பல அதிவேகக் கார்களை வாங்கிக் குவிக்கும் இந்திய தொழிலதிபர் ஒருவர் தாமதமாக கேட்டைத் திறந்த வாயில் காவலாளியை தனது குடியிருப்பு வளாகத்திற்குள் காரால் துரத்திச் சென்று தாக்கி கடுமையான காயப்படுத்தியுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட காவலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த தொழிலதிபர் நிசாம் முகமது. இவரது வீட்டிற்கு சந்திர போஸ் என்ற 50 வயது முதியவர் வாயில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த அன்று, நிசாம் காரில் வருவதைப் பார்த்த போஸ், வாயில் கதவை திறந்தார். அவர் திறப்பதற்குள் நிசாம் சத்தமாக ஹோர்ன் அடித்தார். இதனால் உண்டான பதட்டத்தில் போஸ் கதவை திறப்பதில் தாமதம் ஏற்பட்டது.
கதவைத் திறந்ததும் தனது அதிவேக ஹம்மர் காரினால் போஸை துரத்திச் சென்று சுவற்றோடு சுவராக மோதிய நிசாம் அப்போதும் வெறி அடங்காமல் இரும்பு கம்பியினால் அந்த முதியவரைத் தாக்கினார்.
திரிச்சூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போஸூக்கு கடந்த 2 வாரங்களில் பல அறுவை சிகிச்சைகள் நடைபெற்றது. இருப்பினும் மாரடைப்பால் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நிசாம் மீது கொலை வழக்கு பதிவு செய்த பொலிசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.
0 கருத்துகள்:
Post a Comment