தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான கால்பந்து போட்டிகள் கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் வருகிற 20–ந்தேதி முதல் 22–ந்தேதி வரை நடக்கிறது.
இதில் பங்கேற்க விரும்பும் அணிகள் (ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள்) தங்களின் விவரங்களை 10– ந்தேதிக்குள் காருண்யா பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனருக்கு
அனுப்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பல்கலைக்கழக துணைவேந்தர் சுந்தர் மனோகரன், பதிவாளர் ஜோசப் கென்னடி, உடற்கல்வி இயக்குனர் காலேப் ராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment