Search This Blog n

13 October 2012

கனடாவில் விபத்துக்குள்ளான பேருந்து புலிகளுக்கு சொந்தமானது: திவயின

 
 சனிக்கிழமை, 13 ஒக்ரோபர் 2012, By.Rajah.
கனடாவில் அண்மையில் விபத்துக்குள்ளான பேருந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பிற்கு சொந்தமானது என திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த விபத்தில் எட்டு பயணிகள் கயாமடைந்திருந்தனர். கனடாவின் டொரன்டோ நகரில் இந்த பேருந்து குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த பேருந்தின் உரிமையாளர் விமலதாச என தெரிவிக்கப்படுகிறது. கனடாவின் டொரோண்டோ நகரில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் வரை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வந்த குறித்த பேருந்துக்கு, போக்குவரத்தில் ஈடுபடுவதற்கான உரிய அனுமதிபத்திரம் கிடையாது என தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் காயமடைந்த பயணிகள் நீதிமன்றின் உதவியை நாட உள்ளனர். நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்து நட்டஈடு பெற்றுக்கொள்ள காயமடைந்த பயணிகள் தீர்மானித்துள்ளனர். என அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது

0 கருத்துகள்:

Post a Comment