Search This Blog n

20 May 2022

சென்னைக்கு கொழும்பில் இருந்து சென்ற பயணிகள் விமானத்தில் ஏற்பட்ட பரபரப்பு

சென்னையில் தரையிறங்கிய இண்டிகோ விமானத்தின் விமானிகள் மீது லேசர் லைட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கொழும்பில் இருந்து சென்னை சென்ற பயணிகள் விமானம் மீதே லேசர் லைட் அடிக்கப்பட்டுள்ளது.
153 பயணிகளுடன் சென்ற இண்டிகோ விமானம்.20-05-2022. இன்று அதிகாலை சென்னையில் தரையிறங்கியது. இதன்போது விமானி இருக்கும் பகுதி நோக்கி லேசர் ஒளி பாய்ச்சப்பட்டுள்ளது.
சரியாக விமானியின் கண்களுக்கு அடிக்கும் விதமாக இந்த ஒளி பாய்ச்சப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த லேசர் ஒளி அதிக ஆற்றலுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இரண்டு விமானிகளையும் நோக்கி இந்த ஒளி அடிக்கப்பட்டு உள்ளது. எனினும் அவர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. எனினும் விமானிகள் எந்த பிரச்சனையும் இல்லாமல் கவனமாக விமானத்தை
 தரையிறக்கி உள்ளனர். விமானம் இதனால் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
இந்த நிலையில் உடனடியாக பொலிஸ் நிலையத்தில் 
முறைப்பாடு செய்யப்பட்டது. விமான நிலைய அதிகாரிகள் மூலம் கண்ட்ரோல் ரூம் அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து உடனே விசாரணை நடத்தப்பட்டது.
அதன்படி பழவந்தாங்கல் ஏரியாவில் இருந்து இந்த லேசர் ஒளி வந்து இருக்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டது. விமான நிலையத்தில்
 இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் இருந்து இந்த ஒளி வந்துள்ளது 
தெரிய வந்துள்ளது.
இதுபோன்ற சம்பவம் ஐந்து வருடங்களுக்கு முன்னரும் இடம்பெற்ற நிலையில், இருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் 
தெரிவித்துள்ளனர்.


இங்குஅழுத்தவும் நவற்கிரி.இணையச்செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment