டெல்லியில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் அதிகாலை 4 மணிக்கே மெட்ரோ ரெயில் சேவை துவங்குகிறது. வழக்கமாக, காலை 6 மணிக்கு துவங்கும் டெல்லி மெட்ரோ ரெயில் சேவை நாளை சற்று முன்னதாக துவங்குகிறது. ஒவ்வொரு அரை மணிநேரத்திற்கும் ஒருமுறை மெட்ரோ ரெயில் இயக்கப்படுகிறது.
வாக்காளர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் மெட்ரோ ரெயில்களில் வாசகங்களையும் ஒட்டியிருக்கிறது. தேர்தலை முன்னிட்டு அங்குள்ள மெட்ரோ ரெயில்களின் டிஸ்பிளே ஸ்கீரின்களில் வாசகங்கள் ஸ்குரோலிங் செய்யப்படுகின்றன.
0 கருத்துகள்:
Post a Comment