Search This Blog n

13 October 2012

அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் உத்தேசம்

 
 சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012,By.Rajah.
அரசியல் அமைப்பில் திருத்தங்களைச் செய்ய அரசாங்கம் உத்தேசித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கும், நீதிச் சேவை ஆணைக்குழுவிற்கும் இடையில் தற்போது நிலவி வரும் முரண்பாடுகளுக்கு நிரந்தரத் தீர்வு வழங்கும் நோக்கில் அரசியலமைப்பில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது.
19ம் திருத்தச் சட்டமொன்றை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் இந்த சட்டத் திருத்தம் மேற்கொள்ளபட உள்ளது.
17ம் திருத்தச் சட்டத்தில் நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் தெரிவிற்கு ஜனாதிபதியின் அனுமதி தேவைப்பட்ட போதிலும், 18ம் திருத்தச் சட்டத்தில் அவ்வாறு அனுமதி அவசியமில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி, மீண்டும் செயலாளரை நியமிக்கும் அதிகாரத்தை ஜனாதிபதிக்கு வழங்கும் வகையில் சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது

0 கருத்துகள்:

Post a Comment