயருக்கு பதிலாக உமாபாரதி பெயரை சேர்த்துள்ளனர்.
இது மத்திய பிரதேச மாநிலத்தின் மிகப்பெரிய ஊழல் மட்டுமல்ல, மாநில இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. இந்த விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமானால் முதல்–மந்திரி சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நடவடிக்கை வேண்டும்
ஊழலில் தொடர்புள்ள முதல்–மந்திரி மற்றும் அவரது பெயரை நீக்கிய விசாரணை அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு விசாரணை குழு தலைவரிடம் புகார் செய்துள்ளோம்.
மத்திய பிரதேசத்தில் 2013–ல் நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழலில் முதல்–மந்திரி சவுகானுக்கு தொடர்பு காங்கிரஸ் புகார்
மத்திய பிரதேச மாநிலத்தில் 2013–ம் ஆண்டு நடந்த மருத்துவ மாணவர் சேர்க்கை ஊழலில் முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகானுக்கு தொடர்பு உள்ளது என்றும், இதுதொடர்பான ஆவணத்தில் இருந்து அவரது பெயர் நீக்கப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் புகார் கூறியுள்ளது.
மருத்துவ
ஊழல்
மத்திய பிரதேச மாநில தொழில் தேர்வு வாரியம் 2013–ம் ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை மற்றும் மருத்துவ ஊழியர்கள் தேர்வுக்கான நுழைவுத் தேர்வை நடத்தியது. இதில் ஊழல் நடந்ததாக புகார் கூறப்பட்டதையடுத்து, மாநில ஐகோர்ட்டு
உத்தரவின்பேரில் சிறப்பு அதிரடிப்படை விசாரணை நடக்கிறது. இந்த விசாரணையை கண்காணித்து அறிக்கை கொடுக்க நீதிபதி சந்திரேஷ் பூஷண் தலைமையில் சிறப்பு விசாரணை குழுவையும் ஐகோர்ட்டு அமைத்தது.
நேற்று காங்கிரஸ் தலைவர் திக்விஜய்சிங் சிறப்பு விசாரணை குழு தலைவர் நீதிபதி சந்திரேஷ் பூஷணை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார்
. பின்னர் காங்கிரஸ் தலைவர்கள் திக்விஜய்சிங், கமல்நாத், ஜோதிராதித்யா சிந்தியா ஆகியோர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:–
சவுகான் பெயர் நீக்கம்
2013–ம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவர் சேர்க்கையில் நடந்த இந்த மிகப்பெரிய ஊழலில் முதல்–மந்திரி
சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு தொடர்பு உள்ளது.
இந்த ஊழல் தொடர்பாக சிறப்பு அதிரடிப்படையினர் ‘ஹார்டு டிஸ்க்’ (தகவல்களை சேகரித்து வைக்கும் மின்னணு கருவி) ஒன்றை கைப்பற்றினர். அந்த ஆவணத்தில் இருந்த சவுகான் பெயரை விசாரணை அதிகாரிகள் நீக்கியுள்ளனர். அவரது பெயருக்கு பதிலாக உமாபாரதி பெயரை சேர்த்துள்ளனர்.
இது மத்திய பிரதேச மாநிலத்தின்
மிகப்பெரிய ஊழல் மட்டுமல்ல, மாநில இளைஞர்களுக்கு இழைக்கப்பட்ட மிகப்பெரிய அநீதி. இந்த விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமானால் முதல்–மந்திரி சவுகான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.
நடவடிக்கை வேண்டும்
ஊழலில் தொடர்புள்ள முதல்–மந்திரி மற்றும் அவரது பெயரை நீக்கிய விசாரணை அதிகாரிகள் ஆகியோரை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறப்பு விசாரணை குழு தலைவரிடம் புகார்
16 February 2015
மீண்டும் கடற்பரப்பினில் இந்திய மீனவர்கள்!
அண்மை நாட்களாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் றோலர் மீன்பிடிப்படகுகளின் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.
கடந்த ஒருவாரமாக நீடித்த கடற்கொந்தளிப்பு, கடந்த இரண்டு நாட்களாக தணிந்துள்ளது. இதனையடுத்து, இந்திய றோலர்கள் அங்கு முகாமிட ஆரம்பித்துள்ளன. முல்லைத்தீவிலுள்ள 6000 மீனவ குடும்பங்களும் நடுத்தெருவிற்கு வரவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அத்துமீறல் பற்றி முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் ஊடாக கடற்படையினரிற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதாகவும் எனினும், கடற்படையினரின் படகுகளிற்கு அருகிலும் இந்திய றோலர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுவருவதை காண முடிவதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினை பொறுத்தவரை தென்னிலங்கை மீனவர்களையோ இந்திய மீனவர்களையோ கண்டுகொள்வதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
பதிவு இணைய செயஇங்குஅழுத்தவும்மேலதிக செய்திகள் >>>
15 February 2015
மாநிலங்கள் இலவச மின்சாரம் எப்படி வழங்க முடியும்?
மின் உற்பத்தி நிலையம் இல்லாத மாநிலங்கள், எப்படி இலவச மின்சாரம் வழங்க முடியும் என ஆம் ஆத்மி கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கினார்.
முதலீட்டாளர்கள் மாநாடு
டெல்லியில் முதலாவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:–
இப்போதெல்லாம் அரசியல் கட்சிகள், இலவச மின்சாரம் வழங்குவோம் என வாக்காளர்களிடம் வாக்குறுதியை வாரி வழங்குகின்றன. ஆனால் அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை என்பதை உணருவதில்லை.
(மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படும் என்று சமீபத்தில் டெல்லி சட்டசபை தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதி வழங்கியதை பிரதமர் மோடி மறைமுகமாக இப்படி சாடினார்.)
பழி வருகிறது
குஜராத்தில் ஆரம்பத்தில் அதிக விலை கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனங்களை அறிமுகம் செய்தபோது அது சவாலான ஒன்றாக அமைந்தது. ஆனால் அந்த சாதனங்களின் தேவை பெருகப்பெருக, நாளடைவில் அவற்றின் விலை குறைந்தது. அந்த தருணத்தில் அரசு நிறைய பழிக்கு ஆளானது. சிலரை மாற்ற வேண்டும் என்று நாடு கருதுகிறபோது, அதற்கு பழி வந்து சேர்கிறது.
இந்தியா இதுவரை அனல் மின்சக்தி, நீர் மின்சக்தி, அணுமின்சக்தி ஆகியவற்றில் கவனத்தை செலுத்தியது. ஆனால் இப்போது நாம் சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, உயிரிவாயு எரிசக்தி போன்றவற்றில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
ஏழை மக்களுக்கும் சூரிய மின்சக்தி
ஏராளமாக சூரிய மின்சக்தி உற்பத்தி செய்கிற 50 நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
இது சூரிய மின்சக்தி துறையில் ஆராய்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவும். இதன்மூலம் சூரிய மின்சக்தியை ஏழை எளிய மக்களும், நாட்டின் ஒதுக்குப்புறங்களில் உள்ள மக்களும் பயன்படுத்துகிற வாய்ப்பு கிடைக்கும்.
தமிழர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைக்க பாஜக துணையாக இருக்கும்
பிரதமர் மோடி – சிறிசேனா சந்திப்பு: இலங்கை தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான புதிய வழி உருவாகும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அந்நாட்டு அதிபர் மைத்ரி பால சிறிசேனோ இந்தியாவிற்கு வருகிறார். பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்திக்கிறார். இந்த சந்திப்புக்குப் பிறகு இந்திய இலங்கை உறவில் திருப்பம் ஏற்படும்.
இலங்கை தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கான புதிய வழி உருவாகும். தமிழக மீனவர்களின் உரிமைகளையும் பாதுகாக்க முடியும். இலங்கை தமிழர்களுக்கு அனைத்து அதிகாரங்களும் கிடைக்க பாஜக துணையாக இருக்கும் என்றார்.
மேலும், இதுதொடர்பாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இலங்கை தமிழர் பிரச்சனை மற்றும் தமிழக மீனவர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டு வரும் நிலையில், இலங்கை அதிபர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் போக்கு தமிழர்களின் வாழ்வாதாரத்திற்கு நல்லதல்ல என்று கூறியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கைத் தமிழர் பிரச்சனை நிரந்தர தீர்வுக்கு வரும் என்ற மிகப்பெரிய நம்பிக்கையை இலங்கை அதிபரின் வருகை ஏற்படுத்தியிருக்கிறது.
இலங்கையில் தமிழர்களுக்கு அரசியல் அதிகாரம் கிடைக்கும் வகையில் விரைவில் மாற்றம் ஏற்படும் என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்து செலுத்தப்பட்ட ஏவுகணை சோதனை வெற்றி..
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட போர்க்கப்பலான ஐ.என்.எஸ். கொல்கத்தா, கடந்த ஆகஸ்டு மாதம் கடற்படையில் சேர்க்கப்பட்டது. ஏவுகணைகளை கையாளும் திறன் வாய்ந்த இந்த கப்பலில் இருந்து நேற்று முதன் முறையாக பிரமோஸ் ஏவுகணை செலுத்தி பார்க்கப்பட்டது.
அதன்படி 290 கி.மீ. தூரம் வரை சென்று தாக்கக்கூடிய பிரமோஸ் ஏவுகணை நேற்றைய சோதனையில் பயன்படுத்தப்பட்டது.
கோவா கடற்பகுதியில் நடந்த இந்த சோதனையில் குறிப்பிட்ட இலக்கை எந்த வித இடையூறும் இன்றி ஏவுகணை துல்லியமாக சென்று தாக்கியது.
இந்திய–ரஷிய கூட்டு தயாரிப்பான இந்த பிரமோஸ் ஏவுகணைகள், ராணுவம், கடற்படையில் ஏற்கனவே
இணைக்கப்பட்டு உள்ளது.
சோதனை வெற்றிகரமாக நடந்ததை தொடர்ந்து பிரமோஸ் ஏவுகணை குழுவினரை, அதன் தலைவர் சுதிர் மிஸ்ரா பாராட்டினார்.
ஒரு போர்க்கப்பலில் இருந்து ஒரே நேரத்தில் 8 ஏவுகணைகளை செலுத்த முடியும். எனினும்
ஐ.என்.எஸ். கொல்கத்தா கப்பல்,
ஒரே நேரத்தில் 16 ஏவுகணைகளை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. மேலும் இதில் இருந்து செங்குத்தாகவும் ஏவுகணைகளை செலுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
14 February 2015
இந்தியா ஐ.நா. பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராவதை ஏற்க முடியாது
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதை ஏற்க முடியாது என அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவிடம், நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
அமெரிக்கா ஆதரவு
இந்திய குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கடந்த மாதம் இந்தியா வந்திருந்தார். அப்போது, மாற்றியமைக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு ஆதரவு தெரிவித்தார். மேலும் அணுசக்தி நாடுகள் குழுவிலும் இந்தியா உறுப்பினராவதற்கு அமெரிக்கா ஆதரவு அளிக்கும் என்று கூறினார்.
இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிடம், நேற்று முன்தினம் இரவில் ஒபாமா தொலைபேசியில் பேசினார். இரு தலைவர்களுக்கு இடையேயான இந்த பேச்சு ½ மணி நேரத்துக்கும் மேலாக நடந்தது.
தகுதி இல்லை
அப்போது ஒபாமாவிடம் பேசிய நவாஸ் ஷெரீப், ‘காஷ்மீர் தொடர்பாக ஐ.நா. நிறைவேற்றியுள்ள தீர்மானங்களுக்கு இந்தியா உடன்படவில்லை. மேலும் காஷ்மீர் மக்களுக்கு சுயநிர்ணய உரிமையை இந்தியா
உறுதி செய்யவில்லை. எனவே ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதை ஏற்க முடியாது. அந்த தகுதி இந்தியாவுக்கு இல்லை’ என்று கூறினார்.
அணுசக்தி நாடுகள் குழுவில் உறுப்பினராக இணைய பாகிஸ்தான் விரும்புவதாக கூறிய நவாஸ் ஷெரீப், காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து பிரச்சினைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த இந்தியாவை வலியுறுத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
சந்திக்க முடிவு
இந்த உரையாடலின் போது தனது இந்திய பயணம் குறித்து ஒபாமா, நவாஸ் ஷெரீப்பிடம் விளக்கினார். மேலும் இரு நாட்டு உறவுகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். அப்போது இரு தலைவர்களும் தகுந்த நேரத்தில் சந்திக்கவும் முடிவு செய்தனர்.
13 February 2015
பிரபல ஓட்டலில் பயங்கர தீ விபத்து 3 பேர் பலி
ராஜஸ்தான் மாநிலம் ஆழ்வார் மாவட்டத்தில் உள்ள நீம்ரானா என்ற பிரபல தனியார் ஓட்டலில் இன்று அதிகாலை 3 மணி அளவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இந்த தீ விபத்தில் ஓட்டலில் தங்கியிருந்த 3 பேர் பலியாகி உள்ளனர். இது குறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கபட்டது.
விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் ஓட்டலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் மேலும் யாராவது உயிர் இழந்துள்ளனரா? என்று விசாரித்து வருகின்றனர்.
குடும்பத்தகராறில் போலீஸ்காரர் மனைவி தற்கொலை
விருகம்பாக்கத்தில் குடும்பத்தகராறில் போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீஸ்காரர்
விருகம்பாக்கம், அபுசாலி தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் தங்கராஜ் வடபழனி போலீஸ் நிலையத்தில் தலைமைக்காவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சத்தியவாணி
இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. விருகம்பாக்கத்தில் தங்கராஜூம், அவரது மனைவியும் மட்டும் வசித்து வந்தனர். நேற்று முன்தினம் காலை வழக்கம்போல தங்கராஜ் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் சத்தியவாணி மட்டும் தனியாக இருந்தார்.
தற்கொலை
வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்த தங்கராஜ் கதவை தட்டினார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கதவு திறக்கப்படவிலலை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.
அங்கு சத்தியவாணி தூக்குப்போட்டு இறந்தநிலையில் கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து விருகம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சத்தியவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு
மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்றும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டதால் மனம் உடைந்த சத்தியவாணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது.
12 February 2015
ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது 2 ராணுவ அதிகாரிகள் பலி!!
காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று நேற்று இரவு விபத்துக்குள்ளானது. ‘துருவ்’ ரகத்தைச் சேர்ந்த அந்த ஹெலிகாப்டர், இரவு நேர பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது,
ஒரு மலைப்பகுதியில் விபத்தில் சிக்கியது.
அப்போது, ஹெலிகாப்டரை இயக்கிய ராணுவ லெப்டினன்ட் கர்னலும், ராணுவ மேஜரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.
குண்டுவெடிப்பில் தொடர்புடைய தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை
வங்கதேச கோர்ட்டு அதிரடி தீர்ப்பு வங்காள தேசத்தில் 2007–ம் ஆண்டு, மசூதியில் தொழுகை நடத்திவிட்டு திரும்பிக்கொண்டிருந்த அரசு வக்கீல் ஹைதர் உசேன் கொலை செய்யப்பட்டார்.
இவர், ஒரு கொலை வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி, தடை செய்யப்பட்ட ஜமாத் உல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஷேக் அப்துர் ரகுமான் உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனை பெற்றுத்தந்தார். அவர்கள் தூக்கில் போடப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் விதமாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
இந்த வழக்கில், ஜமாத் உல் முஜாஹிதீன் (ஜே.எம்.பி.) தீவிரவாத இயக்கத்தின் 5 உறுப்பினர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் 2 பேர் தலைமறைவு குற்றவாளிகள்.
இந்த வழக்கை தென்மேற்கு ஜலகதி மாவட்ட கூடுதல் செசன்சு நீதிபதி அப்துல் ஹலிம் விசாரித்து வந்தார். விசாரணை முடிவில் 5 பேர் மீதான குற்றச்சாட்டுகளும், சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக கண்டறிந்து, அனைவருக்கும் மரண தண்டனை விதித்து நேற்று பரபரப்பு தீர்ப்பு அளித்தார்.
மேற்கு வங்காள மாநிலம் பர்த்வானில் கடந்த ஆண்டு அக்டோபர் 2–ந் தேதி நடந்த குண்டுவெடிப்பில் தொடர்புடைய இயக்கம்தான், ஜமாத் உல் முஜாஹிதீன் என்பது குறிப்பிடத்தக்கது.
10 February 2015
கொடியேற்று விழாவை நாளை சிறப்பாக நடத்த வேண்டும்: தொண்டர்களுக்கு???
இதுகுறித்து, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தே.மு.தி.க. என்ற அரசியல் இயக்கம் தொடங்குவதற்கு முன்பே, தமிழகத்தில் உள்ள இருளை அகற்றுவதற்காகத்தான் தே.மு.தி.க.வின் புரட்சி தீபம் தாங்கிய மூவர்ணக்கொடி உருவாக்கப்பட்டது. கட்சி கொடி உருவாகி, 15 ஆண்டுகளை கடந்து தமிழக மக்களின் மனதில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடித்துள்ளது. பல சிறப்புகளை பெற்ற கட்சி கொடிநாளை
சிறப்பாக கொண்டாட வேண்டும் என தே.மு.தி.க. நிர்வாகிகளையும், தொண்டர்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
சாதி, மதம், இனம், மொழி என்ற வேறுபாடு இல்லாமல், அனைத்து தரப்பு மக்களுக்கும் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு ஒரு புதிய அரசியலை தமிழ்நாட்டுக்கு தந்து வருகிறோம். நாம் ஓடி ஓடி உழைத்து, நம் சொந்த பணத்தில் மக்கள் நலப்பணிகளை செய்து, மக்கள் மனதில் தே.மு.தி.க.வுக்கு என தனி இடத்தை பெற்றுள்ளோம்.
பல்வேறு சிறப்புகளை கொண்டுள்ள நம் இயக்கத்தின் கொடிநாளை சிறப்பாக கடைபிடிக்கும் வண்ணம் 12-2-2015 வியாழக்கிழமை (நாளை) தமிழ்நாட்டில் அனைத்து இடங்களிலும் கட்சி கொடியேற்று விழா நிகழ்ச்சிகளை அனைவரும் சிறப்பாக நடத்த வேண்டும்.
கட்சி கொடியினை ஏற்றி வைத்தும், இனிப்புகள் வழங்கியும், ஏழை, எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் நல உதவிகள் வழங்கியும், பொதுமக்களின் பேராதரவோடு கொடி நாளை சிறப்பாக கொண்டாட வேண்டும்.
மேலும், கட்சி கொடி மரங்கள் இல்லாத கிராமங்களே இல்லை, தெருக்களே இல்லை என்ற நிலையை உருவாக்கி, தே.மு.தி.க.வின் புரட்சி தீப மூவர்ணக்கொடி பட்டொளி வீசி, தமிழகம் எங்கும் பறந்திட அனைவரும் பாடுபட வேண்டுமாறு கேட்டுக்கொள்கிறேன்
தேர்தலில் வெற்றி அரசியல் பூகம்பம்: சர்வதேச ஊடகங்கள் பாராட்டு?'
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அடைந்துள்ள இமாலய வெற்றியை சர்வதேச ஊடகங்கள் வெகுவாக பாராட்டியுள்ளன.
மத்தியில் ஆட்சி அமைத்த ஓராண்டுக்குள் பா.ஜ.க. சந்தித்துள்ள இந்த தோல்வியையும், அக்கட்சியை வீழ்த்தி ஆம் ஆத்மி அடைந்துள்ள அபார வெற்றியையும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் ’சிறிய அரசியல் பூகம்பம்’ என வர்ணித்துள்ளது.
ஊழலுக்கு எதிரான சராசரி மனிதனால் பா.ஜ.க. சந்தித்துள்ள அதிர்ச்சி தோல்வி இது என வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்காவின் பிரபல செய்தி நிறுவனமான சி.என்.என்., ‘மேலே செல்லும் ஒரு பொருள் கீழே வந்தே தீர வேண்டும்’ என்ற இயற்பியல் தத்துவத்தை இந்த தேர்தல் முடிவு மீண்டும் நினைவூட்டுகிறது’
என கூறியுள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த பா.ஜ.க. மோடியின் செல்வாக்கை மூலதனமாக வைத்து அடுத்தடுத்து நடைபெற்ற சில மாநில தேர்தல்களில் வெற்றி அடைந்தது. ஆனால்,
டெல்லி தேர்தல் பா.ஜ.க.வுக்கு கடுமையான போர்க்களமாக அமைந்து விட்டதாக பி.பி.சி. சுட்டிக் காட்டியுள்ளது.
டெல்லி தேர்தல் முடிவுகள் பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு என தி டெலகிராப்-பும், மோடிக்கு கிடைத்த அடி என கார்டியன் தெரிவித்துள்ளது.
கார் மரத்தில் மோதி கல்லூரி மாணவர் பலி!!
புளியங்குடி அருகே நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே நடந்த விபத்தில் மாணவர் ஒருவர் பலியானார். 3 பேர் காயம் அடைந்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தப்புரம் அரசுக் கல்லூரியில் பொறியியல் படிக்கும் மாணவர்கள் கொல்லம் கடக்கல் சார்ந்த முகுந்தன் மகன் நந்து, மலப்புரம் மாவட்டம் அப்ப்துல்லாஹ் மகன் அன்வர், லத்தீப் மகன் சைபுல்லாஹ், கோழிக்கோடு சோலையூர் குட்டி மகன் மிதுன் ஆகிய 4 பேரும் கடந்த 8ம் தேதி யாருக்கும் தெரியாமல் கொடைக்கானல் சென்றுள்ளனர்.
பின்னர் அங்கிருந்து நேற்று இரவு சொந்த ஊர்களுக்கு காரில்திரும்பினர். காரை மிதுன் ஓட்டியுள்ளார். நள்ளிரவு 2 மணியளவில் கார் வாசுதேவநல்லூர் சிந்தாமணி அருகே வரும் போது நிலை தடுமாறி சாலை ஓரத்திலிருந்த புளிய மரத்தில் மோதியது.
இதில் 4பேரும் காயம் அடைந்தனர். நந்து மட்டும் பலத்த காயம் அடைந்த நிலையில் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக பலியானார். மற்ற 3 பேரும் நெல்லை மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவீர சிகிச்சை அழைக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து வாசு தேவநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரும்பான்மையை நிரூபிக்க தயார்முதல்-மந்திரி
.முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மஞ்சி திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிரதமருடன் சந்திப்பு
டெல்லியில் நேற்று நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் பீகார் முதல்-மந்திரி ஜிதன்ராம் மஞ்சி கலந்து கொண்டார். பின்னர் மாலையில் அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு 30 நிமிடங்கள் நீடித்தது. அப்போது இருவரும் பீகார் அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மஞ்சியிடம், பீகார் அரசியலில் ஏற்பட்டு உள்ள நெருக்கடி குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-
பதவி விலக மாட்டேன்
முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகும் எண்ணம் எதுவும் என்னிடம் இல்லை. ஏனென்றால் எனக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. அதை சட்டசபையில் வருகிற 20-ந் தேதி நிரூபிப்பேன்.
ஒருவேளை சட்டசபையில் என்னால் பலத்தை நிரூபிக்க முடியவில்லை என்றால் மட்டுமே முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகுவேன்.
மந்திரி சபை விரிவு
விரைவில் பீகார் மந்திரிசபை விரிவு செய்யப்படும். முஸ்லிம் ஒருவர் உள்பட 2 பேர் துணை முதல்-மந்திரிகளாக நியமிக்கப்படுவார்கள்.
எனது ஆட்சிக்கு யார் ஆதரவளித்தாலும் அதை ஏற்றுக்கொள்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
கருத்து வேறுபாடு
இதனிடையே மஞ்சி, நிதிஷ்குமார் இருவரில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் ஐக்கிய ஜனதாதளத்தின் கூட்டணி கட்சியான லாலுபிரசாத்தின் ராஷ்டிரீய ஜனதாதளத்தில் கருத்து வேறுபாடு நிலவுகிறது.
இது குறித்து அக்கட்சியின்
மூத்த எம்.எல்.ஏ. ராகவேந்திர பிரதாப் சிங் கூறுகையில், ‘மஞ்சி ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும்படி கட்சி மேலிடத்தை கேட்டுக்கொள்வேன். இது பற்றி நாளை நடக்கவிருக்கும் கட்சி கூட்டத்தில் எனது கருத்தை எடுத்து வைப்பேன்’ என்றார்.
பிளவுபடுகிறது
இவரைப்போலவே ராஷ்டிரீய ஜனதாதளத்தின் இன்னொரு எம்.எல்.ஏ.வான பிரிஜ் கிஷோர் சிங்கும் மஞ்சிக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஐக்கிய ஜனதாதளத்திலும், பிளவு ஏற்பட்டு ஒரு பகுதி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்வார்கள் என்றும், அவர்கள் மஞ்சியை ஆதரிப்பார்கள் என்ற ஊகமான தகவலும் வெளியாகி உள்ளது.
மந்திரிகள் விலகல் ஏற்பு
இந்த நிலையில், மஞ்சியின் மந்திரி சபையில் பதவி வகித்த 20 மந்திரிகள் மாநில கவர்னரின் செய்தி தொடர்பாளர் எஸ்.கே.பதக்கிடம் நேற்று முன்தினம் அளித்த ராஜினாமா கடிதங்களை கவர்னர் திரிபாதி ஏற்றுக்கொண்டதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினையில், முதல்-மந்திரி மஞ்சி ஆலோசனையின் பேரில் கவர்னர் நடவடிக்கை எடுப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
09 February 2015
வேளாண் உற்பத்தி,முதலீடுகள் அதிகரிப்பு:பட்னவீஸ் பெருமிதம்
மும்பை:மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க., ஆட்சிக்கு வந்து 100 நாள்கள் நிறைவடைந்துள்ள நிலையில்,மாநிலத்தில் வேளாண் உற்பத்தி அதிகரித்திருப்பதாகவும், முக்கிய துறைகளில் முதலீடுகள் அதிகரித்துள்ளதாகவும் முதல்வர் தேவேந்திர பட்னவீஸ் பெருமிதம் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மும்பையில் பத்திரிகையாளர்களை சந்தித்து கூறுகையில்,அரசின் செயல்பாட்டை மதிப்பிட 100 நாள்கள் என்பது மிகவும் குறைவாகும். இதில் எங்கள் நோக்கத்தை மட்டுமே நீங்கள் மதிப்பிட முடியும். நாங்கள் சரியான வழியில் செல்வதாக தெரிவித்தார்.
மாநிலத்தில் வறட்சியால் 24,000 கிராமங்கள் பாதிக்கப்பட்டிருந்தன. இதில் 90 லட்சம் பேருக்கு நிவாரண நிதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்காக சூரியமின்சக்தியில் இயங்கும் பம்ப்செட்டுகளை
அளிக்கும் திட்டத்தை விரைவில் கொண்டுவர உள்ளோம். வேளாண் துறையில் நிரந்தரமாகவும், தொடர்ச்சியாகவும் முதலீட்டை அதிகப்படுத்த விரும்புகிறோம். மாநிலத்தில் தற்போது முதலீட்டுக்கு சாதகமான சூழ்நிலை உள்ளதாக தெரிவித்தார்.
முதலீடுகள் அதிகரிப்பு:தொழில் நிறுவனங்களுக்கான நில ஒதுக்கீடு, பல்வேறு அனுமதிகள் வழங்குவது முடுக்கிவிடப்பட்டு்ள்ளது. எங்களது இந்த முதல்கட்ட நடவடிக்கையால் மாநிலத்துக்கு முதலீடுகள் அதிகரிக்கும். இதனால், வேலைவாய்ப்புகள் உருவாகும்.மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில், 50 சதவீதம் பேர் 25 வயதுக்கும் கீழ் உள்ளவர்களாவர். அதிக முதலீடுகளால் இளைஞர்களின் திறன் மேம்படும்.இது பொருளாதார நிலையை மேம்பட செய்யும். ஊரக, நகர்ப்புறங்களில் உள்ள உள்கட்டமைப்புகளில் முதலீடு செய்ய, வரி விதிப்பில் இருந்து நிதி திரட்டப்படும்.மாநிலத்தில் வேளாண் வளர்ச்சி கடந்த 2 ஆண்டுகளாக மந்தமாக இருந்த நிலையில்,
வேளாண் துறையின் வளர்ச்சிக்கும், உற்பத்தியை மேம்படுத்தவும் முயற்சி செய்து வருகிறோம்.
மாநிலத்தில் மின்உற்பத்தி 50 சதவீத அளவிலேயே உள்ளது. மின்உற்பத்தியை அதிகரிக்க, தடையின்றி நிலக்கரி விநியோகம் செய்யப்பட வேண்டும்.அடுத்த மாதம் சட்ட மன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள பட்ஜெட்டில் முதலீட்டுக்கான மூலதனச் செலவை அதிகரிப்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
08 February 2015
காந்தி, மோடி படம் கவர்னர் ரோசய்யா காலடியில் சர்ச்சை???
குண்டூர்: மகாத்மா காந்தியின் சிலை திறப்பு விழா அழைப்பிதழில், தமிழக கவர்னர் ரோசய்யாவின் ஆளுயர படத்திற்கு கீழ், தேசத் தந்தை மகாத்மா காந்தி, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் சிறிய படங்கள் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதனால், விழாவில் கலந்து கொள்வதை புறக்கணித்தார் ரோசய்யா.
ஆதரவாளர்:
ஆந்திர மாநிலம், குண்டூரைச் சேர்ந்த வியாபாரி கண்டசாலா பங்காரு பாபு. தற்போதைய தமிழக கவர்னர் ரோசய்யா, ஆந்திர மாநில அரசியலில் தீவிரமாக இருந்த போது, அவரின் ஆதரவாளராக இருந்த பாபு, சமீபத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம்
கட்சியில் இணைந்தார். சிலகல்லூரிபேட்டை யில் உள்ள மார்க்கெட்டில், காந்தி சிலையை நிறுவ விரும்பிய பாபு, அதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரினார். அனுமதி கிடைத்ததால், தமிழக கவர்னர் ரோசய்யாவை, சிலை திறப்பு விழாவில் பங்கேற்று, காந்தி சிலையை திறந்து வைக்கும்படி வேண்டினார். ரோசய்யாவும் சம்மதம் தெரிவித்தார்.
இந்நிலையில், ரோசய்யா மீதான அதீத அன்பை வெளிப்படுத்தும் வகையில், சிலை திறப்பு விழா அழைப்பிதழில், ரோசய்யாவின் ஆளுயர படத்தை அச்சிட்டு, அதன் கீழ் பகுதியில் சிறிய அளவில் காந்தி, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவின் படங்களையும்
இடம் பெறச் செய்தார் பாபு. அழைப்பிதழில், ரோசய்யாவின் காலடியில் தேசத் தந்தை காந்தி, நாட்டின் பிரதமர் ஆகியோரின் படங்கள் இடம் பெற்றது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனால், காந்தி சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதை, கவர்னர் ரோசய்யா தவிர்த்து விட்டார்.
இது தொடர்பாக, தமிழக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் கூறியதாவது: காந்தி சிலை திறப்பு விழா என்பதால், கவர்னர் ரோசய்யா சம்மதம் தெரிவித்தார்.
சம்பந்தம் இல்லை:
ஆனால், அழைப்பிதழில் தலைவர்களின் படங்கள், தன் காலின் கீழ், இடம் பெற்ற விவரம் தெரிந்ததும், விழாவை ரோசய்யா புறக்கணித்துவிட்டார். அவருக்கும், அழைப்பிதழ் விவகாரத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இவ்வாறு, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
மத்திய அரசு அதிரடியில் தப்பிய கவர்னர் இவர்:
ஆந்திர மாநில நிதி அமைச்சர், முதல்வர் என, பல முக்கிய பொறுப்பு வகித்த ரோசய்யா, 2011ல், காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால், தமிழக கவர்னராக நியமிக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ., அரசு, மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், காங்., அரசால்
நியமிக்கப்பட்ட பல மாநில கவர்னர்கள் நீக்கப்பட்டு, புதிய கவர்னர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனாலும், ரோசய்யாவுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அவர், தமிழக கவர்னராக தொடர்கிறார். இன்னும் ஓராண்டுக்கு அவரின் பதவிக்காலம் உள்ளது. அதனால்,
சர்ச்சைக்குரிய அழைப்பிதழால், மத்திய அரசின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்பதற்காகவே, காந்தி சிலை திறப்பு விழாவை ரோசய்யா புறக்கணித்து விட்டார் என, தெரிகிறது.
Subscribe to:
Posts (Atom)