Sunday 14 October 2012.By.Rajah.இருந்து கிளநொச்சிக்கு மாற்றம் கோத்தபாயவுடன் சேர்ந்து இயங்கிவரும், KP என்று அழைக்கப்படும் குமரன் பத்மநாபன், தற்போது கொழும்பில் இருந்து கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டுள்ளார் இதுவரை காலமும் கொழும்பில் உள்ள புறநகர்ப் பகுதியில் உள்ள ஆடம்பர வீடு ஒன்றில் தங்கியிருந்த KP, எதற்காக கிளிநொச்சிக்கு மாற்றப்பட்டார் என்பது, கோத்தபாயவுக்கே வெளிச்சம்.
புலிகளின் முன்நாள் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் அவர்கள், தங்கிச் செல்லும் வீடு ஒன்று கிளிநொச்சியில் உள்ளது. இந்த வீட்டை இராணுவத்தினர் கடந்த 3 வருடங்களாகப் பூட்டிவைத்திருந்தனர். இந்த வீட்டிலேயே தற்போது கே.பி குடி புகுந்துள்ளார் என நம்பிக்கையான வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது. இதனை நேரில் பார்த்த சாட்சிகளும் உண்டு.
கடந்த சில தினங்களுக்கு முன்னர், மகிந்த ராஜபக்ஷ கிளிநொச்சி சென்று, அங்கு பல மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட மின் பிறப்பாக்கி நிலையம் ஒன்றைத் திறந்துவைத்தார். இதனை அடுத்து, தற்போது கே.பி கொழும்பில் இருந்து வன்னிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதனை உடனடியாகக் கூறமுடியாது போனாலும், கே.பியால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு அமைப்பை பராமரிக்க வசதியாக அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. அத்தோடு தடுத்துவைக்கப்பட்டுள்ள போராளிகள் சிலரோடு, இவரை நெருக்கமாகப் பேசவிட்டு, மேலும் சில தகவல்களை அவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ள ஏதுவாக அவரை வன்னிக்கு மாற்றியிருக்கலாம் என்ற செய்திகளும் உலா வருகிறது.
எது எவ்வாறு இருப்பினும், லட்சியத்துக்காகப் போராடி, உறுதியான மனத்தோடும், என்றும் புன்னகையோடும் வாழ்ந்த சு.ப தமிழ்ச் செல்வன் வீட்டையா போயும் போய் கே.பி எடுத்துக்கொள்ளவேண்டும் !
0 கருத்துகள்:
Post a Comment