Wednesday03October2012.By.Rajah.அமெரிக்காவின் ஒரேகான் மாநிலத்தில் விவசாயி ஒருவர் அவர் வளர்த்த பன்றிகளால் கொல்லப்பட்டு உணவனாதாகக் கூறப்படும் சம்பவத்தைப் பற்றி அமெரிக்க அதிகாரிகள் விசாரணைகளை நடத்தி வருகிறார்கள்.
70 வயதான டெர்ரி வான்ஸ் கார்னர் என்ற இந்த விவசாயி, கடந்த புதன் கிழமையன்று , அவரது பன்றிப் பண்ணையில், அவர் வளர்த்து வரும் பன்றிகளுக்குத் தீனி போட சென்றவர் திரும்பி வரவில்லை என்று தெரிய வருகிறது.
அவரது உறவினர் ஒருவர்,பன்றிகள் வளர்க்கப்படும் வேலியிடப்பட்ட வளைவுக்குள், அவரது பொய்பல் செட் மற்றும் அவரது உடலில் சில துண்டுகளைக் கண்டார். அவரது உடலின் பிற பாகங்கள் உண்ணப்பட்டுவிட்டிருந்தன.
அவர் ஒருக்கால் திடீரென்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்திருக்கலாம் அல்லது பன்றிகளால் அவர் தடுக்கி வீழ்ந்து பின்னர் அவைகளால் சாப்பிடப்பட்டிருக்கலாம் என்று விசாரித்து வரும் அதிகாரிகள் கூறினர்.
0 கருத்துகள்:
Post a Comment