வெள்ளிக்கிழமை, 26 ஒக்ரோபர் 2012,By.Rajah.மியான்மரில் ரகின்
மாகாணத்தில் உள்ள முஸ்லிம்களுக்கும், புத்த மதத்தினருக்கும் இடையே மீண்டும் கலவரம்
ஏற்பட்டுள்ளது.
மியான்மர் நாட்டின் வங்கதேச எல்லையையொட்டி அமைந்துள்ளது ரகின் மாகாணம். இம்
மாகாணத்தின் மூன்று மாவட்டங்களில் வங்கதேசத்திலிருந்து குடிபெயர்ந்த 8 லட்சம்
முஸ்லிம்கள் வசிக்கின்றனர். இவர்கள் மியான்மரில் குடியுரிமை கேட்டு போராடி வருகின்றனர். சட்ட விரோதமாக குடிபெயர்ந்தவர்களுக்கு குடியுரிமை அளிக்க மியான்மர் அரசு மறுத்து விட்டது. இதற்கிடையே கடந்த ஜூன் மாதம் முஸ்லிம்களின் குடிசைகளை, தீ வைத்து கொளுத்தி விட்டதாக கூறி பெரிய அளவில் கலவரம் மூண்டது. இதில் 50 பேர் பலியாயினர். இதையடுத்து மவுங்தா பகுதியில் அவசர நிலை அறிவிக்கப்பட்டது. பாதுகாப்பு கருதி ஏராளமான முஸ்லிம்கள் தங்கள் தாயகமான வங்கதேசத்துக்குள் தஞ்சம் அடைய முயன்றனர். அகதிகள் அதிக அளவில் வந்ததால் அவர்களை எல்லையோர காவல் படையினர் விரட்டியடித்தனர். இதற்கிடையே ரகின் மாகாணத்தின் சித்வி நகரில் பரவியுள்ள வன்முறையால், 600 வீடுகள் எரிக்கப்பட்டன. இந்த கலவரத்தில் ஐந்து பேர் பலியாகியுள்ளனர். நிலைமையை கட்டுப்படுத்த தற்போது இங்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது |
0 கருத்துகள்:
Post a Comment