சென்னை புறநகர் பகுதியில் ஓடிக்கொண்டிருந்த ரயில் முன்பாக „செல்ஃபி“ புகைப்படம் எடுக்க முயன்ற பள்ளி மாணவன், அதே ரயிலில் அடிப்பட்டு பலியானதாகக் கூறப்படும் சம்பவம் பல்வேறு சர்ச்சைகளை உண்டாக்கியுள்ளது.
பூந்தமல்லியிலிருந்து வண்டலூருக்கு பயணித்த தினேஷ்குமார் என்ற 12 ஆம் வகுப்பு மாணவனே பலியாகியுள்ளார்.
இந்த விபத்து குறித்து ரயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பலியான மாணவர் தினேஷ்குமாருடன் 5 நண்பர்கள் உடனிருந்ததாக இந்திய ஊடகம் ஒன்றிடம் பேசிய ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
விடுமுறை தினமான நேற்று ஞாயிற்றுகிழமை அவர்கள் வண்டலூருக்கு உல்லாச சுற்றுலா சென்ற போது இந்த சம்பவம்
நடந்துள்ளது.
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உள்ளிட்டோர், இந்தியாவின் பல்வேறு சுற்றுலா தளங்களில் „செல்ஃபி“ எடுக்க முயற்சித்து விபத்துகளை சந்தித்து வருகின்றனர்.
இதனைத்தடுக்க மும்பையில் உள்ள சுற்றுலா தளங்களின் சில பகுதிகளில் „செல்ஃபி“ எடுத்துக்கொள்ள காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழகத்தில் நடந்துள்ள இந்த உயிர்ப் பலிக்கான
காரணம் „
செல்ஃபி“ மோகம் தான் என்றும் அதை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் பல்வேறு மட்டங்களில் விவாதங்கள்
தொடங்கியுள்ளன.
இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>>
0 கருத்துகள்:
Post a Comment