Search This Blog n

06 October 2012

ஆட்சி மாற்றத்தின் ஊடாக நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும்!சரத் என் சில்வா


Saturday 06 October2012.By.Rsajah,பொய்காரர்கள் ஆட்சிசெய்யும்நாடாகஇலங்கை மாறியுள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
ஒரு காலத்தில் இலங்கை தர்ம தேசமாக போற்றப்பட்டது. இந்த அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் பற்றி தகவல் வெளியிட்டால் அதனை ஊடகங்கள் வெளிச்சம் போடுவதில்லை.
இதன் காரணமாக நாடு முழுவதிலும் கூட்டங்களை வைத்து மக்களுக்கு அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்தின் ஊடாக நாட்டின் அபிவிருத்தியை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். பண்டராரகமவில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

Post a Comment