18 April 2018
யாழில் கேரளா கஞ்சாவுடன் வசமாக மாட்டிய மூவர்;
யாழ்ப்பாணம் சங்குபிட்டியில் வைத்து 35 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் 11 மணியளவில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண மூத்த பொலிஸ் அதிகாரி ரொஷான் பெர்ணாண்டோ தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை
முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கைதுசெய்யப்பட்டவர்களிடம் இருந்து பட்டா ரக வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன்போது கைது செய்யப்பட்ட மூவரும் புத்தளத்தை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
தாஜ்மகால் உரிமை எவருக்கும் இல்லை. மத்திய அரசு அதிரடி
தாஜ்மகாலை நிர்வகிக்கும் உரிமையை எந்த அமைப்புக்கும் கொடுக்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்து உள்ளது.
ஏற்கனவே கடந்த 11 ஆம் திகதி நடைபெற்ற
விசாரணையின்போது தாஜ்மகாலின் உரிமை தொடர்புடைய ஆவனங்களை ஒப்படைக்க வக்பு வாரியத்துக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், இன்றைய விசாரணையின்போது மத்திய அரசு, தாஜ்மகால் உரிமையை எந்தவொரு அமைப்புக்கும் கொடுக்க முடியாது
என கூறி உள்ளது.
2005 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச சன்னி வக்பு வாரியம் தாஜ்மகாலைத் தங்களுடைய சொத்து எனப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்குத் தடை விதிக்கக் கோரி
2010ஆம் ஆண்டு இந்தியத் தொல்லியல் துறை உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தது. இந்த வழக்கில் வக்பு வாரியத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தாஜ்மகாலின் உரிமையை ஷாஜகான் வக்பு வாரியத்துக்கு எழுதிக் கொடுத்ததாகத் தெரிவித்தார்.
இதையடுத்து ஷாஜகான் எழுதிக்கொடுத்த உரிமைப் பட்டயத்தை நீதிமன்றத்துக்குக் காட்ட வேண்டும் என வக்பு வாரியத்தை நீதிபதிகள் கேட்டுக்கொண்டனர்.
இந்நிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு , உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தாஜ்மகாலை பராமரிக்கவும், வக்பு வாரியத்திடம் ஒப்படைக்க முடியாது என்றும் விசாரணையின்போது மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.
அதனை தொடர்ந்து அந்த வழக்கின் விசாரணையை ஜுலை 27 ஆம் திகதிக்கு மீண்டும் உச்சநீதிமன்றம் எடுத்துக்கொள்வதாக
அறிவித்தது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
16 April 2018
குழந்தையை இரண்டு லட்சம் ரூபாவிற்கு விற்க முயன்ற தாய் கைது!!
கோவாவில் 11 மாத ஆண் குழந்தையை, இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.கோவாவில் போண்டா நகரில் வசிக்கும் ஷைலா பாடீல், என்ற பெண் கணவனுக்கு தெரியாமல் பணத் தேவைக்காக
, தனது குழந்தையை இரண்டு லட்சம் ரூபாய்க்கு விற்க முயன்றுள்ளார்.அதன்படி கடந்த மார்ச் 23ம் திகதி திருமணமாகி குழந்தையில்லாத அமர் மோர்ஜேயிடம் இரண்டு லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்ட ஷைலா, குழந்தையை அவரிட
ம் ஒப்படைத்துள்ளார்.
இந்நிலையில், வெளியூரில் இருந்து திரும்பி வந்த ஷைலாவின் கணவர், குழந்தை விற்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்து போலீசில் புகார் அளித்துள்ளார்.விசாரணை நடத்திய போலீசார், ஷைலா உட்பட குழந்தையை விற்பதற்கு உதவிய நான்கு பேரையும் கைது செய்துள்ளதாக கூறப்படுகின்றது.
இங்கு அழுத்தவும் நிலாவரை கொம் செய்தி >>>
04 April 2018
சாமிநாதபுரத்தில் போதை தலைக்கேறிய நிலையில் சீருடையில் பெண் பொலிஸ்
தமிழகத்தின் பழனி அருகே உள்ள சாமிநாதபுரம் காவல்நிலையத்தில் பணியாற்றி வரும் பெண் காவலர் ஒருவர், சீருடையில் மது அருந்தும் காணொளி சமூக வலைத்தளங்களில்
வைரலாகப் பரவி வருகின்றது.அந்தப் பெண் காவலர் மது அருந்துவதும், உடன் ஒரு ஆண் அவரை மது அருந்த வலியுறுத்துவதும், பெண் காவலர் முழுப் போத்தல் மதுவையும் அருந்திவிட்டதாக அந்த ஆண் கூறுவதும் காணொளியில்
பதிவாகியுள்ளது.
இந்நிலையில், சீருடையில் அந்த பெண் காவலர் மது அருந்தியதால், அவர் மீது கட்டாயமாக நடவடிக்கை எடுக்கப்படும், என திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Posts (Atom)