சனிக்கிழமை, 20 ஒBy.Rajah.க்ரோபர் 2012, சுவிட்சர்லாந்தில் பேஸெல் நகரத்தில்
உள்ள மருத்துவக் கல்லூரியின் திட்டத்தலைவரான பிளேய்ஸ் ஜெண்ட்டான் 40 ஆண்டுகால
உழைப்புக்குப் பின்பு மலேரியாக் காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததில்
வெற்றிகண்டுள்ளார்.
RTS, S என்ற தடுப்பு மருந்து பல்வேறு மருத்துவ சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு
இப்போது நம்பிக்கை அளித்து வருகிறது. மலேரியா நோய் வைரஸால் ஏற்படுவதில்லை. ஒட்டுண்ணியால் தோன்றுகிறது. ஒட்டுண்ணியால் ஏற்படும் ஒரு நோய்க்குத் தடுப்புமருந்து கண்டுபிடித்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதுவும் மருந்து கொடுக்கப்பட்டவரில் நூற்றுக்கு ஐம்பது பேருக்குப் பலனளிக்கிறது. இந்த ஐம்பது பேர் பலனடைவதே மருத்துவ உலகில் குறிப்பிடத்தக்க சாதனையாகும். ஏழு ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் 1½ வயதுக் குழந்தை முதல் ஐந்து வயது சிறுவர் வரை சுமார் 16,000 பேரிடம் இந்த மருந்தைக் கொடுத்துப் பரிசோதனை செய்து பார்த்ததில் பாதிப்பேருக்கு நோய் தீர்ந்துவிட்டது. இருபது வகையான மருந்துகளைக் கொடுத்துச் சோதித்தில் இந்த RTS, S என்ற மருந்து மட்டுமே பாதிப்பேரையாவது சுகப்படுத்தியது. இதற்காகப் பலரும் இருபதாண்டுகளுக்கு மேல் கடுமையாக உழைத்துள்ளனர். மலேரியா பாதிக்கப்பட்ட அனைவரும் உயிரிழப்பதைக் காட்டிலும் பாதிப்பேராவது உயிர் பிழைப்பது பெரிய வெற்றிதான். இந்த மருந்து நோயைத் தடுக்கிறது என்பது உறுதியான நம்பிக்கையை மருத்துவ ஆராய்ச்சியாளருக்கு அளிக்கின்றது. இதுவே பெரிய சாதனை என்று ஜெனீவா மருந்து ஆராய்ச்சி மையத்தின் நிர்வாக இயக்குநர் பெர்னார்டு பிக்கோல் தெரிவித்தார். இந்த மருந்தை ஆண்டுதோறும் செலுத்தி வந்தால் மலேரியா தாக்காது. இன்னும் இதனை தீவிரமாக ஆராய்ந்து பரிசோதித்து திறன்மிகு, தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க மருத்துவ விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். |
முகப்பு |
0 கருத்துகள்:
Post a Comment