This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

31 October 2012

சகோதரர்களாக கருதும் காலம் மாறிவிட்டாது யாழ் முதல்வர்

       
Wednesday 31 October 2012.By.Rajah.தமிழ் மக்கள் இராணுவத்தினரை எதிரிகளாக பார்த்த காலம் மாறி சகோதரர்களாக கருதும் காலம் மாறிவிட்டாது என்று யாழ். மாநகரசபையின் மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா கூறியுள்ளார்.
இராணுவத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு பரிசில் வழங்கும் நிகழ்விலேயே இவ்வாறு அவர் வசைபாடினார்.
தமிழ் மக்கள் ஏதிரிகளாகப் பார்த்த சிறிலங்கா இரானுவத்தினரை தற்போது காலம் மாறியுள்ளதால் சகோதரர்களாகவே தான் பார்ப்பதாகவும் அவ்வாறே தமிழ்மக்களும் கருத வேண்டும் என்றார்.
நாம் இலங்கைத்தீவில் தமிழர்களாகவும் இலங்கையர்களாகவும் வாழவேண்டும். கடந்த காலத்தில் புலிகளின் கருத்துக்களை மக்கள் செவி சாய்த்தபடியால் சிங்கள மக்களை நாம் எதிரிகளாக பார்க்கவேண்டிய கட்டாயம் எற்பட்டது. இதனால் தமிழ் மக்களின் எதரிகளாக இராணுவத்தினர் சித்தரிக்கப்பட்டிருந்தனர்.
தமிழ் மக்களும் சகோதரர்களாக ஏற்றுக்கொண்டு இணைந்து வாபபழகிக் கொள்ள வேண்டும். அதே நேரம் தமிழர்கள், சிங்களவர்கள் என்றதற்கப்பால் அனைவரும் இலங்கையராகவே வாழவும் வேண்டும் என்றார். அத்துடன் இலங்கையில் எந்த ஒரு நாட்டிலும் இல்லாத இலவசக்கல்வி முறை இருக்கின்றது இதனால் மாணவர்கள் இங்கு கல்வி கற்று எமது நாட்டுக்குச் சேவை செய்யவேண்டும் என்றும் கூறினார்.
யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் அமைந்துள்ள பொது மக்கள் சிவில் தொடர்பு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு, யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, வடமாகாண கல்வி அமைச்சின் பிரதிச் செயலாளர் விக்னேஸ்வரன், யாழ். அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், யாழ். மாநகர சபை மேயர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் கொண்டு 26 மாணவர்களுக்கு பரிசில்கள் மற்றும் வைப்பு புத்தகங்கள் என்பன வழங்கினர்

இந்தோனேஷிய பெண்கள் விற்பனைக்கு” இணையத்தள விளம்பரத்தால் சர்ச்சை

 
இந்தோனேஷிய பெண்கள் விற்பனைக்கு உள்ளனர் என்று மலேசிய இணையத்தளத்தில் வெளியான விளம்பரத்தால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியா, இலங்கை, இந்தோனேஷியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த பெண்கள் மலேசியாவில் வீட்டு வேலை செய்கின்றனர்.
இவர்கள் தங்கள் முதலாளிகளால் பெரும் கொடுமைகளுக்கு ஆளாவதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த சிலர் இணையத்தளத்தில், வீட்டு வேலை செய்யும் இந்தோனேஷிய பெண்கள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளனர். 60 ஆயிரம் ரூபாய் கட்டினால் போதும், நீங்கள் சமைக்க வேண்டியதில்லை, வேலை ஏதும் செய்யாமல் ஓய்வெடுக்கலாம் என்ற வாசகம் அடங்கிய விளம்பரத்தை வெளியிட்டுள்ளனர்.
இதற்கு இந்தோனேஷிய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், மலேசியாவில் உள்ள இந்தோனேசிய தூதர், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியத்தை சந்தித்து சர்ச்சைக்குரிய வகையில் விளம்பரம் வெளியிட்டுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படி வற்புறுத்தி கேட்டுக் கொண்டுள்ளார்.
By.Rajah

26 October 2012

குமரன்பத்மநாதன்ஊடாகதொடர்பு?'

         
Friday 26 October 2012By.Rajah.தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்படும் புலம்பெயர் தமிழர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. புலம்பெயர் தமிழர்களின் இதயங்களை வென்றெடுக்கும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஊடக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல  தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தவும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும் புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகள் வழிகோலும் என அவர் குறிப்பிட்டுள்ளார். புலம்பெயர் தமிழர்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநான் முக்கிய பங்காற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமயில் விரைவில் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்

மியான்மரில் மீண்டும் கலவரம் வெடித்தது: ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது

வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012,By.Rajah.மியான்மரில் ரகின் மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே மீண்டும் கலவரம் ஏற்பட்டுள்ளது. மியான்மர் நாட்டின் வங்கதேச எல்லையையொட்டி அமைந்துள்ளது ரகின் மாகாணம். இம் மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த 8 லட்சம் முஸ்லிம்கள் வசிக்கின்றனர்.
இவர்கள் மியான்மரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர். சட்ட விரோதமாக குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்க மியான்மர் அரசு மறுத்து விட்டது.
இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் முஸ்லிம்களின் குடிசைகளை, தீ வைத்து கொளுத்தி விட்டதாக கூறி பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதில் 50 பேர் பலியாயினர்.
இதையடுத்து மவுங்தா பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி ஏராளமான முஸ்லிம்கள் தங்கள் தாயகமான வங்கதேசத்துக்குள் தஞ்சம் அடைய முயன்றனர்.
அகதிகள் அதிக அளவில் வந்ததால் அவர்களை எல்லையோர காவல் படையினர் விரட்டியடித்தனர். இதற்கிடையே ரகின் மாகாணத்தின் சித்வி நகரில் பரவியுள்ள வன்முறையால், 600 வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்.
நிலைமையை கட்டுப்படுத்த தற்போது இங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது

25 October 2012

காலை உணவில் முட்டை சாப்பிடுங்க உடல் எடை குறையும்!

          
Thursday 25 October 2012  By.Rajah.
அதிக புரோட்டீன் கொண்ட முட்டையை காலை உணவில் சேர்த்துக் கொள்வதால் நாள் முழுவதும் பசி குறைந்து கலோரி சேர்வது தவிர்க்கப்படும். அதனால், உடல் எடையைக் குறைக்க முடியும் என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது. உடல் எடை அதிகம் கொண்டவர்களின் உணவில் முட்டையின் பங்கு குறித்து அமெரிக்காவின் கனெக்டிகட் பல்கலைக்கழக உணவுத் துறை விரிவான ஆய்வு நடந்தது.

காலை உணவில் முட்டை சேர்த்துக் கொள்வதால் உடலுக்கு அதிக புரோட்டீன் கிடைக்கிறது. அது உடலில் தெம்பை நீடிக்கச் செய்து நீண்ட நேரத்துக்கு வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தரும். அதன்மூலம், மதிய உணவு, மாலை சிற்றுண்டி ஆகியவற்றில் கலோரிகள் நிறைந்த அதிக உணவுகளை சாப்பிட வேண்டியிருக்காது. அதனால், உடலில் கலோரிகள் குறையும். மதியம், மாலை உணவுகளின் அளவு, கலோரி குறைவதால் எடை உயர்வது தடுக்கப்படுகிறது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

“உணவில் உயர்தர புரோட்டீன் சேர்ந்தால் ஒட்டுமொத்த உடல் நலனுக்கு நல்லது. குறிப்பாக, புரோட்டீன் அதிகமுள்ள முட்டையை காலை உணவில் சேர்க்கலாம். இரண்டு விதமான அமெரிக்க உணவுமுறையை ஆய்வு செய்ததில் இது தெரிய வந்தது. காலை உணவில் முட்டையை சேர்த்தவர்களுக்கு மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்திருந்தது. இதனால் உட்கொள்ளும் கலோரிகள் குறைந்து எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது”

வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை '''

         
Thursday 25 October 2012  By.Rajah. 
அரசியல்யாப்புக்குமுரணாக இராணுவத்தினரும்,கடற்படையினரும் தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை மிகக் கேவலமானமுறையில்முழு நிர்வாணமாக்கிச் சோதனை என்ற பெயரில் பாலியல்ரீதியானகொடுமைகளைச் செய்ததாகவெலிக்கடைச் சிறைச்சாலையின் பெண் அரசியல் கைதிகள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் கடிதம் மூலம் முறையிடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
முறையற்ற சோதனை நடவடிக்கைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி அனுப்பப்படவுள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது :
சிறைத்துறைச் சட்டத்தின்படியும், விதிமுறைகளுக்கமைவாகவும் சிறைக்கைதிகளைச் சிறை அதிகாரிகள் தவிர வேறு பிரிவினர் சோதனை செய்வது முறையற்ற செயல். ஆனால் நீதிக்குப் புறம்பான வகையில் இவற்றை எல்லாம் மீறி கொழும்பு நகரில் அமைந்துள்ள மூன்று பிரதான சிறைகளிலும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வெலிக்கடை, கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை, புதிய சிறைச்சாலைகளில் இராணுவத்தினர், கடற்படையினர் சட்டத்துக்கு முரணான வகையில் சோதனைகளை மேற்கொள்கின்றனர். மிகவும் கேவலமான முறையில் முழு நிர்வாணமாக்கி, பத்து, பதினைந்து தடவைகள் இருத்தி எழுப்பி, கேலிச் சிரிப்புகளுக்கு நடுவில் சோதனை என்ற பெயரில் பாலியல் ரீதியான சித்திரவதைகள் இடம்பெறுகின்றன.
வெலிக்கடைப் பெண்கள் பகுதியில் உள்ள பெண் அரசியல் கைதிகளை மிகவும் மிலேச்சத்தனமான முறையிலும் கீழ்த்தரமான வகையிலும் பெண் அதிகாரிகள் சோதனை செய்கின்றனர். இதன்போது இழிவான சொற்பிரயோகங்களையும் மேற்கொண்டு எம்மை வதைக்கின்றனர்.
இவையனைத்தும் சிறை அதிகாரிகளின் பூரண பாதுகாப்புடன் விலங்கிடப்பட்டு நீதிமன்ற தவணைகளுக்கும், வைத்திய பரிசோதனைகளுக்காகவும் சென்றுவரும் போதே நடைபெறுகின்றன. அவர்களுள்ளேயான நம்பிக்கையீனமான நிலையில் நாம் பாதிக்கப்படுவது சரியானதா? இந்த நிலையைச் சுட்டிக்காட்டிய இரண்டு கைதிகள் அண்மையில் தாக்குதலுக்குள்ளாகியுள்ளனர்.
பெண்களாகிய நாம் எத்தனை துன்பங்களுக்கு முகம் கொடுத்து வெளியில் சொல்ல முடியாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். இந்த விடயங்கள் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கையும் தாக்கல் செய்ய எண்ணியுள்ளோம். ஏனைய சிறைச்சாலைகளில் இடம்பெறும் நடவடிக்கைகளைப் போல் இந்த சிறைச்சாலைகளிலும் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற உறுதிசெய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

ஒபாமா பற்றி அவதூறு பேச்சு: மன்னிப்பு கோரினார் மிட் ரோம்னியின் மகன்

வியாழக்கிழமை, 25 ஒக்ரோபர் 2012,By.Rajah. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா பற்றி அவதூறாக பேசியதற்காக, எதிர்கட்சி வேட்பாளரான மிட்ரோம்னியின் மகன் மன்னிப்பு கோரினார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 6ம் திகதி நடைபெற உள்ளது.
கடந்த 16ம் திகதி நியூயார்க் பல்கலைக்கழகத்தில் நடந்த இரண்டாவது விவாதத்தி‌ன் போது, ஜனாதிபதி ஒபாமா- குடியரசு கட்சி வேட்பாளர் மிட்ரோம்னி ஆகியோர் விவாதம் நடத்திய போது ரோம்னியை ஒபாமா தனது பேச்சினால் திணறடித்தார்.
இது குறித்து ரோம்னியின் மூத்த மகன் டாக் ரோம்னி வடக்கு கரோலினாவில் வானொலி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், நான் அங்கு இருந்திருந்தால் ஒபாமாவிற்கு மூக்குடைத்தாற் போல் பதிலடி கொடுத்து நாற்காலியை ஆட்டம் காண வைத்திருப்பேன் என்றார்.
இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து டாக் ரோம்னி, ஒபாமாவிடம் மன்னிப்பு கோரினார்.
இது குறித்து டாக் ரோம்னி கூறுகையில், ஏதோ ஜோக் அடித்தேன் தவிர அப்படி ஒன்று தவறாக பேசவில்லை. தவறு இருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றும் ஒபாமாவும் மன்னித்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.

24 October 2012

வடகொரியாவின் மிரட்டலுக்கு பணிந்தது தென்கொரியா

புதன்கிழமை, 24 ஒக்ரோபர் 2012,By.Rajah.வடகொரியாவுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பலூன்களை பறக்கவிட தென்கொரியா தடை விதித்துள்ளதால், பதற்றம் சற்று தணிந்துள்ளது. வடகொரியாவுக்கும், தென்கொரியாவுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 19ஆம் திகதி வடகொரிய இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், வடகொரியாவில் இருந்து சென்று தென்கொரிய எல்லைப் பகுதியில் வசிக்கும் மக்கள், எங்களுக்கு எதிராக பலூன்களை பறக்கவிட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
அவர்கள் அங்கிருந்து வெளியேறி விடவேண்டும். இல்லாவிட்டால் எவ்வித இரக்கமும் இன்றி இராணுவ தாக்குதல் நடத்தப்படும் என அறிவித்திருந்தது.
மேலும் அக்டோபர் 22ஆம் திகதி முதல் தென்கொரியாவின் பஜு நகரின் அருகே எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்த இருப்பதாகவும் வடகொரியா மிரட்டல் விடுத்திருந்தது.
இதனால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க பலூன்களை பறக்கவிட தடை விதித்து தென்கொரியா நேற்று உத்தரவிட்டது.
இத்துடன் எல்லைப் பகுதியில் ஏராளமான பொலிசார் குவிக்கப்பட்டனர். சாலைகளை மூடி நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
இதுபற்றி போராட்டக்காரர் பார்க் சாங்-ஹேக் கூறுகையில், இது வடகொரியா மிரட்டலுக்கு பயந்து சரணடைந்ததற்குச் சமம். நாங்கள் வேறு பகுதியில் இருந்து பலூன்களைப் பறக்கவிட முயற்சி செய்வோம் என்றார்.
இதற்கிடையே வடகொரியா தாக்குதல் நடத்த இராணுவத்தை குவித்துள்ளதாக வந்த தகவலை தென்கொரியா இராணுவ அமைச்சகம் மறுத்துள்ளது. மேலும் எத்தகைய தாக்குதலையும் சமாளிக்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

23 October 2012

வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்!

      
24.10 2012 BY.Rajah.ஆரோக்கியமானஉடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பதாக ஒரு ஆய்வு முடிவை மேற்கோள் காட்டி பிரிட்டிஷ் மெடிகல் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ யுனிவர்சிட்டியின் மகப்பேறு மருந்தியல் பிரிவின் ஸ்டேசி டெஸ்லர் லிண்டாவ் தலைமையிலான குழுவினர் வயதான ஆண் மற்றும் பெண்களின் செக்ஸ் உணர்வு குறித்து வெவ்வேறு ஆய்வுகளை நடத்தினார். 1995&96&ல் 25 முதல் 74 வயதுக்குட்பட்ட 3000 ஆண், பெண்களிடமும், 2005&06ல் 57 முதல் 85 வயதுடைய 3000 ஆண், பெண்களிடமும் தகவல்கள் திரட்டப்பட்டன. இதன் முடிவுகள் வருமாறு:

பொதுவாக, முதுமை காலத்தில் ஆண்களுக்கு பெண்களைவிட செக்ஸ் உணர்வு அதிகம் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும், ஆரோக்கியமான உடல்நிலை உள்ளவர்களுக்கு 70 வயது வரை செக்ஸ் உணர்வு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சராசரியாக 30 வயதுடைய ஆண்கள் மேலும் 35 ஆண்டுகள் வரையும் பெண்கள் 31 ஆண்டுகள் வரை செக்சில் ஈடுபாடு காட்ட முடியும் என கூறப்பட்டுள்ளது.

55 வயதான ஆண்கள் மேலும் 15 ஆண்டுகளுக்கு அதாவது 70 வயது வரை செக்சில் ஈடுபட முடியும் என தெரிவித்துள்ளனர்.

முள்ளிவாய்க்கால் பகுதியில் ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்பு



செவ்வாய்க்கிழமை, 23 ஒக்ரோபர் 2012,
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் புலனாய்வுப் பொலிஸாருக்கு பொதுமக்கள் வழகிய தகவலை அடுத்து ஒரு தொகுதி ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்.பொலி மாஅதிபர் தெரிவித்துள்ளார்.

ஏல்.எம்.ஜீ. துப்பாக்கிகள்-02.
97 ரக துப்பாக்கிகள்-04,
ரி.56 ரக துப்பாக்கிகள்- 08,
ரி.87 ரக துப்பாக்கிகள்-02,
ஆர்.பி.ஜி.- 01,
60 எம்.எம்.துப்பாக்கிகள்- 01,
ஆர்.பி.ஜி குண்டுகள்- 05,
82 எம்.எம்.குண்டு- 01,
60 எம்.எம்.குண்டுகள்- 11,
ஆர்..பி.ஜீ.டி குண்டுகள்- 03,
ரி56 மகசின்- 06,
12.7 ரவைகள்- 12,
ரி56 ரவைகள்- 20000,
எம்.பி.எம்.ஜீ. ரவைகள்- 60,
ரி 56 ரவைகள் அடங்கிய பெட்டி- 01,
கிளேமோர்-140,
எம்.எம்.குண்டுகள்- 01,
எல்.ரீ.h.P தயாரிப்பு குண்டுகள்- 06,
130 ரக துப்பாக்கிக்கான குண்டு 01,
 விமானத்தைத்தாக்கும் குண்டு 01
மேற்கூறப்பட்டுள்ளவையே மீட்கப்பட்ட ஆயுதங்கள் என பொலிஸ் மா அதிகர் தெரிவித்துள்ளார்.

22 October 2012

டென்மார்க் ஓபன் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்!!

          
Monday 22 October 2012  By.Rajah.
டென்மார்க் ஓபன் பாட்மின்டன் தொடரில் இந்திய நட்சத்திர வீராங்கனை செய்னா நேவால் சாம்பியன் பட்டம் வென்றார்.
டென்மார்க்கில் உள்ள ஓடென்ஸ் நகரில் டென்மார்க் ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மின்டன் தொடர் நடந்தது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் இந்தியாவின் செய்னா, ஜெர்மனியின் ஜூலியானா செங்கை எதிர் கொண்டார்.
முதல் செட்டில் அசத்திய செய்னா 21-17 என கைப்பற்றினார். பின் இரண்டாவது செட்டிலும் அபாரமாக ஆடிய செய்னா 21-8 என வென்றார். இறுதியில், செய்னா 21-17, 21-8 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
சமீபத்தில் முடிந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இவர், நீண்ட ஓய்வுக்கு பின் பங்கேற்ற முதல் தொடரில் பட்டம் வென்று அசத்தினார்.
இது, செய்னாவின் 11வது சாம்பியன் பட்டம். தவிர இவர், இந்த ஆண்டு வென்ற 4வது பட்டம். முன்னதாக இந்த ஆண்டு நடந்த இந்தோனேஷிய ஓபன், சுவிஸ் ஓபன், தாய்லாந்து ஓபன் தொடர்களில் பட்டம் வென்றார்.
இதுகுறித்து செய்னா கூறியது: டென்மார்க் ஓபன் தொடரில் முதன்முறையாக பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காக டென்மார்க் மற்றும் இந்திய ரசிகர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற பின், என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நீண்ட ஓய்வுக்கு பின் விளையாடியதால், புத்துணர்ச்சிடன் களமிறங்கினேன். எனது வலது முழங்காலில் லேசான பாதிப்பு இருந்த போதிலும், முழுத்திறமையை வெளிப்படுத்தி சாதிக்க முடிந்தது. இதற்காக கடவுளுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு செய்னா கூறினார்.

20 October 2012

யாழ். மக்கள் வாழ்வோடு பின்னிப் பிணைந்த கீரிமலை!



இலங்கையில் வரலாற்றுச் சிறப்பு மிக்க அற்புத திருத்தலங்களில் ஒன்று கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் கோவில். யாழ்ப்பாணத்தில் அமையப் பெற்று உள்ளது.
கீரி முகம் பெற்று இருந்த முனிவர் ஒருவர் இங்கு உள்ள தீர்த்தத்தில் நீராடி கீரி முகம் நீங்கப் பெற்றமையால் இத்தலத்துக்கு கீரிமலை என்று பெயர் வந்து உள்ளது என்பது ஐதீகம். நளன், அருச்சுனன், முசுகுந்தன் போன்றோரால் இக்கோவில் வழிபட பெற்று இருக்கின்றது என நம்பப்படுகின்றது.
தீர்த்த-தல யாத்திரைக்கு உரிய புராதன புண்ணிய தலங்களில் இதுவும் ஒன்று.
யாழ்ப்பாண இந்துக்களின் வாழ்க்கை நெறியில் கீரிமலை சிவன் கோவிலுக்கு தனி முக்கியத்துவம் உள்ளது. இறந்தவர்களின் சாம்பலை கொண்டு வந்து இங்கு உள்ள தீர்த்தத்தில் இந்துக்கள் கரைப்பார்கள். அதே போல ஆடி அமாவாசை போன்ற தினங்களில் இங்கு நீராடி பிதிர்க்களை வழிபடுவார்கள்.
போருக்கு பிந்திய இலங்கையில் யாழ்ப்பாணத்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகின்ற உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயணிகள் விரும்பி வருகின்ற இடங்களில் ஒன்றாக இக்கோவில் உள்ளது.
சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கீரிமலைக் கடலில் நீராடி மகிழ்கின்றனர். அத்துடன் இச்சுற்றாடலை புகைப்படங்களாக எடுத்தும் கொள்கின்றனர்.கீரிமலை கோவில், சிலைகள் மற்றும் கடல் ஆகியன இவர்களை வெகுவாக கவர்ந்து இருக்கின்றன[புகைபடங்கள் ]
.

       

மலேரியா காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து: விஞ்ஞானிகள் சாதனை

சனிக்கிழமை, 20 ஒBy.Rajah.க்ரோபர் 2012, சுவிட்சர்லாந்தில் பேஸெல் நகரத்தில் உள்ள மருத்துவக் கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான் 40 ஆண்டுகால உழைப்புக்குப் பின்பு மலேரியாக் காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில் வெற்றிகண்டுள்ளார். RTS, S என்ற தடுப்பு மருந்து பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இப்போது நம்பிக்கை அளித்து வருகிறது.
மலேரியா நோய் வைரஸால் ஏற்படுவதில்லை. ஒட்டுண்ணியால் தோன்றுகிறது. ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோய்க்குத் தடுப்புமருந்து கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இதுவும் மருந்து கொடுக்கப்பட்டவரில் நூற்றுக்கு ஐம்பது பேருக்குப் பலனளிக்கிறது. இந்த ஐம்பது பேர் பலனடைவதே மருத்துவ உலகில் குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
ஏழு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் 1½ வயதுக் குழந்தை முதல் ஐந்து வயது சிறுவர் வரை சுமார் 16,000 பேரிடம் இந்த மருந்தைக் கொடுத்துப் பரிசோதனை செய்து பார்த்ததில் பாதிப்பேருக்கு நோய் தீர்ந்துவிட்டது.
இருபது வகையான மருந்துகளைக் கொடுத்துச் சோதித்தில் இந்த RTS, S என்ற மருந்து மட்டுமே பாதிப்பேரையாவது சுகப்படுத்தியது. இதற்காகப் பலரும் இருபதாண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்துள்ளனர்.
மலேரியா பாதிக்கப்பட்ட அனைவரும் உயிரிழப்பதைக் காட்டிலும் பாதிப்பேராவது உயிர் பிழைப்பது பெரிய வெற்றிதான்.
இந்த மருந்து நோயைத் தடுக்கிறது என்பது உறுதியான நம்பிக்கையை மருத்துவ ஆராய்ச்சியாளருக்கு அளிக்கின்றது. இதுவே பெரிய சாதனை என்று ஜெனீவா மருந்து ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் பெர்னார்டு பிக்கோல் தெரிவித்தார்.
இந்த மருந்தை ஆண்டுதோறும் செலுத்தி வந்தால் மலேரியா தாக்காது. இன்னும் இதனை தீவிரமாக ஆராய்ந்து பரிசோதித்து திறன்மிகு, தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க மருத்துவ விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

19 October 2012

15 பெண்களை துன்புறுத்தியதாக முன்னாள் இராணுவ வீரர் மீது குற்றச்சாட்டு

 வெள்ளிக்கிழமை, 19 ஒக்ரோபர் 2012, By.Rajah.
ரெஜினால்டு டேவிஸ்(வயது 78) என்பவர் மீது கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்னர் 15 பெண்களை கற்பழித்ததாக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகள் மீதான விசாரணை இங்கிலாந்து நீதிமன்றத்தில் நடந்து வருகின்றது.
இவை அனைத்தும் பொய்யான குற்றச்சாட்டுகள் என டேவிஸ் மறுப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது குழந்தைகளாக இருக்கும் நான்கு பெண்களை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார்.
கைத்தடி உதவியுடன் குற்றவாளிக் கூண்டுக்கு வந்த டேவிஸ், எல்லாமே பொய்யான குற்றச்சாட்டுகள். எதுவும் நடக்கவில்லை. அதில் எதுவும் உண்மையில்லை என்றார்.
இங்கிலாந்தின் முன்னாள் இராணுவ வீரரான டேவிஸ் தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்

18 October 2012

பெண்ணை துஸ்பிரயோகம் செய்தவர்களுக்கு

         
Thursday 18 October 2012 By.Rajah.
 10வருடசிறைத்தண்டனை!  பெண்ணொருவரை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வழக்கொன்றில் சந்தேகநபர்கள் இருவருக்கெதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவர்களுக்கு தலா 10 வருட கடூழியச் சிறைத் தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதம் மற்றும் 25 ஆயிரம் ரூபா நஷ்ட ஈடும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
மட்டக்களப்பு, ஏறாவூரைச் சேர்ந்த மீரா சாரிபு மொகமட் றபீக், அதே இடத்தைச் சேர்ந்த நைனை முகமது பரீட் ஆகிய இருவருக்கும் எதிராக கற்பழிப்பு, கொள்ளை மற்றும் உடைமைகளுக்கு சேதம் விளைவித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் பேரில் தொடரப்பட்ட வழக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது
கடந்த 2003ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி வேலை வாய்ப்புக்காக குவைத் சென்று திரும்பிய பெண்ணொருவர் வீட்டில் முகமூடி அணிந்து துப்பாக்கி முனையில் பயமுறுத்தி உள்ளே புகுந்த மேற்குறிப்பிட்ட நபர்கள் இருவரும், அப்பெண்ணை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகவும், 23500 ரூபா பெறுமதியான நகைகளையும் கொள்ளையிட்டதாகவும் 45 ஆயிரம் ரூபா பெறுமதியான உடைமைகளை சேதப்படுத்தியதாகவும் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கு விசாரணை மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி திருமதி கனகா சிவபாத சுந்தரம் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 1ஆம் 2ஆம் எதிரிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நியாயமான சந்தேகத்துக்கு அப்பால் அரச தரப்பினர் நிரூபித்துள்ளதால் இருவருக்கும் தலா 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் 25 ஆயிரம் ரூபா நட்ட ஈடும் விதித்து தீர்ப்பளித்துள்ளார்.
அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் ஆறு மாதச் சிறைத் தண்டனையும், நஷ்ட ஈடு செலுத்தத் தவறினால் அதற்கு ஒரு வருடச் சிறைத்தண்டனையும் ஒரே காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் அவரது தீர்ப்பில் கூறப்பட்டது.
இந்த வழக்கில் 1ஆம் எதிரியான மீரா சாரிபு மொஹமட் றபீக் என்பவர் நீதிமன்றத்துக்கு ஆஜராகாத நிலையில் இவ்வழக்கு நடத்தப்பட்டது. எனவே இவருக்கு எதிராக பகிரங்க பிடியாணையும் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது

தமிழர் நிலங்களில் ராணுவத்தின் நிரந்தர

          
Thursday 18 October 2012 By.R.ajah. தளங்கள் குறித்து சீன தூதரக அதிகாரிகளிடம் கவலை தெரிவித்த த.தே.கூ.
வடக்கில் இராணுவம் நிரந்தரத் தளங்களை அமைப்பதற்கு சீனா உதவிகளை வழங்கி வருவது குறித்து கொழும்பிலுள்ள சீன தூதரக அதிகாரிகளிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

கொழும்பிலுள்ள சீனத் தூதரக அதிகாரிகளை சந்தித்து, வடக்கில் இராணுவத்துக்கு சீனா உதவுவது குறித்து தமது கட்சி கவலை வெளியிட்டதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.

இராணுவத்தினால் அமைக்கப்படும் நிரந்தர படைக் கட்டுமானங்கள் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்களிலேயே அமைக்கப்படுகின்றன என்று சீனத் தூதரக அதிகாரிகளிடம் எடுத்து விளக்கப்பட்டுள்ளது.

இராணுவத்தினருக்கும், அவர்களின் குடும்பத்தினருக்குமான பாரிய குடியிருப்புக் கட்டமைப்புகளை வடக்கில் அமைப்பதற்கு சீனா உதவிகளை வழங்கி வருகிறது.

இது தொடர்பான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை சீனத் தரப்புக்கு எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்களின் தேவைகளையும் கூட சீனா கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்

17 October 2012

டக்ளஸ் தேவானந்தா மீது பிறப்பித்த



Wednesday17October2012By.Rajah. பிடிவாரன்டரத்துஆகுமா?நாளை பரபரப்பு தீர்ப்பு சூளைமேட்டில் 1986ல் நடந்த துப்பாக்கியால் சுடு சம்பவம் தொடர்பாக இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவா னந்தா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் நேரில் ஆஜராகாததால் செஷன்ஸ் நீதிமன்றம் அவருக்கு பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதை ரத்து செய்யக்கோரிஅவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ராஜகோபாலன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசு வக்கீல் பிரபாவதி ஆஜராகி, பிடிவாரன்டை ரத்து செய்ய கோரும்போது குற்றம்சாட்டப்பட்டவர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். அவருக்கு தமிழக போலீசார் உரிய பாதுகாப்பு வழங்குவார்கள். நீதிமன்றத்தில் ஆஜரானால்தான் சாட்சிகளால் அவரை அடையாளம் காட்ட முடியும்’’ என்று வாதிட்டார். அப்போது டக்ளஸ் தேவானந்தா சார்பில் வக்கீல் பி.என்.பிரகாஷ், ‘டக்ளஸ் தேவானந்தா அமைச்சராக உள்ளார். அவரை அடையாளம் காட்ட வேண்டும் என்று போலீசார் கோர முடியாது’ என்றார்.

இதற்கு அரசு வக்கீல் பதிலளிக்கும்போது, ‘குற்றம்சாட்டப்பட்டவரை நீதிமன்றமும் அடையாளம் காண வேண்டும். விசாரணை அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதால் அடையாள அணிவகுப்பு முக்கியமாகும்’ என்றார். பி.என்.பிரகாஷ், ‘தனது உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்று தெரிந்ததும்தான் டக்ளஸ் தேவானந்தா இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சென்றார்’ என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை யும் கேட்ட நீதிபதி, பிடிவாரன்டை ரத்து செய்யக் கோரும் மனு மீதும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக கோரிய மனு மீதும் வரும் 18ம் தேதி (நாளை) தீர்ப்பளிக்கப்படும் என்று உத்தரவிட்டார்

லிபியாவில் சிறை கம்பிகளை உடைத்து கொண்டு 120






Wednesday 17 October 2012 .By.Rajah.கைதிகள் தப்பி ஓட்டம்.லிபியா தலைநகர் திரிபோலியில் அல்-ஜுடைடா என்ற இடத்தில் மத்திய சிறை உள்ளது. இங்கு பலதரப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இங்கிருந்து 120 கைதிகள் சிறை கம்பிகளை உடைத்து கொண்டு தப்பி ஓடி விட்டனர்.
இந்த தகவலை தேசிய பாதுகாப்பு அமைப்பின் தலைவர் காலெத் அல்-ஷரீப் தெரிவித்துள்ளார். தப்பி ஓடியவர்களில் பெரும்பாலானவர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து இங்கு வந்து சட்ட விரோதமாக குடியேறியதால் கைது செய்யப்பட்டவர்கள். அவர்கள் வன்முறையில் ஈடுபடலாம் என்ற அச்சம் நிலவுவதால் அவர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் சிறையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் அதிபரும், சர்வாதிகாரியுமான மும்மர் கடாபி சிர்தே நகரில் கடந்த ஆண்டு அக்டோபர் 20-ந் தேதி பிடிபட்டு அடித்து கொல்லப்பட்டார். அந்த முதலாம் ஆண்டு நினைவு நாளுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு கைதிகள் தப்பி உள்ளனர். எனவே அவர்கள் கடாபியின் ஆதரவாளர்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

16 October 2012

தமிழினப் படுகொலைகள் என்ற நூல் ஜேர்மன்

         
Monday 15 October 2012 By.Rajah. { புகைபடங்கள்}
மொழியில் இன்று வெளியீடு!உலகளாவிய மிகப் பெரிய புத்தக கண்காட்சி விழாவில் வடகிழக்கு மனித உரிமை செயலகம் (NESoHR) தொகுத்து வெளியிட்ட "தமிழினப் படுகொலைகள்" என்ற நூல் ஜேர்மன் மொழியில் "Damit wir nicht vergessen…” Massaker an Tamilen 1956–2008” எனும் தலைப்பில் இன்று யேர்மனியில் Frankfurt நகரில் வெளியிடப்பட்டது
இப் புத்தகத்தை வெளியிட்டு வைப்பதற்கு சிறப்பு விருந்தினராக, இந்நூலை யேர்மன் மொழியில் மொழியாக்கம் செய்த பேராசிரியர் பீற்றர் சால்க் அவர்கள் கலந்து கொண்டார். அத்துடன் இந்நூலை அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் அவர்களும், தமிழ் மக்கள் சார்பாக செல்வி லக்சி லம்பேர்ட் மற்றும் ரொபின்சன் அவர்களும் கலந்துகொண்டனர்.
பேராசிரியர் பீற்றர் சால்க் உரையாற்றுகையில்,
சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது நடாத்திய மனிதவுரிமை மீறல்கள் மற்றும் இனப்படுகொலைகள் இந் நூலில் ஆதாரத்துடன் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளது. அந்த வகையில் இவ்வாறன குற்றங்கள் புரிந்த இலங்கை அரசை சர்வதேச சட்டங்களுக்கு அமைய அனைத்துலக குற்றவியல் மன்றத்தில் நிறுத்த முடியும் என இவ் ஆவணத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
ரொபின்சன் உரையாற்றுகையில்,

தமிழ் மக்களுக்கு சிறிலங்கா அரசால் இழைக்கப்பட்ட கொடுமைகள் இன்று வரை அனைத்து நாட்டு மக்களும் ஆதாரப்படுத்தப்பட்ட வகையில் சென்றடையவில்லை. அதனால் இன்று வெளியிடப்படும் இந்நூலை மிக முக்கியமான ஒரு ஆவணமாக கருதுகின்ற வேளையில், இ இந்நூலை உருவாக்குவதற்கு தமது உயிர்களை அர்பணித்தவர்களை நினைவில் பதித்து இதை யேர்மன் மொழியில் வெளியிட்டு வைப்பதற்கு மிக பெரும் உதவியை செய்த பேராசிரியர் பீற்றர் சால்க், அச்சுப் பதிவு செய்த நிறுவனத்தின் உரிமையாளர் கிறிஸ்டியன் வைஸ் மற்றும் பெயர் குறிப்பிட்ட முடியாத அனைவருக்கும் ஈழத்தமிழ் மக்கள் சார்பில் நன்றியை தெரிவித்தார்.
அத்தோடு சிறிலங்கா அரசு ஈழத்தமிழர்கள் மீது 60 ஆண்டுகளுக்கும் மேலாக திட்டமிட்ட இனப்படுகொலையை செய்துவருகின்றதை இந்நூல் ஆதாரத்துடன் வெளிக்காட்டுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டினர்.
செல்வி லக்சி லம்பேர்ட் உரையாற்றுகையில்,
தன்போன்ற இளையோர்கள் இவ்வாறன ஆவண நூலை பயன்படுத்தி கொடுமைகள் இழைக்கப்பட்ட மக்களுக்கு நீதி தேடி கொடுப்பதற்கு அரசியல் வேலைத்திட்டங்களுக்கு இந்நூலை பயன்படுத்த வேண்டும். அத்தோடு இவ்வாறான ஆவணத்தை உருவாக்குவதற்கு அரசாங்கத்தின் கொடூரமான தாக்குதலுக்கு மத்தியில் தமது உயிர்களை காப்பாற்ற எண்ணாமல் நடந்த இனப்படுகொலைகளை பதிவு செய்தவர்களை நினைவில் நிறுத்தி ஈழத்தமிழர்களின் விடுதலையை நோக்கி இளையோர்கள் செயற்பட வேண்டும் என்று கூறினார்.
இந் நூல் யேர்மனியில் உள்ள நூல்நிலையங்களுக்கும், உயர்கல்விக் கூடத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும், மனிதவுரிமை அமைப்புகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என்று வெளியீட்டார்கள் அறிவித்துள்ளார்கள்.
புலம்பெயர் நாடுகளில் அகதி தஞ்சம் கோரியுள்ள ஈழத்தமிழ் மக்கள் சிறிலங்கா அரசின் கொடுமைக்களை புகலிட நாட்டு அரசாங்கத்திற்கு ஆதாரத்துடன் கொடுப்பதற்கும் இந் நூல் மிக முக்கியம் வாய்ந்தது எனவும் தெரிவித்துள்ளார்கள்.







nk

15 October 2012

நிலாவரைக் கிணறு-பாரம்பரிய{காணொளி}

15.10.2012.By.Rajah,ஊர்ப்புதினம்-{.புகைபடங்கள்,காணொளி,}
கதைகளும் அறிவியல் விளக்கமும்நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு எனக் கருதப்பட்டது.நிலாவரையில் ஒரு தேசிக்காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில்மிதக்கும் என்றனர். ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்தவர்கள் பலர்இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது- கி. பி. 1824 இல் சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி அதனை அடுத்துள்ளதோட்டங்களுக்கு நீர் வழங்க புத்தூர் நவர்கிரி நிலாவரைக் கிணற்றைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது
கதைகளும் அறிவியல் விளக்கமும்நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு எனக் கருதப்பட்டது.நிலாவரையில் ஒரு தேசிக்காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில்மிதக்கும் என்றனர். ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலைசெய்தவர்கள் பலர்இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது- கி. பி. 1824 இல் சேர் எட்வேட்பான்ஸ் எனும் தேசாதிபதியின் கட்டளைப்படி அதனை அடுத்துள்ளதோட்டங்களுக்கு நீர் வழங்க புத்தூர் நவர்கிரி நிலாவரைக் கிணற்றைப் பயன்படுத்த முடிவுசெய்யப்பட்டது

ஷெல் வீச்சுக்களின்போது மரணமடைந்த தமது

         
Monday 15 October 2012  By.Rajah.
இரண்டு பிள்ளைகளின் ௭ச்சங்களை ௭டுத்துச் சென்ற தந்தை கடந்த 2009 ஆம் ஆண்டு ஷெல் வீச்சுக்களின்போது மரணமடைந்த தமது இரண்டு பிள்ளைகளின் ௭ச்சங்களை ௭டுத்துச் சென்ற தந்தையொருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.
நேற்று இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள தந்தையை பொலிஸார் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யவுள்ளனர் ௭ன தெரிவிக்கப்படுகின்றது.
இந்தச் சம்பவம் பற்றி மேலும் தெரியவந்துள்ளதாவது,
கடந்த 2009 ம் ஆண்டு ஷெல் வீச்சுக்களில் தமது இரண்டு பிள்ளைகளைப் பலி கொடுத்த பெற்றோர், அவர்களது சடலங்களை அவசர அவசரமாக புதைத்துவிட்டு அந்த இடத்தில் ஓர் அடையாளத்தையும் வைத்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.
சண்டைகள் ஓயும் அப்போது, திரும்பிவந்து தமது மகன் மற்றும் மகளுடைய அந்தச் சடலங்களை ௭டுத்துச் சென்று முறையான சமயக் கிரியைகளுடன் ஒரு நல்லடக்கத்தைச் செய்யலாம் ௭ன்று அவர்கள் ௭ண்ணி அவ்வாறு அடையாளம் வைத்துவிட்டுச் சென்றிருந்தார்கள்.
யுத்தம் முடிவடைந்து இரணைப்பாலையில் தமது சொந்த இடத்தில் அவர்கள் மீள்குடியேறியதையடுத்து அவர்கள் வலைஞர் மடத்திற்குச் சென்று தமது பிள்ளைகளைப் புதைத்த இடத்தில் அவர்களது சடலங்களை, ௭லும்புக் கூடுகளாக இருந்த ௭ச்சங்களை நல்லடக்கம் செய்வதற்காக ௭டுத்து வந்தபோது இராணுவத்தினர் தந்தையாரைக் கைது செய்துள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட தந்தையார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து முல்லைத்தீவு பொலிஸார் அவரை விசாரணை செய்து வருகின்றார்கள்.
இந்தத் தந்தையார் இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதாகத் தெரிகின்றது.
இந்தச் சம்பவம் பற்றி தம்முடைய கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டு, இது தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகி தமக்காக வாதாட வேண்டும் ௭ன்று சம்பந்தப்பட்டவர்கள் தம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக சட்டத்தரணி அன்ரன் புனித நாயகம் தெரிவித்துள்ளார்

கணவருடன் தனது தாயாருக்கு கள்ள உறவு

.
Monday 15 October 2012  By.Rajah. 
இருந்ததாகமறைந்தநடிகைஹேமாஸ்ரீ பேசிய சிடியால் பரபரப்பு கன்னட நடிகை, ஹேமாஸ்ரீயின் சாவுக்கு, அவரது பெற்றோரும், கணவருமே காரணம்,'' என, இவ்வழக்கில், முக்கிய சாட்சியாக கருதப்படும், ஹேமாஸ்ரீயின் கணவர், சுரேந்திர பாபுவின் நண்பரான முரளி கூறினார்.கன்னட திரைப்பட மற்றும், "டிவி' நடிகை ஹேமாஸ்ரீ. பெங்களூரு, பனசங்கரி பகுதியில் வசித்து வந்த அவர், தன் வீட்டின் அருகில் வசித்த, மஞ்சுநாத்துடன், "பழகி' வந்தார்.
மர்மசாவு:ஆனால், ஹேமாஸ்ரீயை, அவரது தாயார் கட்டாயப்படுத்தி, சுரேந்திரபாபு என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். கடந்த வாரம் செவ்வாயன்று, ஹேமாஸ்ரீ மர்மமான முறையில் இறந்தார்.இவ்வழக்கை விசாரித்து வரும் போலீசாரிடம், ஹேமாஸ்ரீயின், "நண்பரான' மஞ்சுநாத், சமீபத்தில், "சிடி' ஒன்றை கொடுத்தார். அந்த, "சிடி'யில், தன் தாயாருக்கும், கணவர் சுரேந்திர பாபுவுக்கு தவறான உறவு இருந்ததாக, ஹேமாஸ்ரீ தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில், முக்கிய சாட்சியாகக் கருதப்படும், ஹேமாஸ்ரீயின் கணவர் சுரேந்திர பாபுவின் நண்பரும், ஆந்திராவை சேர்ந்தவருமான, முரளி, அனந்தபூரில் நிருபர்களிடம் கூறியதாவது:உறக்க நிலைகடந்த, 9ம் தேதி, மதியம், 1:45 மணிக்கு, பெங்களூரில் உள்ள, ஹேமாஸ்ரீ வீட்டுக்கு சென்றேன். அப்போது ஹேமாஸ்ரீ, அவரது அறையில் உறக்க நிலையில் இருந்தார்.அவரது வாயில் போதை மருந்தை, சுரேந்திரபாபு ஊற்றிக் கொண்டிருந்தார். இதற்கு, ஹேமாஸ்ரீயின் தாயாரும் உதவி செய்தார்.
அதிர்ச்சியடைந்த நான், யாரிடமும் சொல்லாமல், உடன், அனந்தபூருக்கு திரும்பி விட்டேன். அன்றிரவு, 8:00 மணிக்கு, அனந்தப்பூரில் உள்ள, என் பண்ணை வீட்டுக்கு, சுரேந்திரபாபுவின் கார் வந்தது. என் வீட்டில் வேலை பார்க்கும் பெண், கேட்டை திறந்து விட்டார். சுரேந்திரபாபுவும், அவரது டிரைவர் சதீஷும், ஹேமாஸ்ரீயின் உடலை தூக்கி வந்தனர்.சுரேந்திர பாபுவிடம் கேட்ட போது, ஹேமாஸ்ரீ போதையில் இருப்பதாக கூறினார். ஆனால், ஹேமாஸ்ரீ இறந்து விட்டதாக எனக்கு தெரிந்தது. ஹேமாஸ்ரீ உடலுடன் வெளியே செல்லும்படி, கோபத்துடன் கூறினேன். அவர், காலையில் செல்வதாகக் கூறினார். அவரது டிரைவர் சதீஷ் ஓடி விட்டார்.
மறு நாள் காலை, 8:00 மணிக்கு, சுரேந்திரபாபு தன் காரின் பின் சீட்டில் ஹேமாஸ்ரீ உடலை வைத்துக் கொண்டு, தானே காரை ஓட்டி சென்றார். ஹேமாஸ்ரீ சாவுக்கு சுரேந்திபாபுவும், அவரது பெற்றோருமே காரணம். இவ்வாறு முரளி கூறினார்.இதற்கிடையில், கொலை செய் யப்பட்ட கன்னட நடிகை, ஹேமாஸ்ரீயின் சகோதரி ரூபா நிருபர்களிடம் கூறியதாவது:என் பெற்றோர், தங்கள் சக்தியை மீறி என்னையும், ஹேமாஸ்ரீயையும் வளர்த்தனர். நன்கு படிக்க வைத்தனர். நடனம், சங்கீத வகுப்புகளில் சேர்த்தனர். தவறான வழிக்கு செல்ல விடாமல் பாதுகாத்தனர்.
பணம் பெறவில்லை:சுரேந்திர பாபுவுக்கு, ஹேமாஸ்ரீயை திருமணம் செய்து கொடுக்க, பணம் பெற்றுக் கொண்டதாகக் கூறுவது உண்மைக்கு புறம்பானது. ஹேமாஸ்ரீயின் ஒப்புதலுடன் தான், திருப்பதியில் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், இருவரும் சந்தோஷமாக இருந்தனர்.தற்போதைய சூழ்நிலையில், ஒரு "சிடி'யை வெளியிட்டு, என் குடும்பத்தை அவமதித்து வருகின்ற னர். இதனால், விசாரணைக்கு எந்த பயனும் இல்லை. எங்கள் குடும்பத்தினர் அவமானமடைந்துள்ளனர்.
என் கணவர், சுங்க இலாகா துறையில் துணை கமிஷனராக உள்ளார். எனக்கு யாருடைய பணமும் தேவையில்லை. என் தந்தையும், தாயும் பொருளாதாரத்தில் நன்றாக உள்ளனர்."சிடி'யிலுள்ள அனைத்து தகவல்களும் உண்மைக்கு மாறானது. "சிடி'யில் பேசியிருப்பது ஹேமாஸ்ரீயின் குரல் அல்ல. ஹேமாஸ்ரீ சாவுக்கு, என் பெற்றோர் காரணமல்ல. போலீசார் தான், உண்மையை கண்டுபிடிக்கவேண்டும்.இவ்வாறு ரூபா கூறினார்

14 October 2012

பொது மக்களின் தாக்குதலை


Sunday, 14 October 2012, By.Rajah.சமாளிக்க முடியாமல் பின்வாங்கியது இராணுவம்!- கிளிநொச்சியில் தப்பியது காணிகள்
கிளிநொச்சியில் மலையாளபுரம் மற்றும் கிருஷ்ணபுரம் பகுதிகளில் பொது மக்களின் 105 ஏக்கர் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கையை ஈடுபட்ட இராணுவத்தினருக்கும் பொது மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் ஏற்பட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது
பொது மக்களின் விவசாயக் காணிகளை அபகரித்து பண்ணை அமைப்பதற்கான நடவடிக்கைகளை இராணுவத்தினர் மேற்கொள்ளவிருந்த நிலையிலேயே காணி சுவீகரிக்க வந்த படையினருக்கு பொது மக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதங்கள் இடம்பெற்றுள்ளன.
பொது மக்களின் தொடர்ச்சியான எதிர்ப்பைத் தொடர்ந்து வேறுவழியின்றி காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கையை இராணுவத்தினர் கைவிட்டுள்ளனர்.
விவசாய நிலங்களை அபகரிக்கும் நடவடிக்கையை கைவிட்ட இராணுவத்தினர் விவசாய நிலங்களுக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதியை தமக்கு வழங்குமாறு கோரியுள்ளனர்.
இதேவேளை கிளிநொச்சி முல்லைத்தீவு பகுதிகளில் பொது மக்களது காணிகளை அபகரித்து இராணுவம் பாரிய பண்ணைகளை அமைப்பதற்கான நடவடிக்கைககளில் ஈடுபட்டு வருகின்றதும் இங்கு குறிப்பிடத்தக்கது

குமரன் பத்மநாபன் தற்போது கொழும்பில் இருந்து

 
      Sunday 14 October 2012.By.Rajah.இருந்து கிளநொச்சிக்கு மாற்றம் கோத்தபாயவுடன் சேர்ந்து இயங்கிவரும், KP என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாபன், தற்போது கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார் இதுவரை காலமும் கொழும்பில் உள்ள புறநகர்ப் பகுதியில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றில் தங்கியிருந்த KP, எதற்காக கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டார் என்பது, கோத்தபாயவுக்கே வெளிச்சம்.
புலிகளின் முன்நாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் அவர்கள், தங்கிச் செல்லும் வீடு ஒன்று கிளிநொச்சியில் உள்ளது. இந்த வீட்டை இராணுவத்தினர் கடந்த 3 வருடங்களாகப் பூட்டிவைத்திருந்தனர். இந்த வீட்டிலேயே தற்போது கே.பி குடி புகுந்துள்ளார் என நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. இதனை நேரில் பார்த்த சாட்சிகளும் உண்டு.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், மகிந்த ராஜபக்ஷ கிளிநொச்சி சென்று, அங்கு பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட மின் பிறப்பாக்கி நிலையம் ஒன்றைத் திறந்துவைத்தார். இதனை அடுத்து, தற்போது கே.பி கொழும்பில் இருந்து வன்னிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதனை உடனடியாகக் கூறமுடியாது போனாலும், கே.பியால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பை பராமரிக்க வசதியாக அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகள் சிலரோடு, இவரை நெருக்கமாகப் பேசவிட்டு, மேலும் சில தகவல்களை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஏதுவாக அவரை வன்னிக்கு மாற்றியிருக்கலாம் என்ற செய்திகளும் உலா வருகிறது.
எது எவ்வாறு இருப்பினும், லட்சியத்துக்காகப் போராடி, உறுதியான மனத்தோடும், என்றும் புன்னகையோடும் வாழ்ந்த சு.ப தமிழ்ச் செல்வன் வீட்டையா போயும் போய் கே.பி எடுத்துக்கொள்ளவேண்டும் !

13 October 2012

விடுதலைப் புலிகளினால் சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை
 
                                
















12 Oct 2012