உயர் பாதுகாப்பு மிக்க டெல்லி திஹார் சிறைச்சாலையில் ஏற்பட்ட குழு மோதலில் இரு கைதிகள் உயிரிழந்ததுடன், பலர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறைக் கைதிகளான ஈஸ்வர், விஜய், சகாதாப் ஆகிய மூவர் அங்குள்ள வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பரிசோதனைகள் முடிந்த பின்னர், மீண்டும் சிறைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். அப்போது, சிறைச்சாலைக்குள் மறைந்திருந்த அனில், வாசு, சந்தீப் ஆகிய மேலும் மூன்று கைதிகள், மருத்துவ பரிசோதனைக்கு சென்று திரும்பிய மூன்று கைதிகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலில், 20 வயதுடைய ஈஸ்வர் மற்றும் அனில் ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.
குறித்த தாக்குதலின் போது கைவினை ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சிறைச்சாலை பாதுகாப்பு பொலிஸ் அதிகாரி முகேஷ் பிரசாத் தெரிவித்தார்.
குறித்த தாக்குதலின் போது கைதிகள் மற்றும் தாக்குதலை தடுக்க முற்பட்ட சிறைச்சாலை அதிகாரிகளும் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், காயமடைந்தவர்கள் தீன் தயாள் உபாத்யாய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இங்குஅழுத்தவும் மற்றைய செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment