வேற்று கிரகத்தில் உயிரினங்கள் இருக்கின்றனவா என்பது பற்றி அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘நாசா’ ஆராய்ந்து
வருகிறது.
இந்த குழுவுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேசன் தலைமை தாங்குகிறார்.
இந்த குழு, சர்வதேச விண்வெளி மையத்தில் பாக்டீரியா ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இந்த பாக்டீரியாவுக்கு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் பெயரை சூட்டி ‘நாசா’
கவுரவித்துள்ளது.
இதை தனியார் டி.வி. சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விஞ்ஞானி கஸ்தூரி வெங்கடேசன் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “காமா கதிர்வீச்சை தாங்கக்கூடிய சக்தி
வாய்ந்த பாக்டீரியாவை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். இது மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய பாக்டீரியா ஆகும். அப்துல் கலாமின்
அறிவியல் சிந்தனைகளை பார்த்து வியந்த நான் அவர் மீதுள்ள மரியாதை காரணமாக, இந்த பாக்டீரியாவுக்கு கலாம் பெயர் வைக்க
வேண்டும் என்று வலியுறுத்தினேன். எனது கோரிக்கையை நாசா ஏற்றுக்கொண்டு, கலாம் பெயர் வைக்க அனுமதி வழங்கியது”
என குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
Post a Comment