Tuesday.02,October.2012,By.Rajah.{புகைபடங்கள்,}.மகாத்மா காந்தியின் 143 வயது ஜனன தினத்தை முன்னிட்டு அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினால் காந்தி ஜனன தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் கொண்டாப்பட்டன.
யாழ். ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு இன்று காலை 9.30 மணியளவில் மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து அவ்விடத்தின் கூடிய யாழ்.தாதியர் பயிற்சி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மகாத்மா காந்தியின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மலர் தூவியும் நினைவு அஞ்சலி செலுத்தினர்.
இந் நிகழ்வுகளில் அகில இலங்கை காந்தி சேவா சங்கதின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
Post a Comment