இந்தியாவில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு நபர் சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழந்து வருவதாக புள்ளிவிபரம் வெளியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய சாலை போக்குவரத்து அமைப்பாக கருதப்பட்டு வருவது இந்திய சாலைகளில் ஒவ்வொரு 4 நிமிடங்களுக்கும் ஒரு நபர் சாலைகளில் ஏற்படும் விபத்துகளால் உயிரிழந்து வருவதாக புள்ளிவிபரம் வெளியாகி உள்ளது.
'இந்தியன்ஸ் ஃபார் ரோடு சேப்டி' என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது.
இந்த விபத்துக்களால் ஏற்படும் பொருளாதார இழப்பு ரூ.3.8 லட்சம் கோடி எனவும், இது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவீதம் என்றும் அந்த புள்ளிவிபரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியே சாலை விபத்துக்கள் அதிகரித்துக் கொண்டே சென்றால் வரும் 2020-ல் 3 நிமிடங்களுக்கு ஒருவர் சாலை விபத்தில் இறக்கும் நிலை உருவாகிவிடும் என எச்சரித்துள்ளது.
இந்திய சாலைகளில் பாதுகாப்பில்லாத வாகனங்களை எதிர்கொள்ளும் போது ஏற்படும் சவால்கள் என்ற தலைப்பில் புதுடெல்லியில் நடந்த கருத்தரங்கில் இந்த புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டன.
சர்வதேச சாலைகளின் கூட்டமைப்பு (இந்திய பிராந்தியம்) தலைவர் கிரண்.கே.காபிலா கூறுகையில், பாதுகாப்பு விதிமுறைகளில் நாம் பல நேரங்களில் சர்வதேச விதிகளை சமரசம் செய்து கொள்கிறோம். இந்த மனப்போக்கு மாற வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் சாலை விபத்துகளில் உயிரிழந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் மட்டும் 15,176 பேர் சென்ற ஆண்டு சாலை விபத்துகளில் உயிரிழந்திருப்பதாக கூறினார்.
0 கருத்துகள்:
Post a Comment