மின் உற்பத்தி நிலையம் இல்லாத மாநிலங்கள், எப்படி இலவச மின்சாரம் வழங்க முடியும் என ஆம் ஆத்மி கட்சியை பிரதமர் மோடி மறைமுகமாக தாக்கினார்.
முதலீட்டாளர்கள் மாநாடு
டெல்லியில் முதலாவது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பான உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:–
இப்போதெல்லாம் அரசியல் கட்சிகள், இலவச மின்சாரம் வழங்குவோம் என வாக்காளர்களிடம் வாக்குறுதியை வாரி வழங்குகின்றன. ஆனால் அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களில் மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை என்பதை உணருவதில்லை.
(மானிய விலையில் மின்சாரம் வழங்கப்படும் என்று சமீபத்தில் டெல்லி சட்டசபை தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி தேர்தல் வாக்குறுதி வழங்கியதை பிரதமர் மோடி மறைமுகமாக இப்படி சாடினார்.)
பழி வருகிறது
குஜராத்தில் ஆரம்பத்தில் அதிக விலை கொண்ட சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனங்களை அறிமுகம் செய்தபோது அது சவாலான ஒன்றாக அமைந்தது. ஆனால் அந்த சாதனங்களின் தேவை பெருகப்பெருக, நாளடைவில் அவற்றின் விலை குறைந்தது. அந்த தருணத்தில் அரசு நிறைய பழிக்கு ஆளானது. சிலரை மாற்ற வேண்டும் என்று நாடு கருதுகிறபோது, அதற்கு பழி வந்து சேர்கிறது.
இந்தியா இதுவரை அனல் மின்சக்தி, நீர் மின்சக்தி, அணுமின்சக்தி ஆகியவற்றில் கவனத்தை செலுத்தியது. ஆனால் இப்போது நாம் சூரிய மின்சக்தி, காற்றாலை மின்சக்தி, உயிரிவாயு எரிசக்தி போன்றவற்றில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
ஏழை மக்களுக்கும் சூரிய மின்சக்தி
ஏராளமாக சூரிய மின்சக்தி உற்பத்தி செய்கிற 50 நாடுகள் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
இது சூரிய மின்சக்தி துறையில் ஆராய்ச்சி, தொழில் நுட்ப வளர்ச்சிக்கு உதவும். இதன்மூலம் சூரிய மின்சக்தியை ஏழை எளிய மக்களும், நாட்டின் ஒதுக்குப்புறங்களில் உள்ள மக்களும் பயன்படுத்துகிற வாய்ப்பு கிடைக்கும்.
0 கருத்துகள்:
Post a Comment