Search This Blog n

14 February 2016

கண்ணீரில் முடிந்த வாழ்க்கை தண்ணீரில் இறங்கியதால்!

கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டம் கெரகோடு கிராமத்தில், நேற்று மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில்   மருத்துவக் கல்லூரி மாணவ–மாணவிகள் மற்றும் மருத்துவர்கள் என்று ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.மருத்துவ முகாம் முடிவடைந்த 
பிறகு  3 மாணவர்கள், 2 மாணவிகள் மட்டும் ஹூலிவானா கிராமத்திற்குச்  சென்றனர். அங்குள்ள கால்வாய் ஒன்றில் ஒரு மாணவர் மட்டும் கால்வாய் கரையோரம் நின்றும்,4 பேர் கால்வாய் தண்ணீரில் இறங்கியும் செல்ஃபி  எடுத்துள்ளனர்.அப்போது, எதிர்பாராத விதமாக அவர்கள் 4 பேரும் கால்வாய் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டனர்.
தகவல் அறிந்தவுடன் கெரகோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தண்ணீரில் மூழ்கிய 4 பேரையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அதில், ஜீவன் ,சுருதி ஆகியோரை போலீசார் கிராம மக்களின் உதவியுடன் மீட்டனர். இதில் சுருதி பிணமாக மீட்கப்பட்டார். உயிருக்கு போராடிய ஜீவனை,  போலீசார் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு ஜீவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இன்னொரு மாணவி சிந்து,  காயங்களுடன் மீட்கப்பட்டார்.
மேலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட இன்னொரு மாணவரான கிரீசின் நிலை என்ன என்பது தெரியவில்லை. இதுகுறித்து, கெரகோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை 
மேற்கொண்டுள்ளனர்.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>


0 கருத்துகள்:

Post a Comment