சென்னை ஐகோர்ட்டுக்கு அருகே 120 ஆண்டுகளுக்கு மேல் பழமையான சட்டக் கல்லூரி உள்ளது. இந்த சட்டக்கல்லூரியை வேறு ஒரு இடத்துக்கு மாற்ற தமிழக அரசு திட்ட மிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சட்டக்கல்லூரி மாணவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். பழமை வாய்ந்த சட்டக் கல்லூரியை
இடம் மாற்றக் கூடாது என்று கோஷங்களை எழுப்பியபடி, என்.எஸ்.சி. போஸ் சாலை வழியாக தலைமை செயலகத்தை நோக்கி ஊர்வலம் சென்றனர்.
அப்போது, போலீசார் அவர்களை பாரிமுனை அருகே தடுத்து நிறுத்தினார்கள். அங்கு கோஷங்களை எழுப்பிய மாணவர்கள்
தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாணவர்களின் போராட்டத்தினால், பாரிமுனை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
0 கருத்துகள்:
Post a Comment