.வெள்ளிக்கிழமை, 12 ஒக்ரோபர் 2012 .By.Rajah. |
உலகமெங்கும் மரணதண்டனையை
ஒழிக்க வேண்டும் என்று ஸ்விட்சர்லாந்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் டிடியர்
புர்காலட்டர், ஜேர்மனி, பிரான்ஸ், லீச்சென்ஸ்ட்டீன், ஆஸ்திரியா மற்றும் இத்தாலி
நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களோடு இணைந்து ஒரு வேண்டுகோளைத் தயாரித்து
கையெழுத்திட்டுள்ளார்.
மரணதண்டனைக்கு எதிரான பத்தாவது உலகதினத்தன்று ஸ்விட்சர்லாந்து ஆறு நாடுகளுடன்
இணைந்து ஒரு முயற்சியை மேற்கொண்டது. இந்த ஆறு வெளியுறவுத்துறை அமைச்சர்களின்
வேண்டுகோளை ஜரோப்பாவின் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. உலகளவில் 130 நாடுகள் மரண தண்டனையை ஒழித்துவிட்ட போதும் இன்னும் 50 நாடுகள் மட்டும் மரண தண்டனையைக் குற்றவாளிகளுக்கு வழங்கி வருகின்றன. நமது நாடுகளின் அடிப்படைக்கொள்கைகளுடன் மரணதண்டனை முற்றிலும் முரண்படுகின்றது. மேலும் சில வேளைகளில் அப்பாவிகளும் கொலைத்தண்டனைக்கு ஆளாகின்றனர். இவர்களின் உயிரை எவராலும் திருப்பித்தர இயலாது. 2010ல் ஜநா சபை மூன்றாவது முறையாக மரணதண்டனை ஒழிப்புத் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. இதற்கு முன்பு 2007 மற்றும் 2008ல் இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த ஆண்டின் இறுதியில் இத்தீர்மானத்தின் மீது ஜ.நா பொதுச்சபை மீண்டும் வாக்கெடுப்பு நடத்தும். அப்போது முன்பை விட அதிகமான நாடுகள் இத்தீர்மாகத்துக்கு ஆதரவளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது |
0 கருத்துகள்:
Post a Comment