28 October 2015
இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளனர்!
இலங்கை சிறைகளில் உள்ள 120 இந்திய மீனவர்களை விடுதலை செய்யவுள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சின் பேச்சாளர் மஹிசினி கொலன்னே தெரிவித்துள்ளார்.
மீனவர்கள் கைதுசெய்யப்பட்டால் உடனடியாக அவர்களை விடுதலை செய்யவேண்டும் என்று ஏற்கனவே இரண்டு நாடுகளுக்கு இடையிலும் எட்டப்பட்ட இணக்கத்தின் கீழ் இவர்கள் விடுதலை செய்யப்படவுள்ளதாக மஹிசினி தெரிவித்துள்ளார்.
27 October 2015
11 இந்திய மீனவர்கள் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது
இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்களை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த இந்திய மீனவர்கள் 11 பேரும் 3 படகுகளில்
இலங்கை கடற்பரப்பினுள் அத்து மீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நிலையில் கடல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த 11 இந்திய மீனவர்களையும் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கைது செய்து தலைமன்னார் கடற்படையினரிடம்
ஒப்படைத்தனர்.
தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் இன்று மதியம் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர்.
தற்போது குறித்த மீனவர்கள் மன்னார் கடற்தொழில் திணைக்களத்திற்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்களிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளப்பட்டதன் பின் மன்னார் நீதவான் முன்னிலையில் குறித்த மீனவர்கள் ஆஜர் படுத்தவுள்ளதாக கடற்தொழில் திணைக்க உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.மெராண்டா தெரிவித்தார்.
25 October 2015
டேஜாஸ் விமானத்தை இலங்கைக்கு வழங்க இந்தியா பரிந்துரை
இலங்கைக்கு வழங்குவதற்காக தமது உள்நாட்டு போர் விமானம் ஒன்றை இந்தியா பரிந்துரை செய்துள்ளது.
“டேஜாஸ்” என்ற சுப்பர்சொனிக் சண்டை விமானமே இலங்கையின் விமானப்படைக்கு வழங்க பரிந்துரை
செய்யப்பட்டுள்ளது.
விமானக் கொள்வனவு உட்பட்ட விடயங்களுக்காக இலங்கையின் விமானப்படை தளபதி எயார் மார்சல் ககன் புலத்சிங்கள எதிர்வரும் மாதத்தில் பாகிஸ்தான் செல்லவுள்ளார்.
இந்தநிலையிலேயே இந்தியாவும் இலங்கைக்கு போர் விமானம் ஒன்றை வழங்க முன்வந்துள்ளது.
இலங்கையை பொறுத்தவரை பாகிஸ்தானின் ஜேஎப்-17 விமானத்தை பெரிதும் விரும்புவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் இந்தியாவின் டேஜாஸ் விமானமும் பாகிஸ்தானின் ஜேஎப் -17 தரத்தை கொண்டிருப்பதாக இந்திய விமானப்படை
கூறுகிறது.
இந்தநிலையில் இந்தியாவின் முதல் உள்ளுர் தயாரிப்பான டேஜாஸ் விமானம் இன்னும் இந்திய விமானப்படையில் சேர்க்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
22 October 2015
அரசு பேருந்து ஓட்டுநர்கள் போலி ஆவணங்கள் உடன் பணியில்?
(டி.என்.என்) சிவகங்கை மாவட்டத்தில், போலி ஆவணங்கள் மூலம் பணியில் சேர்ந்த, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து ஓட்டுநர்கள் 15 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி கிளை, சிவகங்கை, தேவகோட்டை, திருப்பத்தூர், தேவகோட்டை பழுதுபார்க்கும் மையம், ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம் டவுன், புறநகர் கிளைகள், கமுதி, முதுகுளத்தூர், பரமக்குடி, ராமேசுவரம் மற்றும் மதுரை
ஆகிய 12 கிளைகள் உள்ளன.
இந்தக்கிளைகளில் 1991 முதல் 2002 வரை வேலைக்கு சேர்ந்த டிரைவர்களில் 15 பேர் புதிதாக நியமனம் ஆகியுள்ளனர். இவர்களின் சான்றிதழை சரிபார்த்த போது அவர்கள் 8–ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றதாக போலிசான்றிதழ் கொடுத்திருப்பது தெரியவந்தது.
சில தினங்களுக்கு முன்பு போலி கல்வி சான்றிதழ் கொடுத்து பணிக்கு சேர்ந்த 15 டிரைவர்களை டிஸ்மிஸ் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர். இதில் டிஸ்மிஸ் செய்வதற்கு முன்பே 2 பேர்
இறந்து விட்டனர்.
இதுகுறித்து அரசு போக்குவரத்துக்கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, டிரைவர்களின் கல்விச்சான்றிதழ்களை ஆய்வு செய்ததில் 8–ம் வகுப்பு தேர்ச்சி பெறாமலேயே தேர்ச்சி பெற்றதாக போலிச் சான்றிதழ் கொடுத்திருப்பது தெரியவந்தது. தற்போது 13 பேரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டுள்ளோம் இதில் 3 பேர் நீதிமன்றத்தை அணுகி இருப்பதாக
தெரியவருகிறது என்றார்.
ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலி : பஸ் மற்றும் லாரி டிரைவர்கள் கைது
சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி வழியாக நாகர்கோவிலுக்கு சென்ற அரசு விரைவு பஸ் திருச்சி அருகே ரோட்ரோரம் நின்றிருந்த டிரெய்லர் லாரி மீது மோதிய விபத்தில் 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெல் நிறுவனத்திற்கு இரும்பு பிளேட்டுகளை ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னால் வந்த பஸ் டிரைவர் கவனிக்காமல் அதன் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. லாரியில் இருந்த இரும்பு பிளேட்டுகள் பஸ்சின் இடது புற பகுதி முழுவதும் கிழித்ததில் சீட்டில் இருந்த 9 பயணிகள் உடல் சிதைந்து இறந்தனர்.
இந்த விபத்து குறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் (வயது 40), அரசு பஸ் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் சாராங்காடு கோணிவிளை பகுதியை சேர்ந்த ஜெபசிங் (41) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது அஜாக்கிரதை உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேரும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
20 October 2015
ஒற்றுமையாக செயல்படுவோம் ‘‘வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்’
‘நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவோம் என்றும் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்’’, என்றும் நடிகர் விஷால் கூறினார்.
கடுமையாக உழைத்தோம்
நடிகர் சங்க பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட விஷால் நேற்று மாலை தியாகராயநகரில் உள்ள நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விவரம்
வருமாறு:–
கேள்வி:– நடிகர் சங்க தேர்தல் வெற்றியை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
பதில்:– மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற கடுமையாக உழைத்தோம். எங்கள் அணி மீது நம்பிக்கை வைத்து,
வெற்றி பெற
செய்த அனைத்து நடிகர்–நடிகைகளுக்கும், நாடக நடிகர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இப்போது நடிகர் சங்க கட்டிட வளாகத்தில் நான் நின்று கொண்டிருப்பது, எனக்கு சந்தோஷத்தை கொடுக்கிறது. இந்த மண் தான்
எங்கள் விலாசம்.
கேள்வி:– நடிகர் சங்க கட்டிடம் கட்ட என்ன நடவடிக்கை எடுக்க போகிறீர்கள்?
பதில்:– நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவதற்காகத்தான் போராடினோம். அதற்காகவே இந்த பொறுப்புக்கும் வந்தோம். எங்கள் பணிகளை தொடங்கிவிட்டோம். மறுபடியும், இங்கு கட்டிடம் வரும்.
வணிக வளாகங்கள் தேவையில்லை
கேள்வி:– நடிகர் சங்க கட்டிட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு உள்ளதே?
பதில்:– நடிகர் சங்க இடத்தை குத்தகைக்கு விட்டதில், எங்களுக்கு உடன்பாடு இல்லை. அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்யவேண்டும் என்று வற்புறுத்தினோம். அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இங்கு வணிக வளாகங்கள் தேவையில்லை.
கேள்வி:– பொதுச்செயலாளர் பொறுப்பேற்ற உங்களின் முதல் நடவடிக்கை என்ன?
பதில்:– நலிந்த நாடக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதே எங்களின் முதல் நோக்கம். அவர்களை பொருளாதார ரீதியாக உயர்வடைய செய்வோம். அதற்கான ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படும். நடிகர்–நடிகைகள் பற்றிய முழுமையான புள்ளி விவரங்கள் தெரியாமல்
உள்ளது. எனவே
ஒவ்வொரு நடிகர்–நடிகைகள் பற்றிய விவரங்கள் சேகரித்து, கம்ப்யூட்டரில் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். உறுப்பினர்களின் உருவங்கள், வயது, வருமானம், பெற்றோர், குழந்தைகள் உள்பட அனைத்து தகவல்களும் அதில் இருக்கும். தேவையானவர்களுக்கு இதன்மூலம் உதவிகள் செய்து தரப்படும்.
ஒற்றுமையாக செயல்படுவோம்
கேள்வி:– நடிகர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்படுவீர்களா?
பதில்:– எல்லா நடிகர்களும் ஒற்றுமையாக செயல்படுவோம். தேர்தலின்போது பல்வேறு வாக்குறுதிகள் அளித்தோம். அந்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்ற புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 29 நிர்வாகிகளும் பாடுபடுவோம்.
இவ்வாறு விஷால் பதிலளித்தார்.
பெயர் மாற்றம்?
நடிகர் சங்க தலைவராக தேர்வான நடிகர் நாசர் கூறுகையில், ‘‘எங்களுக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி. நாடக நடிகர்கள் நலனுக்காக பாடுபடுவோம். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெயரை தமிழ்நாடு நடிகர் சங்கம் என்று மாற்றவேண்டும் என வற்புறுத்தப்படுகிறது. இப்போதுதான், பொறுப்புக்கு வந்துள்ளோம். பெயர் மாற்றத்திற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆலோசித்து முடிவு எடுப்போம்’
’, என்றார்.
பொருளாளராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் கார்த்தி பேசுகையில், ‘‘தேர்தலில் வெற்றிபெற்ற எங்களுக்கு எல்லாருடைய ஆசீர்வாதமும் இருக்கிறது. அனைத்து உறுப்பினர் நலனுக்காக பாடுபடுவோம்’’
, என்றார்.
19 October 2015
நடிகர் சங்க தேர்தலில் பரபரப்பான முடிவு; பொதுச்செயலாளராக விஷால் ; நாசர் தலைவர் ?
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
தேர்தல்
2015-2018-ம் ஆண்டுக்கான தேர்தல் நேற்று நடந்தது. இதில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், நாசர் தலைமையில் இன்னொரு அணியும் போட்டியிட்டன.
தலைவர் பதவிக்கு சரத்குமார், நாசர் (பாண்டவர் அணி) ஆகிய இருவரும் போட்டியிட்டார்கள். சரத்குமார் அணியில் பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவியும், நாசர் அணியில் விஷாலும் போட்டியிட்டனர். 2 துணைத்தலைவர்கள் பதவிக்கு சரத்குமார் அணி சார்பில் விஜயகுமார், சிம்பு ஆகியோரும், நாசர் அணி சார்பில் பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோரும் போட்டியிட்டார்கள்.
பொருளாளர் பதவிக்கு சரத்குமார் அணி சார்பில் எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், நாசர் அணி சார்பில் கார்த்தி ஆகிய இருவரும் போட்டியிட்டனர்.
மேலும் இரு அணிகளின் சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு தலா 24 பேர் போட்டியிட்டார்கள்.
3,139 ஓட்டுகள்
நடிகர் சங்கத்தில் ஓட்டுப்போட உரிமையுள்ள மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 3,139 பேர். இதில் வெளியூர்களில் உள்ள நாடக நடிகர்-நடிகைகளும் அடங்குவார்கள். அவர்களில் 783 பேர் தபால் மூலம் வாக்கு அளித்தனர்.
மீதமுள்ள நடிகர்-நடிகைகளுக்கான ஓட்டுப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. ஆரம்பம் முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது.
பிரபல நடிகர்-நடிகைகளும், வயதான துணை நடிகர்- நடிகைகளும் ஆர்வமுடன் வந்து வாக்களித்தார்கள். தேர்தல் நடைபெறும் பள்ளி வளாகம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. ரசிகர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து நடிகர்-நடிகைகளுக்கு பாதுகாப்பு அளித்தனர்
நேரடி ஒளிபரப்பு
ஆம்புலன்சு மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்திவைக்கப்பட்டு இருந்தன. தொலைக்காட்சி, பத்திரிகை நிருபர்கள் திரளாக குவிந்திருந்தனர். வாக்குப்பதிவு நடைபெற்ற மையத்துக்குள் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
வாக்குப்பதிவு நடைபெற்றதை வெளியே பெரிய திரையின் மூலம் பார்ப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு வாக்குப்பதிவு நடைபெறுவதை நேரடி ஒளிபரப்பு செய்தன.
பரபரப்பு
இதுவரை நடைபெற்ற எந்த தேர்தலிலும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தல் பெரும் பரபரப்பாக நடந்தது. வயதான சில நடிகர்-நடிகைகள் 3 சக்கர வண்டியில் வந்து ஓட்டுப்போட்டார்கள்.
பகல் 12.30 மணி அளவில் சரத்குமார் அணியினருக்கும், நாசர் அணியினருக்கும் இடையே தள்ளுமுள்ளு மற்றும் கைகலப்பு நடந்ததாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, அங்கு பரபரப்பான சூழ்நிலை உருவானது. போலீசார் தலையிட்டு, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினார்கள்.
பெரும்பாலான ஓட்டுகள் மாலை 3 மணிக்கு முன்பே பதிவாகிவிட்டன. 3 மணிக்கு மேல் ஒரு சில நடிகர்-நடிகைகள் மட்டும் வந்து ஓட்டுப்பதிவு செய்தார்கள்.
ஓட்டு எண்ணிக்கை
மாலை 5 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிவடைந்தது. பதிவான ஓட்டுகள் விவரம் வருமாறு:-
மொத்த ஓட்டுகள் - 3,139
நேரில் பதிவான ஓட்டுகள்- 1,824
தபால் ஓட்டுகள்- 821
மொத்தம் பதிவான ஓட்டுகள்- 2,607
ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் தேர்தல் அதிகாரி நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் ஓட்டுப்பெட்டிகளுக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. 6 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன.
தலைவர்-நாசர்; பொதுச்செயலாளர்-விஷால்
இந்த தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி பெற்றது.
அந்த அணியின் சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1,344 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சரத்குமார் 1,231 வாக்குகள் பெற்றார். 113 ஓட்டுகள் வித்தியாசத்தில் நாசர் வெற்றி பெற்று உள்ளார். சுயேச்சையாக போட்டியிட்ட சிவசாமிக்கு 4 வாக்குகள்
கிடைத்தன.
பாண்டவர் அணியைச் சேர்ந்த விஷால் பொதுச் செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அவருக்கு 1,445 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாரவி 1,138 வாக்குகள் பெற்றார். ராதாரவியை விட விஷால் 307 வாக்குகள் அதிகம் பெற்று உள்ளார்.
நடிகர் கார்த்தி வெற்றி
துணைத்தலைவர்களாக பாண்டவர் அணியைச் சேர்ந்த கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்து எடுக்கப்பட்டனர்.
பாண்டவர் அணியின் சார்பில் பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட
கார்த்தி
1,493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து சரத்குமார் அணியின் சார்பில் போட்டியிட்ட எஸ்.எஸ்.ஆர்.கண்ணன் 1,080 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். எஸ்.எஸ்.ஆர்.கண்ணனை விட கார்த்தி 413 வாக்குகள் அதிகம் பெற்று இருக்கிறார்.
செயற்குழு உறுப்பினர்களுக்கான போட்டியிலும் பாண்டவர் அணியைச் சேர்ந்தவர்களே
17 October 2015
என் கணவனுக்கு20க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பு?
திருமணமான இளைஞர் ஒருவர் 20க்கும் மேற்பட்ட இளம்பெண்களுடன் தொடர்பு வைத்துள்ளதை கண்டுபிடித்த மனைவி பொலிசில் புகார் அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் சிறுபூலுவபட்டியை சேர்ந்த சல்மா (19) என்பவருக்கும், கோபி குருமந்தூரை சேர்ந்த நிவாசுக்கும் (26) கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.
கடந்த 3 மாதங்களாக சல்மாவிடம், கூடுதல் வரதட்சணை கேட்டு நிவாசும், அவரது தாயார் குர்ஷித் உன்னிசாவும் கொடுமைப் படுத்தியுள்ளனர்.
மேலும், சல்மாவை ஆபாசப்படம் எடுக்க நிவாஸ் முயன்றுள்ளார். பின்னர் அவரது செல்போனை சல்மா ஆய்வு செய்தபோது, அதில் 20க்கும் மேற்பட்ட பெண்களுடன் உள்ள புகைப்படம் மற்றும் வீடியோவை
கண்டுபிடித்துள்ளார்.
இதன்மூலம் நிவாஸ், பெண்களை ஊட்டி போன்ற இடங்களுக்கு அழைத்துச்சென்று உல்லாசமாக இருந்ததும், வீட்டிற்கே பல பெண்களை அழைத்து வந்ததும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நிவாசின் தாயார் குர்ஷித் உன்னிசாவிடம், சல்மா இது பற்றி கேட்டபோது, என் மகன் அப்படித்தான் இருப்பான் என
பதிலளித்துள்ளார்.
எனவே சல்மா அனைத்து மகளிர் காவல் நிலைய பொலிசில் தன் கணவர் மீதும் மாமியார் மீதும் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரையடுத்து பொலிசார் நிவாசின் செல்போனை ஆய்வு செய்து அவரையும் அவர் தாயையும் கைது செய்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ஒருவரை மாடுகளை கடத்திச் சென்றதாகஅடித்தே கொன்ற கும்பல்!!
இமாச்சல பிரதேச மாநிலத்தில் மாடுகளை கடத்திச் சென்றதாக 5 பேரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியதில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிரமவுர் என்ற ஊரில் இருந்து லொறியில் மாடுகளை ஏற்றிச் சென்ற 5 பேரை வழிமறித்த கும்பல், அவர்களை கடுமையாக
தாக்கியுள்ளது.
இந்த கொடூரத் தாக்குதலில் காயமடைந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நோமன் (28) என்பவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த வழக்கில் 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட நோமனின் சொந்த ஊரான பெஹாத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பொலிஸார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நோமனை அடையாளம் தெரியாத கும்பல் அடித்துக் கொன்றதாக இமாச்சல பிரதேச பொலிஸார்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நோமன் கொல்லப்பட்டது தொடர்பாகவும் மாடுகள் லாரியில் முறைகேடாக கொண்டுசெல்லப்பட்டதா? என்பது பற்ரியும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
நாசா’ கவுரவிப்பு புதிய பாக்டீரியாவுக்கு அப்துல் கலாம் பெயர்;
வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பது பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ ஆராய்ந்து
வருகிறது.
இந்த குழுவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேசன் தலைமை தாங்குகிறார்.
இந்த குழு, சர்வதேச விண்வெளி மையத்தில் பாக்டீரியா ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த பாக்டீரியாவுக்கு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பெயரை சூட்டி ‘நாசா’
கவுரவித்துள்ளது.
இதை தனியார் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேசன் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “காமா கதிர்வீச்சை தாங்கக்கூடிய சக்தி
வாய்ந்த பாக்டீரியாவை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இது மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய பாக்டீரியா ஆகும். அப்துல் கலாமின்
அறிவியல் சிந்தனைகளை பார்த்து வியந்த நான் அவர் மீதுள்ள மரியாதை காரணமாக, இந்த பாக்டீரியாவுக்கு கலாம் பெயர் வைக்க
வேண்டும் என்று வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை நாசா ஏற்றுக்கொண்டு, கலாம் பெயர் வைக்க அனுமதி வழங்கியது”
என குறிப்பிட்டார்.
14 October 2015
என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்=
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு டிசம்பர் மாதம் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படும் என்று துணை வேந்தர் தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு முகாம்
அண்ணா பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் 12-ந்தேதி வரையிலும் பல்கலைக்கழக வளாகத்தில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் ‘அசென்டர்’, ‘காக்னிசன்ட்’, ‘ஐ.பி.எம்.’, ‘இன்போசிஸ்’ மற்றும் ‘டி.சி.எஸ்.’ ஆகிய 5 தகவல் தொழில்நுட்ப கம்பெனிகள் பங்கேற்றன. இந்த கம்பெனிகளில், மொத்தம் ரூ.3.5 லட்சம் சம்பள தொகுப்பில் 2,122 பணி இடங்கள் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
என்ஜினீயரிங் மாணவர்களுக்கு...
முகாமில், தகுதியின் அடிப்படையில் ஆயிரத்து 500 மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெறுகின்ற ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவர்களில் ஆயிரத்து 200 பேர் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். இதற்கான செயல்பாடுகள் நடைபெற்று வருகிறது.
அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட என்ஜினீயரிங்
கல்லூரிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், வருகிற டிசம்பர் மாதம் மாநில அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடத்த திட்டமிட்டிருப்பதாக அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் எம்.ராஜாராம் தெரிவித்துள்ளார்.
3-ம் கட்ட முகாம்
அண்ணா பல்கலைக்கழகத்தின், பல்கலைக்கழக தொழில் ஒத்துழைப்பு மையத்தின் இயக்குனர் பேராசிரியர் டி.தியாகராஜன் கூறும்போது, முதல் கட்டமாக நடத்தப்பட்ட வேலைவாய்ப்பு முகாமில் தகவல் தொழில்நுட்ப கம்பெனிகளில் 400 மாணவர்கள் ரூ.4.5 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான சம்பள தொகுப்பில் வேலைவாய்ப்பு
பெற்றனர்.
3-ம் கட்டமாக நடைபெற உள்ள வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு தரும் நோக்கில் அதிகமான கம்பெனிகள் பங்குபெறும். ஆகையால் கூடுதலாக 500 மாணவர்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
13 October 2015
ஒரு பவுன் ரூ.20,088-க்கு விற்பனை தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைந்தது
நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 526-க்கும், ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 208-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று மாலை நேர நிலவரப்படி, தங்கம் விலை சரிந்து காணப்பட்டது.
கிராமுக்கு ரூ.15-ம், பவுனுக்கு ரூ.120-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 511-க்கும், ஒரு பவுன் ரூ.20 ஆயிரத்து 88-க்கும் விற்பனை ஆனது.
தங்கம் விலை குறைவை போலவே, வெள்ளி விலையும் நேற்று குறைந்து காணப்பட்டது. கிராமுக்கு 50 காசும், கிலோவுக்கு ரூ.495-ம் குறைந்து, நேற்று ஒரு கிராம் வெள்ளி 39 ரூபாய் 50 காசுக்கும், ஒரு கிலோ ரூ.36 ஆயிரத்து 925-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
11 October 2015
சாலை விபத்தில் 4 நிமிடங்களுக்கும் ஒருவர் உயிரிழக்கிறார் அதிர்ச்சி தகவல்
இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு நபர் சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழந்து வருவதாக புள்ளிவிபரம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சாலை போக்குவரத்து அமைப்பாக கருதப்பட்டு வருவது இந்திய சாலைகளில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு நபர் சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழந்து வருவதாக புள்ளிவிபரம் வெளியாகி உள்ளது.
'இந்தியன்ஸ் ஃபார் ரோடு சேப்டி' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.
இந்த விபத்துக்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு ரூ.3.8 லட்சம் கோடி எனவும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் என்றும் அந்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியே சாலை விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே சென்றால் வரும் 2020-ல் 3 நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தில் இறக்கும் நிலை உருவாகிவிடும் என எச்சரித்துள்ளது.
இந்திய சாலைகளில் பாதுகாப்பில்லாத வாகனங்களை எதிர்கொள்ளும் போது ஏற்படும் சவால்கள் என்ற தலைப்பில் புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கில் இந்த புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டன.
சர்வதேச சாலைகளின் கூட்டமைப்பு (இந்திய பிராந்தியம்) தலைவர் கிரண்.கே.காபிலா கூறுகையில், பாதுகாப்பு விதிமுறைகளில் நாம் பல நேரங்களில் சர்வதேச விதிகளை சமரசம் செய்து கொள்கிறோம். இந்த மனப்போக்கு மாற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 15,176 பேர் சென்ற ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்திருப்பதாக கூறினார்.
தொழிலாளர்களின் 'மனம் திறந்த பேச்சை' எப்போது கேட்கப்போகிறார் மோடி
வெளிநாடுகளுக்கு சென்று அம்மக்களோடு பேசும் மோடி, நம் நாட்டு மக்களோடு 'மனம் திறந்த பேச்சு' நிகழ்ச்சி மூலம் பேசுகிறார். நமதுநாட்டின் விவசாயிகள், தொழிலாளர்களின் 'மனம் திறந்த பேச்சை' எப்போது கேட்கப்போகிறார் மோடி என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்தார்.
ஹாவேரி மாவட்டம், ரானேபென்னூர் வட்டம், கதகூர் கிராமத்தில் நடந்த காங்கிரஸ் மகளிர் மற்றும் விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியது:
பிரதமர் நரேந்திர மோடிக்கு நெருக்கமான 3 - 4 மிகப்பெரிய தொழிலதிபர் நண்பர்களுக்கு விவசாயிகளின் நிலம் தேவைப்படுகிறது என்பதுதான் உண்மை. இன்றைக்கு ரூ.1-2 லட்சம் விலைபோகும் விவசாய நிலங்கள், 8 - 10 ஆண்டுகள் கடந்த பிறகு கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பு பெறும் என்று அந்த தொழிலதிபர்களுக்கு தெரியும். அதனால் ஏதாவதொரு ஒரு காரணத்தை காட்டி விவசாயிகளின் நிலத்தை கைப்பற்ற துடியாய் துடிக்கிறார்கள்.
மக்களவையில் காங்கிரஸ் கட்சிக்கு 40 - 45 எம்பிக்கள் இருக்கலாம். ஆனால் காங்கிரஸ் கட்சியோடு விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கைகோர்த்திருக்கிறார்கள். விவசாயிகளின் சக்தியை மோடி உள்பட பாஜகவினர் அறியாதிருக்கிறார்கள்.
நிலங்களை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய முடியாவிட்டால், நிலங்களை பறிப்பதற்காக விவசாயிகளை பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள். விவசாயிகளை கூலித்தொழிலாளர்களை பலவீனப்படுத்துவதன் மூலம் நிலங்களை அபகரிக்க திட்டமிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திரமோடிக்கு விலை உயர்ந்துகொண்டே போகும் விவசாயிகளின் நிலம் தேவைப்படுகிறது. நிலத்தை
அபகரிக்கும் வரை குறைந்தப்பட்ச ஆதரவுவிலையை பிரதமர் மோடி உயர்த்தமாட்டார். அதேபோல, பயிர்க்கடனை தள்ளுபடி செய்யமாட்டார், விவசாயிகளுக்கு உதவிசெய்யமாட்டார். இந்திய விவசாயிகளை பலவீனப்படுத்தி கூலித்தொழிலாளர்களாக மாற்றிவிட்டு, விளைநிலங்களை ஒருசில தொழிலதிபர்களுக்கு தாரைவார்ப்பதே மோடியின் திட்டமாகும். இதுநடக்க காங்கிரஸ் அனுமதிக்காது.
நாடு முழுவதும் விவசாயிகள் பிரச்னை உள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஆனால் விவசாயிகளும் தொழிலாளர்களும் இது நமது அரசு அல்ல என்று கூறுகிறார்கள். இது வேறு யாருக்கோ (பெருமுதலாளிகள்) பணியாற்றும் அரசாக உள்ளது. விவசாயிகள், தொழிலாளர்கள் பலவீனமாக காங்கிரஸ் அனுமதிக்காது.
விவசாயிகள், தொழிலாளர்கள், ஏழைகள் அழுகிறார்கள். ஆனால் நமது பிரதமர் மோடி உலக நாடுகளை சுற்றிவருகிறார். மோடியின் விமானம் சில நேரம் அமெரிக்காவிலும், சில நேரம் சீனாவிலும், சில நேரம் இங்கிலாந்திலும் பற்பல நாடுகளிலும் நிற்கிறது. விமானத்தில் இருந்து கீழே இறங்கும் மோடி கூட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, திரும்புவார். மோடி தொழிலதிபர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார், கைகுலுக்கிறார்.
கடந்த ஓராண்டாக 'இந்தியாவில் உற்பத்தி செய்வோம்', 'தூய்மை இந்தியா' குறித்து மோடி பேருரையாற்றுகிறார். ஆனால் விவசாயியுடன் பிரதமர் மோடி புகைப்படம் எடுத்துக்கொண்டதை நான் பார்க்கவில்லை. அழுக்கு துணியோடும், கொப்பளம் காய்ச்சிய கரங்களோடும் உள்ள விவசாயிகளுடன் நேரம் செலவிட மோடிக்கு நேரமில்லை. இதை நான் சுட்டிக்காட்டியிருப்பதால், இனிமேல் விவசாயிகள், தொழிலாளர்களுடன் மோடி புகைப்படம் எடுத்துக்கொள்ளலாம். பிரதமர் மோடி ஏழைகளை சந்திப்பதாக பாஜகவினர் கூறுகிறார்கள். ஆனால் விவசாயிகளிடம் பணமில்லாததால், அவர்களை மோடி சந்திப்பதில்லை.
வெளிநாடுகளுக்கு சென்று அம்மக்களோடு பேசும் மோடி, நம் நாட்டு மக்களோடு 'மனம் திறந்த பேச்சு' நிகழ்ச்சி மூலம் பேசுகிறார். நமதுநாட்டின் விவசாயிகள், தொழிலாளர்களின் 'மனம் திறந்த பேச்சை' எப்போது கேட்கப்போகிறார் மோடி. மோடி கேட்கிறாரோ இல்லையோ, இந்திய விவசாயிகள், தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் துணைநிற்கும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரூ.70 ஆயிரம் கோடி மதிப்புள்ள பயிர்க்கடனை தள்ளுபடி செய்தோம். விவசாயிகள், தொழிலாளர், ஏழைகளை மதம், ஜாதி, மொழிரீதியாக பாகுபடுத்தும் அணுகும் வழக்கம் காங்கிரசுக்கு இல்லை.
பாஜகவினருக்கு கர்நாடக விவசாயிகள், இந்திய விவசாயிகள் அல்ல. கர்நாடக விவசாயி சங்கடத்தில் இருந்தால் அது குறித்து பாஜகவினர் கவலையடையமாட்டார்கள். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, விவசாயிகளின் நலன்கருதி நில கையக சட்டமசோதாவை அறிமுகம் செய்தது. ஆனால் விவசாயிகளுக்கு எதிரான நில கையக சட்டமசோதாவை 3 முறை அவசரசட்டமாக செயல்படுத்தியது பாஜக அரசு. இதற்கு காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்தால், அந்த சட்டமசோதாவை கைவிடுவதாக மோடி அறிவித்தார்.
தொழிற்சாலைகள், வேலைவாய்ப்பு நமக்கு தேவை. தொழிற்சாலைகளை அமைக்க போதுமான நிலம் அரசிடம் உள்ளது. ஆனால் விளைநிலங்களை அபகரிக்கவே சதி செய்கிறார்கள் என்றார் அவர்.
10 October 2015
கிராபிக்ஸ்’ மு.க.ஸ்டாலின் ஆட்டோ டிரைவரை தாக்கியதாக பேட்டி
தி.மு.க.பொருளாளர் மு.க.ஸ்டாலின் நமக்கு நாமே திட்ட பயணத்தை கோவையில் நேற்றுக்காலை தொடங்கினார். முன்னதாக ரேஸ்கோர்ஸ் நடைபயிற்சி பாதையில் காலை 6.30 மணியளவில் நடைபயிற்சி மேற்கொண்டார். சுமார் 2½ கிலோ மீட்டர் தூரமுள்ள நடைபயிற்சி பாதையில் நடந்து சென்ற அவருடன் நடைபயிற்சிக்கு வந்த பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் கைகுலுக்கினார்கள். அவர்கள் மு.க.ஸ்டாலினுடன் செல்போனில் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர்.
கிராபிக்ஸ்
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
எனது நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின்போது இளைஞர்களிடம் எழுச்சியை பார்க்க முடி கிறது. ஒவ்வொரு கட்சியினரும் மக்களை நேரில் சென்று சந்திப்பது அவர்களது விருப்பம். நான் ஆட்டோ டிரைவரை தாக்கியதாக திட்டமிட்டே பொய் பிரசாரம் பரப்பப்படுகிறது. ஏற்கனவே நான் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தபோது கூட்ட நெரிசல் காரணமாக கட்சியினரை விலகி இருக்க சொன்னதை நான் ஒரு வாலிபரை அடித்தது போன்று சித்தரித்து பொய் பிரசாரம் செய்தனர்.
தற்போதும் அதே போல ஆட்டோ டிரைவரை தாக்கியதாக கிராபிக்ஸ் செய்து பரப்புகிறார்கள். இதை பற்றி நான் கவலைப்படவில்லை. வைகோ மேடைகளில் என்னைப்பற்றி அவதூறாக பேசுவது பற்றி நான் கவலைப்படவும் இல்லை. அதை பொருட்படுத்துவதும் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்
08 October 2015
சிறைச்சாலையில் குழு மோதல்: இரு கைதிகள் பலி
உயர் பாதுகாப்பு மிக்க டெல்லி திஹார் சிறைச்சாலையில் ஏற்பட்ட குழு மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைக் கைதிகளான ஈஸ்வர், விஜய், சகாதாப் ஆகிய மூவர் அங்குள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பரிசோதனைகள் முடிந்த பின்னர், மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அப்போது, சிறைச்சாலைக்குள் மறைந்திருந்த அனில், வாசு, சந்தீப் ஆகிய மேலும் மூன்று கைதிகள், மருத்துவ பரிசோதனைக்கு சென்று திரும்பிய மூன்று கைதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில், 20 வயதுடைய ஈஸ்வர் மற்றும் அனில் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தாக்குதலின் போது கைவினை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சிறைச்சாலை பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி முகேஷ் பிரசாத் தெரிவித்தார்.
குறித்த தாக்குதலின் போது கைதிகள் மற்றும் தாக்குதலை தடுக்க முற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், காயமடைந்தவர்கள் தீன் தயாள் உபாத்யாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
வர்த்தகத்தினை மேம்படுத்த இந்திய யாழில் விசேட மாநாடு?
யாழ். மாவட்டத்தில் இந்திய வர்த்தகத்தினை மேம்படுத்துவதற்கான விஷேட மாநாடு இன்று வியாழக்கிழமை நடைபெற்றது. இலங்கைக்கான இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ். ரில்கோ சிற்றி ஹோட்டலில் இந்த மாநாடு நடைபெற்றது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் 44 பேர் யாழிற்கு வருகை தந்துள்ளனர். ‘யாழில் வியாபாரத்தினை மேம்படுத்தல்’ எனும் தொனிப்பொருளில், இந்த மாநாடு நடைபெற்று வருகின்றது.
இந்த மாநாட்டில், இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் அ.நடராஜா, பிரதி தூதுவர் எம். தர்சணாமூர்த்தி மற்றும் யாழ். மாவட்ட வர்த்தக தொழில்த்துறை மன்ற தலைவர் என். விக்னேஷ் மற்றும் வர்த்தகர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
வியாபாரத்தின் மூலம் 1000 கோடி ரூபா பொருளாதாரத்தினை எட்டி வர்த்தகத்தினை முன்னேற்றும் நோக்கத்துடன் இந்த மாநாடு நடைபெற்றமையும் குறிப்பிடத்தக்கது.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
07 October 2015
மெது மெதுவாகக்ஈழத்தமிழரை கொலை செய்யும் அரசு!!
கடந்த 01.10.2015 அன்று முதல் திருச்சி சித்ரவதை சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்து உறவுகள்... தமது விடுதலையை வேண்டி சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொணடு வருகின்றனர்.
இன்றுடன் ஐந்து நாட்களாகியும் எந்தவொரு அரசு
அதிகாரிகளும் வந்து பார்வையாடாமல்... தமது தேகத்தை பட்டினி போட்டு உருக்கி வரும் நம் உறவுகளின் உடல்நிலை சீரற்றுப் போவதால்... இன்று மருத்துவ அதிகாரிகள் சென்று உடல் பரிசோதனை செய்துள்ளார்கள்.
சோதனையின் பின் மருத்துவர்களின் அறிக்கையின்படி அனைவரது உடல்களும் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாக அறிய முடிகிறது.
ஈழத்தமிழர் விடயத்தில் அக்கறை உள்ளதாக கூறும்... தமிழக அரசு தனது ஆட்சியில் உள்ள ஈழத்தமிழரை மெது மெதுவாக முறையற்ற சட்டத்தின்படியும்.. முறையற்ற செயற்பாடுகள் மூலமும கொல்வது ஏன்??? இதுதான் தமிழர் விடயத்தில் காட்டும் கரிசனையா?
முதலாவது காணொளி...
இரண்டாவது காணொளி...
மூன்றாவது காணொளி.
..
நான்காவது காணொளி...
ஐந்தாவது காணொளி...
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
4
03 October 2015
இரண்டு பப்பாளி பழங்களை திருடியவரை தேடும் போலீஸ்
டெல்லியில் உள்ள பிஜு ஜனதா எம்.பி. மாளிகையில் இருந்து இரண்டு பப்பாளி பழங்களை திருடியவரை தீவிரமாக போலீஸ் தேடிவருகிறது.
ஒடிசாவை சேர்ந்த பிஜு ஜனதா எம்.பி. அர்ஜூன் சரண் சேத்தியின் டெல்லி மாளிகையிலிருந்து மர்ம நபர் ஒருவர் இரண்டு பப்பாளி பழங்களை திருடியுள்ளார். அவரை எம்.பி.யிம் மகனும், பாதுகாவலர்களும் பிடித்துள்ளனர். ஆனால் அந்த நபர் போலீஸ் வருவதற்குள் எப்படியோ தப்பிவிட்டார்.
தற்போது அந்த மர்ம நபர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, அவரை தீவிரமாக தேடிவருகிறார்கள் டெல்லி காவல்துறையினர்
Subscribe to:
Posts (Atom)