சென்னையில் இருந்து நேற்று முன்தினம் திருச்சி வழியாக நாகர்கோவிலுக்கு சென்ற அரசு விரைவு பஸ் திருச்சி அருகே ரோட்ரோரம் நின்றிருந்த டிரெய்லர் லாரி மீது மோதிய விபத்தில் 9 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். 17 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெல் நிறுவனத்திற்கு இரும்பு பிளேட்டுகளை ஏற்றிச்சென்ற லாரி சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தது. பின்னால் வந்த பஸ் டிரைவர் கவனிக்காமல் அதன் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. லாரியில் இருந்த இரும்பு பிளேட்டுகள் பஸ்சின் இடது புற பகுதி முழுவதும் கிழித்ததில் சீட்டில் இருந்த 9 பயணிகள் உடல் சிதைந்து இறந்தனர்.
இந்த விபத்து குறித்து திருச்சி சரக டி.ஐ.ஜி. ராமசுப்பிரமணி, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்வரி மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் மதுரை நரிமேடு பகுதியை சேர்ந்த ரவிசந்திரன் (வயது 40), அரசு பஸ் டிரைவர் கன்னியாகுமரி மாவட்டம் சாராங்காடு கோணிவிளை பகுதியை சேர்ந்த ஜெபசிங் (41) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
அவர்கள் மீது அஜாக்கிரதை உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கைதான 2 பேரும் திருச்சி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
0 கருத்துகள்:
Post a Comment