இமாச்சல பிரதேச மாநிலத்தில் மாடுகளை கடத்திச் சென்றதாக 5 பேரை ஒரு கும்பல் கொடூரமாக தாக்கியதில், ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
சிரமவுர் என்ற ஊரில் இருந்து லொறியில் மாடுகளை ஏற்றிச் சென்ற 5 பேரை வழிமறித்த கும்பல், அவர்களை கடுமையாக
தாக்கியுள்ளது.
இந்த கொடூரத் தாக்குதலில் காயமடைந்த உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த நோமன் (28) என்பவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள்
தெரிவித்துள்ளனர்.
தற்போது இந்த வழக்கில் 4 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். கொல்லப்பட்ட நோமனின் சொந்த ஊரான பெஹாத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளதால் அங்கு பொலிஸார்
குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், நோமனை அடையாளம் தெரியாத கும்பல் அடித்துக் கொன்றதாக இமாச்சல பிரதேச பொலிஸார்வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நோமன் கொல்லப்பட்டது தொடர்பாகவும் மாடுகள் லாரியில் முறைகேடாக கொண்டுசெல்லப்பட்டதா? என்பது பற்ரியும் பொலிசார் விசாரித்து வருகின்றனர்.
0 கருத்துகள்:
Post a Comment