அண்மை நாட்களாக முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் றோலர் மீன்பிடிப்படகுகளின் அத்துமீறல் அதிகரித்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் அந்தோனிப்பிள்ளை மரியராசா தெரிவித்துள்ளார்.
கடந்த ஒருவாரமாக நீடித்த கடற்கொந்தளிப்பு, கடந்த இரண்டு நாட்களாக தணிந்துள்ளது. இதனையடுத்து, இந்திய றோலர்கள் அங்கு முகாமிட ஆரம்பித்துள்ளன. முல்லைத்தீவிலுள்ள 6000 மீனவ குடும்பங்களும் நடுத்தெருவிற்கு வரவேண்டிய நிலையேற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அத்துமீறல் பற்றி முல்லைத்தீவு மாவட்ட செயலாளரின் ஊடாக கடற்படையினரிற்கு அறிவித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளதாகவும் எனினும், கடற்படையினரின் படகுகளிற்கு அருகிலும் இந்திய றோலர்கள் மீன்பிடியில் ஈடுபட்டுவருவதை காண முடிவதாகவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையினை பொறுத்தவரை தென்னிலங்கை மீனவர்களையோ இந்திய மீனவர்களையோ கண்டுகொள்வதில்லையெனவும் அவர் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
Post a Comment