ஆந்திராவில் பன்றிகாய்ச்சல் நோய் வேகமாக பரவி வருகிறது. தினமும் இந்த காய்ச்சலால் பாதிக்கபட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கும் இந்த நோய் தொற்றி உள்ளது. அரகு கோத்தபள்ளி கீதாவுக்கு எடுத்த பரிச்சோதனையில் அவருக்கு பன்றிகாய்ச்சல் நோய்க்கான் அறிகுறி தெரியவந்து உள்ளது. இத்தகவலை ஐதராபாத் மாவட்ட மருத்துவ மருத்துவ அதிகாரி சரோஜினி தெரிவித்து உள்ளார்.
கடந்த 3 நாட்களூக்கு முன் கீதா டெல்லியில் இருந்து வந்தார் அப்போது அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக் அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனையில் அவருக் பன்றி காய்ச்சல் நோய் இருப்பதற்கான அறிகுறி தெரிந்து உள்ளது
.அவர்உடனடியாக குயின்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார்.அவருக்கு தொடர்ந்து டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.அவர் குணமடைஅந்து வருவதாக மருத்துவ அதிகாரி தெரிவித்து உள்ளார்.ஐதராபாத்தில் பன்றிகாய்ச்சலால் பாதிக்கபட்ட 4-வது நபர் இவர் ஆவார்.
இது போல் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு பன்றி காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக காய்ச்சலில்
அவதிப்பட்டு வந்த அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்த போது பன்றி காய்ச்சல் இருப்பது உறுதியானது. இருப்பினும் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
பரிசோதனை செய்ததில் எனக்கு பன்றிக்காய்ச்சலுக்கு காரணமான எச்1என்1 வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தொடர் சிகிச்சை காரணமாக உடல்நலம் தேறி வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதுவரை அங்கு பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 28 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
0 கருத்துகள்:
Post a Comment