26 June 2018
நூறு நாக பாம்புக் குட்டிகள்…வீட்டிற்குள் வாழ்ந்த அதிர்ச்சிதகவல்
வீட்டுக்குள் இருந்த 100 நாகப்பாம்புக் குட்டிகளைக் கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டத்தில் உள்ள சாம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிஜே புயான். இவரின், வீட்டில் மகள் விளையாடும் அறையில் இருந்து பாம்பு ஒன்று வெளியேறுவதைப் பார்த்திருக்கிறார்.
பாம்பு இருப்பதைக் கண்டு, அதிர்ச்சியில் அஞ்சிய குடும்பத்தினர் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். இதையடுத்து பாம்பைப் பிடித்துச் செல்லுமாறு அப்பகுதியில் உள்ள என்.ஜி.ஓ அமைப்பு
ஒன்றுக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.பிஜே புயான் வீட்டுக்கு விரைந்த மீட்புக் குழுவினருக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. பல மணி நேரம் தீவிர தேடுதல் வேட்டைக்குப்பிறகு, ஒரு அறையில் நாகப் பாம்பு குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
ஒன்று, இரண்டு குட்டிகள் அல்ல. சுமார் 100ற்க்கும் மேற்பட்ட நாகப் பாம்பு குட்டிகள் குவியல் குவியலாக ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, ஊர்வதைக் கண்டு அதிர்ச்சியில்
உறைந்தனர். இதையடுத்து, வனத்துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள், நாகப் பாம்புக் குட்டிகளைப் பத்திரமாக மீட்டு எடுத்துச் சென்றனர்.மேலும், நாகப்பாம்பு குட்டிகளின் தாய் நாகப் பாம்பை, பிடிக்க அப்பகுதி முழுவதும் தேடி வருகின்றனர் கிராம வாசிகள்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
25 June 2018
மணமகன் நகை பணத்திற்கு பதில் வரதட்சனையாக மணமகன் கேட்ட பொருள்!!
ஒடிசா மாநிலம் கேந்திரபாரா பகுதியில் உள்ள பாலா பகதர்பூர் கிராமத்தை சேர்ந்த சரோஜ்காந்த் பிஸ்வால் (33) என்னும் ஆசிரியருக்கும், அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியை ராஷ்மிரேகாவுக்கும்
திருமணம் நிச்சயமானது.திருமணத்திற்கு முன்பாக சரோஜ்காந்த் மணப்பெண்ணின் தந்தையிடம் எனக்கு வரதட்சணையாக பணம், நகை வேண்டாம். அதற்குப் பதிலாக மரக்கன்றுகளை பரிசாகக் கொடுங்கள்
எனகேட்டிருக்கிறார்.
இதை மணமகளின் தந்தையும் ஒப்புக்கொள்ள,கடந்த 22-ந்தேதி சரோஜ் காந்த் பிஸ்வால்-ராஷ்மிரேகா திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மணமகளின் தந்தை மரக்கன்றுகளை வரதட்சணையாக அளிக்க, அதை மணமக்கள் தங்களை வாழ்த்த வந்தவர்களுக்கு
அன்பளிப்பாகக் கொடுத்து மகிழ்ந்துள்ளனர்.நகை, பணத்திற்குப் பதிலாக மரக்கன்றுகளை இளைஞர் வரதட்சணையாகப் பெற்ற சம்பவம், அப்பகுதி மக்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
09 June 2018
மயக்கும் பஞ்சாப் பெண்ணின் கலக்கல் நடனம் காணொளி
தற்போதைய காலகட்டத்தில் இணையத்தளம் ஒரு மாபெரும் ஊடக சக்தியாக விளங்குகிறது. மக்களை சென்றடையும் பெரும் கருவியாகவே இணையத்தளம் இருந்து வருகின்றது.முன்பு
போல் மக்களுக்கு ஒரு கருத்தை நாம் காதில் உரக்க சொல்லவேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரச்சனைகள் பற்றிய ஒரு கருத்தை இனையத்தில் பதிவிட்டால் பொதும். கருத்துக்கள் வந்து குவியும்.
இதற்க்கு மட்டும் இல்லை நடனம், இசை, பாட்டு ,போன்ற பல கலைத்திறன்களை வெளிகொண்டு வரவும் சமூக வலைத்தளம் ஒரு உந்துகோலாக விளங்குகிறது.
இந்நிலையில், பிரபலமான பஞ்சாபி எண் ‘டரு பாட்னாம்’ என்ற பெண்ணின் நடன வீடியோ பயங்கர வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை You tube இல் பதிவேற்றப்பட்ட சில மணி நேரத்திலேயே 2,528,374 பேர் பார்த்துள்ளனர். உங்களுக்காக இந்தக் காணொளி இதோ…
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>06 June 2018
இளைஞர்களின் நடவடிக்கையினால் யாழில் ரஜினிக்கு ஏற்பட்ட அசிங்கம்
தென்னிந்திய பிரபல நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் காலா திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையிடப்படவுள்ளது. இந்நிலையில் காலா படத்திற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.கர்நா
டாகாவில் இப்படத்தை திரையிட மாட்டோம் என அங்கு
பல எதிர்ப்புகள் அதிகரித்து
வருகின்றன. படகுழுவினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் பயனில்லாமல் போய்விட்டன.இந்தச் சமயத்தில் யாழ்பாணத்தில் இளைஞர்கள் காலா படத்தின் போஸ்டர் முன்
செருப்பை காண்பித்து படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், வீரமண்ணில் கோழையின் படத்தை திரையிட விடமாட்டோம் எனகு; கூறி வருகின்றனர். இந்த செருப்படி காலாவிற்கு மட்டமல்ல அதை ஆதரிக்கும் அனைவருக்கும் தான் என எச்சரித்ததுடன் இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
ஹொட்டல் முதலாளியை போட்டுத் தள்ளிய வாடிக்கையாளர்
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் ஒரு பிளேட் பிரியாணியை 190 ரூபாவிற்கு விற்ற ஹொட்டல்காரரை வாடிக்கையாளர் ஒருவரே சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தின் வடக்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்துள்ளது. இப்போதுதான் இதுகுறித்த தகவல் வெளியாகியுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்டவர்
பெயர் சஞ்சய் மண்டல் என்று தெரியவந்துள்ளது.மேற்கு வங்கத்தில் சம்பவம் ஒரு பிளேட் பிரியாணியை ரூ.190 என்ற விலையில் விற்பனை செய்து வந்துள்ளார் சஞ்சய் மண்டல். 4 நண்பர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுவிட்டு பிரியாணிக்கு பணம் கொடுக்க சென்றுள்ளனர்.
அப்போது இந்த விலை ரொம்பவே அதிகம் என்று சஞ்சய் மண்டலுடன் அந்த நண்பர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.துப்பாக்கி சூடு சாப்பிட்டுவிட்டு பணம் தரப்போகும் நேரத்தில் விலையை பற்றி பேசுவதா என்று சஞ்சய் மண்டல் பதிலுக்கு வாக்குவாதம் செய்துள்ளார். இதனால், இரு தரப்புக்கும் நடுவே வாக்குவாதம் ஏற்பட்டு கை கலப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. அப்போது, நண்பர் கூட்டத்தில் ஒருவர் தன்னிடமிருந்த
கைத் துப்பாக்கியால் திடீரென சஞ்சய் மண்டலை நோக்கி சுட்டுள்ளார். இதையடுத்து அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. நால்வரும் தப்பியோடியுள்ளனர்.சுட்டது யார்? அங்கிருந்தவர்கள் உடனடியாக சஞ்சய் மண்டலை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்.
ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் சஞ்சய் மண்டல்
பரிதாபமாக பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். சஞ்சய் மண்டல் சகோதரர் போலீசாரிடம் இது குறித்து கூறும் போது; முகமது பைரோஸ் என்பவர்தான் துப்பாக்கியால்
சுட்டது என்று அடையாளம் காட்டியுள்ளார்.இதையடுத்து முகமது பைரோஸை பொலீசார் கைது செய்துள்ளனர்.
அவருடன் அன்று பிரியாணி சாப்பிட்டு தகராறு செய்த பிற நண்பர்கள் தலைமறைவாகியுள்ளனர். அவர்களை பொலீசார் தேடி வருகிறார்கள். பிரியாணி தகராறில் ஓட்டல் உரிமையாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
Subscribe to:
Posts (Atom)