This is default featured slide 1 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 2 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 3 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.This theme is Bloggerized by Lasantha Bandara - Premiumbloggertemplates.com.

Search This Blog n

25 February 2016

ஆன்மீக நற்பண்பின் மஹா சிவராத்திரி- 2016 :

சிவராத்திரி முந்தைய காலத்தில், இந்தியா தனியொரு நாடாக இருக்கவில்லை. இங்கிருந்த மக்கள் ஒரேயொரு மதத்தையோ, இனத்தையோ அல்லது மொழியையோ மட்டும் கொண்டவர்களாக இருந்திருக்கவில்லை.
இருப்பினும் அந்தந்த மாநிலம் முழுவதும் வாழ்ந்த மனிதர்கள் தங்களுக்குள் கொண்டிருந்த, பொதுவான 
ஆன்மீக நற்பண்பின்
காரணமாக, ஒரு நல்லிணக்கம் நிலவியது. இங்கே வாழ்ந்த
ஒவ்வொருவருக்கும் அவர் பாமரனாயிருந்தாலும் சரி, பார்வேந்தனாக இருந்தாலும் சரி,அவர்கள் வாழ்வின் உச்சபட்ச இலக்கு “முக்தி”
என்பதாகவே இருந்தது. இந்நிலை, இந்த தேசத்தில் நிகழ்ந்துள்ள ஈடிணையற்ற, பிரமிக்கத்தக்க ஆன்மீகப்பணியின் விளைவாகவே உருவானது.திருவாசகம் :
முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணஞ்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் 
அச்சோவே.
மஹாசிவராத்திரியைவிட சிறந்த ஒரு இரவு வெறெதுவும்
இல்லை. இந்த இரவில் கோள்களின் அமைப்பு, மனித உடலில் இயற்கையாகவே சக்தி மேலெழும்பும் வகையில் உள்ளது. ஒருவரின் சக்தியை அதன் உட்சபட்ச நிலைக்கு உயர்த்தி,தன்னை கறைத்து, பிரபஞ்சத்தோடு ஒன்றாவது இந்த இரவில் அபரிதமாக
 நிகழ்ந்துள்ளது.
இரவு முழுவதும் பசி துறந்து ,விழிப்போடு இருந்து, முதுகுத் தண்டை நேரே வைத்து இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வோம். இந்த மஹாசிவராத்திரி வெறும் விழித்திருக்கும் இரவாக இல்லாமல் விழிப்புணர்வுக்கான 
இரவாக இருக்கட்டும் 



23 February 2016

நாக பாம்பு வடிவத்தில் உலாவரும் சித்தர்!

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகரை ஒட்டி பைபாஸ் சாலையில் அமைந்துள்ள பாப்பாம்பாடி கிராம எல்லைக்குட்பட்ட ஆர்.மஹாவீர் ஜெயினின் குமாரர்கள் ராஜேஷ்குமார், வினோத்குமார் ஆகியோருக்கு சொந்தமான விவசாயம் நிலம் உள்ளது. அந்த நிலத்தைப் பார்வையிட அவர்கள் செல்லும்போதெல்லாம் நாக வடிவம் கண்களில் படுவதும் மறைவதும் வழக்கமான ஒன்றாக இருந்ததாம்.
முதலில் இதனை ஒரு சாதாரணமான விஷயமாக நினைத்தவர்கள், கடவுளை நினைக்கும்போதும், இரவில் தூங்கும்போதும் ஒரு உருவம் தோன்றி மறைந்ததை கண்டு குழப்பமடைந்தனர். இதுகுறித்த விவரங்களை தங்களுக்கு தெரிந்த சிவாச்சாரியார்களையும் மற்றும் பெரியோர்களையும் சந்தித்து கருத்து கேட்டனர்.
நாக வடிவம் தோன்றி மறைவது நல்ல விஷயம்தான். இருந்தாலும் தெய்வ பிரசன்னம் பார்ப்பதே நல்லது என கருத்து கூறினார்கள். பின்னர் போளூர் சங்கரா வேதபாடசாலை ஆசிரியர் மகாபலேஸ்வர்பட் அவர்களைக் கொண்டு தெய்வபிரசன்னம் பார்த்து கேட்டனர். ஒரு நல்ல நாளில் 
தெய்வபிரசன்னம் 
பார்க்கப்பட்டதில் ஒரு சித்தர் அந்த இடத்தில் வாழ்ந்து கொண்டுள்ளதாகவும், பல வருடங்களுக்கு முன்னால் இயற்கையின் இடி மின்னலாக தோன்றி ஒரு கருங்கல் மீது திரிசூலம் போல் இறங்கியிருப்பதாகவும் கூறினார். திரிசூலத்தின் மீது இறங்கியுள்ள மாபெரும் சக்தி என்னவென்று 
பார்த்தபோது, 
பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றான ஒளி (தீ) போல் இறங்கியிருக்கும் சக்தி பிரபஞ்சத்தைக் காத்தருளும் மும்மூர்த்திகளின் தேவியாகிய ஸ்ரீ தாய் முகாம்பிகை என தெரியவந்தது.
திரிசூலம் குடிகொண்டிருக்கும் அற்புதமான விக்ரஹத்தை அனைவரும் காண வாய்ப்பினை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் மண்ணில் மறைந்திருக்கும் மகோன்னத சக்தியை மக்கள் அனைவரும் தரிசிக்க ஏதுவாய், ஒரு புதிய ஆலயத்தை கட்ட வேண்டுமென 
பிரசன்னம் கூறியது.
புதிய ஆலயம் அமைப்பதற்கு முன் கர்நாடகா மாநிலம், கொல்லூர், ஸ்ரீ தாய் மூகாம்பிகையை தரிசித்துவிட்டு அம்மனின் ஆசியுடன் ஆலயத்திலிருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டது. பின்னர் பூமி பூஜை நடத்தி 11.05.2014 அன்று கும்பாபிஷேகம் நடந்தது.
ஸ்ரீ தாய் மூகாம்பிகை கோயில். அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலைக்கு வடக்குபுறமும், போளூரின் பழம்பெருமையை உலகிற்கு சொல்லும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் ஆலயத்திற்கு கிழக்கு புறமாகவும், தேவிகாபுரத்தில் அருளே வடிவாகக் காட்சி அளிக்கும் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு மேற்கு புறமாகவும், சக்தி பீடங்களில் ஒன்றான படைவீடு அருள்மிகு ரேணுகாம்பாள் அம்மன் கோவிலுக்கு தெற்கு புறமாகவும் அமைந்துள்ளது.
இந்த ஆலயம் சுமார் 10 ஆயிரம் சதுரடி பரப்பளவில் ஆகமவிதிப்படி அமைக்கப்பட்ட ஆலயமாகும். இந்த ஆலயம் பஞ்சபூத அம்சங்கள் நிறைந்த ஆலயமாக விளங்குகிறது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் சூழ்ந்து தன்னுடைய அருள் ஒளியை அகிலத்திற்கும் பரப்புகிறாள் அன்னை ஸ்ரீ தாய் மூகாம்பிகை!
பஞ்சபூதங்களில் ஒன்றான (நிலம்) பூமியில் பல்லாண்டுகளுக்கு முன்பு இயற்கையின் மாற்றங்களால் கருங்கல்லின் மீது மின்னலாய் (நெருப்பு) இறங்கி, திரிசூல குறி கொண்ட விக்ரகத்தைச் சுற்றி ஆற்றுப்படுகை (நீர்) சுற்றிலும் உள்ள மூலிகை மரங்களில் இருந்து நறுமணத்தை ஆலயத்திற்கு தரும் (காற்று) பரந்த வெளியில் (ஆகாயம்) தனது அன்பான ஆட்சியை நடத்தும் அன்னை மூகாம்பிகை என பஞ்சபூதங்களும் தன்னகத்தே கொண்ட இருப்பிடம் இது!
ஆலயம் கிழக்கு புறம் பார்த்ததுபோல அமைந்துள்ளது. நுழைவுவாயிலில் மனிதர்களின் விதிகளை நிர்ணயிக்கும் கிரகங்களான நவக்கிரகங்கள் ஒருபுறமும், மறுபுறம் நாகமாக தோன்றும் நாக சித்தரை நினைவுபடுத்தும் வகையில் நாக வடிவங்களும் அமைக்கப்பட்டுள்ளது.
படிகளின் மூலம் மேலே சென்றவுடன் மகாமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. மண்டபத்திற்குள் அன்னையின் வாகனமான சிம்ம வாகனம் (பலிபீடம்) அமைக்கப்பட்டுள்ளது.
மூலவர் அறைக்கு முன்னதாக இரண்டு புறமும் முழுமுதற் கடவுள் வினைதீர்க்கும் விநாயகரும், தமிழ்க்கடவுள் அழகு பாலமுருகனும் அருள்பாலிக்கிறார்கள்.
உள்ளே இயற்கையில் மின்னலாய் இறங்கிய திரிசூல குறி கொண்ட விக்ரகம் நிறுவப்பட்டுள்ளது. ஆகமமுறைப்படி நிர்மாணிக்கப்பட்ட அன்னையின் திருவுருவச் சிலை 48 நாட்கள் (ஒரு மண்டலம்) நீரிலும், தானியத்திலும், நாணயத்திலும் வைக்கப்பட்ட பிறகு பிரதிஷ்டை 
செய்யப்பட்டு 
தாமரை பீடத்தில் அமர்ந்து அமானுஷ்ய சக்தியுடன் பரிபூரணமாக அருள்பாலித்து உலகின் ஒளிவெள்ளமாக கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள் ஸ்ரீ தாய் மூகாம்பிகை 
அம்மன்!
பக்தர்கள் வலம் வருவதற்கு வசதியாக பிரகாரம் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையின் மேல்கோபுர விமானத்தில் கலசம் இயற்கையைக் காக்கும் சக்தியாக அமைக்கப்பட்டுள்ளது.
கருவறையின் கீழ்தளத்தில் தியான மண்டபம் அழகுற அமைக்கப்பட்டுள்ளது. பஞ்சபூத அம்சம் கொண்ட இந்தத் தியான மண்டபத்தில் அமர்ந்து தியானம் செய்து அன்னையின் அருள் பெறுவது பக்தர்களின் பூர்வஜென்ம புண்ணியமாகும்.
மண்டபத்தின் நடுப்பகுதியில் அழகிய வடிவத்தில் ‚ஓம்‘ அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலின் அருகில் பிருந்தாவனம் அமைக்கப்பட்டு நறுமணங்கள் நர்த்தனமாட பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. பிருந்தாவனத்தின் முன்புறம் 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் விதமாக 27 வகை மூலிகை
 மரக்கன்றுகள் 
நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் இந்த நட்சத்திர மரங்கள் பக்தர்களின் வேண்டுதலை நிறுவேற்றும் அட்சயப் பாத்திரமாக மாறி அன்னையின் அருளை வழங்கி எந்தவித தோஷத்தையும் நீக்கிவிடும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

அறிவுத் திறன் (IQ) கொண்டவர்’ என்று உலகச் சாதனை படைத்த ‘விசாலினி

visalini
உலகிலேயே மிக அதிக அறிவுத் திறன் (IQ) கொண்டவர்’ என்று உலகச் சாதனை படைத்த ‘விசாலினி’ நெல்லையைச் சேர்ந்த ஒரு சாதாரண எலக்ட்ரீஷியனின் மகள். உலக அளவில் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றவர். இந்திய பிரதமரும் இவரை நேரில் அழைத்துப் 
பாராட்டியுள்ளார். 
டைம்ஸ் நவ் நிறுவனம் இவரை பற்றி ‘The Amazing Indian Visalini’ என்ற ஆவணப்படத்தை எடுத்துள்ளனர். The Youngest Google Speaker, The Youngest TEDx Speaker போன்ற பட்டங்களையும் பெற்றவர் விசாலினி. 
ஐந்துக்கும் மேற்பட்ட 
உலகச் சாதனைகள் செய்த இவருடைய IQ level 225. சராசரியான மனிதர்களுக்கு 90-100 வரைதான் இருக்குமாம். “நூறு பக்கம் உள்ள ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால் இருபது நிமிடத்தில் படித்த முடித்துவிடுவேன். அப்புறம் அந்தப் புத்தகத்திலிருந்து எந்த நேரத்தில் எதைக் கேட்டாலும் சொல்வேன். நான் ஒருமுறை படித்த புத்தகத்தை திரும்பப் படித்ததே கிடையாது. (அவர் படித்து முடித்த அத்தனை புத்தகங்களும் 
புத்தம் புதிதாக 
இருப்பதிலேயே அது புரிந்தது) அது எனக்கு மறக்கவே மறக்காது. பள்ளிக்கூட பாடத்தை எல்லாம் மொத்த பாடத்தையும் மூன்றே மாதத்தில் படித்து முடித்து விடுவேன். அப்புறம் பள்ளிக்கூடம் போர்தான்! என்று படபடவென்று துடிப்பாய் பேசும் விசாலினி பத்து வயதில் எட்டாம் வகுப்பை எட்டிவிட்டார். 
அது தவிர
 வீடு நிறைய அவர் படித்து முடித்த புத்தகக் குவியல்கள்… அவற்றில் பல பி.ஈ., எம்.பி.ஏ. மாணவர்கள் படிக்கும் புத்தகங்கள். விசாலினியைப் பொருத்தவரை இவரோட IQ லெவல் 225ன்னு ஆய்வு செய்து சொல்லியிருக்காங்க. இதற்கு அடையாளம்தான் அவர் எழுதி வெற்றி பெற்றுள்ள தேர்வுகள்.
 பில்கேட்ஸின் 
மைக்ரோஸாஃப்ட் நிறுவனம் நடத்தும் MCP என்கிற தேர்வை எழுதி அதுல 87% மார்க். அப்புறம் அதைவிட கஷ்டமான சின்கோ சர்டிஃபைட் நெட்ஒர்க் அசோசியேஷன் (CCNA) தேர்வில் 90% மார்க். மற்றும் அவங்களே 
நடத்தும் 
CCNA செக்யூரிட்டி என்கிற தேர்வையும் எழுதி 98% பெற்றுள்ளார். இவரைப் போன்றவருக்கு ஊக்கம் மிகுந்த வார்த்தைகளும் பாராட்டுகளும் இன்னும் பல சிகரங்களை எட்ட உதவும். உலக அரங்கில் மேலும் ஒளிர விசாலினிக்கு எமது நல் வாழ்த்துக்கள்...

visalini
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>

20 February 2016

கச்சதீவு புனித அந்தோணியார் திருவிழாவிற்கு புறப்பட்ட இந்திய பக்தர்கள்!

அந்தோணியார் திருவிழாவில் பங்கேற்பதற்காக, இந்திய பக்தர்கள் இன்று காலை படகுகள் மூலம் கச்சத்தீவு புறப்பட்டனர்.
இலங்கையில் புலிகளுடனான போர், கடந்த 2009-ம் ஆண்டில் முடிவுக்கு வந்தது. இதை தொடர்ந்து 2012-ம் ஆண்டு முதல் கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவிற்கு இந்திய பக்தர்களை, இலங்கை அரசு அனுமதித்து வருகிறது.
இந்த ஆண்டுக்கான திருவிழா, இன்று மாலை கச்சத்தீவில் கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்காக, இந்தியாவை சேர்ந்த 3,477 பக்தர்கள் இன்று கச்சத்தீவு 
புறப்பட்டனர்.
ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து இன்று காலை முதல் திரண்ட பக்தர்கள் கடற்படை, சுங்கத்துறை மற்றும் போலீசாரின் சோதனைக்கு பின் படகுகளில் கச்சத்தீவு செல்ல
 அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 92 படகுகளில் கச்சத்தீவு செல்லும் பக்தர்கள் இன்று மாலை அங்கு நடைபெறும் கொடியேற்றம், சிலுவை பாதை மற்றும் சிறப்பு திருப்பலிகளில் பங்கேற்கின்றனர்.
இதேபோல், இலங்கையில் உள்ள தமிழர் பகுதிகளை சேர்ந்த தமிழர்கள் பல்லாயிரக்கணக்கானோர் கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கின்றனர். நாளை காலை அந்தோணியார் கோவிலில் நடைபெறும் திருவிழா திருப்பலி முடிந்த பின்பு இந்திய பக்தர்கள் ராமேஸ்வரம் 
திரும்புவார்கள்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



14 February 2016

கண்ணீரில் முடிந்த வாழ்க்கை தண்ணீரில் இறங்கியதால்!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், நேற்று மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில்   மருத்துவக் கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் என்று ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.மருத்துவ முகாம் முடிவடைந்த 
பிறகு  3 மாணவர்கள், 2 மாணவிகள் மட்டும் ஹூலிவானா கிராமத்திற்குச்  சென்றனர். அங்குள்ள கால்வாய் ஒன்றில் ஒரு மாணவர் மட்டும் கால்வாய் கரையோரம் நின்றும்,4 பேர் கால்வாய் தண்ணீரில் இறங்கியும் செல்ஃபி  எடுத்துள்ளனர்.அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் 4 பேரும் கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்தவுடன் கெரகோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரில் மூழ்கிய 4 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், ஜீவன் ,சுருதி ஆகியோரை போலீசார் கிராம மக்களின் உதவியுடன் மீட்டனர். இதில் சுருதி பிணமாக மீட்கப்பட்டார். உயிருக்கு போராடிய ஜீவனை,  போலீசார் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜீவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இன்னொரு மாணவி சிந்து,  காயங்களுடன் மீட்கப்பட்டார்.
மேலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இன்னொரு மாணவரான கிரீசின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து, கெரகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை 
மேற்கொண்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


09 February 2016

இலங்கை ராமேஸ்வரம் கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை !

இந்தியாவில் 111 உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்குவதே எனது இலக்கு. முதற்கட்டமாக, கங்கை, பிரம்மபுத்திரா உட்பட 5 முக்கிய நதிகளில் நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்க பாராளுமன்றம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
ஆறுகள் வழியாக வங்காளதேசம் மற்றும் மியான்மர் வரை வணிகம் செய்ய நீர்வழிப்போக்குவரத்து உருவாக்கப்படும்.
இன்னும் 6 மாதங்களுக்குள் பராக்காவில் இருந்து பாட்னா வரை 620 கிலோ மீட்டர் தூரத்திற்கு நீர்வழிப் போக்குவரத்தை உருவாக்கும் பணி 
முடிக்கப்படும்.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் எலக்ட்ரிக் பைக்குகள், எலக்ட்ரிக் பஸ் மற்றும் கார்கள் இன்னும் 2 ஆண்டுகளுக்குள் பெரிய அளவில் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்படும்.
செயற்கைகோள்களில் பயன்படுத்துவதை போன்ற லித்தியம்-ஐயோன் பேட்டரியால் இயங்கும் எலக்ட்ரிக் பேருந்துகள் அறிமுகப்படுத்தப்படும்.
5 ஆண்டுகளில் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கங்கையை சுத்தப்படுத்தி கனவை நிறைவேற்றும்.
ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கடலுக்கு அடியில் சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டு போக்குவரத்தை ஏற்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு நிதின்கட்கரி பேசினார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


05 February 2016

தமிழக மீனவரின் பார்வை இலங்கை கடற்படையின் தாக்குதலில் பறிபோனதாக குற்றச்சாட்டு

இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கியதில் இந்தியாவின் தமிழ்நாட்டின் ஜெகதாபட்டினம் மீனவரின் கண் பார்வை பறிபோனதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர் முகமது மன்சூர்(36). மீன் பிடிக்கும் போது, இலங்கை கடற்படை யினர் தாக்கியதில் கண்ணில் பலத்த காயத்துடன் மதுரைஅர் விந்த் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டுள்ளார்.
 இதுகுறித்து 
முகமது மன்சூர் கூறியது: கடந்த புதன் கிழமை விசைப்படகில் மீன்பிடிக்க 3 பேர் சென்றோம். நான் படகை ஓட்டினேன். இரவு 7 மணியளவில் அப்பகுதிக்கு இலங்கை கடற் படையினர் வந்தனர். நாங்கள் 
தாக்கப்படலாம் 
எனக் கருதி திரும்ப முயன்றோம். நாங்கள் படகை வேகமாக இயக்கியதால் ஆத்திரமடைந்த இலங்கை கடற்படையினர் திடீரென துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கற்களை வீசித் தாக்கினர். இதில் என் இடது கண்மீது கல் பலமாக பட்டது. ரத்தம் வழிய, கடும் வலியுடன் படகை கரைக்கு இரவு 11 மணியளவில் கொண்டு வந்தேன்.
மணமேல்குடி மருத்துவமனை யில் முதலுதவி சிகிச்சை பெற்றேன். கண்பார்வை மோசமானதால் மதுரைக்கு வந்தோம். இடது கண்ணில் பார்வை முழுமையாக போய்விட்டது என்றார்.
சிகிச்சை அளிக்கும் மருத்துவர் அர்விந்த் கூறும்போது, ‘அவரது இடது கண் பார்வை முழுமையாகப் பறிபோய்விட்டது. கருவிழியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. மற்றொரு கண்ணுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு சிகிச்சை அளித்து வருகிறோம்’ என்றார்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



03 February 2016

பெற்றோர்களே உஷாராக இருங்கள் செல்போனால் சிறுவன்பார்வையை இழந்துள்ளான் !!!

தனுஷ் என்ற சிறுவன் செல்போனை சார்ஜ் செய்து கொண்டே பேசியதால் அது வெடித்து பார்வையை இழந்துள்ளான். மதுரானந்தத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி எட்டியப்பன் என்பவரது 9 வயது மகன் தனுஷ்.
இவன் செல்போனை சார்ஜ் செய்து கொண்டே போன் பேசியுள்ளான். அப்போது திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் வெடித்ததில் கண் பார்வையை இழந்துள்ளான்.
கண்ணில் விழுந்த செல்போனின் உதிரி பாகங்கள் அப்புறப்படுத்தப்பட்டதால் தற்போது இடது கண்ணில் மட்டும் லேசாக பார்வை தெரிகிறது என்றும் வலது கண்ணில் முழுமையாக பார்வையை இழந்துள்ளான் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது சின்னஞ்சிறு குழந்தைகளிடம் கூட செல்போன் உள்ளது. இக் காட்சியை அவதானித்தாவது தங்களது குழந்தைகளிடம் செல்போனை கொடுக்கும் பழக்கத்தை விட்டுவிடலாமே
 பெற்றோர்களே!.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>



பள்ளி மாணவன் ரயில் முன்பாக ‚செல்ஃபி‘ எடுக்க முயன்ற போது பலி

சென்னை புறநகர் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த ரயில் முன்பாக „செல்ஃபி“ புகைப்படம் எடுக்க முயன்ற பள்ளி மாணவன், அதே ரயிலில் அடிப்பட்டு பலியானதாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.
பூந்தமல்லியிலிருந்து வண்டலூருக்கு பயணித்த தினேஷ்குமார் என்ற 12 ஆம் வகுப்பு மாணவனே பலியாகியுள்ளார்.
இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மாணவர் தினேஷ்குமாருடன் 5 நண்பர்கள் உடனிருந்ததாக இந்திய ஊடகம் ஒன்றிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுகிழமை அவர்கள் வண்டலூருக்கு உல்லாச சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம்
 நடந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர், இந்தியாவின் பல்வேறு சுற்றுலா தளங்களில் „செல்ஃபி“ எடுக்க முயற்சித்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர்.
இதனைத்தடுக்க மும்பையில் உள்ள சுற்றுலா தளங்களின் சில பகுதிகளில் „செல்ஃபி“ எடுத்துக்கொள்ள காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நடந்துள்ள இந்த உயிர்ப் பலிக்கான 
காரணம் „
செல்ஃபி“ மோகம் தான் என்றும் அதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு மட்டங்களில் விவாதங்கள் 
தொடங்கியுள்ளன.

இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>