.பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 23–ந்தேதி தொடங்கி மே மாதம் 8–ந்தேதி வரை நடக்கிறது. இதன் தொடக்க நாளான 23–ந்தேதி, இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உரையாற்றுகிறார்
அதைத்தொடர்ந்து 26–ந்தேதி ரெயில்வே பட்ஜெட்டும், 28–ந்தேதி மத்திய பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு முயன்று வருகிறது. மேலும் மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த 6 அவசர சட்டங்களை, சட்டங்களாக நிறைவேற்ற தீர்மானித்து உள்ளது. அந்தவகையில் இந்த கூட்டத்தொடரை அமைதியாக நடத்த மத்திய அரசு முனைப்பு காட்டுகிறது.
எனவே பட்ஜெட் கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக்கட்சி தலைவர்களுக்கு சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டம் டெல்லியில் 22–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடப்பதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment